சிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..

நல்ல ஏற்ற இறக்கத்தோடு, அழுத்தம் கொடுத்து வசனம் பேசுவதில் சிவாஜிக்கு நிகர் அவர்தான். அவருக்குப் பிறகு இன்றைக்கு அப்படி வசனம் பேசுவதில் கில்லாடி என்று யாரை சொல்லுவீர்கள்?

-மீனாட்சி

இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனை.

3 thoughts on “சிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..

 1. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தமிழன் கருணாநிதிக்கு போட்டியா?

 2. நிச்சயம் மறுக்கிறேன். மேடையில் சிங்கமென கர்ஜிக்கும் வை.கோ போன்ற திறமையான நடிகர்களைக் கணக்கில் கொள்ளாதது கண்டனத்திற்குரியது

 3. தமிழ்த்தாய் ஈன்று எடுத்த தவமகன் அண்ணாதுரை, மன்னிகவும் “பேரறிஞர் அண்ணா”
  பேரறிஞர் அண்ணா சிறந்த பேச்சாளர் மட்டும் அல்ல சிறந்த எழுத்தாளர், முற்போக்கு சிந்தனையாளர், பகுத்தறிவாளர்,
  சமூக சீர்த்திருத்தவாளர் என பலதுறையில் சிறந்து விளங்கியவர்.

  தம் வாழ்கையில் பகட்டு, ஆடம்பரத்தை சற்றும் விரும்பாதவர் மிக எளிமையாக வாழ்ந்தவர் ஆனால்
  தான் கையாண்ட தமிழில் எளிமை, அலங்காரம், ஆடம்பரம், கவர்ச்சி, துள்ளல் என ஒன்றுடன் ஒன்றை ஒருங்கினைத்து ஆளுமை செலுத்தியவர்.

  கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற உயரிய கொள்கையை முன்மொழிந்தவர்.

  அடுத்ததாக முத்தமிழ் அறிஞர் கலைஞர்,
  பேரறிஞர் அண்ணாவை போல் பேச்சு, எழுத்து என அனைத்து துறையிலும் சிறந்த சிந்தனையாளராக இருந்தவர். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் கலைஞர் என்ற பக்கங்களை தவிற்க இயலாது

  அப்பறம் வைகோ,
  எழுச்சிமிக்க, உணர்ச்சமிக்க உரையாற்றுவதில் வைகோவுக்கு நிகர் வைக்கோதான், வைக்கோவின் கம்பீரம் நிறைந்த பேச்சாற்றல் அதன் கவர்ச்சி அவரின் தொண்டர்களை மட்டும் அல்ல பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது

  நாஞ்சில் சம்பத், திருமாவளவன் இப்படி பலபேர் சொல்லலாம்

  தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், தென்னாட்டு லெனின், தென்னாட்டு காந்தி
  என சொல்லியது போதும் இனி அவர்கள் நம்ம தலைவர்களின் பெயர்களை கொண்டாடட்டும்

Leave a Reply

%d bloggers like this: