தூக்கு கயிறுக்கு பதில், துப்பாக்கியால் கொல்லும் அரசு

திமுக ஒரு பார்ப்பன எதிர்ப்பு கட்சியாக இல்லாதபோதும், குறிப்பாக கடந்த ஆட்சியில், பார்ப்பனர்களோடு இணக்கமாக, ஜெயேந்திரன் வழக்கை கிடப்பில்போட்டதும், அதைவிட மோசமாக எஸ்.வி. சேகரை எம்.ஆர்.ராதாவோடு ஒப்பிட்டதுமான சம்பவங்கள் நடந்தபோதும்கூட பார்ப்பனர்கள் திமுகவை தனக்கு எதிரான கட்சியாகவும், அதிமுகவை தங்களுக்கான கட்சியாகவுமே அரசியல் நடத்துகிறார்கள்.

ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு, பார்ப்பனர்கள் அதிமுகவை தங்கள் கட்சியாகவே கருதுவதைப்போல், சமீபமாக அதிமுகவில் சசிகலாவின் செல்வாக்கிற்குப் பிறகு தேவர் ஜாதி உணர்வாளர்களும் அது தமிழ்த்தேசியம், பெரியாரியம் பேசுகிறவர்கள்கூட அதிமுகவைதான் தங்கள் ஜாதி கட்சியாக உணர்கிறார்கள்.

இத்தனைக்கும் முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழாவை, கம்யுனிஸ்ட் கட்சிகளின் துணையோடு ஆர்ப்பாட்டமாக, திமுக அரசு கொண்டாடியபோதும், அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் செல்வாக்கின் காரணமாக தேவர் ஜாதி உணர்வாளர்கள் அதிமுகவைத்தான் கொண்டாடுகிறார்கள்.

இந்த சூழலோடு பொருத்திதான், தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை பார்க்க வேண்டியிருக்கிறது.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சி என்பது, ஏதோ ஒரு தனிநபரின் ஞாபகர்த்த சடங்கல்ல; தலித் விரோதத்திற்கு எதிரான குறியீடு. இன்னும் நெருக்கிச் சொன்னால், முத்துராமலிங்கத்திற்கு எதிரான  அணிவகுப்பு.

இந்த அணிவகுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கதோடுதான், காவல் துறை துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கிறது. (அதிமுக ஆட்சியில் இருக்கும்போது  இமானுவேல் சேகரனின் முதல் குரு பூஜை இது)

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம், ஜான் பாண்டியன் என்கிறது அரசு. ஆனால், மதுரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு யார் காரணம்? திடீரென்று வேறு மாவட்டக்காரர்கள் ராமநாதபுர மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என்ற உத்தரவு வருவதற்கு எது காரணம்?

தேவர் ஜாதி உணர்வாளர்கள் அதிமுகவை தங்கள் ஜாதி கட்சியாக கருதுகிறார்களே அதுதான் காரணம்.

அந்த உணர்வுக்கு உண்மையாக நடந்திருக்கிறது அதிமுக அரசின் காவல் துறை. துப்பாக்கிச்சூட்டின் மூலம் தேவர் ஜாதி உணர்வாளர்களோடு இன்னும் நெருக்கமாகியிருக்கிறது அதிமுக அரசு.

தேவர் ஜாதி ஓட்டு முழுசும் நமக்கு; தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுக்கு, தலித் கட்சிகளின் கூட்டணி இருக்கு’ – இதுதான் அதிமுகவின் தேர்தல் கணக்கு.

எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது காவல் துறை போன்ற அரசு நிறுவனங்கள் நடத்தும் வன்கொடுமைகளின்போது தலித் விரோதிகளோடு, தலித் துரோகிகளும் அம்பலமாகி நிற்பார்கள். இம்முறை அவர்களோடு தமிழ்த்தேசியம் பேசகிறவர்களும் இணைந்திருக்கிறார்கள்.

மூன்று உயிர்களை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற, சட்டசபையில் தீர்மானம் போட்ட தமிழக அரசு, ஏழு தமிழர்களின் உயிரை பறித்திருக்கிறது.

தூக்கு கயிறுக்கு பதில், துப்பாக்கியால் கொல்லும் அரசு.

தொடர்புடையவை:

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

14 thoughts on “தூக்கு கயிறுக்கு பதில், துப்பாக்கியால் கொல்லும் அரசு

  1. வணக்கம் தோழர்,

    சரியான புரிதலோடு
    தங்கள் கட்டுரை இருந்துள்ளது எத்தனைதான் நாம் சாதி மோதல்கள் அம்பலபட்டாலும், அதில் இழப்புகள் அனைத்தும் தாழ்த்தப்பட் மக்களுக்குதானே ஒழிய வேறுயாருக்கும் இல்லை என்பது காலம் காலமாக நடந்து வருகின்ற ஒரு நிலை

    இந்நிலை என்று மாறுமோ

  2. எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது காவல் துறை போன்ற அரசு நிறுவனங்கள் நடத்தும் வன்கொடுமைகளின்போது தலித் விரோதிகளோடு, தலித் துரோகிகளும் அம்பலமாகி நிற்பார்கள். இம்முறை அவர்களோடு தமிழ்த்தேசியம் பேசகிறவர்களும் இணைந்திருக்கிறார்கள்.//

    100% உண்மை.

  3. உடம்பை விலக்கி வைத்து விட்டு ஆன்மாவை மட்டும் நோக்கும் போது, அணைத்து ஆன்மாக்களும் அந்த பரம்பொருளின் ஒரு அங்கமே என்று உரைக்கும் பார்ப்பனியம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது எல்லாம் நடத்தையும், ஒழுக்கமும் பார்த்துதான் தீர்மானிக்க வேண்டும். ஒரு குடிகாரனையும், குடிக்கதவனையும் ஒப்பிட்டால், குடிக்காதவன் உயர்ந்தவனே. ஐம்புலன்களை அடக்கி நல்ல சிந்தனையுடன் அனைவர்க்கும் உதவியாய் இருப்பவனே சிறந்தவன். இதில் சாதிக்கு என்ன பங்கு உள்ளது. உங்கள் கட்டுரையில், ஒரு இனத்தார் தங்களை உயர்ந்தவர் என்று நினைத்து கொண்டு மற்றவர்களை இழிவு படுத்தும் செயல்களில் நடக்கின்றனர். பார்பனியத்தின் வழி பார்த்தால், இந்த உயர்ந்தவர் என்று நினைத்து கொண்டு தாழ்ந்த செயல் புரிபவர்களை மிக தாழ்ந்தவர் எனலாம்.

  4. தனது சீரிய நடவடிக்கைகளால் தமிழக, உலகத் தமிழர்களின் ஆதரவைப் பெற்று வரும் இந்த புதிய அரசின் புகழைக் குறைப்பதற்காக நடைபெறும் சூழ்ச்சிகளின் முதல் படி இது. மற்ற படி மக்களிடையே ஒரு அதிருப்தியை தோற்றுவிக்க எப்போதும் அ தி மு க விற்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்களின் வெற்றிகரமான முதல் செயல். இப்படி ஒரு கலவரம் உருவாக வேண்டும். இந்த அம்மாவின் மேல் எப்படியாவது கெட்ட பெயர் வர வேண்டும் என்று மனப்பால் குடிக்கும் சிலர் தான் இது போன்ற அபத்தமான பேச்சுக்களை பேசுகிறார்கள் . அம்மா அவர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரானவர் என்று கதை கட்டுவதை நிறுத்தி விடுங்கள். தமிழகம் சமூக நீதிக்கான ஒரு அடையாளமாக திகழ புதிய அரசுக்கும் உருப்படியான யோசனைகளை சொல்லுங்கள் .

  5. (அதிமுக ஆட்சியில் இருக்கும்போது இமானுவேல் சேகரனின் முதல் குரு பூஜை இது)
    ,மூன்றாவது இருண்ட காலத்தின் முதல் துப்பாக்கிசூடு.

  6. அம்மாதாசன் உதயகுமார் ரொம்பத்தான் இந்த அரசைப் பற்றிக் கவலைப்படுகிறார்.முத்துராமலிங்கம் குருபூஜையில் இதுபோல ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தமுடியுமா?இன்னும் எத்தனைக் காலத்திற்கு தலித்துகளை ஏய்த்துப் பிழைக்கப்போகிறீர்கள்?தலித் எழுச்சி வந்துவிடக்கூடாது என்பதுதான் ஜெயா அரசின் எண்ணம்.இல்லாவிட்டால் ஜான் பாண்டியனை அனுமதித்திருப்பார்களே!தமிழ்ப் புத்தாண்டை மாற்றி ஆரியப் புத்தாண்டை மீண்டும் பார்ப்பன ஜெயா கொண்டுவந்தபோது வாய் திற‌க்காத தமிழ்த் தேசியங்கள் இப்போது தலித்துகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்திய போதும் வாய் திறக்கவில்லை கவனித்தீர்களா?அடக் கொடுமையே…?

  7. தமது சொந்த நாட்டு மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தி 7 பேரை கொன்ற ஜெ-வை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென ஐ நா சபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்

  8. pallarkal thankalai devendirarkal / mallar entru thanimaippaditthikollamal eanaiya cheri saathi paraiyar,chakkaliyar ,vannaar saathi makkalodum ,ithira pirpaduppatta saathi makkalodum ontru chernthu poraadumpothuthan viduthalaiyai adaiya mudiyum.

  9. Dever saathi elaizharkal entha padukolaiyai kondadukiraargal,thavaraana thalaimaikalaal dever saathi makkal vazhinadatthappadukiraargal avarkalai saathi sakathiyulirunthu meetpathu namathu mukkiya kadamai.

  10. பாப்பாத்தி என்கிற திமிரும்… தேவர் என்கிற தோழியும் சேர்ந்து (with police power) நடத்திய அதிகாரதுஷ்பிரயோகம் … இதுல இது ஜனநாயக நாடாம்…. சில சமயம் வெக்கமாயிருக்கு இது மாதிரி முட்டா சமுதாயத்தல வாழ்றமுன்னு

  11. தோழர் உதயகுமார் அவர்களே நீங்கள் என்ன விதமான மனநிலையில் இதை சொன்னீர்கள் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் அம்மா சட்டசபையில் பேசியதை பார்த்தல் தெரியும் அம்மாவின் மனம்,குணம் மற்றும் பல…………………….

Leave a Reply

%d bloggers like this: