பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

பெண்களுக்கு திருமண உதவி திட்டம், தாலி, மிக்சி, கிரைண்டர் என்று தேர்தல் வாக்குறுதிகளாக திமுக, அதிமுக இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்திருக்கிறார்களே?

-என்.டி. சாமுவேல், திருநெல்வேலி.

ஆண்டுக் கொண்டு இருக்கிறவர்கள், ஆள விரும்புகிறவர்கள் இப்படி பெண்களுக்கு எதிரான வரதட்சிணையை ஊக்குவிப்பது போல், வாக்குறுதிகளை தருவது ‘பெண்ணடிமைத்தனத்தை பேணிக் காப்போம்’ என்ற உறுதியை தருவதாகத்தான் இருக்கிறது.

உண்மையில் கிராமப்புற, எளிய பெண்களுக்கு; அவர்களை அதிக சிரமப்படுத்துகிற, பலவீனமாக்குகிற மாதவிலக்கு நாட்களில் அவர்களுக்கு அவசியம் தேவைப்படுவது சானிடரி நாப்கினும், சத்துணவும்தான்.

பெண்களுக்கு ஏற்படுகிற இயற்கையான மாத சுழற்சியின் போது சானிடரி நாப்கின் பயன்படுத்துகிற படித்த, வசதியான, சுகாதாரமான சுழலில், அலுவலக வேலையில் இருக்கிற பெண்களே அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

ஆனால், கிராமப்புற மற்றும் நகர் புறத்தில் கூலி வேலை செய்கிற பெண்கள், மாதவிடாயின் போது சுகாதாரமான பராமரிப்பும், சத்துணவும், குறைந்த அளவில்கூட ஓய்வும் இல்லாமல், வெயிலும், மழையிலும் விவசாய வேலைகளிலும், சாலை பணிகளிலும் அவர்கள் படுகிற துயரம், நினைத்தாலே கண்ணீர் வர வைத்துவிடும்.

இது ஒரு அந்தரங்க பிரச்சினை என்பதால் வெட்ட வெளியில்  வேலை செய்கிற இடத்தில் கழிவரை வசதியோ, மறைவிடமோ இல்லததால், அதை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல், அவர்கள் படுகிற அவஸ்தை சொல்லி மாளாது.

சமீபத்திய ஒரு ஆய்வு, ‘இந்தியாவில் 12 சதவிதப் பெண்கள் தான் மாதவிடாயின் போது நாப்கின் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 88 சதவிகிதம் பெண்கள் துணி, சாம்பல், தவுடு, உமி போன்றவற்றைப் பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு இனப்பெருக்க பாதையில் நோய் தொற்றும் அபாயம் மிக அதிக அளவில் உள்ளது.

சாம்பல், தவுடு, உமி போன்ற சுகாதாரமற்ற முறைகளை பயன்படுத்துவதால், 12 முதல் 18 வயதுள்ள சிறுமிகள் ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. ஒரு வருடத்தில் 50 நாட்கள் பள்ளிக்கு போக முடியாத நிலை ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் சுகாதரமற்ற சூழ்நிலைகளின் காரணமாக 23 சதவிகித பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.’என்று கண் கலங்க வைக்கிறது அந்த ஆய்வு.

“மாதவிடாய் நேரத்தில் பெண்கள் மிகவும் Hygienic ஆக இருக்க வேண்டும். 2 தடவைக்கு மேல் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை நாப்கின் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறுநீர் பாதைக்குள் பாக்டீரியா நுழைவதும், கருப்பை பாதிப்பும் ஏற்படக்கூடும்“ என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால், நாம் நாட்டின் 88 சதவீத பெண்களுக்கு நாப்கின் வாங்குவதற்குகூட பணம் இல்லை. பணம் இருந்தும் வசதியான சில கிராமப்புற் பெண்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை.

உண்மையில் பெண்களின் நலனில், சமூக நலனில் அக்கறை உள்ள அரசு; பெண்களின் அடிமையின் அடையாளமான தாலியை வழங்காது. ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் வகையில் ‘சானிடரி நாப்கின்’ தான் வழங்கும்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011 ஏப்ரல் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

ஈவ்டீசிங்

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் முதலாளி

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’

23 thoughts on “பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

  1. மிக மிக வரவேற்கத்தக்கது………………………

  2. நிஜமாவே தேவையானது.. ரணம்தான் இன்னும் பல பெண்டிருக்கு..

    நல்ல முக்கியமான பதிவும்..நன்றி

  3. இதை பற்றி ஆண்கள் பேசுவதையே அநாகரீகம் என்கிறதே இந்த சமுகம்…..!!!

  4. Kandipa intha katturai arasiyal takam yearpaduthum… Pengal padum vali yaarum Purinjukolala viali…antha days la aangal vettu velai kooda seiyalam.. aanal nam dhan aangal adikam odaya india la irukum me apram enna..

    Yaarum pesa mudiyatha visayngal neengal ipo pesi irukeenga..

  5. பள்ளிகளில் இலவசமாக சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் மாநில அளவில் செயல்படுத்துவதற்காக டெண்டர்கள் விடப்பட்டது. சுய உதவிக் குழுக்களைக் கொண்டு சானிடரி நாப்கின்கள் தயாரித்துக் கொண்டால், தனியார் வியாபாரிகளுக்கு காசைக் கொட்ட வேண்டிய நிலை ஏற்படாது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததா இல்லையா என்று தெரியவில்லை!

    இரு கழகங்களும் ஏதோ ஒரு வகையில் வரதட்சணைக்கு ஆதரவாக செயல்படுவதாகவே படுகிறது. கொடுக்கிற வடிவம் தான் மாறுபடுகிறது. இவர்கள் 25,000 ரூ பணம், அவர்கள் 1/2 கிராம் தங்கம்.

  6. மிக அற்பதமான கருத்து ஸார்.. எனக்கு இவர்களது தொடர்ச்சியான அக்கிரமங்களை கடும் சொற்கள் தான் வருகிறது… இந்த தே… பசங்க .. கொஞ்சம் கூட சமூக அக்கறையோட யோசிக்கவே மாட்டானுங்களா…. தமிழகம் முழுவதும் உள்ள திரு நங்கைகளை நாப்கின் பயன்பாட்டுக்கு அனைத்துவகைகளிலும் பயன்படுத்தி அவர்களை பிச்சைகாரர்களாக இருப்பதை தடுக்கலாம். மீண்டும் ஒரு விஷயம் சென்னை அண்ணசாலையில் உள்ள புதிய தலைமைசெயலகத்தில் இருந்து சைதை பாலம் வரை.. எங்கு பொதுகழிப்படிம் இருக்கிறது என்று யாராவது சொல்லுங்கள்…? இதுல வேற அந்த மேயர் சென்னையை சிங்கப்பூரா ஆக்கியே தீருவேன் என்று வெண்ணெய் சவடால் வேறு…

  7. தோழர் வேந்தனுக்கு நன்றி. நீங்க எப்படி திட்டுனாலும் அவெங்களுக்கு ஒரைகாது ஏன்னா அவெங்க குடும்பம் எல்லாம் நல்லதான இருக்கு …………..

  8. தோழர்,
    உருப்படியான யோசனை தான்.
    ஒட்டு மொத்தப் பெண்களின் ஓட்டையும் அள்ளிவிடலாம்.
    அடுத்த தேர்தலின் போது யார்க் கண்டது.. எதாவது ஒரு கட்சி
    தன் தேர்தல் அறிக்கையில் சேர்த்தாலும் சேர்க்கலாம்.!!

    இந்த இலவசக்காமெடியைப் பார்த்து இங்கிருக்கும் மற்றவர்கள்
    ஏளனமாக சிரிக்கிறார்கள். அவமானமாக இருக்கிறது .

  9. மனிதன் உருவான காலம்முதலே இருந்துவரும் விசயம்தான் இந்த மாதவிலக்கு. இன்னும் இதை ஒரு சாதாரண உடல் இயக்கமாக கண்டபாடில்லை.

    எல்லா மத நம்பிக்கைகளும் இதற்குத் துணை போகின்றன என்றாலும், இந்துமதம் மட்டும் தனக்கே உரித்தான படு இழிவான ஒரு கொள்கையை மாதவிலக்கின் மீது வைத்திருக்கிறது . அதனால்தான் இந்துமதத்தால் 2000 வருடங்களாக வீசிய வீச்சத்திற்காக மூக்கைப் பொத்தாத மகாத்மாகூட மாதவிடாய்க்குப் பொத்திக்கொண்டார். ஆம், இந்து மதத்தில் கரைபுரண்ட காந்தி, “மாதவிலக்கு என்பது ,பெண்கள் தங்களின் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாததால் நிகழ்வது” என்றார். இதுதான் இந்து மதத்தின் லட்சணம்.

    இப்படி 2000 வருடங்களாக மூக்கைப் பொத்திக்கொண்டிருந்த இந்துமதத்தின் காதைத் திருகியவர்கள்தான் அண்ணல் அம்பேத்கரும் , தந்தை பெரியாரும்.

    அவர்கள் போட்டுக்கொடுத்த பகுத்தறிவு பாதையில் நடக்கிறோம் என்கிறவர்கள், இது போன்ற பெண்ணியத்திற்கான பிரச்சனைகளிலும், சாதிய, சமூக பிரச்சனைகளிலும் தலையிடுவதில்லை. குறைந்த பட்சம், இவர்களின் இலவசங்களில் சுயமரியாதை திருமணங்களை ஊக்குவிக்கும் விதமாக ஏதாவது அறிவித்திருக்கலாம்.

    ஆனால் எதை ஊக்குவித்தால் ஓட்டுகிடைக்கும் என்பதைத் தாண்டி இந்த அறிஞர்கள் அறிவை செலவழிப்பதில்லை.

    சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி இருக்கிறதாம் (எங்க சுட்டாங்கன்னு தெரியல – எனக்கு சமஸ்கிருதம் தெரியாது)
    ” மன்னர் ஆட்சியில் மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி,
    மக்களாட்சியில் மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி”

    பெரியாரையும், அம்பேத்கரையும் யாரும் பூட்டி வைக்க முடியாது.
    பெரியாரையும், அம்பேத்கரையும் கற்போம் … கற்பிப்போம்..
    பிறகு என்ன மன்னன் மக்கள் வழிக்கு வந்துதான் ஆகவேண்டும்.

    நன்றி-தோழமையுடன் மதியவன்

  10. தன் பிரச்சினையை எல்லா பெண்களின் பிரச்சினையாக பேசுகிற சில் பெண் எழுத்தாளர்கள் இந்த ஏழை பெண்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதவேண்டும்.

  11. /// 88 சதவிகிதம் பெண்கள் துணி, சாம்பல், தவுடு, உமி போன்றவற்றைப் பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு இனப்பெருக்க பாதையில் நோய் தொற்றும் அபாயம் மிக அதிக அளவில் உள்ளது///

    வேதனையானது, உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைஇது.

  12. Excellent Thougth.. We somehow need to take this to the next Government’s notice..

  13. மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெண்குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்! குடியரசுத்தலைவர் வருத்தப்பட்டுக்கொண்டார்….

  14. இன்றைய தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.45 கோடிக்கு மேல் அறிவக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading