பாரதிராஜா சொல்வது உண்மையா?

“தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. என் வயது ஒத்தவர்கள் இளையராஜா இசையை ரசித்தார்கள். இன்று என் பேரனுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை பிடித்துள்ளது” என்று பாராதிராஜா சொல்லியிருக்கிறாரே?

 -தினகரன், பாண்டிச்சேரி.

தன் நண்பர் என்பதால் தான் இளைராஜா தன் நிலையிலிருந்து இறங்கி வந்து, பாரதிராஜாவின் டீ.வி சிரியலுக்கு இசையமைத்தார். ஆனாலும் தனது அடுத்த சிரியலுக்கு பாரதிராஜா ஜி.வி.பிரகாஷோடு இணைந்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும் என்பதற்காக பாரதிராஜா இப்படி பேசியிருக்கலாம்.

‘பாரதிராஜா பொய் பேசுகிறார்’ என்று ஜி.வி.பிரகாஷ்க்கும் தெரிந்திருக்கும். ஏன் அவர் சொல்கிற இளைய தலைமுறைக்கும் அது நன்றாகவே தெரியும்.

இன்றும் பாரதிராஜா படங்களுக்கான மரியாதை என்பது, இளைராஜாவின் இசை மட்டும்தான்.

பல இளைய தலைமுறைகளுக்கு, அவர் படங்களில் உள்ள பாடல்களையும் இளையராஜவையும் தான் பிடித்திருக்கிறதே தவிர, பாரதிராஜாவையோ அவர் படங்களின் பெயர்களையோ கூட தெரியாது என்பதுதான் உண்மை. அவ்வளவு ஏன் பாரதிராஜாவின் முந்தைய தலைமுறையான எம்.எஸ். விஸ்வநாதனை தெரிந்த அளவுகூட இளைய தலைமுறைக்கு பாரதிராஜவை தெரியவில்லை.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

9 thoughts on “பாரதிராஜா சொல்வது உண்மையா?

 1. பிழைப்புக்கு முன்னே நட்பாவது…. திறமையாவது… நன்றியாவது…?! இதுப்போன்ற ஆட்களால்தான் தமிழ்த் திரைஇசை குட்டிச்சுவராகிப்போனது.

 2. tamizh isaiye illayaraja than athu bharathirajakkalukku purinthallum puriyathamathiri nadippargal.

 3. சிம்பொனி இசை அமைத்த மேஸ்ட்ரோ இளையராஜாவைக் குறைத்து மதிப்பிட முடியாது .அவர் இசை காலத்தால் அழியாத கல்வெட்டு .
  இளையராஜாவிற்கு இணை இளையராஜாதான் .இளையராஜா இசை விருட்சம் .ஜி .வி .பிரகாஷ் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் .பாரதிராஜாவின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் என்பதை மறந்து விடக் கூ டாது .

 4. தங்கள் கூற்று தவறு. எனது தலை முறையில் நான் இளையராஜா இசையைத்தான் ரசித்து கேட்டேன். எம்.எஸ்.விக்கும் முன்பாக ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு போன்றவர்களின் இசையை கேட்டதே இல்லை.ஆதலால் அவர்கள் ஒன்றும் குறைந்து போய்விட வில்லை. அதுபோலத்தான் பாலச்சந்தர், ஸ்ரீதருக்கு முன்பாக கிருஷ்ணன் பஞ்சு, கே.சுப்ரமண்யம்,டங்கன் போன்றவர்களின் படங்களை ரசிக்கவில்லை. இன்று பாலா, அமீர், சேரன் படங்களை பார்ப்பது போல் அன்று பாரதிராஜா படங்களை ரசித்து பார்த்தேன்.. ஏ.ஆர்.ரஹ்மான்,யுவன்,ஹாரீஸ், வரிசையில் இன்று ஜி.வி. பிரகாஷ். தமிழ் சினிமாவும் சினிமா இசையும் என்றைக்கும் ஒருவரையே தாங்கி பிடித்திருக்காது. அது இளையராஜாவுக்கும் பொருந்தும்.

 5. it indicates your casteist views. BR brought tamil cinema outside studios. it was an era. i am not underestimating ER. but you do abt BR. you are a caste maniac. you are looking everything by wearing “caste” colored glass

 6. பாரதிராஜா தன சொந்த ஜாதி வெறியிலிருந்து கீழே இறங்கியதில்லை . இளயராஜாவை எப்படியாவது இறக்கி விட வேண்டும் என்று அவர் களம் இறக்கிய பல இசையமைபாளர்கள் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்து விட்டார்கள் . இது பாலச்சந்தருக்கும் பொருந்தும் ஆகவே இவ்விரு சனியன்களும் சேர்ந்து யுவன் சங்கர் ராஜாவிற்கு எதிராக களமிறங்குகிறார்கள் இதில் இப்போதைய புதிய வரவு பாலா என்கிற மற்ற்றொரு சனியன் . சேது படம் ஓடியதற்கு யார் கரணம் என்று ஊர் அறியும் . ஜி வி பிரகாஷ் இசையமைத்த பாடல்கள் எந்த அளவிற்கு உள்ளது என்பதும் எல்லோருக்கும் புரியும் . எந்த கொம்பன் வந்தாலும் இசை ஞானியை இப்போதும் அசைத்து பார்க்க முடிவதில்லை . எந்த இயக்குனரை நம்பியும் ராஜாவின் இசை இருந்ததில்லை . எல்லா இயக்குனர்களும் இசை ஞானியிடம் இசை பிச்சை எடுத்து தான் வாழந்தார்கள் .

  .

 7. நீங்க சொலறது உண்மைதானுங்கோ, தெற்கத்தி பொன்னுன்னு
  ஒரு சீரியல் ஒரே சாதி பேருமைதானுங்கோ.

 8. இளையராஜா இப்போ காலிபெருங்காய டப்பா.

Leave a Reply

%d bloggers like this: