தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

கருணாநிதி அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே ஜெயலலிதா சமச்சீர் கல்வியை இந்தப் பாடுபடுத்துகிறாரே?
-சு. செந்தில்

சமச்சீர் கல்வி என்கிற பெயரில் இருக்கிற பொதுப் படத்திட்டத்தைத் தவிர்ப்பதற்காக, ‘அதிமுகத் தொண்டர்களை’ ஏமாற்றுவதற்கு அது ஒரு சாக்கு.

‘திமுக அரசு கொண்டுவந்த ‘சமச்சீர்’ பாடத்திட்டத்தைவிட, பழைய பாடத்திட்டமே சிறப்பாக இருக்கிறது’ எனறு புரட்சித்தலைவி அரசு சொல்கிறது.

அது உண்மையானால், அந்தப் பழைய பாடத்திட்டத்தையே சமச்சீர் கல்வியாக அறிவித்து, மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும் இந்தக் கல்வியாண்டே அதை அமல்படுத்த வேண்டியதுதானே, யார் தடுக்கப் போகிறார்கள்?

ஆக, அவர்களின் நோக்கம் சமச்சீரை தடுப்பதுதான்.

இது ராஜாஜி பாணி அரசியல் என்றாலும், எம்.ஜி.ஆர் பாணியும் இதற்கு எதிரானதல்ல.

1960 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த காமராஜர், ‘ஆண்டு வருமானம் 1200 ரூபாய்க்குக் கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவசம்’ என்று அறிவித்தார். பிறகு 1962ல் ‘அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி’ என அதை மாற்றினார். 1978 வரை அந்த நிலையே நீடித்தது.

1962 ஆம் ஆண்டு, கட்டண கல்விமுறையை ஒழித்தார் காமராஜர். 1978 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., முதல் வேலையாக நெடுஞ்செழியன் துணையோடு கமாராஜர் திட்டத்தை ஒழித்தார். மீண்டும் கட்டண கலவிமுறை வந்தது. ( மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக எம்.ஜி.ஆர் திட்டத்தை ஒழிக்கவில்லை)

போன தலைமுறை தமிழர்களின் கல்வியில் எம்.ஜி..ஆர் வைத்த தீ, இந்தத் தலைமுறையிலும் பற்றி எரிகிறது. ஆரம்பக் கல்வி முதல், உயர்க்கல்வி வரை தீவிர வணிகம் ஆனது அவர் ஆட்சியில்தான்.

மருத்துவக் கல்வியைத் தனியாருக்குக் கொடுத்தது. (ராமச்சந்திரா) பொறியியல் கல்வியைச் சூதாட்டமாக்கியது வரை அவர் சாதனைகள்தான்.

அவர் ஆட்சியில், மந்திரியாக, வாரியத் தலைவராக, சாராய வியாபரியாக இருந்த பலரும் இன்று கல்வி வியாபாரிகளாக இருப்பதே அதற்குச் சாட்சி.

ஏ.சி. சண்முகம், ஜி. விஸ்வநாதன், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், ஐசரி வேலன், ஆர்.எம். வீரப்பன் இப்படி ஒரு கும்பல் கிளம்பி இன்றுவரை கல்வியைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் – டாக்டர் அம்பேத்கரின் அடிப்படை கொள்கையான இலவசக் கல்வித் திட்டத்தில் தீ வைத்தவர் எம்.ஜி.ஆர்.

ஆக, புரட்சித்தலைவி அரசு புரட்சித்தலைவர் பாணியில்தான் பயணிக்கிறது.

‘சமச்சீர் கல்விக்குத் தடை’ திமுகவிற்கு எதிரான நடவடிக்கை அல்ல; அது அதிமுகவின் இயல்பு. அதுதான் அதிமுக.

பாணியில்தான் பயணிக்கிறது.

‘சமச்சீர் கல்விக்குத் தடை’ திமுகவிற்கு எதிரான நடவடிக்கை அல்ல; அது அதிமுகவின் இயல்பு. அதுதான் அதிமுக.

புரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து

சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?

‘தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?

12 thoughts on “தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

  1. very good
    but pvt engg college illana ivlavu peru engg padikka mudiuma ???

  2. ஏண்ணே, எதை எதையோ இலவசமா தந்தவர் இப்படி அடைப்புக்குறியில் மட்டும் இடம் பெற்றிருக்கிறாரே

    //( மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக எம்.ஜி.ஆர் திட்டத்தை ஒழிக்கவில்லை)//

    ஆக மாமியார் போட்டா மண் சட்டி. கலைஞர்க்கு இந்தத் தீயில் பங்கில்லையா?

  3. Ramesh (18:04:08) :

    very good
    but pvt engg college illana ivlavu peru engg padikka mudiuma ???//

    when there were only govt and aided pvt colleges, standard of education was good. why didn’t he start some more govt or aided pvt colleges instead of allowing pvt colleges which are run for making money.

  4. very good post man.I dont know why they are still imposing M.G.R.as a good poltician?

  5. தோழர் உங்கள் கட்டுரையை எனது முகநூலில் பகிர்வது குறித்து தமிழில் விளக்கம் அளிக்கவும்.

Leave a Reply

%d bloggers like this: