ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்
இலங்கை அரசால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க 13 மாதங்களுக்கு முன் அய்.நா அமைத்த நிபுணர் குழு, ‘இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்ற தகவலோடு அறிக்கையை அய்.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் கொடுத்துள்ளது.
ராஜபக்சே அரசால், கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருக்கிறது.
இந்தச் சூழலில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது நடந்த இரண்டாவது தேர்தலில், தமிழகத் தமிழர்கள் இதுகாறும் இல்லாத அளவிற்கு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக 80 சதவீதபேர் வாக்களித்துள்ளனர். (இந்த வேகம்கூட ஈழ மக்களின் துயரங்களுக்காக அல்ல.)
பிரச்சினைகளுக்கு தீர்வாக தமிழர்கள் எப்போதும் இரண்டு வழியை நாடுகிறார்கள்.
ஒன்று கடவுள், இன்னொன்று தேர்தல்.
இந்த இரண்டும் எப்போதும் அவர்களுக்கு உதவியதில்லை என்று அனுபவரீதியாக உணர்ந்தும், மீண்டும் அந்த வழிகளையே தேர்தெடுக்கிறார்கள்.
பிரச்சினைகளை எதிர்த்து போராடுவதைவிட, இந்த இரண்டுவழிகளும் அவர்களுக்கு சுலபமாகவும், சுவாரஸ்யங்கள்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பதாலும் இவைகளையே விரும்புகிறார்கள்.
நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு, வெளியூருக்கு கூட்டிபோய் சிகிச்சை அளிப்பதற்கு கணக்குப் பார்க்கிற அல்லது ‘அட யார் போய் கஷ்டப்படறது’ என்று அலுத்துக்கொள்கிற தமிழர்கள், ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு தயங்க மாட்டார்கள்.
ரேஷன் கடைகளில் கிடைக்காத பொருள்களுக்காகவும், விலைவாசி உயர்வையும் எதிர்த்து போராட முன் வராத தமிழர்கள், சபரிமலைக்கு சென்று நெரிசலில் சிக்கி சாவதை பொருட்படுத்த மாட்டார்கள்.
மழை நேர வெள்ளத்தில், வீட்டுக்குள் தண்ணீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசை எதிர்த்து போராடினால், ‘போலிஸ், ஜெயிலுன்னு போன என் பொழப்பே போயிடும்’ என்று தயங்குகிற தமிழர்கள், வெள்ள நிவாரண நிதி வாங்குகிற கூட்டத்தில் சிக்கி உயிரையே போக்கிக் கொள்கிறார்கள்.
சுனாமியின் போது வேளாங்கண்ணி மாதக்கோயிலின் சுவற்றில் மோதியே நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டார்கள். மாதாவுக்கு மகிமை இல்லை என்று தெரிந்தும், தங்கள் மன்றாடுதலை நிறுத்துவதில்லை தமிழர்கள்.
நோயுற்றபோது, திருப்பதிக்கும், வேளாங்கண்ணிக்கும் வேண்டிக்கொள்வதுபோல், விலைவாசி உயர்வின்போதும், ‘வரட்டு்ம் தேர்தல்’ என்று வஞ்சம் கொள்கிறார்கள். பிறகு திருப்பதிக்கும், வேளாங்கண்ணிக்கும், நாகூருக்கும்ம் போய் வந்த பிறகும் என்ன நடந்ததோ,அதுவேதான் தேர்தல்களுக்கு பிறகும நடக்கிறது.
அவர்களின் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் ‘அது மூடநம்பிக்கை’ என்று அவர்கள் ஒத்துக்கொள்ளத் தயாரக இல்லை. ஒததுக்கொண்டால் அதை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டிவருமே.
இந்த மனோபாவம் கொண்டதினால்தான் நாமும், நம் கண் முன்னே நம் தமிழர்கள் இலங்கையில் கொலை செய்யப்பட்டபோது, அனுதாபம் பட்டுக் கொண்டோம்.
பக்தர்கள் பிரச்சினைகளுக்கு கடவுளை சரணாகதி அடைவதைப்போல், நம் கோபத்தையும், வீரத்தையும் கருணாநிதி ஆதரவு, ஜெயலலிதா ஆதரவு என்று கோஷ்டியாக பிரிந்து ஓட்டுக் கேட்டு, ஓட்டு போட்டோம். இந்திய தேசியத்தை பாதுகாத்தோம்.
‘அப்படி செயல்படுவதுதான் நமக்கு பாதுகாப்பனது. நம் அரசியல் எதிர்காலத்திற்கும் நல்லது.’ என்கிற ஒர் உள்குத்தும் உடன் இருந்தது.
ஆனால், ஈழத் தமிழர்களுக்கு…?
ஒரு ரவுடி, சமூக விரோதி அவன் கொலைசெய்யப்பட்டால்கூட, அவன் இருந்த பகுதியில் கடையடைப்பும், வன்முறையும் நடக்கும். இயல்பு வாழ்க்கை நிலைகுலையும்.
ஆனால், நம் தமிழர்கள் மீது விமான தாக்குதல் நடத்தி குவியலாக கொன்றபோதும் சரி, நம் போராளிகளையும் அதன் தலைவர்களையும் நம்ப வைத்து சதி செய்து கொலைசெய்த போதும் சரி, நாம் குமுறி, குமுறி அழுதிருக்கிறோம். பிறகு, முறைப்படி காவல் துறையிடம் அனுமதி பெற்று அனுமதி மறுத்தால் நீதி மன்றத்தை நாடி ‘போராட்டங்களை’ நடத்தியிருக்கிறோம்.
எம்.ஜி.ஆர், ஆட்சிக்காலத்தில் அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்தால், “ஆளும் கட்சியும் பந்தில் கலந்து கொள்ளும்” என்று எம்.ஜி.ஆர் செய்த திட்டமிட்ட கோமளித்தனங்களைப்போல், ஈழப் பிரச்சினை, மீனவர் மீது தாக்குதல் இவைகளுக்காக நம் போராட்ட முறைகளிலேயே மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி அரசும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
ஆனால், அதற்கு மாற்றாக ஈழத்தமிழர்களின் படுகொலையை முன்னிறுத்தி, இந்திய அரசை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற வன்முறையான செயல்களில் நாம் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எதையும் சட்டப்படி செய்து சட்டம் ஒழுங்கை பாதுகாத்திருக்கிறோம். எப்போதும் இல்லாத அளவிற்கு ஈழத்தமிழர்களின் உச்சகட்ட துயரத்தின் போதுதான் தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்ந்தது. திகழ்கிறது. அமைதிப்பூங்காவாக தொடர்ந்து தமிழகம் முதலிடத்தில் இருப்பது தமிழர்களுக்கு அவமானம்.
ஆனால், இன்னொருபுறம். சட்டம் ஒழுங்கை பாதுக்காக்கவே பிறந்தவர்களாக சொல்லிக்கொள்கிற காந்தியவாதிகளான காங்கிரஸ்காரர்கள், நாம் செய்ய வேண்டிய போராட்டங்களை அவர்கள் செய்கிறார்கள்; சத்தியமூர்த்திபவனை அடித்து நொறுக்குவது, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது என்று, இரண்டு பேர்களை எதிர்த்து, இரண்டே பேர்கள் போராடுகிறார்கள். (மொத்தமே நாலுபேர்தான். அதுக்கு பேரு உட்கட்சி சண்டையாம்.)
ஒப்பிட்டளவில் காங்கிரஸ்காரர்களைவிட ஈழஆதரவாளர்கள் அதிகம் பேரை கொண்ட நாம்…? காங்கிரஸ்காரர்களையே மிஞ்சும் அளவிற்கு கோஷ்டிகளாக பிரிந்து, தமிழர்களின் ஒற்றுமைக்கு அழைப்புவிடுத்தோம். அதன் விளைவாக,
ஈழ மக்களின் துயரங்களின்போது தமிழகம் மவுனமாக தனது மயான அமைதியைதான் ஆறுதலாக தந்ததது. அதனால்தான் இன்று ஈழமே சுடுகாடாக காட்சியளிக்கிறது.
காங்கிரஸ்காரர்கள் கோஷ்டிகளாக பிரிந்து இருப்பது, ஒவ்வொருவரும் தனக்கான முக்கியத்துவத்தைக் கருதியும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே. அதுவேதான் ஈழ ஆதரவாளர்களான நமக்கும் என்று நினைக்கும்போது, ‘ச்சீ… காங்கிரஸ்காரர்களைவிடவா நாம் மோசமானவர்கள்’ என்கிற அருவருப்பான எண்ணமே ஏற்படுகிறது.
முத்துக்குமார் என்கிற வீரன் மூட்டிய தீயை, பெரும் நெருப்பாக பற்றவைப்பதற்கு பதில் அதில் குளிர்காய்ந்தவர்களே ஏராளம்.
ஈழ மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் மிக குறிப்பிடத்தக்கது, கோவையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நடத்திய, ‘ஆயுதங்கள் நிறைந்த ராணுவ வாகனம் மீதான தாக்குதல்’ போராட்டம் தான். அதுபோன்ற போராட்டங்களை நாம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடத்தியிருந்தால், ஈழத் தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம். தமிழீழப் போரட்டமும் தொடர்ந்து இருக்கும்.
மாறாக, வயிற்று வலி தீர, திருப்பதிக்கு வேண்டிகொண்டு தீர்வு காண முயற்சித்த பக்தர்களைப்போல், பழிதீர்ப்பதாக சவால் விட்டு, பிறகு வின்னர் பட வடிவேலுவைப் போல் சுருதி குறைத்து, தேர்தலில் பதுங்கி கொண்டோம்.
இலங்கை, இந்திய அரசுகள் மூடிமறைத்தபோதும், ‘ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்கிற செய்தி அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
என்ன செய்யப்போகிறோம் நாம்?
பிரச்சினைகளுக்குத் தீர்வாக, திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான். காரணம் அது தீர்வல்ல, பிரச்சினையே அதுதான்.
தொடர்புடயவை:
முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை
‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்
ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’
ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது
தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி
பெரியார் திராவிடர் கழத்தினர் மீதான திமுக அரசின் ஒடுக்குமுறையும்-ஈழத்தாயும்
தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?
கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு
this is a fantastic article. i feel like you have spoken my mind. every time my family members go to pilgrim centres i tell them your point but they do not give a damn about it. i dont know where this will end. i have read many of your articles and i disagree with most of them but this one is really good.
மிக நல்ல கட்டுரை.
அருமையான கட்டுரை சகோதரா.உங்கள் உணர்வுகள் புனிதமானவை.
நல்வாழ்த்துக்கள் என் இனிய சகோதரா.
thamizhagam sudugadu. inku mayana amaithi nilavukirathu. thamizhargal enru sattathai mirukirarkalo andru than nambikkai. mooda nambikkaitin motha uruvam thamizhan. periyar vazhtha manna santhakem varukirathu. mooda nambikkai (yherthal. kadavul nambikkai, innum pala) vittal mattume thamizhan vella mudiyum. vethnaiyana pathivu athe nerathil sariana pathivu. nandri thozhar.
மிக நல்ல கட்டுரை.
Iniya yavathu Makkal maruvarunga yenru irupom
மிக நீண்ட நாள்களூக்குப் பிறகு சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் நம் மடக் கடவுளர்கள்! போதும் போதுமென்ற அளவுக்கு கடவுள் நம்பிக்கைக்கு நிறைவாகச் செருப்படி கொடுத்த நண்பர் மதிமாறன் அவர்களுக்கு எமது நன்றிகளைக் கூறிக் கொண்டு…
பன்றிகளின் தொழுவம் என்று மிகச் சரியாகக் கணிக்கப்பட்ட பாராளூமன்ற அமைப்பின் இந்த தேர்தலில், என்னால் முடிந்த தேர்தல் புறக்கணிப்பை சரியாகச் செய்ததில் ஒரு மனநிறைவு எனக்கு! மட்டுமல்லாமல் கொலைகாரக் காங்கிரசு பிணந்தின்னிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்ற பரப்புரையையும் என் நண்பர்களோடு மன நிறைவோடு செய்ய முடிந்தது! (மே 13 அன்று அதன் பலன் தெரிந்து விடும் என்பது வேறு விடயம்.) ஆழிப் பேரலையின் போது பொங்கிவழிந்த வேளாங்கண்ணி மாதாவின் மகிமையால் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மடையர்கள் மேலோகம் போய்ச் சேர்ந்ததைக் நக்கலடித்து, பகுத்தறிவாளர்கள் கிறித்தவர்களின் மூஞ்சியில் காறி உமிழ்ந்தார்களோ இல்லையோ.. அது, சூப்பர் இயேசுவின் ‘‘கன்ன்ன்ன்னி’’த் தாயின் மூஞ்சியின் மேல் காறி உமிழ்ந்ததைப் போலத்தான்! இதைச் சொல்லும் போது, நினைவுக்கு வரும் நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்… பகுத்தறிவாளரான நண்பர் ஒருவரின் வீட்டில், படமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மேரி மாதாவுக்கு அழகான முறுக்கு மீசையை நண்பர் வரைந்து வைத்து, மேரியை திருநங்கை (அரவாணி) யாக மாற்றியது மட்டுமல்ல, அவர் கையிலிருக்கும் குட்டி இயேசுவுக்கும் ஒரு குட்டி மீசையை வரைந்து வைத்துள்ளார். அதைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ச்சியான நான் அதுபற்றி அவரிடம் கேட்டால், இவர்களுக்கு இருக்கும் மிச்சம் மீதி பக்தி நோய் இப்படி ஒரு அறுவை சிகிட்சை செய்தால்தான் போகும், என்பதாலேயே அந்த அம்மாவை இப்படி ஆக்கினேன் என்று இயல்பாகவே பதில் சொன்னார். சில நாட்கள் முன்பு நான் பார்த்த போது கூட, மாதா மீசையை முறுக்கி விட்டபடியேதான் இருக்கிறார். கிறித்தவ்ர்களின் மூடத்தனமே இயேசுவின் தாயான, அந்தப் பெண்ணை இப்படி அவமானப் படுத்துகிறது! கிறித்தவர்கள் மத(ட) மயக்கத்திலிருந்து விடுபடும் வரை இப்படிப் பட்ட அவமானங்களை அவர்கள் சந்தித்தேயாக வேண்டும்! மூட, முரட்டுக் கிறித்தவர்கள் புரிந்து கொண்டால் நல்லது!
காசிமேடு மன்னாரு.
அன்பு நண்பருக்கு அம்பேத்கர் இரட்டைவக்குரிமைக்காக போராடினார் ஆனால் தாங்கள் உள்ளவாக்கையும் போட வேண்டாம் என்று கூருஹிரீர்கள் அப்படியானால் அம்பேத்கர் வாங்கி கொடுத்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லுவீர்களா இந்த நிலையில் வேறு என்ன மாற்று வழி வைத்துள்ளீர்கள் இதுவும் ஒரு வழியில் பின்தங்கியவர்களுக்கு இழப்பாகவும் ஆதிக்கவர்க்கதினர்களுக்கு ஆதயாமஹவும் தானே இர்ருக்கும்
@சந்திரன்: காந்தி என்கிற கோமாளி, செத்துருவேன் செத்துருவேன்னு மிரட்டி இரட்டை வாக்குரிமையைத் தடுக்காமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் இன்று சொல்லிக் கொள்ளும் படியாகவாவது இருந்திருக்கும். இப்போது எல்லாமே கை மீறிப் போய் தேர்தல் அரசியல் மீதிருக்கிற நம்பிக்கையே மறு பரிசீலணைக்கு உள்ளாகிறது. வேறு என்ன செய்வது?
49 ஓ