அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

லிபியா மீது அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் முற்போக்காளர்களிடம் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லையே?

. முதல்வன்

கணவன் மனைவியிடையே சண்டை. தொடர்ந்து மனைவியை கணவன் அடித்து துன்புறுத்துகிறான். ‘அவர்களை சமாதானப் படுத்துவதற்காக’ என்று வலிந்து வீட்டுக்குள் செல்கிற ஒருவன், கணவனை கொலை செய்து, அவன் மனைவியை பலவந்தமாக தூக்கி சென்றுவிடுகிறான். இந்த பஞ்சாயத்து பாணியில்தான் குட்டி நாடுகளின் விவகாரங்களுக்குள் அமெரிக்கா, நடந்து கொள்கிறது.

பாலைவன இஸ்லாமிய நாடுகளில், இதுபோன்ற உள்நாட்டு பிரச்சினை வரும்போதெல்லாம்,  ஒரு பண்டிகை நாளில் போப் ஆண்டவர், மிகுந்த துயரமுற்று, அந்த நாட்டு மக்களின் அமைதிக்காக ஆண்டவரிடம் பிராத்திப்பார்; உடனே அமெரி்க்கா ‘அந்த நாட்டு அதிபரை கொல்வதற்காக’ என்று கிளம்பி, ஈவு இரக்கம் இல்லாமல், வான்வழி தாக்குதல் நடத்தி அந் நாட்டு மக்களை கொல்லும்.

பிறகு, “ஆண்டவர் அமைதியை கொண்டு வந்துவிட்டார்” என்ற பாணியில், அமெரிக்காவின் அடாவடித்தனத்தை புனிதப்படுத்துவதுபோல் இருக்கும் போப் ஆண்டவரின் இன்னுமொரு பிராத்தனை.

அப்படித்தான் இந்த ஈஸ்டரின் போது போப் ஆண்டவர், அடுத்தவர் மனைவியின் அமைதிக்காக பிராத்திப்பதைப்போல், லிபியா மக்களின் அமைதிக்காக பிராத்தித்தார்; உடனே அமெரிக்கா வான் வழி தாக்குதலை நடத்தி அடுத்தவர் மனைவியை அபகரிப்பதுபோல், நடந்து கொண்டது; லிபியா மக்கள், கடாபியின் மகன், மனைவி என்று பலபேர் மாண்டனர்.

இப்போது லிபியாவில் அமைதியை ஏற்படுத்தியதற்காக போப் ஆண்டவர், ஒரிஜனல் ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருப்பார்.

லிபியாவில் கடாபி ஆட்சியில் நடந்ததை விட மிக மோசமான தாக்குதலை, ராஜபக்சே தமிழர்கள் மீது நடத்தினான். லிபியா அமைதிக்காக பிராத்தித்த போப் ஆண்டவர், ஏன் இலங்கை மக்களுக்காக ‘பிராத்தித்து’ அமெரிக்காவை ராஜபக்சே தலையில் குண்டுபோட வைக்கவில்லை. இத்தனைக்கும் அய்.நா, அறிக்கை ராஜபக்சேவின் கொலைவெறியை சுட்டிக் காட்டிய சமயம் இது.

ஈழமக்களின் துயரங்களின் போது, இங்கு இருக்கிற கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகள்,  சீனாவை விமர்சிக்கிறப் போர்வையில், கம்யூனிசத்திற்கு எதிராக, பவுத்ததிற்கு எதிராக கடுமையாக சபித்தார்கள். மிகப் பெரிய அளவில் சிங்கள கிறிஸ்துவர்களையும் கொண்ட இலங்கையை பவுத்த குறியீடாகவே பார்த்தார்கள். இப்படியாக ‘தமிழன்’ என்ற போர்வையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், தலித் அல்லாத ஜாதி கிறிஸ்துவர்கள்,  ஜாதி தமிழர்களாகவே அம்பலமாகி பிதுங்கி நிற்கிறார்கள்.

அமெரிக்கா ஈழத்திற்கு ஆதரவாக இருப்பதாக பொய் வேறு சொன்னார்கள்.அல்லது அமெரிக்காவை விமர்சிக்க மறுத்தார்கள். ஆதரித்தார்கள்.

இதுபோல் இயேசுவும், போப்பும் பச்சைத் தமிழர்களாக தெரிகிற இவர்களுக்கு, ஏனோ அண்ணல் அம்பேத்கர் மட்டும் வட இந்தியராக, மராட்டியராக தெரிகிறார். நல்லது. தொடர்ந்து நடக்கட்டும் இந்த தமிழ் உண்ர்வு.


தொடர்புடையவை:

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

13 thoughts on “அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

 1. அண்ணே லெபனான? லிப்யாவா?

 2. நன்றி அக்னி,
  கேள்வி கேடட தோழர் லெபனான் என்ற குறிப்பிட்டதில் நானும் கவனிக்காமல் லெபனான் என்றே குறிப்பிட்டு எழுதிவிட்டேன்.
  லிபியா என்று திருத்தியிருக்கிறேன்.

 3. அமெரிக்காவில் கிறிஸ்துவ மதம் பெரும்பான்மையாக இருந்தாலும், போப்க்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அவர் கத்தோலிக்கர்களுக்கு தான் மதகுரு. அமெரிக்காவில் உள்ள அதிக மக்கள் வேறு கிறிஸ்துவர்கள். இப்படி அரை வேக்காட்டுதனமாக பதிவு எழுத வேண்டாம்.

 4. /*இயேசுவும், போப்பும் பச்சைத் தமிழர்களாக தெரிகிற இவர்களுக்கு, ஏனோ அண்ணல் அம்பேத்கர் மட்டும் வட இந்தியராக, மராட்டியராக தெரிகிறார்*/
  இரெயில்
  இயேசுவும், போப்பும் பச்சைத் தமிழர்களாக அவர்களுக்கு தெரிந்தால் அது அவர்களின் மடத்தன்மை, அதற்க்கு போட்டியாக நானும் மராட்டிகாரனையும், இந்திகாரனையும் தமிழனாய் நினைப்பேன் என்று அடம்பிடிப்பது அதே மடமைதான். முதல்ல தமிழனை தமிழனாய் பாருங்கள் அதைவிடுத்து நீ இந்த சாதிகாரன், நான் அந்த சாதிகாரன் என்று நமக்குள் சண்டைபோட்டுகிட்டு தமிழர்களின் எதிரியான , தமிழர்களின் உதிரத்தை உறிஞ்சி குடிக்கும் மலையாளத்தான்களுக்கும், இந்திகாரன்களுக்கும்,கன்னடகாரன்களுக்கும் மற்றும் பல இனத்தவர்களுக்கும் வாய்ப்பாய் அமைந்து விடுகிறது.
  தண்ணிர் பிரச்சனை, தமிழ் மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்கள் இனபடுகொலை என எந்த பிரச்சனையானாலும், ஊடகங்கள், ஆளும்கட்சி, எதிர்கட்சி, பொதுமக்கள் என தமிழர்கள் நமக்குள்ளே சண்டை போட்டுகொண்டுயிருக்கிறோம், மலையாளத்தான் இதை எல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் தன் தேநீர் கடை, பலரச கடை, அடுமனை கடை, உணவகங்கள், நகை கடைகள் என அனைத்திலும் இந்த நாய்களின் ஆதிக்கம்தான், தமிழர்களை எந்த அளவுக்கு மடையர்கள் என இந்திய அரசாங்கம் நினைதிருந்தால், தமிழ்நாட்டில் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அனுமதிக்க முடியாது என எவ்வளவு இறுமாப்பாக சொல்லிருக்கும், நடுவண அரசு தேர்வுகள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே உள்ளது, ஏன் தமிழனும் இந்தியன்தானே இல்ல தமிழர்கள் எல்லாம் அனாதைகளா இல்ல பிழப்பு தேடி இந்தியா வந்தோமா, இந்தியில் தேர்வு நடத்த முடியும் என்றால் தமிழில் ஏன் முடியாது? இப்படி நேரடியாக இந்தியை ஒரு வணிக மொழியாக இந்திய அரசு மாற்றி வருகிறது, இதை அறியாத மட தமிழர்கள் அய்யயோ இந்தி தெரியலையே என உச் கொட்டிகொண்டிருக்கிறார்கள், ஏன்டா தமிழ்ல தேர்வு இல்லை போராட்டம் செய்து நடுவன அரசின் பொருளுக்கும், ஊழியர்களுக்கும் சேதாரம் விழைவித்தால் அடுத்ததடவை இதுபோல் தமிழுக்கும், தமிழர்களுக்கு எதிராக எண்ண பயப்படுவார்கள். தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை நாயை சுடுகிறமாதிரி சுட்டு கொல்கிறான் ஆனால் இந்த ஈன இந்திய அரசு இலங்கைக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கைகூட விட்டதில்லை ஈத்தரநாய்ங்க(மீனவர்கள் என்ன தீவிரவாதியா, இல்ல கையில் எதாவது துப்பாக்கி என கொடிய ஆயுதம் வைத்திருந்தார்களா, தமிழர்களின் உயிர்கள் எல்லாம் அவ்வளவு மலிவாக போய்விட்டது, மீனவர்களே ஏன்டா அடிவாங்கி கொண்டிருக்கிறிர்கள் நாலு இந்திய கடற்படை அதிகாரிளை கடத்தினால் போதும் இந்திய அரசாங்கம் அலறிகொண்டு வரும் சில வலியை வலியால்தான் புரிய வைக்கமுடியும்).நம் தமிழர்களின் வரிபணத்தை எல்லாம் சுரண்டி, அப்பாவி தமிழர்களை கொல்ல இலங்கைக்கு பொருள் உதவி, ஆயுத உதவி வழங்கியிருக்கிறதே எவ்வளவு பெரிய அயோக்கியதனம் இது.
  இந்த கதி இந்திகாரனுங்களுக்கு நேர்ந்திருந்தால் சும்மா இருந்திருக்குமா?.
  இலங்கை தமிழனத்தின் எதிரி,
  ஈன இந்தியா தமிழனத்தின் துரோகி

 5. prabhu (19:02:02) :

  அமெரிக்காவில் கிறிஸ்துவ மதம் பெரும்பான்மையாக இருந்தாலும், போப்க்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அவர் கத்தோலிக்கர்களுக்கு தான் மதகுரு. அமெரிக்காவில் உள்ள அதிக மக்கள் வேறு கிறிஸ்துவர்கள். இப்படி அரை வேக்காட்டுதனமாக பதிவு எழுத வேண்டாம்///

  போப்புக்கும் அமெரிக்க அரசுக்கும் தொடர்பு மத ரீதியாகா மட்டும் இல்லை. அரசியலாகவும் இருக்கறிது. பிரிவுகள் இதில் முக்கியம் இல்லை. இத புரிந்து கொள்ளாமல் நீ ஏண்டா குதிக்குற முழுவேக்காடு. நீ கத்தோலிக்க கிறித்துவனா?

 6. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் வே. மதிமாறன் பேசியதில் சில..

  ‘ஜெயேந்திரனின் சீடன் பெரியார் தொண்டராக இருக்க முடியுமா?’
  பார்வையாளர்கள், ‘முடியாது..“ என்கிறார்கள்.

  ‘காந்தி, காங்கிரஸ், ராஜாஜி, கருப்பையா மூப்பனாரை தீவிரமா ஆதரிக்கிற ஒருத்தர் தமிழ்த் தேசியவாதியாக, ஈழமக்களின் ஆதரவாளராக இருக்க முடியுமா?“ பார்வையாளர்கள், ‘முடியாது“ என்கிறார்கள்.

  ‘ஆனால், முடியும் என்று சொன்னால் அப்படிப்பட்டவரை என்னவென்று சொல்வீர்கள்?
  பார்வையாளர்கள் ‘மோசடி பேர்வழி ..’ என்கிறார்கள்.

  ‘நீங்க மோசடி பேர்வழி என்கிறீர்கள்… ஆனால் அப்படிப்பட்டவரை தமிழ்ப் பதிரிக்கைகள் தமிழுருவி மணியன் என்கிறது.’
  ………..
  ………..
  ‘பார்ப்பன ஆதரவுதான் தமிழ்த் தேசியவாதிகளின் அடிப்படையாக இருக்கிறது.

  அதனால்தான் பார்ப்பன பத்திரிகைகளோடு சேர்ந்து, ஸ்பெக்டரம் ஊழல், இலங்கை பிரச்சினையில் திமுகவின் நிலைபாடுகளை கடுமையாக விமர்சிக்கிற இவர்கள்

  இவைகள் எல்லாவற்றையும் விட திமுகவின் அடிப்படை கொள்கைக்கு எதிரான, ஜெயலலிதாவால் அக்யுஸ்ட் நம்பர் ஒன்னு என்று கைது செய்யப்பட்ட ஜெயேந்திரனைப் பற்றியும் அந்த வழக்கில் இருந்து ஜெயேந்திரனை தப்பவைக்கிற திமுக அரசின் செயல்ப்பற்றயும் இவர்கள் வாய்திறப்பதே இல்லை….

 7. அமெரிக்கர்கள் எப்போது போப்பிடம் சரணாகதி அடைந்தார்கள். நேட்டோ நாடுகள் பலவும் சீர்த்திருத்தக் கிருத்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடல்லவா? சீர்த்திருத்தக் கிருத்தவர்களுக்கும், கத்தோலிக்கர்களின் போப்புக்கும் ஆகவே ஆகாது என்பது தான் நான் இதுவரைக் கேட்டத் தரவு.

  இதில் இலங்கைத் தமிழ்க் கிருத்தவர்கள் அமெரிக்க ஆதரவாக இருக்கின்றார்கள் என சொல்வது சரி என எப்படி நினைப்பது – இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்களில் இருக்கும் 90 சதவீதக் கிருத்தவர்கள் கத்தோலிக்கர்கள் தானே. அவர்கள் ஏன் அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்து சிங்கள தேச மதமான பௌத்தத்துக்கும், சீனாவின் மாவோயிசத்துக்கும் எதிராக பேச வேண்டும்.

  தமிழ் ஈழ தேசியவாதிகளில் அனேகர் இந்துக்களே !!! அதில் இருக்கும் கிருத்தவர்கள் கூட கத்தோலிக்கர்களே. தந்தை செல்வா உட்பட வெகு சிறியப் பிரிவே சீர்த்திருத்தக் கிருத்தவர்கள், அமெரிக்க மிசனரிகளினால் மதம் மாற்றப்பட்டோரின் வழித் தோன்றல்கள் என்பதும் நான் அறிந்த தகவல்.

  தமிழ் தேசியம் – தமிழ் கிருத்தவம், கத்தோலிக்கம் – அமெரிக்கா ஆகிய நான்கையும் குழப்பிவிட்டீர்களோ என தோன்றச் செய்கின்றது சகோ. பதிவை மீண்டும் சரிப் பார்க்கவும்.

 8. இக்பால் செல்வன் கட்டுரையில் வே. மதிமாறன்குறிப்பிடாதவற்றை எல்லாம் தவறாக குறிப்பிட்டு அதற்கு நீங்களே பதிலும் சொல்லியிருக்கிறீர்கள்.

  நீங்கள் குறிப்பிட்டதைப்போல் ஒரு இடத்தில் கூட மதிமாறன் பதிலில் இல்லை. மீண்டம் தெளிவாக படிக்கவும்.

 9. அமெரிக்காவுக்கும் போப்புக்கும் எந்த விதத்தில் சம்பந்தம் என்று தெரிய வில்லை. அமெரிக்கா முதலில் ஒரு கத்தோலிக்க நாடே அல்ல. அவர்கள் போப் சொல்வதை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. மதிமாறன் அவர்களே நீங்கள் யாரை ஆதரிகிறீர்கள் என்பதை சற்று தெளிவு படுத்துங்கள்.மேலும் ஜாதி கிருஸ்துவர்கள் என்கிற வார்த்தை ஏற்க கூடியது அல்ல. இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் பெண் அடிமைத்தனம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் பேசுவது கிடையாது. ஆனால் அமெரிக்கா என்று வந்து விட்டால் ஒரே ஆவேச குரல்தான். அமெரிக்கா செய்வது எல்லாமே அரசியல் சம்பந்தப்பட்டதுதான். இதில் மதம் எங்கிருந்து வந்தது?

Leave a Reply

%d bloggers like this: