கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

பகுத்தறிவாளர்கள் ஆயிரம் வீராப்பு பேசினாலும், நட்புக்கு உதாரணம் என்றால் அது கர்ணன்-துரியோதனன் நட்புதானே. பகுத்தறிவாளர்கள் உதாரணம் காட்டுவதுக் கூட இவர்களைத்தானே?

-கே.ரகுராம், கல்பாக்கம்.

செஞ்சோற்றுக் கடன் தீர்த்தான் கர்ணன்.

சோறு வாங்கிக் கொடுத்தான், சாராயம் வாங்கிக் கொடுத்தான் என்பதற்காக விசுவாசமாக இருப்பவனுக்குப் பெயர் நண்பனல்ல; அடியாள். அதற்கு மனிதன் அவசியமல்ல. அந்த நன்றியை நாய் கூட செய்துவிடும்.

தான் உதவி செய்தோம் என்பதற்காக உபகாரம் எதிர்பார்ப்பவன் நண்பனல்ல; எஜமான்.

தான் கொண்டகொள்கையை எதிர்ப்பவன், தன் உடன்பிறந்தவனாகவே இருந்தாலும், ஒருமித்தக் கருத்துக் கொண்ட தன் தோழர்களோடு இணைந்து உறுதியோடு எதிர்ப்பவனே, நண்பன் – தோழன்.

கொள்கை சார்ந்த நேர்மையும், அதை வெளிபடுத்துவதில் உள்ள தெளிவையும் பார்த்து ஏற்படுகிற நட்பே உறுதியானது. இனிமையானது.

பார்த்த மாத்திரத்தில் பத்திக் கொள்வது காதல் அல்ல;  கொள்கை சார்ந்த நட்பு மட்டுமே. அதற்கு உலக உதாரணம், மார்க்ஸ்-எங்கல்ஸ்.

மார்க்சை முதன் முதலில் சந்தித்த எங்கல்ஸ் அந்தப் பிரிவுக்குப் பிறகு, மார்க்சுக்கு முதல் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் இப்படிதான் முடிகிறது:

“அன்பு காரல், தங்களுடனிருந்த அந்தப் பத்து நாட்களும் நான் கொண்டிருந்த மகிழ்ச்சி, நான் அனுபவித்த அந்த மகோன்னதமான மனிதத்துவ உணர்வு இப்போது என்னிடமில்லை”

*

திரு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு ஜூலை 2007 இதழுக்காக எழுதியது.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து….

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையவை:

பணமா? பாசமா?

6 thoughts on “கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

  1. ஏண்ணே! திராவிட பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்த மாறன் பிரதர்ஸ் இருக்க…இப்படி தீர்ப்பெழுதிட்டீங்களண்ணே…

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading