இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்


சிறந்த படங்களை எடுத்த இயக்குநர் மகேந்திரனை குறித்தோ அவர் படங்களை குறித்தோ இதுவரை ஒரு இடத்தில் கூட நீங்கள் குறிப்பிடவில்லையே ஏன்?

-பிரேமா, சென்னை.

திட்டமிட்ட காரணங்கள் ஒன்றுமில்லை.

ஒப்பீட்டளவில் இயக்குநர் மகேந்திரனின் படங்கள் பாலச்சந்தர், மணிரத்தினம் இவர்களின் படங்களை விட சிறந்த படங்கள்தான்.  உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, வடிவத்திலும்கூட. விடலைத்தனமான சேஷ்டைகள் செய்து கொண்டு இருந்த ரஜினிகாந்தை, சிறந்த நடிகராக காட்டியதும் இவர்தான்.

இவரின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தைதான் மணிரத்தினம் மவுனராகமாக மாற்றி எடுத்தார். அதேபோல், இவரின் உதிரிப்பூக்களில் வந்த, அதே நோய்வாய்ப்பட்ட மனைவி, பரிதாபத்திற்குரிய மாமனார், துள்ளும் இளமையுடன் கூடிய மச்சினச்சி அவளை இரண்டாம் தாரமாக்க துடிக்கும் அக்காள் கணவன் என்று வசந்தின் ‘ஆசை’ City based உதிரிப்பூக்களாக வந்தது.

முற்போக்காக எதையும் இயக்குநர் மகேந்திரன் சொல்லவில்லை என்பதைவிட, அவர் ஆபத்தான எதையும் சொல்லவில்லை என்பதே மரியாதைக்குரியதுதான்.

ஆனாலும், அவர் படங்களில் இழுத்துப் போர்த்தி, அதிர்ந்து ஆண்களோடு நேருக்கு நேர் பேசாத, எதையும் அமைதியாக பொறுத்துக் கொள்கிற ‘குடும்ப பாங்கான’ பெண்கள்தான் முன்மாதிரியான பெண்கள் என்ற கருத்தை அநேகமாக தனது எல்லா படங்களிலும் பதிவு செய்திருக்கிறார்.

அவரின் முதல் படமான முள்ளும் மலரும் ஷோபா, உதிரிப்பூக்கள் அஸ்வினி, ஜானி ஸ்ரீதேவி, நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி, அதேப் படத்தில் திருமணத்திற்கு பிறகு சுகாசினியின் மாற்றம், கண்ணுக்கு மை எழுது சுஜாதா, மெட்டி விஜயகுமாரி, நண்டு பட நாயகி இப்படி…

இவைகளுக்கு துணையாக விட்டோத்தியாக மற்றும் வெளிப்படையாக பேசுகிற பெண்களை துணைநாயகிகளகாத்தான் காட்டியிருக்கிறார்;  முள்ளும் மலரில் படாபட் ஜெயலட்சுமி, உதிரிப்பூக்களில் அஸ்வினியின் தக்கச்சி, கை கொடுக்கும் கையில் ராஜலட்சுமி.

இந்தக் கதாபாத்திரங்களை, திரைக்கதையில் கொஞ்சம் வேகம் கூட்டுவதற்கும், கலகலப்புக்காகவும் செய்திருக்கலாம்; அல்லது அமைதியான கதாநாயகிகள் மூலம் சொல்ல முடியாத செய்தியை, அவர் சார்பில் இந்த கதாபாத்திரங்கள் வழியாக சொல்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கலாம். மற்றபடி அவர் முன்னிலைப் படுத்தியது, அடக்க ஒடுக்கமான அதிர்ந்து பேசாத பெண்களைத்தான்.

இன்றைய இளம் இயக்குநர்கள் ‘தரமான’ படம் எடுப்பது குறித்து அதிகம் பேசுகிறார்கள். அதிகம் பேசாமல், உதிரி்ப்பூக்கள் போன்ற குறிப்பிடத்தக்க படங்களை எடுத்தவர் இயக்குநர் மகேந்திரன்.

*

2011 தங்கம் ஏப்ரல் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

பக்திப் படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3

இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

5 thoughts on “இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

Leave a Reply

%d bloggers like this: