நெஞ்சை அறுக்கிறது, செங்கொடியின் மரணம்; தியாகம் என்றாலும் அதுவும் மரணம்தானே


மூ
வரின் தூக்கிற்கு எதிராக வழக்கறிஞர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும் முன்னெடுத்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தொடர் ஓட்டத்தை போல். தோழர்கள் வடிவாம்பாள், அங்கயற்கண்ணி, சுஜாதா இவர்களின் உண்ணா விரத போராட்டத்தில் தொடங்கிய எழுச்சி, ரயில் மறியல், கோவை பாஸ்போட் அலுவலக முற்றுகை என்று போர்குணமிக்க போராட்டமாக மாறி,

மூவரின் தூக்கிற்கு தடை ஆணையைாக மலர்ந்திருக்கிறது.

இந்தப் போராட்டத்தை பெரிய அளவில் செய்தியாக்கி, தொடர்ந்து அக்கைறையோடு மக்கள் மன்றத்தில் சேர்த்து எழுச்சிக்கு துணை புரிந்த சன் செயதிகள் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சிகளுக்கும் நம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஊடகங்களின் மூலமாக, மக்களுக்கு நன்மையும்கூட நடந்திருக்கிறதே என்ற ஆச்சரியத்தோடே அந்த நன்றியை பகிர்ந்து கொள்கிறோம். (அதுவும் அன்னா அசாரேவின் ஆபாச அலையைத் தாண்டி,)

முதல் நாள் முடியாது என்ற முதல்வர், மறுநாள் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து, சட்டசபையில் தீர்மானம் நிறேவேற்றி இருக்கிறார். அவருக்கும் நன்றி.

எட்டுவாரத்திற்கு இடைக்கால தடைவித்தித்த சென்னை உயர்நீதின்றத்தின்  செயலும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனாலும், ஆறாத ரணமாக, நெஞ்சை அறுக்கிறது, தோழர் செங்கொடியின் மரணம். தியாகம் என்றாலும் அதுவும் மரணம்தானே. அதுவும் தோழரின் மரணம்.

‘மூவரின் உயிர் போகக்கூடாது’ என்று முயற்சிக்கிற நேரத்தில், நம்மில் ஒருவரின் உயிர் அதன் பொருட்டே போயிருக்கிறது என்பது வேதனையைத்தானே தரும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் இவர்கள் சிறைக்கு சென்ற அந்த ஆண்டு பிறந்துகூட இருக்கமாட்டார் செங்கொடி.

ஆனால், செங்கொடியின் தியாகம், முதல்வர் இந்தப் பிரச்சனை பற்றி முதல்முறையாக பேசுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

அதுபோல் திங்கள் இரவு சென்னை சைதாப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தீக் குளித்தார்.

உண்ணவிரத பந்தலில் நாங்கள் இருந்தபோது, ‘நான் இன்று இரவு தீக்குளிக்கபோகிறேன். வீட்டுக்கு மேல் கருப்புக் கொடி ஏத்து’ என்று ஆவேசமாக தன் மனைவியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் ஒருவர். அவரும் ஒரு ஆட்டோ ஓட்டுர்தான். (சினிமாவில் ஆட்டோ ஓட்டுநர்களை கிரிமனல்களாக மட்டுமே காட்டுகிற மிஷ்கின் போன்ற கருத்து கிரிமனல்கள் கவனத்திற்கு)

அவரை அழைத்து நாங்கள், ‘தீக்குளிப்பது தீர்வாகாது’ என்று நீண்ட விளக்கம் அளித்தோம். சரி சரி என்று சொல்லிவிட்டு, உண்ணாவிரத பந்தலில் தலைவர்கள் பேசும் பேச்சை கேட்க சென்றுவிட்டார். குறிப்பாக செங்கொடியின் தியாகம் பற்றிய உணர்ச்சிக் கொப்பளிக்கும் பேச்சுக்கள் அவரை அதிகம் கவர்ந்திருந்தன.

செவ்வாய் காலை சென்னை உயர் நீதிமன்ற வாசலில் இருக்கும்போது, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பாண்டியன்தான் சொன்னார், “தோழர் நேற்று நம்மிடம் பேசிய அந்த தோழர் தீக்குளித்துவிட்டார், போலும்’ என்றார்.

விசாரித்ததில் தீக்குளித்தவர் அவர் அல்ல. இவர் வேறு ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதை அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் தோழர் தெய்வ மணி உறுதி செய்தார்.

நேற்று நீதிமன்றத்தில் காலை 11 மணிவரை இருந்த இறுக்கம் கலைந்து மகிழ்ச்சியாக மாறியபோதும், செங்கொடியின் இழப்பும், ஆட்டோ ஓட்டுநரின் தீக்குளிப்பும் மனதை கூடுதல் கவலையாக்கியது.

ஆம், நம் எல்லோரையும்விட இந்த தீர்ப்பின் மகிழ்ச்சியை அதிகம் கொண்டாடக்கூடியவராக செங்கொடி இருந்திருப்பார் என்கிற எண்ணமும் அந்தக் கவலைக்கு காரணமாகியது.

அதே உணர்வோடே, இன்று மாலை நடக்கும் செங்கொடிக்கான வீரவணக்க ஊர்வலத்திலும்  கலந்து கொள்கிறோம்.

தொடர்புடையவை:

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்குமான தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் முதல்வருக்குத்தான் உண்டு. அதனால் அவர்களை காப்பாற்றுமாறு வழக்கறிஞர்கள் உட்பட பலர் தமிழக முதவரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், ‘3 பேர் தூக்கு தண்டனையை  நிறுத்த முதல்- அமைச்சருக்கு அதிகாரம் இல்லை’ என்று முதல்வர் மறுத்திருக்கிறார்.

‘இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுதர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்ற  தீர்மானத்தை சட்டசபையில் நிறேவேற்றிய அதே முதல்வர்தான் இதை அறிவித்திருக்கிறார்.

உண்மையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குத்தான் முதல்வருக்கு அதிகாரம் இல்லை அல்லது அந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை.

பேரறிவாளன், முருகன், சாந்தன் இந்த மூவரின் தூக்கை நிறுத்தி வைக்கும் அதிகாரம் மாநில சட்டசபைக்கு உண்டு.

முதல்வரின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட, ’இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுதர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர்,

தன் அதிகாரத்திற்கு உட்பட்ட, 3 பேர் தூக்கு தண்டனையை  நிறுத்த மறுக்கிறார்.

முதல்வரின் இந்த நடவடிக்கை தங்கபாலு, பொன்.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணிய சுவாமி, எஸ்.வி. சேகர், சோ போன்றவர்களுக்கு ஆதரவாகவும்; மனிதர்களுக்கு அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது.

தொடர்புடையவை:

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

கலக்கத்தோடு நாம் பார்த்தால், நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது இந்த தாயின் முகம்

 கத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூன்று புரட்சியாளர்களுக்கும் தூக்கு தண்டனை என்று ஆங்கிலேய அரசு அறிவித்தபோது, அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல், உப்பு காய்ச்சிக் கொண்டும், உண்ணாவிரதம் இருந்தும் கொண்டும் அந்த தண்டைனையை மறைமுகமாக ஆதரித்தார், அகிம்சையின் பிதாமகனான ஒரிஜினல் காந்தி.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஓடிப்போனால், காய்கறிவாங்கப் போனவர்களை சிக்க வைத்து தண்டனை வாங்கித் தருகிற காவல்துறையைப் போல்,

ராஜீவ் கொலையில் நேரடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லாம் இறந்துபோக, அவர்களுக்கு அறிமுகமானவர்கள் என்கிற அளவில் உள்ளவர்கள் மீது வழக்குபோட்டு, தூக்கு தண்டனையை நிறைவேற்ற துடிக்கிறது அகிம்சை இந்தியா.

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் தூக்கு உறுதி என்று தேதியை முடிவு செய்து தூக்கு கயிறுகள் அவர்களை நோக்கி விரைந்து கொண்டிருக்கும்போதும், அதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் அல்லது பொருட்படுத்தாமல் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து முடித்திருக்கிறார் காந்தியின் பேரனான நகல் காந்தி அன்னா அசாரே.

அவருக்கு ஆதரவாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று அட்டாகசம் செய்த அன்னா அசாரேவின் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் மூன்று உயிர்களுக்கு எதிரான மரண தண்டனை மகிழ்ச்சியளிக்கிறது போலும். அவர்களும் இதைப்பற்றி எந்த சொரணையும் அற்று இருக்கிறார்கள்.

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாமல், அகிம்சையின் தொல்லை மட்டும் எப்போதும் பெருவாரியன மக்களை இம்சை செய்துகொண்டு தான் இருக்கிறது.

‘இலட்சக் கணக்கான ஈழ மக்களை கொன்ற ராஜபக்சேவை தூக்கில் போடு’ என்று நாம் முழங்கினால், ‘மரண தண்டனை மனிதாபிமானமற்ற செயல்’ என்று நமக்கு உபதேசித்துவிட்டு, அப்பாவியான மூன்று பேர் உயிரிகளை பலி வாங்க துடிக்கிறது காந்தியின் அகிம்சை ஆயுதம் தாங்கிய அரசு.

ஈழ மக்களுக்கு ஆதரவான போராட்டம் என்றால் எப்போதும் களத்தில் அர்ப்பணிப்போடு முன்னணியில் நின்று அதை வழி நடத்தி செல்கிற வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும்; மூன்று உயிர்களை அகிம்சையின் கொலைவெறி தாக்குதலில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து போராடுவோம்.

நிச்சயம் வெற்றிதான்.

மூவரும் தூக்கு கயிற்றின் மூடிச்சிலிருந்து மட்டுமல்ல, அவர்களை ஆயுள் கைதியாக அடைத்து வைத்திருக்கிற, சிறையிலிருந்தும் வெளிவருவார்கள். வெற்றி நிச்சயம்.

ஆனாலும், அந்த கயிறுகளை மட்டும் கையகப்படுத்தி வைக்கவேண்டும். ஏனென்றால்,  நேற்று சென்னையில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி  மரியாதைக்குரிய மார்கண்டே கட்ஜு, ‘போலி என்கவுன்டரில் ஈடுபட்ட காவல்துறையினர் தூக்கில் போட தகுதியானவர்கள்’ என்று கொதித்திருக்கிறார்.

போலி என்கவுன்டர் போலிஸ்காரர்களுக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கான நம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவிற்கும், அவனின் கொலை வெறிக்கு துணைபோனவர்களுக்கும் அந்தக் கயிறு நிச்சயம் பயன்படும்.

தொடர்புடையவை:

காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பன அகிம்சாமூர்த்திகளும்

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

இதெல்லாம் காந்தி காலத்திலேயே பாத்துட்டோம்.. புதுசா எதவாது ட்ரை பண்ணுங்கப்பா...

அன்னா அசாரே பற்றி நீங்கள் எழுதவில்லையே?

-ஸ்ரீதர், சென்னை.

காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க சொல்லி எந்த பி.ஜே.பி ஆதரவு முதலாளி பணமாகவோ, பொருளாகவோ அல்லது புகழாகவோ (விளம்பரம்) லஞ்சம் கொடுத்திருப்பான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், அதானாலதான் உடனே எழுத முடியல.

டிஜிட்டல் பேனர்கள் வந்ததுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூனே நாளில் ஒருத்தர் பிரபலமாகி, தலைவராகவும் ஆகிவிடுவதுப்போல், வெறும் ஊடகங்கள் மூலமாக மூனே மாசத்துல பெரிய தலைவராயிட்டாரு இந்த இந்தியன் தாத்தா.

 என்னமோ இந்தியாவுல ஊழல் நாலுமாசமாத்தான் நடப்பதுபோல், இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு, இப்போ தீடிருன்னு ஊழலுக்கு எதிராக சோர்ந்து படுத்திருக்கிறார் இந்த தாத்தா.

ஒரு வேளை நாலு மாசத்துக்கு முன்னாலதான் பொறந்தாரோ, அப்போ பொறக்கும்போதே கிழவனாவே பொறந்துட்டாருபோல.

குறிப்பு:

சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நீதிபதியிடம் பேரம் பேசிய ஜெயெந்திரன், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தால் பொருத்தமாக இருக்கும்.

தொடர்புடையது:

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்ம டைரக்டர்கள அடிச்சுக்க முடியாது

‘ஞானப்பழம்’ concept; தமிழ்சினிமா இயக்குநர்களின் முன்னோடி

புதிய இளம் இயக்குநர்கள் கதை, திரைக்கதை, இயக்கம் என்று போடாமல் எழுத்து, இயக்கம் என்று தங்கள் பெயரை குறிப்பிடுகிறார்கள். இது வித்தயாசமாக இருக்கிறதே?

-க. தமிழ், திருச்சி.

வித்தியாமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.

வெளிநாட்ல எவனோ கதை, திரைக்கதை எழுதி எடுத்த படத்தை, இவுங்க நோவாம நோன்பு கும்புடறதனால, அதை மறைக்க எழுத்து, இயக்கம்னு போட்டுங்குறாங்க. இந்த மாதிரி ‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்மளுங்கள எவனும் அடிச்சுக்க முடியாது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயைவை:

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு
 
பேராண்மை’ அசலும் நகலும்
 
இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’
 
பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’
 
 
எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?
 
‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

என்னனென்ன வேலைக்கு எப்படி எப்படி முழிய டைப் டைப்பா மாத்துவன்னு எனக்கு தெரியும்..

‘சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனி அணி அமைத்திருந்தால் நாங்கள்தான் ஆட்சி அமைத்திருப்போம்’ என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதை பார்த்தீர்களா?

-சிரா, சென்னை.

‘ஜனங்களே  பாத்துகங்க, எம் மேல தப்பில்ல.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக மாட்டேன்..’ என்று கவுண்டமணி, வெட்டி பந்தா பண்ணா கோவை சரளாவைப் பார்த்து பேசின வசனம்தான் நினைவுக்கு வருது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயைவை:

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமக வின் 3 வது அணி முயற்சி

மழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும்!

சமச்சீர் கல்விக்கான உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு எப்படி?

-எம். முகமது, திருநெல்வேலி.

மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி என்கிற பொதுப்பாடத்திட்ட முறையால், மெட்ரீக் பள்ளிகளின் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டு, சிபிஎஸ்இ வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கும்.

அதை விட அதிகமாக மழைலையர் கல்வி என்கிற பெயரில் வர்த்தக நிறுவனங்கள் நடத்துகிற சமூக விரோத கும்பலின் சூதாட்டம், ‘கமான்.. கமான்…’ என்று ரேசில் குதிரைகளை கூவி அழைப்பதுப்போல். பெற்றொர்களை கூவி அழைத்து. இன்னும் கூடுதலாக கொள்ளையடிக்கும்.

ஆக, சிபிஎஸ்இ பள்ளிகளையும் பொதுப்பாடத்திட்ட வரையறைக்குள் கொண்டுவரவேண்டும். மழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும் அல்லது அதற்கும் பொதுப் படத்திட்டத்தை கொண்டுவரவேண்டும்.

இல்லையேல் பணம் இருக்கும் பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளில் பல லட்சங்களை செலவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு ‘தரமான’ கல்வித் தருவார்கள்.

பிறகு ஒன்றாம் வகுப்பில் பொதுப்பாடத்திட்ட பிரிவுக்குள் வரும்போது, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அப்போதுான் தங்களுடைய அ, ஆ, இ – A, B C யை துவங்குவா்கள்.

முதல் வகுப்பில் படிக்கும்போதே இப்படியான பெரிய வித்தியாசம் கிராமப்புற, மாநகராட்சி பள்ளிகளின் குழந்தைகள் மனதில் பெரிய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். குழந்தைகளிடம் ஏற்றத் தாழ்வுகளையும் காழ்ப்புணர்ச்சியையும் உண்டு செய்யும்.

அதை சரி செய்தால்தான் பொதுப்பாடத்திட்டம் முழுமையடையும். அடுத்த நமது இலக்கு இதுதான்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயைவை:

தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

நன்றியும் வணக்கமும்

‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான்

இயக்குநர் Jessie Nelson உடன் நடிகர் Sean Penn

தெய்வத்திருமகள் படம் எப்படி?

-நா. செந்தில், சென்னை.

அப்பாவிற்கு 6 வயதிற்குரிய மனநிலையாம். பொண்ணுக்கு 5 வயதாம். ஆனால், 6 வயது ஆம்பளைய விட 5 வயது சிறுமி, பக்குவமா, தெளிவா இருக்கே எப்படி?

“யோவ்.. போய் அந்த IAM SAM இங்கிலிஷ் பட டைரக்டர் Jessie Nelson  னை கேளுய்யா, எனக்கின்ன தெரியும், அந்தம்மா, என்ன எடுத்தாங்களோ, அததான் நான் எடுத்தேன்.” என்று கோப்பப்படுவாரோ இயக்குநர் விஜய்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு
பேராண்மை’ அசலும் நகலும்இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?

நன்றியும் வணக்கமும்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

பெற்றோர்- மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தோழர்கள்.

திராவிடர் கழக மாணவர்கள் பிரிவு

திரு. ராஜகோபால், பேராசிரியர் அ.மார்க்ஸ், பேராசிரியர் வசந்திதேவி போன்ற கல்வியாளர்கள்

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள்

இந்திய மாணவர்கள் சங்கம்

இன்னும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள்

வழக்கறிஞர்கள்

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்

உச்சநீதி மன்ற நீதிபதிகள்

சமச்சீர் கல்வியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நமது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புடயைவை:

சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?

தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்


தேர்தலுக்கு முன் ‘பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்’ என்று தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதிலில், குறிப்பிட்டு இருந்தேன்.

பிறகு அதை இணையத்திலும் வெளியிட்டிருந்தேன். பரவலாக பலரின் கவனத்திற்கும், விவாதத்திற்கும் அது உள்ளானது.

நாம் எழுதியதின் தொடர்ச்சியாகவோ அல்லது தற்செயலாகவோ, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், ‘கிராமப்புற பெண்களுக்கு, இலவச சானிடரி நாப்கின்’ வழங்கப்படும் என்றும், ‘இதற்காக இந்த ஆண்டே, 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றும்,  அதிமுக அரசு அறிவித்துள்ளது.

இத் திட்டத்தை தங்களின் தேர்தல் வாக்குறுதியாக தராதபோதும், முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்திருக்கிறது அதிமுக அரசு.

நான் எழுதிய பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்’ என்ற பதிலின் மேல் கருத்து சொன்ன நண்பர் விஜய்கோபால்சாமி: ‘சுய உதவிக் குழுக்களைக் கொண்டு சானிடரி நாப்கின்கள் தயாரித்துக் கொண்டால், தனியார் வியாபாரிகளுக்கு காசைக் கொட்ட வேண்டிய நிலை ஏற்படாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி இத்திட்டத்தை நடைமுறை படுத்தினால், இது கிராமப்புற பெண்களுக்கான திட்டமாக செயல்வடிவம் பெறும். இல்லையேல், தனியார் நிறுவனங்களுக்கான திட்டமாக மாறிவிடும்.

*

சம்பந்தப்பட்ட பதிலை படிக்க, கீழ் உள்ள தலைப்பை அழுத்தவும்…

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

வெயிலும், மழையிலும் விவசாய வேலைகளிலும், சாலை பணிகளிலும் பெண்கள் படுகிற துயரம், நினைத்தாலே கண்ணீர் வர வைத்துவிடும். இது ஒரு அந்தரங்க பிரச்சினை என்பதால் வெட்ட வெளியில்  வேலை செய்கிற……..

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்