இந்திய ராணுவம்: அமெரிக்காகாரனிடம் துப்பாக்கி வாங்கு, இந்தியனை சுட்டுத்தள்ளு

சென்னை சிறுவனை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், அநியாயமாக சுட்டுக் கொன்றிருக்கிறார்களே?
-க. அப்துல்காதர், திருநெல்வேலி.

சென்னை சிறுவன் என்பதோடு, ஏழைச் சிறுவன் என்றும் சொல்லுங்கள். தெரு நாய்கள், மாடுகள் இவைகளை பாதுக்காக்க மேனகா காந்தி போன்ற மேன்மையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஏழைகள் நிலைமை அவைகளை விட மோசமானதாக இருக்கிறது.

‘ராணுவம் உயிரை தியாகம் செய்து நாட்டை பாதுகாப்பதாக’ சொல்கிறார்கள். உண்மைதான். யார் உயிரை தியாகம் செய்து?

இந்திய ராணுவம் சொந்த நாட்டு மக்களை சூறையாடடுவதற்குத்தான் இருக்கிறது. ‘மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் எளிய மலை வாழ் மக்கள் மீது இவர்கள் ஆடிய வேட்டை சொல்லி மாளாது.

தமிழக மீனவர்களை சுடுகிற இலங்கை ராணுவத்திடம், தூப்பாக்கியை நீட்ட பயந்து, சுவர் மேல் ஏறிய ஒரு குழந்தையின் உயிருக்கு குறிவைத்திருக்கிற இவர்கள் ராணுவ வீரர்கள் அல்ல, ராணுவக் கோழைகள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

5 thoughts on “இந்திய ராணுவம்: அமெரிக்காகாரனிடம் துப்பாக்கி வாங்கு, இந்தியனை சுட்டுத்தள்ளு

  1. கோழைகள்தான், ராணுவம்எனும் அடைமொழி தவறு,
    பெண்களைக் கண்டால்,சீருடை தானாக நழுவும் இவர்களின்
    ஆயுதம் எதிரிகளின் அனுமதியுடன் பயன்படுத்துபவை.

  2. இவர்கள் மக்களைக் காக்கும் இராணுவமல்ல.பொறுக்கிகள்.மக்கள் இனியாவது விழிப்பாக இருக்கப் பழக்கப்படுவார்களா?

  3. ivargalaithan oodagangal thooki pidikindrana. athil oru mosamana araasiyal irukirathu.

  4. அதிகாரம் மிகுந்தவர்களில் மேன்மையானவர்கள் ஒரு சிலரே. கர்நாடகா/ தமிழ் நாடு எல்லையிலே தமிழ் பெண்களை வல்லுறவு கொண்ட அதிகாரமிக பேடிகள் இருந்த போது ( வீரப்பன் காலம்) சுட்டுக்கொல்லவே சென்றவர்களா, உலகம் கேள்விப்படாத/கண்டிராத கொடுமைகளை அரங்கேற்றிய கொடுரனிடம் கை கோர்தவர்களா வீரர்கள்?

Leave a Reply

%d bloggers like this: