பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!
எந்தக் காலத்திலும் பெண்களின் மனதை புரிந்த கொள்ளவே முடிவதில்லையே ஏன்?
-எஸ்.எம். சிவராமன், சென்னை.
பெண்களை வெளிப்படையாக பேசுவதற்கு அனுமதிக்காத ஆணாதிக்க சூழல்தான் அதற்குக் காரணம்.
காதல், திருமணம், செக்ஸ், நட்பு, ஆண்கள், அரசியல், இலக்கியம், சினிமா, குடும்ப உறவுகள் இவைகள் குறித்து பெண்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களை, விருப்பு, வெறுப்புகளை சொல்வதைவிட அந்தச் சூழலுக்கு என்ன சொன்னால், தன்னை மற்றவர்கள் தவறாக நினைக்க மாட்டார்களோ அல்லது எது பிரச்சினையற்றதோ அதை சொல்வது.
அதனால்தான், தான் மிகவும் நேசிக்கிற ஒருவரையோ, ஒரு விசயத்தைப் பற்றியோ அதற்கு நேர் எதிரான நிலை எடுத்து, உறுதியாக எதிர்த்து, மறுத்துப் பேசுகிற அளவிற்கு பெண்கள் மாறிவிடுகிறார்கள். இதனால், அவர்கள் மிகப்பெரிய மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.
இப்படி பெண்களை வெளிப்படையாக பேச அனுமதிக்கவும் மறுத்து, அதன் பிறகு பெண்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று புலம்புவது ஆணாதிக்க கோமளித்தனங்களில் ஒன்று.
‘எல்லா நேரங்களிலும் பெண்கள், தான் சொல்வதற்கு தலையாட்ட வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதில்லை?’ என்பதும் பெண்களுக்குத் தெரியும். அதற்கேற்பவும் பெண்கள் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
சில நேரங்களில் பெண்கள் தங்களை எதிர்த்து, மறுத்து பேசுவதையும், ஆண்கள் விரும்புகிறார்கள். அந்த எதிர்ப்பும், மறுப்பும் ஆண்களுக்கு லாபமாக இருக்கும் பட்சத்தில்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தில், தன்னை மறுமணம் செய்து கொள்ளச் சொன்ன கணவனை மறுத்து, ‘சொன்னது நீ (த்) தானா… சொல்..?’ என்று உருக்கமாகப் பாடிய மனைவியின் நிலையைதான் ஆண்கள் விரும்புவார்கள்.
மாறாக, ‘சரி அத்தான், நீங்கள் சொன்ன மாதிரியே… டாக்டர மறுமணம் செஞ்சிக்கிறேன்’ என்பதை பணிவோடும், அழகையோடும் சொல்லியிருந்தால்கூட, நோயாளி கணவன் அந்த நிமிடமே அதிர்ச்சியில் செத்திருப்பான். படம் பார்த்த ஆண்கள், ‘இவ எல்லாம் ஒரு பொம்பள?..’ என்று திட்டித் தீர்த்திருப்பார்கள்.
கணவன் தன் திருமணத்திற்கு முன்பான காதல் அனுபங்களை சொல்வைதக் கேட்டு, மனைவியும் அதுபோல் பகிர்ந்து கொண்டால், அன்பான கணவன் ஆயுதம் தாங்கிய கணவனாக மாறிவிடுவான்.
பெண்கள் வெளிப்படையாக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை என்பதைவிடவும், அதை தாங்கிக் கொள்கிற சக்தி ஆண்களுக்கு இல்லை என்பதே உண்மை.
*
தங்கம் 2011 சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
பெண்கள் வெளிப்படையாக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை என்பதைவிடவும், அதை தாங்கிக் கொள்கிற சக்தி ஆண்களுக்கு இல்லை என்பதே உண்மை.
the best
மிகத் தெளிவான பதில்.
திரு. மதிமாறன் அவர்களே ,
தங்களுடைய பதிவுகளை சமீப காலமாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். அனைத்தும் அருமை.
என்னுடைய நண்பர்களுக்கும் தங்கள் தளத்தை அறிமுகப்படுதிக்கொண்டிருக்கிறேன்.
மோகன், சவுதி.
பெண்கள் வெளிப்படையாக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை என்பதைவிடவும், அதை தாங்கிக் கொள்கிற சக்தி ஆண்களுக்கு இல்லை என்பதே உண்மை…..////
aam Thangum sathi iali aangal idam..
“பெண்கள் வெளிப்படையாக பேசுவதில்லை”
ஆண்களுக்குத் தெரியும் உண்மை
Your message is not fully correct
He understand her
That’s why they are leading a joint life
Onda matrathai purinthu kolla mudiya vellai endral eppadi sarinthu vazha mudikirathu
They understands each other it’s my opinion
Mathimaran Anna Super Anna….