‘தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

ணவு பொருட்களின் விலை ஏற்றம், லஞ்சம் அதிகரிப்பு, ஈழ மக்களின் துயரம் என்று இதுபோன்ற காரணங்களுக்காக திமுகவை பழிவாங்கிவி்ட்டதாக அதிமுகவிற்கு ஓட்டுப்போட்டவர்கள் பெருமிதத்தோடு இருக்கிறார்கள்.

ஆனால், பார்ப்பனர்களின் அரசியலை மேல் சொன்ன இந்தக் காரணங்கள் எப்போதும் தீர்மானிப்பதில்லை. அவர்கள் திமுகவை எப்போதும் தங்களுக்கு எதிரான கட்சியாகத்தான் கருதுவார்கள். மாறாக, அதிமுகவை அதுவும் ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு அதை தங்களின் கட்சியாகவேதான் கருதுகிறார்கள்.

போன முறை ஜெயலலிதா ஆட்சியில் உணவு பொருட்களின் விலை ஏற்றம், லஞ்சம் அதிகரிப்பு, ஈழ மக்களின் துயரம் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தபோதுக்கூட அவர்கள் அதிமுகவைத்தான் ஆதரித்தார்கள். ஆக, அவர்கள் எதற்காக திமுகவை எதிர்க்கிறார்கள், அதிமுகவை ஆதரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு எடுத்துக்காட்டுப்போல் தினமணியின் இந்த தலையங்கம் திகழ்கிறது,

‘சாதிபேதங்களைக் களைந்து, மதவேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம் சமூகநீதிப் பிரசாரமும், பகுத்தறிவு வாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் சாதி மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவு அகற்றியதன் அடிப்படைக் காரணம் பெருந்தலைவர் காமராஜின் கட்டாயக் கல்வித் திட்டமும் அந்தத் திட்டம் வெற்றிபெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும்தான் என்பதே பேசப்படாத நிதர்சன உண்மை. ……………………………………………

சமச்சீர் கல்வி என்கிற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவு வாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும் தலைவர்களையும் பற்றிய கருத்துகளைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வீணாகிவிட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி.‘ (9-6-2011 தினமணி தலையங்கம்)

தினமணியின் இந்த உண்ர்வுதான் ஒட்டு மொத்தப் பார்ப்பனர்களின் உணர்வு. அதாவது பெயரளவில்கூட பெரியாரை ஆதரிப்பதை பார்ப்பனர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது.

இதில் காமராஜரை உயர்த்தி எழுதி திராவிட இயக்கத்தை எதிர்ப்பது என்பதுதான் பார்ப்பன தந்திரம். காமராஜரின் சிறப்பபு என்று தினமணி குறிப்பிடுபவது முழுக்க முழக்க பெரியாரால் செய்யப்பட்டது என்பதை மறைத்து எழுதுகிறது தினமணி.

சரி, தினமணி சொல்வதையே முழு உண்மை என்றே ஒத்துக்கொள்வோம். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்தது ராஜாஜியா? பெரியாரா? திராவிட இயக்கமா?

சொந்தக் கட்சியிலேயே காமராஜ்க்கு எதிராக சதி செய்து அவரை அவமானப்படுத்தி அவர் முதல்வர் ஆவதை தடுத்தது, ராஜாஜியா? பெரியாரா? திராவிட இயக்கமா?

‘பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சிஅடைவதுதான் சரி.‘  என்கிறது தினமணி. விஷ விதை என்று அது குறிப்பிடுவது பெரியாரைத்தான்.

தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட பிஞ்சுகளின் கல்வியைத் தடுத்து, குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த ராஜாஜி விச விதையா?

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி, அதை நிறுத்தி, ராஜாஜி ஆட்சியை ஒழித்து, காமராஜ் ஆட்சியை கொண்டுவந்து கிராமப்புற பள்ளிக்கூடங்களை கொண்டுவந்த பெரியார் விச விதையா?

சரி, கட்டாயக் கல்வித் திட்டத்தை காமராஜ் கொண்டு வந்ததாகவே வைத்துக் கொள்வோம், அப்போது அதை எதிர்த்தது, பெரியாரும் திராவிட இயக்கமுமா? ராஜாஜியும் பார்ப்பனர்களுமா?

காமராஜ் மீது தினமணி கொண்ட பாசம் உண்மை என்றால், காமராஜ்க்கு எதிராக சதி செய்த ராஜாஜியை ஏன் கண்டிக்க மறுக்கிறது தினமணி?

இதற்கு தினமணி பதில் சொல்லவேண்டும்? அல்லது, தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் பார்ப்பனியத்திற்கு பல்லக்குத் தூக்குகிற தினமணி கட்டுரையாளர்களான சூத்திரர்களாகவது பதில் சொல்ல வேண்டும்.

பார்ப்போம் அவர்களின் யோக்கியதையை.

தொடர்புடையவை: 

ரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைச்சார். உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?” அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் பதட்டமாயிட்டேன். …

காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?

18 thoughts on “‘தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

  1. Ithula Periyara sollalainu ungalukku varuthama? illai Kamarajara pathy sollitanganu varuthama?
    Matha katchi pathirakkakaikku ithu evlo mel?

  2. சரியான சிந்தனையைத் தூண்டும் வகையில் இருக்கிறது.

  3. உங்களுக்கு ஏன் பார்ப்பனர்கள் மேல் இந்த கோபம்! என்னை பொறுத்தவரை சமச்சீர் கல்வி புத்தகங்கள் மாணவர்களின் தகுதிக்கேற்றவாறு அமையவில்லை என்பதுதான் சரி

  4. சமசீர் கல்வி பாடப்புத்தகங்களில் ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் பகவத்கீதை பற்றி எழுதியிருந்தால் தினமணி அதனை வரவேற்றிருக்கும். அண்ணா சொன்னது போல ஆயிரம் ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தாலும் தமிழைப் படித்து தமிழால் வயிற்றை நிரப்பினாலும் பார்ப்பனர்களுக்கு தாங்கள் உயர்ந்த சாதி என்ற திமிர் விட்டுப் போகாது.

  5. உங்கள் கருத்து மிகவும் அருமை, பார்ப்பனர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் (ஒவ்வொரு தொகுதியின் ) விபரங்களே சாட்சி. அந்தந்த தொகுதியை சார்ந்தவர்கள் பார்த்தால் இந்த கட்டுரையின் உண்மை வலுப்பெறும். வாழ்த்துக்கள்.

  6. அருமையான விமர்சனம்.
    இவர்கள் திருந்த மாட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் பெயரில் நடமாடும் தமிழர்களுக்கு எதிரான விசப் பூச்சிகள் ஆயிற்றே.

  7. தினமணி கட்டுரை எழுதும் சூத்திரர்களளும் பதில் சொல்லமாட்டார்கள்.அவர்கள் கருப்பு பார்ப்பனராக மாறிவிட்டார்கள்

  8. “செருப்படி”களின் தொகுப்பு…
    ஒவ்வொரு சமூகத்தவரும் தங்கள் சாதிக்கென பாடுபடுவதுதான் இப்போதைய அரசியலும் கல்வியும்…. இதை மாற்றுவது மிகக் கடினம்..

  9. முடிவெடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஒன்றிணைகிறார்கள். எழுதுகிறார்கள். கருணாநிதியை சுற்றி வளைத்து தாக்குகிறார்கள். நாம் கை தட்டி…கை கட்டி வேடிக்கை பார்க்கின்றோம். வேற என்ன சொல்ல……?

  10. தோழர் அவர்களே! பொதுவாக தமிழ்நாட்டில் திராவிட கருத்துக்களை இயக்கங்களை வெறறுக்காமல் இந்தமன்னில் மனிதசமூக வளர்ச்சிக்கும் மானுடசமத்துவத்திற்கும் வழிகான முடியாது… திராவிடகருத்தியலில் இருந்து எதையும் பார்க்ககூடாது…

  11. சமசீர் கல்வியை ஏற்றுக்கொண்டல் எங்கு தலித்துக்கள் முன்னேரிவிடுவர்களோ என்ற பயம் எங்கு எம் ல் ஏ க்களெல்லாம் கேள்வி கேட்க அரம்பிதிடுவர்களோ என்ற பயம்.. GOOD ANALYZING..

  12. thamizhergalin adimmai villangu 2000 andugalukkum melaga indrum naveenamaga thodarukinrethu enbathuthan vethanai. ithai thamizhargal virumbi yetrukolgirarpol avargalathu seyelpadugal ullana.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading