‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

பெரியாரையும் சேர்த்து திராவிட இயக்கம் தமிழர்களுக்கு தூரோகம் செய்துவிட்டது என்று சொல்கிறார்களே உண்மையா?

-தமிழ்ப்பித்தன், திட்டக்குடி.

புதுசா இப்ப நிறையப் பேர் அப்படி கிளம்பி இருக்காங்க. தமிழகத்தில் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகரமாக போராடிய திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’ என்று நாம் வாய பொளக்குறதுக்குள்ளேயே திராவிட இயக்கத்தின் கழிசைடையான ஜெயலலிதாவை ஆதரித்து தங்களை யார் என்று அடையாளம் காட்டுகிறார்கள்.

கலைஞரை கடுமையாக விமரிசிக்கிறார்கள்.

கருப்பையா மூப்பனாரை மாபெரும் தியாகி என்கிறார்கள்.

திமுகவை ‘ஜாதியை வளர்க்கும் கட்சி’ என்று சரியாக விமர்சிக்கிறவர்கள்; தமிழக்கதில் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்து ஜாதி ஆதிக்கத்தை நிலைநாட்டிய தீவிர ஜாதிவெறியர், ஊழல் மன்னன் ராஜாஜியின் ஆட்சியை நேர்மையான ஆட்சி என்று பாராட்டுகிறார்கள்.

பல கோல்மால் பேர்வழிகள் இப்படி பெரியார் இயக்கத்தை, திராவிட இயக்கத்தை கடுமையான விமசிக்கிறார்கள்.

உண்மையில் இவர்களுக்கு பெரியாரை அல்ல, விஜயகாந்தை விமர்சிப்பதற்குக்கூட யோக்கியதை இல்லை.

***

29-10-2010 அன்று எழுதியது.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஜனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்
*
பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

தமிழ்த்தேசியம்:  ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு
*
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

13 thoughts on “‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

  1. சாணியை மலத்தைக் கொண்டு வெல்லப் பார்க்கிறார்கள். வேறு என்ன சொல்ல! ஜெயலலிதாவை சுப்ரமணியசாமியும் ஆதரிக்கிறார், சீமானும் ஆதரிக்கிறார்.

  2. தோழர் சீமான் அவர்களுக்கு கருணா கொடுத்த மிகப்பெரிய அநீதியும் கெடுதலுமான சிறைவாசத்தினால் துரோகி கருணா மீது வெறியுடன் கூடிய ஆத்திரம் வருவது தவிர்க்க முடியாததுதான்! அப்படி வருவதுதான் மானமுள்ள தமிழனுக்கு அடையாளமே! அப்படி இல்லைலையென்றால் கூட்டிக் கொடுத்து பதவிக்கு வருபவனும், பிழைப்பவனும் கேவலமான பிறவிகளான பெரும்பான்மையான மலையாளி, பார்ப்பனர்களுக்கும் தமிழனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்1 அதற்காக ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பதற்கிணங்க அவசரப்பட்டு, தான் ஒரு பாப்பாத்திதான் என்று பகிரங்கமாக அறிவித்துக்கொண்ட ஒரு ஆணவம் கொண்ட அடாவடியான செயாமாமியை வலிந்து போய் ஆதரிப்பது என்பது, தனக்கு தானே குழியை வெட்டி வைத்துவிட்டு அதனருகில், தான் புதைக்கப் படும் நாளை அவரே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தற்கொலைக்கு ஒப்பானதே, சீமானின் முடிவு! ஜெயா மாமியின் காதில் அமிலத்தை ஊற்றுவதற்கு ஒப்பான கொடிய சொல் தமிழன் என்ற சொல், தமிழன் என்று சொல்பரின் குரல்வளையைக் கடித்து இரத்தத்தக் குடிக்கும் ஒரு வெறி பிடித்த பாப்பாத்தியை தமிழனுக்காகவே, தமிழ் உணர்வுக்காகவே அரசியல் இயக்கம் நடத்தும் தோழர் சீமான் அவர்கள் ஆதரிப்பதும், தன்னுடைய மேட்டிமையைக் காண்பிப்பதற்காக, யாரோடும் ஒப்பிட முடியாத தன்னலமற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களை நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதையும் அவர் மாற்றிக்கொண்டு, தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்! யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதல்ல, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதுதான் சரியான புரிதலாக இருக்கமுடியும்! அந்த அடிப்படையில் சீமான் அவர்கள் சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும். காசிமேடு மன்னாரு.

    தோழர்கள் வருக… kasimedumannaru789.wordpress.com.

  3. காசிமேடு மன்னாரு அவர்களுக்கு

    செந்தமிழன் சீமான் பெரியாரை ஒருபோதும் விமர்சித்தது கிடையாது. பெரியாரையும், தலைவர் பிரபாகரனையும் வழிகாட்டியாக கொண்டவர் அவர்.
    மற்றபடி நீங்கள் குறிப்பிடுகிற அனைத்தும் சரிதான்.

  4. தோழர் மதிமாறனின் பதில் அப்படியே தமிழருவிமணியனை குறிப்பதாக இருக்கிறது.

    தோழர் மதிமாறனிடம் நேரில் பேசும்போது தமிழருவிமணியனை இதுபோன்ற விமர்சனத்தோடு குறிப்பிட்டு என்னுடன் பேசியிருக்கிறார்.

  5. பெரியாரை விமர்சித்துவிட்டு, காங்கிரஸ் தலைவர்களையும், ஜெயலலிதாவையும் ஆதரிப்பது பழ நெடுமாறன், நெல்லை கண்ணன் போன்றவர்களே

  6. திராவிட இயக்கம் சாதியை ஒழித்ததா? இது என்ன புதுகதை தோழர். எல்லாத்தையும் பெரியார் பெயரைச் சொல்லை மறைக்க முடியாது.

  7. amapa evrkal mega pereya alluthan payamaarukudhu paa nadpudan nakkeeran

  8. தோழர், ‘காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?’ என்கிற கட்டுரையை மீண்டும் வெளியிடவும்.
    தமிழ்த்தேசியம் பேசும் நிறைய காமராஜ் பக்தர்களுக்கு பாடம்மாக இருக்கும்.

  9. வேதம் படித்த பிராமணர்களையே பெரியார் விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading