கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும்

வடிவமைப்பு: சுரேந்தர்

மகாத்மா காந்தி அரிஜன் என்று அழைத்ததை போன தங்கம் இதழில் விமர்சித்திருந்தீர்கள். நீங்கள் என்ன குறை சொன்னாலும் ஏழைகளைப் போல், இடுப்பில் வெறும் கதர் ஆடையை அணிந்து வாழ்ந்த அவரின் எளிமையை வேறு எந்த தலைவரிடம் பார்க்க முடியும்?

-டி. கார்த்திகேயன், திருச்சி.

ஒரு தலைவர் கோவணம் கட்டி வாழ்கிறாரா? கோட் சூட் அணிந்து வாழ்கிறாரா? என்பதை விடவும் அவர் யாருக்காக வாழ்கிறார் என்பதுதான் முக்கியம்.

1919 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த காந்தி, செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரைக்கு சென்றார். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ராம்ஜி கல்யாண் சேட்ஜி என்பவரின் பங்களாவில் தான் ஓய்வு எடுத்துள்ளார். சேட்ஜி வீட்டு மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, விவசாயிகள் இடுப்பில் மட்டும் துண்டு கட்டிக் கொண்டு போனதை பார்த்துதான், காந்தி அரை ஆடைக்கு மாறினார் என்று சொல்வார்கள். ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரி கூட இதை குறிப்பிட்டிருக்கிறார்.

ஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்தி, அவர்களைப் போல் குடிசையில் வாழவில்லை. மார்வாடி வீட்டு மாடி, பிர்லாவோட மாளிகை இன்றைக்கு பணக்காரர்கள் வார விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்கிற ரிசாட்கள் பாணியில் அமைந்த அன்றைய குடில்கள், இது போன்று முதலாளிகள் நிழலில்தான் ஓய்வெடுத்தார்.

ஆக, காந்திக்கு ஏழைகளின் உடை; தன் எளிமையை பிரச்சாரம் செய்ய பயன்பட்ட காஸ்டீயும்தானே (COSTUM) தவிர, ஏழ்மையை ஒழிப்பதற்கான குறியீடு அல்ல.

ஏழைகளின் மேல் அக்கறை கொண்ட தலைவன், ஏழ்மையை ஒழிக்க முயற்சிப்பானே தவிர, அதையே வாழ்நாள் முழுக்க அடையாளமாக்க மாட்டான். ஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்தி, ஓரு போதும் ஏழ்மையை ஒழிக்க முயற்சித்ததில்லை.

கோவணம் கட்டிய காந்தி, கோட் சூட் போட்ட பிர்லா போன்றவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.

கோட் சூட் போட்ட டாக்டர் அம்பேத்கர்தான் கோவணம் கட்டிய ஏழைகளின் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயவை:

அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?

காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

17 thoughts on “கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும்

 1. good post ..!
  மக்களுக்கு உடை இல்லை அதனால் தானும் அணியவில்லை இந்த காலத்திலேயே பட்டினி சாவுகள் நடந்து கொண்டுதான் உள்ளன ..! அவர் காலத்தில் இன்னும் எவ்வளவோ பட்டினி சாவுகள் நடைபெற்றன ..! என் மக்கள் பட்டினியால் சாகிறார்கள் அதனால் நானும் சாகிறேன் என்று காந்தி ஏன் பட்டினி கிடந்து சாகவில்லை …???

  http://pirathipalippu.blogspot.com/2010/11/blog-post_07.html

 2. //கோவணம் கட்டிய காந்தி, கோட் சூட் போட்ட பிர்லா போன்றவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.

  கோட் சூட் போட்ட டாக்டர் அம்பேத்கர்தான் கோவணம் கட்டிய ஏழைகளின் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தார்.//

  nice

 3. சட்டை இல்லா மக்களை பார்த்து தன் சட்டையை துறப்பவன் தலைவனில்லை அவர்களுக்கு சட்டையை பெற்று தர போராடுபவனே தலைவன் அப்படி இருந்தவர் இருவர் வடக்கே அம்பேத்கர் தெற்கே பெரியார்…..

 4. ஏழ்மையை ஒழிக்க அப்படி என்ன காந்தி செய்யாததை அம்பேத்கர் செய்துவிட்டார் என்று கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா ஐயா?

 5. இப்படி விளக்கி விளக்கியே விளங்காம போக வேண்டியது தான். சிம்பு பேசும் பஞ்ச் டயலாகுக்கும் அண்ணன் பேசுவதுக்கும்…வேணாம்.

 6. பணக்காரர்களின் வீட்டில் தங்கினார் என்பதற்காக அவர் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்று கூறமுடியாது. தவிர, பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள், சுரண்டல் பேர்வழிகள் என்று நினைப்பதும் தவறு.

  ஒரு தலைவரை பார்க்க தினமும் 10, 15 பேர் வரலாம். அப்படி வருகிறவர்களுக்கு சிறு உபசரிப்பாவது செய்ய வேண்டியது இருக்கும். அப்படி இருக்கும் போது அந்த தலைவர் ஓர் ஏழையின் வீட்டில் தங்கினால், அந்த ஏழ்மையானவரால் தலைவர காண வருகிறவர்களுக்கு எப்படி உபசரிக்க முடியும். அவர் வீட்டில் இடம் பத்தாது.

  அம்பேத்கார் ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர். அவர் தானும், எல்லாம் மனிதர்களைப் போல் ஒருவர் தான் என்று உணர்த்துவதற்காக கோட் சூட் போட்டுக்கொண்டார். தற்போதைய தலித் தலைவர்கள்கூட அவ்வாறு தான் உடை உடுத்துகிறார்கள்.

  நீங்கள் எப்படி காந்தி பணக்காரர்கள் வீட்டில் போய் தங்கியதால் அவர் ஏழ்மைக்கு எதிராக நடந்து கொண்டார் என்று கூறுகிறீர்களோ, அதே லாஜிக்கின் படி அம்பேத்காரின் மீதும் குறை சொல்லலாம். அதாவது, அவர் பணக்காரர்களைப் போல் உடை உடுத்திக் கொண்டார், ஆக அவருக்கு ஏழ்மையானவர்கள் மீது அக்கறை இருக்க வில்லை என்று எளிதாக சொல்லிவிடலாம். இதெல்லாம் தேவையற்ற விவாதங்கள்.

  நடக்க வேண்டியதை பார்க்க வேண்டியது தான் 🙂

 7. குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு பார்த்தால், எல்லா விசயத்திலும் இப்படி தான் ஏடாகூடமாக ஏதாவது தோன்றுமோ?

 8. காந்திக்கு மலம் அள்ளுவதோ, ஏழ்மையாக வாழுவதோ தேவை என்று சமூகத்திற்கு நிரூபிக்க வேண்டிய கடமை இருந்தது. அது அவரின் செய்தியாக மேல்மட்ட குடிமக்களுக்கு சொல்ல வேண்டியிருந்தது.

  அம்பேத்காருக்க்கு வாய்ப்பும், படிப்பும் இருக்குமானால் தாழ்ந்த சாதி என்றால்லாம் இல்லாமல், எந்த மனிதனும் உயரத்தை அடையலாம் என்று நிருபீக்க வேண்டியிருந்தது.

  அவர்கள் அவர்களின் செய்தியின் அடையாளம். நான் ஒரு தலித்தாக இருந்தால் அம்பேத்கார் எனது வாழ்க்கை பாதையின் அடையாளம், போய்ச்சேர வெண்டிய இடம். காந்தியம்.

 9. Well said Ramesh,and its true also,None of the people who had given feedback don’t know anything about Ambedkar or Gandhi,they are against Gandhi just for some political reason or caste.Most of this people who oppose Gandhi are BC’s and MB’c who are real culprit’s of caste system,who don’t are really won’t want to come out of thier caste don’t(I am a MBC (Gounder)…sorry mathimaran for saying my caste)And even mathimaran is always points about Brahmins…want i fear is he is going making a new era untouchble’s by birth(Brahmin’s) for him just blindly brahmin’s are culprits for everything (same like his periyar)who pointed his personal foes into public enimies.Lots to say…..but hate or love i will be saying this in coming days.But sure mathi can’t be changed…he is fallen into deep pit which he can’t be able to come out unless by sole hearted effort.(To even understand ambedkar).

 10. நண்பர் வே. மதிமாறன்,
  வணக்கம்.

  உங்கள் கற்பனையும் எழுத்து திறமும் மிக அறுமை.
  படித்த உங்களுக்கு இந்திய மற்றும் ஹிந்து மத ஞானம் மிக அறுமை

  உங்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள மற்ற இன மக்கள் நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதர சகோதரிகளை,

  நீங்கள் சொல்லும் பிராமன இன மக்கள் மட்டும் தான் தழத்துகிறர்களா?

  உங்களக்கு கட்டயமாக தெரியும் வேறு எத்தனை இன மக்கள் அவர்களை தாழத்த முற்படுகிறார்கள் என்று. இருந்தாலும் நான் என்னால் முடிந்த சில நிகழ்வை தெறிவிக்க ஆசை. இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆசை.

  1 . திருநெல்வேலி மற்றும் மதுரை பக்கம் அடிகடி நிகழும் தேவர், நாடார் மற்றும் நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதரர் சண்டை.

  2 . உளுந்தூர்பேட்டை அருகில் இறுக்கும் பாளையம் என்ற ஊரில் உள்ள கிறிஸ்துவ தேவாலய தேர் பவனி நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதர தெரு வர விடாமல் நடந்த சண்டை

  உங்களுக்கு உலக ஞானம் இறுக்கும் என்று நினைக்கிறேன்.

  அமெரிக்காவில் சில பல ஆண்டு முன் கருப்பு இன மக்களை மாடு குதிரை போன்று பல் ஆட்டி பார்த்தபின் வாங்கிய வெள்ளைகாரர்கள் பற்றி ஏன் நீங்கள் பேசவில்லை.

  வெள்ளைகாரர்கள் பின்பற்றும் மதம் பற்றி ஏன் எழுதவில்லை?

  இஸ்லாம் மதத்தில் இறுக்கும் வேறுபாடுகள் மற்றும் அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் செய்தி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டிய செய்தி இல்லை.

  புத்த மத பிக்சு சொல்லி குடுத்து தான் ராஜபக்ஷே நம் தமிழ் இனத்தை அறுத்து எறிந்தான் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

  எனக்கு உலகில் உள்ள அணைத்து மதம் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நான் எந்த மத கோட்பாடுகளை தாழ்வாக பார்பதோ எழதுவதோ இல்லை.

  மத நம்பிக்கை இல்லை என்றால், மற்றவர்கள் நம்பிக்கை பற்றி எழுத யாருக்கும் உரிமை இல்லை.

  உலகில் உள்ள அணைத்து உயரினங்களும் தங்கள் கூட்டத்திலும் மற்ற உயரினகளைவிட தான் பெரியது என்று போராடுவதும் இயல்பு. இந்த இயல்பு இறுக்கக்கூடாது என்று எல்லா மத போதனைகளும் சொல்லுகின்றன.

  எடுத்துகாட்டாக எனக்கு ஏன் நண்பன் அனுப்பிய ஒரு SMS நினைவிற்கு வருகிறது

  மனித உடம்பில் இறுக்கும் ஒரு ஒரு அவயங்களும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று ஒரு சண்டை போட்டனவாம்.

  அப்போது மூளை சொன்னது, “நான் தான் எல்லா அவயங்களை இயக்குகின்றான் , எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

  உடனடியாக கைகள் சொன்னது, “நான் தான் எல்லா வேலையும் செய்கிறேன் ,எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

  உடனடியாக கால்கள் சொன்னது, “நான் தான் எல்லா இடத்திற்கும் நான் தான் அழைத்து செல்கிறேன் ,எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

  உடனடியாக வாய் சொன்னது, “நான் தான் எல்லாரிடமும் பேசுகிறேன், சாப்பாடு நான் தான் மென்று தருகிறேன், எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

  இப்படி வயிறு, சிறுகுடல், பெருகுடல் என எல்லா அவயங்களும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று ஒரு சண்டை போட்டனவாம்.

  இதனால் அந்த மனிதனுக்கு சற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாம்.

  அப்போது, அசனவாய் சொன்னது “நான் தான் பெரியவன்” என்றதாம். கூடவே தான் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் இருந்ததாம்

  அசனவாய் வேலை செய்யாததால் மற்ற எல்லா அவயங்களும் ஆட்டம் கண்டணவம்.

  அப்போது எல்லா அவயங்களும் அசனவாய் தான் பெரியவன் என்று சொன்னதம்.

  இந்த கதை எப்படி இருக்கிறதோ அப்படி தான் உலகில் உள்ள அணைத்து மக்களும் தான் மற்றும் தன் இனம் பெரியது என்று பறைசாற்றுகிறது.

  இந்த கதை எப்படி நாம் எல்லா உடல் அவயங்களும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைகிறோமோ அதுபோல எல்லா மக்களும் தங்களுக்கு உள்ள வேற்றுமை அற்று ஒன்றாக இருக்கவேண்டும்.

  இந்த கருத்தை ஒட்டி தான் பகவத்கீதைல் கிருஷ்ணபிரான் தன் உடம்பில் இருக்கும் 4 பாகம் பிரித்து தலை பகுதியில் இருந்து வருவது அந்தணர், மார்பு, வயறு பகுதியில் இருந்து வருவது க்ஷத்ரியன், தொடை பகுதியில் இருந்து வருவது வைஷ்யன், கால் முட்டிக்கு கிழ்வுள்ள பகுதியில் இருந்து வருவது சூத்திரன் என்று பிரித்தார்.

  அவர் கூடவே இந்த பாகபிரிவு பிறப்பால் வந்தது இல்லை, ஒரு ஒரு தனி மனிதனின் வாழ்க்கைமுறை ஒட்டியே இருக்கிறது. இந்த வாழ்க்கை முறை அந்த தனி மனிதன் பிரமத்தை தேடி அடையகடைபிடித்து வாழும்முறை. எப்படி உடல் அவயங்களில் வேறுபாடு கிடையாதோ, அப்படியே இந்த பிரமத்தை தேடி அடையகடைபிடித்து வாழும்முறையில் வேறுபாடு கிடையாது.

  ஒற்றுமையாக இருக்க வேண்டிய நாம் வேற்றுமை வளரவிட கூடாது.

  நீங்கள் ஒரு உண்மையான முற்போக்கு சிந்தனைவாதி என்றால் எல்லா மதத்தில் இருக்கும் குறைகளை சொல்லுகள், முடிந்தால் எல்லா மதநண்பர்களும் செரிசெய்துகொள்ளட்டும்.

  மாற்றாக நம் முன்னால் முதல்வர் கருணாநிதி மற்றும் சோனியாகாந்தி போல இந்து மதத்தை குற்றம் சொல்லிவிட்டு, தேவாலையத்தில் அப்பமும் மசூதியில் கஞ்சியும் குடித்துவிட்டு இந்து மதத்தைமட்டும் குறை சொல்லும் குருட்டு முற்போக்கு சிந்தனைவாதியாக இருக்காதீர்கள்

  கிறிஸ்துவ /இஸ்லாம் / புத்த மதம் மாற்றியும் இன்னும் தங்கள் இன கோட்பாட்டை பறைசற்றும் பல இனம் இறுக்கும் போது, பிராமண இன மக்களை மட்டும் தாக்கி எழுதும்/பேசும் சில பல முற்போக்கு சிந்தனைவாதி ஏன் மத்த இன மக்களை பற்றி பேச பயப்பட்டுகிறிர்கள், ஏன் மத்த இன மக்கள் பற்றி பேசி பார்க்க வேண்டியதுதனே?

  இப்படி சில பேர் இந்து மதத்தை மட்டும் குறை சொல்லவதை பார்த்தல் இவர்கள் எல்லாம் இந்து மதம் அல்லாத மதத்திரங்கள் காசு வாங்கி பேசுவது போலவும், இதர மதத்தை பரப்ப வந்தவர்கள் போல மட்டுமே உறுதியாக தெரிகிறது.

  60 ஆண்டுகளாக இட ஒதுகிடு இருக்கிறது, இந்த 60 ஆண்டுகளில் ஏன் முன்னேற்றம் முழுவதுமாக இல்லை?

  உங்களை போல பேசி கருணாநிதி தன் 70 தலைமுறை மக்களுக்கு பணம் சேர்த்து வைத்தபோல நீங்களும் சேர்க்க வேண்டுமா?

  முற்போக்கு பேசும் கருணாநிதி ஏன் தனது மனைவிகள் குங்கும போடும் தாலியும் கட்டி இருப்பதை தூக்கி ஏறிய சொல்ல வேண்டியதுதானே?

  ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

  உங்களை போல பேசி பணம் சேர்த்துவைத்த மக்கள் ஏன் உங்கள் பணத்தை ஏழைஎளிய மக்களுக்கு தந்துவிடவில்லை?

  உங்களை போல பேசி பணம் சேர்த்துவைத்த மக்கள் ஏன் குடிசை வீட்டில் குடி இருக்காமல், மாடி வீட்டில் இருந்து தங்கள் தலைமுறைக்கு காசு சேர்த்துவைகிறிர்கள்?

  இங்ஙனம்

  மணிமாறன் கருணாநிதி

 11. orutharudaiya nadavadikkaikal than avar makkal pakkama enbathai theermanikkum. nandri thozhar

 12. என்ன மதிமாறன், பதில் இல்லவே இல்லை? உங்கள் கூச்சல் வெறும் அரை கூச்சலு போல இறுக்கு?

 13. சாதியும் மதமும் சமயுமும் காணா
  ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

  சாதியும் மதமும் சமயமும் பொய் என
  ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  Utube videos:
  (First 2 mins audio may not be clear… sorry for that)  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

Leave a Reply

%d bloggers like this: