அய்யோ.. வட போச்சே!

உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டு தனியாக நிற்கிறதே?

-சுலைமான், திருநெல்வேலி.

கூட்டணி கட்சிகளின் மீது என்ன காதலா? இல்லை கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற ஆவலா? ’வெற்றிக்கு வாய்ப்பு’ என்பதால்தான் கூட்டணியே.

‘கூட்டணி இல்லாமலே வெற்றி’, ‘கூட்டணி வைத்தாலும் தோல்வி’ என்ற நிலை முன்பே தெரியும் என்றால், எதற்கு கூட்டணி?

அதுபோல் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன கொள்கை? ஒரு சீட்டு கூட கொடுத்த யார் கூட வேண்டுமானலும் கூட்டணி. அவ்வளவுதான்.

ஆனாலும், இந்த தேர்தலில் அதிமுக, திமுக தனித்து நிற்பதால், ஒரு நன்மை. திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்கிற காங்கிரஸ் போன்ற தமிழர் விரோத கட்சிக்கும், ஜாதியக் கட்சிகளுக்கும் பெரிய பின்னடைவு.

குறிப்பாக, தேர்தல் அரசியிலில், திராவிட கட்சிகளோடு சேர்ந்து, ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்காக பல ஜாதிகள் புது புது கட்சிகளை ஆரம்பித்து சமூகத்தில், குறிப்பாக அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் எந்த அரசியல் பார்வையும் இன்றி பச்சையான ஜாதி வெறியை ஊட்டி, சமூகத்தை சீரழித்தார்கள்.

திராவிட கட்சிகளின் இந்த நிலை தொடருமானால்,  மூவேந்தர் முன்னேற்றம், புதிய நீதிகட்சி, கொங்கு பேரவை போன்ற ஜாதிய கட்சிகள் உட்பட்ட இன்னும் பல ஜாதிய கட்சிகள் பிஜேபியைப் போல், இருக்கும் இடம் தெரியாமல் ஒழிந்து போகும். காங்கிரசும்கூடதான்.

அப்போ விஜயகாந்த் கட்சியோட எதிர்காலம்?

அத ‘முடிக்க’ தான் போயிருக்காங்களே நம்ம ‘தோழர்’கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

…ஆனால், உங்க இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கிடாதீங்க’

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

8 thoughts on “அய்யோ.. வட போச்சே!

  1. //அப்போ விஜயகாந்த் கட்சியோட எதிர்காலம்?

    அத ‘முடிக்க’ தான் போயிருக்காங்களே நம்ம ‘தோழர்’கள்.//

    super analyze about CPM & CPI………

  2. அட,நீங்க வேற,காங்கிரசு அம்புட்டுதான்னு சொன்னாங்க.இப்ப பாருங்க.அப்பனுக்கு தப்பாம,அடுத்த பிரதமரா வரப் போறாரு?

  3. நண்பர் வே. மதிமாறன்,

    வண்ணக்கம்.

    அரசியல் கட்சிகள் மீதான தங்கள் பார்வை வரவேற்கத்தக்கது.

    ஏன் இஸ்லாமிய கிருஸ்துவ மத கட்சிகள் மீதான தங்கள் பார்வை ஓர பார்வையாய் இருக்கிறது?

    ஏன் திரு.ஷேக் மொய்தீன் காசுதர மறுத்து விடுவார் என்ற பயமா?

  4. உங்களின் பதிலில் பலருக்கு வெறுப்பு இருக்கலாம்

    ஏன் இவர் விடுதலை சிறுத்தைகளையும் , புதிய தமிழகத்தையும் , புரட்சிப் பாரதத்தையும் சேர்க்கவில்லை, சாதி கட்சி என்ற ஒற்றை வார்த்தையில் பிறகு யாரும் கேள்வி கேட்டால் மடக்கி விடலாம் என்ற எண்ணமா ? என்று உங்களுக்கு கண்டிப்பாக கேள்விகள் வரலாம். அதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று உங்களிடம் பழகிய, உங்கள் பார்வை தெரிந்தவர்களுக்கு தெரியும்.

    கேள்வி பதில் பகுதி அருமையாக இருக்கு, அண்ணனிடம் ஒரு வேண்டுகோள்–எந்த பதிவிலும் கீழ்தரமான வார்த்தை பிரவேசங்களை திணிக்காதீர்கள். பலருக்கு அது பிடிக்கும் பிடிக்காது என்பதை பற்றி உங்களுக்கு கவலை இல்லையெனினும், என் போன்றவர்களுக்கு சற்று சங்கோசமா இருக்கு.

    அன்புடன் தம்பி மன்னை.

  5. புதியவர்களுக்கு –

    நீங்கள் இந்த ஊருக்குப் புதுசு என்று நினைக்கிறேன். இந்த ஊரில் பெரியாரின் கொள்கைகள் அடிப்படையில் தான் எல்லாம் பேசப்படுகிறது எழுதப்படுகிறது. சில வருடங்களாக அம்பேத்கரும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். பெரியாரே கம்யூனிசத்தை ஆதரித்ததால் பொதுவுடைமைக் கொள்கையும் உண்டு – எல்லாம் அரசு செய்யனும்.

    ‘கீழ்’ ஜாதி என கீழ்தரமாக நடத்தும் இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறலாம் என்பது பெரியாரின் எண்ணம். அதை அரசியல் செய்து மதசார்பின்மைக்காக கலைஞர்(கருணாநிதியல்ல) எப்படி வருடா வருடம் ரம்சான் நோம்பின் பொழுது கஞ்சி பருகுவாரோ அதே போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்து மதத்தைத் தாக்குவது ஆசிரியரின் கொள்கை – ஜாதி ஒழியனும். ரொம்பவும் பிதிக்கிக் கேட்டால் பின்னூட்டம் எழுதும் பல பேர் அவதூறுகள் மட்டுமே செய்கின்றனர் என்று பேட்டி வரும்.

    யாராவது ஒருவரைப் போட்டுத் தாக்குகிறார் என்றால் ஒன்று பெரியாரை அவமதித்திருக்க வேண்டும் இல்லை ஜாதி புத்தியைக் காட்டியிருக்க வேண்டும் என்பது மேலோட்டமான பார்வை. உண்மையில் திராவிட இயக்கத்தைப் ‘பழித்து’ப் பேசினால் இவர் குருவே ஒரம் கட்டி நிக்கனும். அவ்வளவு கோவம் வரும். கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வரலை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான். தன் கோரிக்கையை அம்மா நிறைவேற்றினாலும் அது சுய உதவிக் குழுக்கள் மூலமா செய்யலைனா சரி வராதுனு சொல்லி பார்த்தாரு பாருங்க அங்க நிக்குது திராவிட அபிமானம்.

  6. உங்களின் இந்த கட்டுரை சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது.

  7. sariana parvai thozhar. ootu porukki kuppaigal ivargal enbathe unmai.

Leave a Reply

%d bloggers like this: