பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

ந்த படத்துல வர்றா மாதிரியான போலிஸ் ஸ்டேசன்… அடடாடா.. என்ன ஒரு அன்பான, அழகான காவல்துறை?

உண்மையிலேயே போலிஸ்காரங்க நல்லவங்க மட்டுமில்ல, அப்பாவிங்க கூடதான். தேவையில்லாம நம்ம ஜனங்கதான் அவுங்கள பாத்து பீதி அடையது. இத்தனைக்கும் ‘அதிகமான கிரிமினல்கள் உள்ள போலிஸ் ஸ்டேசன்’ என்று அந்தப் படத்தல வரும் நீதிபதியே சொல்ற ஊர்லேயே இவ்வளவு அன்பான போலிஸ்!

சேது, பிதாமகன், நான் கடவுள், அவன்-இவன் வரைக்கும், எல்லா கதாபாத்திரங்களும் ஒரே தொணியிலதான் வசனம் பேசுது. வசனத்துலேயும் பாலாவோட பங்களிப்புத்தான் அதிகமாக தெரியுது.

அவருக்கு கோர்வையா எழுத வராது போல, தான் சொல்றத பக்கத்துல இருந்து எழுதி, அதை காப்பி எடுத்து கொடுக்கிறதுக்கு ஒரு ஆளு வேணும்போல…

இந்த படத்துலேயும் வசனம் ராதாகிருஷ்ணனோ, ராமகிருஷ்ணனோ ஒருத்தரோட பேரு வருது..

ஜமீன் கிட்ட ரெண்டு திருட்டுபசங்க… வாடா… போடா…ன்னு கூப்பிடற அளவுக்கு நெருக்கமா இருக்கிறாங்க… அவுங்களுக்குள்ளே எப்படி அந்த உறவு ஏற்பட்டது?

அதிக அழுத்தம் கொடுத்து காண்பிக்கப்பட்ட இரும்பு பெட்டி திறக்கிற காட்சி, திரைக்கதையில் ஒரு லீடா இல்லாம, துண்டா வெளிய போயிடுச்சு,

ஜமீனா வர ஜி.எம். குமாரு ஏன் நடுத்தர வர்க்கத்து சென்னைத் தமிழ் பேசுராரு?

இந்த காட்சியல… அது இல்ல, அந்த கட்சியிலே இது இல்ல என்பது போன்ற கேள்வி எல்லாம் நான் கேட்க போறதில்ல…

மற்றவர்கள் கேட்க முடியாத அல்லது கேட்க விரும்பாத ஒரு விசயத்தைப் பற்றிதான் இந்த விமர்சனம்.

***

அடுத்தவன் வீட்டுக்குள்ள குதிச்சு திருடறது, கழுத்தறுத்து களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது… இதுபோன்ற செயல்கள் செய்கிற திருட்டு பசங்களோடு நெருக்கமா, அன்பா இருக்கிற அய்நஸ் என்று அழைக்கப்படுகிற ஜமீனுக்கு,

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வது மாபெரும் சமூக குற்றமாக தெரிவது ஏன்?

‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்து தவறு என்று காட்டவில்லை, அதை முறைப்படி லைசன்ஸ் வாங்கி செய்யவேண்டும். இப்படி திருட்டுத்தனமாக செய்யக்கூடாது என்பதுதான் காட்சியாக்கப்பட்டிருக்கிறது’ என்று பதில் வரலாம்.

கழுத்தறுத்து களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, அடுத்தவன் வீட்ல குதிச்சு  திருடறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது இதெல்லாம் முறைப்படி லைசன்ஸ் வாங்கித்தான் நடக்குது என்று நம்புகிற அப்பாவியா அய்நஸ்.

ஆட்டுக்கறி விற்பவர்களில் எத்தனைப் பேர் லைசன்ஸ் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இன்னும் நெருக்கிச் சொன்னால், ஆடுகளை வெட்டி தோலை உறித்து கறியாக பிரிப்பது வரை எல்லாம் சாலைகளிலேயே நடக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழைமைகளில் வழியேற திறந்தவெளியில் புது புது ஆட்டுக்கறி கடைகளை காணலாம்.

ஆனால், இதுபோல் பகிரங்கமாக, பார்ப்பவர்கள் அருவருப்பு அடைவதுபோல் மாட்டுகளை பொது இடங்களில் வெட்டி பிரித்து இறைச்சியாக விற்பதில்லை.

அப்படியிருக்க, பாலாவின் ஜமீன் அய்நசுக்கு, மாடுகள் மேல் ஏற்பட்ட இரக்கம், ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்ற வள்ளலார் பாணியிலான உயிர்கள் மீது கொண்ட அன்பினால் அல்ல,

ஒரு ஜாதி இந்துவுக்கு இருக்கிற மாடுகளின் மீதான புனித உணர்வும், மாடுகளை உண்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான்.

சைவம் சாப்பிடுகிறவர், அசைவ உணவை சாப்பிடுவதை எப்படி அருவருப்பாக பார்க்கிறாரோ, அதுபோலவே, ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிற ஜாதி இந்து மாட்டுக்கறி சாப்பிடுவதை அருவருப்பாக பார்க்கிறார்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் மாமிச உணவு மீதான அவர்களின் அருவருப்பை புரிந்து கொள்ள முடிகிறது. ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவர்கள் மாட்டுக்கறியை அருவருப்பாக பார்க்கிற மோசடியை என்னவென்று சொல்வது?

ஆடு, கோழிகளை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கிற உணவு பொருளாகவும், மாடுகளை புனிதமாகவும் பார்க்கிற ஜாதி இந்து மனோபாவத்தை, உலகின் எந்த நாட்டு மக்களிடத்திலும் பார்க்க முடியாது

இந்த மோசடிக்குள்தான் மறைந்திருக்கிறது தீண்டாமைக்கான மூலக்கூறு.

இதுபோன்ற ஜாதி இந்து உணர்வுதான் ஜமீன் உணர்வாகவும் வடிந்திருக்கிறது இந்த படத்தில்.

அநேகமாக எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஜாதிய அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. விசால், ஆர்யா கதாபாத்திரங்களின் தந்தை, ‘நம்பள மாதிரி களவானி குடும்பத்துல சம்பந்தம் வைச்சாலும் வைப்பேன்..’ என்று வருகிற வசனமும்,

படம் பார்க்கிறவர்கள், ஜமீன் அய்நஸை பாளையக்கார எட்டயபுர ஜமீனாக (தெலுஙகு நாயக்கர்) நினைத்துக் கொள்ள போகிறார்கள், என்பதினால், ‘மனுநீதி சோழன், எங்க முப்பாட்டன் கானாடுகாத்தான் சேதுபதியோட சொந்த மச்சினன்’ என்ற வசனம் ஜாதி பெருமையோடு நெருக்கமாக முக்குலத்தோர் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

இப்படி நேரடியாக ஜாதி அடையாளம் காட்டப்படாமல், குறிப்பால் ஜாதி அடையாளத்தை உணர்த்தப்பட்ட ஒரே கதாப்பாத்திரம் மாடுகள் விற்பவர்.

‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் மாட்டுக்கொட்டகையிலேயே வீடு’ இந்தக் குறியீடுகள் அவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் அந்த கதாபாத்திரத்திற்கு பெயர்கூட வைக்கவில்லை.

பெயர் சொன்னால் ஒரு வேளை நேரடியாக ஜாதி அடையாளம் தெரிந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம்.

ஜமீன் அய்நஸ், முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த ஒரு ஜாதி இந்து என்பதால், கள்ளர் சமுதாயத்தை நெருக்கமாகவும், மாடுகளை புனிதமாகவும், மாட்டுக்கறி விற்பனையை சமூக விரோதமாக பார்க்கிறார்.

ஆனால், இயக்குநர் பாலா அவரும்  ஏன் அவ்வண்ணமே பார்க்கிறார்? அய்நசுக்கும் பாலாவிற்கும் என்ன தொடர்பு?

தொடர்புடையவை:

மிருகாபிமானம்

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

22 thoughts on “பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

  1. தாழ்த்தப்பட்ட மக்களை கூலிக்கு மாரடிக்க வைக்கும் சாதிய வன்கொடுமையையும் செவ்வன செய்திருப்பார் பாலா.

    அய்னஸின் இறுதி ஊர்வலத்தில், மாரிலடித்து ஒரு பெண்கள் கூட்டம் அழுதுகொண்டிருக்கும், அப்பிடியே pan பன்னுனம்னா உசுருக்கு உசுராகப் பழகிய கள்ளக் கதாநாயகர்களின் அம்மாக்களை குத்துக்கல்லாட்டம் நிற்கவைத்து, அவர்கள் அந்தக்கூட்டத்தில் இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்லிவிடுவார்.. அவன்தான் இவன் சந்தேகம் வேண்டாம்.

  2. Hi

    Dont you know that we worship MAADU in “MAATTU PONGAL”? “PASU MADU” is considered as like a GOD in HINDU culture.
    Most people dont like to eat BEEF in hotels.But i agreed that people eat now a days as an alternative!

  3. சில விஷயங்களைப் “போட்டுடைப்பது” பற்றி இங்கு சொல்லியுள்ளேன். அதற்கு நன்றி

  4. i liike one dialog in that film. that RK will ask highness ‘Why dont you oppose bringing camels from north and doing kurbani here (bcoz u dont have courage)”. but it is really confusing what bala was trying to convey in the film. it was so messed up.

  5. மாட்டுக்கறின்னு சொல்வதற்கு பதிலா தோழர்களின் புதுமொழியான காங்கிரஸ் என்ற சொல்லை பயன்படுத்துவோம்

  6. வலிபோக்கன் நீங்கள் சொல்வது புரியவில்லை

  7. அற்புதம் தோழரே!!! உங்கள் பணி தொடரட்டும்.

  8. bala vin anaithu padakkalum inththuva vadai visakkudiyathuthan. sariana vimersanam. nandri thozhar.

  9. அருமையான் கட்டுரை யாருமே இந்த படத்தை பற்றி அதுவும் அதில் வரும் மாடுகள் இய்றைச்சிக்கா விற்கப்படுவது போன்று அமைந்திருப்பது ஒரு சமுதாய மக்களை இழிவு படுத்தும் விதமாக உள்ளது என்று விமர்ச்சிக்கவில்லை. ஆனால் விக்ரம் நடித்திருக்கும் படத்திற்கு தெய்வதிருமகன் என்று பெயர் சூட்டியத்தே முத்துராமலிங்க தேவனையும் அவர்காளது சமுதாயத்தையும் இழிவு படுத்துவதாக அமைந்திருக்கின்றது என்று பெயர் மாற்றமே செய்துவிட்டனர்.
    //அப்படியிருக்க, பாலாவின் ஜமீன் அய்நசுக்கு, மாடுகள் மேல் ஏற்பட்ட இரக்கம், ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்ற வள்ளலார் பாணியிலான உயிர்கள் மீது கொண்ட அன்பினால் அல்ல,

    ஒரு ஜாதி இந்துவுக்கு இருக்கிற மாடுகளின் மீதான புனித உணர்வும், மாடுகளை உண்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான்.// இது இப்போது திரைபடத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.

    இதனை செய்த பாலாவினை சாணத்தால் அபிசேகம் செய்தாலும் போதாது.

  10. இன்றைய தமிழகத்தில் மாட்டிறைச்சியை தலித்துகள் மட்டுமல்லாமல், மற்ற ஜாதியாரும் பர‌‌வலாக உட்கொள்கின்றனர். அப்படியே வீடுகளில் உட்கொள்ளா பிறஜாதியினர் ஓட்டல்களில் கொள்கின்றனர். வெளிநாடுகளுக்குப் போனால் தாராளமாக – இங்கே இப்படித்தான் என்று சொல்லிக்கொண்டு.

    அப்ப‌டியே த‌லித்துக‌ள் ம‌ட்டும் என்று எடுத்துக்கொண்டாலும்,

    ஒரு ஜாதி இந்து என்ப‌வ‌ன் வைதீக‌ ம‌த‌த்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ன்; அதை அவ‌ன் 100/100 அனுச‌ரிக்காவிட்டாலும் அதை ஆத‌ரிப்ப‌வ‌ன். த‌லித்து என்ப‌வ‌ன் அம்ம‌த‌த்தை ஏற்காத‌வ‌ன். அத‌ற்கு ஜாதீய வ‌ருணாசிர‌ம் ஒரு பெரிய‌ கார‌ண‌ம் என்ப‌து தெரிந்த‌தே. த‌லித்துக‌ளைப் பொறுத்த‌ ம‌ட்டில் வைதீக‌ ம‌த‌மும் அதை அனுச‌ரிப்போரும் அன்னிய‌ர்க‌ள்.

    மாட்டிறைச்சி உண்ப‌து அம்ம‌த‌த்துக்கு எதிர்ம‌றையான‌து. உண்ண‌லாம் ஆனால் அதைச்ச‌ரியென்று சொல்லாம‌லே. வைப்பாட்டி வைத்துக்கொள்ள‌லாம். ஆனால் அது ச‌மூக‌த்தால் அங்கீகார‌ம் செய்ய‌ப்ப‌டாத கள‌வொழுக்க‌ம் என‌த்தெரிந்தே.

    ஆனால் த‌லித்துக‌ளுக்கு இப்ப‌டி கிடையாது. மாடு தின்னும் புலையா உன‌க்கு மான‌ம் ஒரு கேடா என்று கேட்ப‌தாக‌ எழுதுகிறார் உங்க‌ளுக்குப்பிடிக்காப்‌ பாவ‌ல‌ர். அதில் ஒரு உண்மையுண்டு. மாடு தின்னும் ம‌னித‌ர்க‌ள் இந்துக்க‌ள் அல்ல‌. அவ‌ர்க‌ள் இந்துக்க‌ள் பார்வையில் ஒரு ஜந்துக்க‌ள். த‌லித்துக‌ள் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டா ஜ‌ன்ம‌ங்க‌ள் இந்தும‌த‌த்தில். ஆயினும் இருக்கிறார்க‌ள் மான‌ங்கெட்டு. இரு ஆனா மாடு தின்னாதே. தின்று கொண்டே மான‌மும் ம‌ரியாதையையும் கேட்கிறாய் என்ற‌ க‌ருத்தையே அப்பாவ‌ல‌ர் ஜாதி இந்துக்க‌ள் கேட்ப‌தாக‌ நந்த‌ன் புராண‌த்தில் எழுதுகிறார்.

    அப்ப‌டிப்ப‌ட்ட ஜாதி இந்துக்களையும் அவர்களால் மதிக்கப்படா தலித்துகளையும் க‌தாபாத்திர‌ங்க‌ளாக‌ காட்டுவ‌து ஒரு க‌லைஞ‌னின் உரிமை. நீங்க‌ள் த‌லையிட‌ முடியாது.உல‌க‌த்தைக் காட்ட‌த்தான் க‌லைஞ‌ன். உம‌க்கு எது பிடிக்குமோ அதைப்பார்ப்ப‌த‌ற்கு ம‌சாலா ப‌ட‌த்த‌யாரிப்பாள‌ர்க‌ள் உண்டே !

    இன்னொருவ‌ன் மாடு தின்னும் த‌லித்துக‌ளைத் தூக்கிப்பிடித்துக் காட்டி, அதை இக‌ழும் இந்துக்களை அழுத்திக்காட்டினால் அதைச் ச‌ரியென்பேன்.

    க‌லையுண‌ர்வேயில்லாத‌வ‌னெல்லாம் ஏன் க‌லையைப்ப‌ற்றி எழுதுகிறான் ம‌திமாற‌ன்?

  11. மாடு தின்னும் வாழும் நந்தன் தில்லைக்குள் நுழைய நடுங்குகிறான். எங்கே காணிலும் வேதமுழக்கங்கள், வேள்வித்தீபுகை விண்ணில், நடுங்குகிறான். ஏன், குற்றவுணர்வு?

    சிதம்பரம் தீட்சிதர்கள் மொட்டையாகக் கேட்டே விட்டார்கள் அவனை:

    ‘மாடு தின்னும் புலையா உனக்கு மானம் ஒரு கேடா?”

    என்று சொல்ல அவன் ஊருக்கு வெளியே ஓடிவிடுகிறான்.

    ஆனால் பெருந்தெய்வ வழிபாடல்லவா அவனுக்கு வேண்டும் ? அவனுக்கென்று அவன் முன்னொர் காட்டிய தெய்வங்கள் வேண்டாவாம்! நித்தம்நித்தம் காத்துக்கிடக்கிறான். எங்கிருந்து வந்தானோ அம்மக்களையும் அவர்கள் கலாச்சாரத்தையும் தான் உதித்த தலித்தாயையும் தந்தையும் மறுதலித்து விட்டு வைதீகப்பார்ப்பனர்கள் காட்டிய கட்டிய பெருந்தெய்வமே இவனுக்கு வேண்டுமாம்.

    இவன் தொல்லை தாங்காமல் இவனை உள்ளே விட, இவனுக்கு பெருந்தெய்வம் காட்சியளித்தது. எப்போது என்று மாடு தின்பதை விட்டானோ அன்று. அடடே ஜாதி இந்துவாகி விட்டான்!

    இதிலிருந்து என்ன தெரிகிறது ? தலித்தாக இருக்கும் வரை நீ தெய்வம் என்பதைப்பற்றிப்பேசவே கூடாது. ஒழிந்து போ. வராதே என்று பொருள்.

    எனவே மதி மாறா! கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா ? சிவன் வேண்டுமென்றால் மாடசாமியை விட்டு விடு. அதாவது மாடு தின்னாதே.

    இல்லாவிட்டால் ? என்றுதான் பாலா சொல்கிறார் ஜாதி இந்துக்களை வைத்து என்பது என் தாழ்மையான கருத்து. இன்னும் நான் படம் பார்க்கவில்லை :-)))

  12. Dear Madhimaaran!

    Hindu.com has made a strong case for making a dalit as the next Sankarachaariya of Kanchi mutt. My response.

    இளையராஜாவை ஆக்கத்துடிக்கிறார்கள் போலும். அவர் ஒரு தலித்து. அவர்தான் திருவாசகம், தேவாரம்னு போய்க்கொண்டிருக்கிறார்.

    தலித்துகள் கேட்பது மடத்தில் பதவியல்ல.
    தரமான கல்வி, வேலைவாய்ப்பு, அதனால் வரும் நல்ல வாழ்க்கை. இவை மடத்தில் கிடைக்குமா?

    ஒருத்தன் சங்காரச்சாரியாகி விட்டால், எல்லா தலித்துகளுக்கும் வாழ்க்கை வந்து விடுமா ? வரவே வராது.

    மடங்கள் நான்கு சுவர்களுக்குள்ளே முடங்குபவை. வாழ்க்கை அச்சுவர்களுக்கு வெளியேதான் இருக்கிறது.

    இஃது ஒரு சூழ்ச்சி. தலித்துகள் ஏமாறக்கூடாது

    Do u agree with the demand and my response ? Ur blog shows the pic of the famous dalit of Tamilnadu.

  13. தேவையான பதிவு,
    மாட்டுகரி சாப்பிடக்கூடாது என்றால் பாலா தெளிவாக சொல்லவேண்டும் பசு மாட்டுக் கரியா ,எருதுவின் கரியா,அல்லது இரண்டுமா?
    இதைச் சாப்பிட்டா அவனுக்கு பிடிக்கலை
    அதைச் சாப்பிட்டா இவனுக்கு பிடிக்கலை
    பசியிலே ஏதாவது கிடைக்காதான்னு ஒரு கூட்டம்
    பசிக்கு எது கிடச்சாலும் சாப்பிடுவேன்
    எந்த (ஆ)சாமி என்ன புடுங்குவானோ புடுங்கிக்க்கோ!!!!!!!!!!!!

  14. திருஎஸ்எஸ்கே.முன்பு காங்கிரஸின் சின்னம் (காளை)மாடு.
    மாட்டுக்கறியை எளிமையாக குறிப்பிடுவதற்குத்தான்.காங்கிரஸ். என்று குறிப்பிடுவோம் என்று சொன்னேன்.இப்போது புரிகிறதா?

  15. திரு. வலிபோக்கன்,
    மாட்டுக்கறியை காங்கிரஸ் என்று குறிப்பிட்டால், அது மாட்டுக்கறியை கேவலப்படுத்தியதாக ஆகாதா?

  16. The film is the new version of “Manunithi Cholan” story.

    I had studied in my school days. Now you can understand

    How this type of people write the history and the Scholl syllabus

  17. ssk.க்கு.கண்டிப்பாகஆகாது.புரிந்தவர்களுக்கு மட்மே புரியும்
    ம.க.இ.க ” தோழரின் புது மொழிகள“ valipokken.blogspot.com
    மாட்டுகறிக்கு—–காங்கிரஸ்
    ஆட்டுகறிக்கு——காந்தி
    வெள்ளபன்னிகறிக்கு—-அய்ரோப்பிய பார்லிமெண்ட்
    கருப்பு பன்னிக்கு———–இந்தியன் பார்லிமெண்ட்
    மீனுக்கு————————நெடுமாறன்–இப்படியாக போகிறது.

  18. நல்ல விமர்சனம். மாட்டிறைச்சிப் பிரச்சனையை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்

  19. வலிபோக்கன் நீங்கள் குறிப்பிடுகிற இந்த உதாரணங்கள் எல்லாம் சைவம் சாப்பிடுகிற பார்ப்பனர்கள் அசைவம் உண்ணுகிறவர்களை இப்படித்தான் இழிவாக குறிப்பிடுவார்கள்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading