‘சொன்னது நீதானா?..’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ எப்போதும் ‘நெஞ்சம் மறப்பதில்லை..’
இசையமைப்பாளர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள், பி. சுசிலா போன்ற இனிமையான பாடகர்களை பற்றி எழுதுங்களேன்.
-பாலமுருகன், திருச்சி.
பாடகர்களை நன்றாக பாட வைப்பது உட்பட, நல்ல பாடலுக்கான முழு பொறுப்பும் இசையமைப்பாளரைதான் சேரும் என்பது என் எண்ணம். ஆனாலும், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ பி. சுசிலா பாடிய, ‘நெஞ்சம் மறப்பதில்லை..’ ‘சொன்னது நீதானா?..’ போன்ற பாடல்கள், இசையமைப்பாளர்களுக்கு இணையான மரியாதையை பாடகர்களுக்கும் ஏற்படுத்தியவை.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ பாடலில் சீர்காழி கோவிந்தராஜனின் பாவம், ‘கர்ணா..’ என்கிற வார்த்தையின் மேல் போட்டிருக்கிற சங்கதியின் நுட்பம் கேட்பவரை நெகிழ வைத்து, கலங்க வைத்துவிடுகிறது.
‘நெஞ்சம் மறப்பதில்லை..’ பாடலில் சுசிலாவின் குரல், ஒரு பெண்ணின் ஏக்கத்தை, அன்பின் தவிப்பை நுட்பமாக வெளிப்படுத்தும். பெண் நூறு சதவீதம் உணர்வுகளால் நிரம்பியவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, பாடலின் துவக்கதிலும், ‘நெஞ்சம் மறப்பதில்லை…’ என்ற வரியை தொடர்ந்தும் வருகிற அந்த ஹம்மிங், அய்யோ… வாய்ப்பே இல்ல.. கலக்கும்.
‘சொன்னது நீதானா?..’ இந்தப் பாடலில் சுசிலாவோடு, ஒரு சித்தார், ஒரு மிருதங்கம் அவ்வளவுதான். இவகளை மட்டும் வைத்துக் கொண்டு உலகின் ஒரு உன்னதமான பாட்டை தந்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.
அது ஒரு சோலோ சாங். சுசிலா மட்டும்தான் பாடியிருப்பாங்க. ஆனால், அதை கேட்கும்போது ஒரு டூயட் பாடலாகத்தான் கேட்கும். அந்த டூயட் சுசிலாவின் குரலுக்கும் சித்தார் இசை கருவிக்கும்தான்.
கணவன் இறந்துவிடுவானோ என்ற சோகமும், கணவன் இல்லாத நம் எதிர்காலம் என்னவாகும் என்கிற பயமும் கலந்து செய்த கலவையாக சுசிலாவின் குரல் உருக்கும் பாவத்தோடு இருக்கும். ‘கவலப்படாதே..’ என்று ஆறுதல் சொல்லி உடன் சேர்ந்து சித்தாரும் உருகும்.
‘இன்னொரு கைகளிலே..’ இதை தொடர்ந்து ஏக்கமும், தவிப்புமாக சுசிலாவின் குரலில் சில வினாடிகள் மட்டும் ஒலிக்கிற ஹம்மிங், அதைத் தொடர்ந்து, கண்ணீரை துடைத்து, தடவிக் கொடுக்கிற சித்தார் ஒலி. அது பாட்டு
*
<p style="text-align:justify;" தங்கம் செப்டம்பர் 2011 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்
16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்
‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு
உங்கள் பகிர்வுக்கு நன்றி…..
தொடர்ந்து எழுதுங்கள்…
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
மிக மிக மிக மிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் மிக்க நன்றி
பாடல்களை உச்சரிப்புத் தூய்மையாகப் பாடும்
சுசிலா அவர்கள் பேசும்போது இன்றளவும்,
ப்ராமண பாஷைதான் பேசுவார்.
பேஷிண்டு இருக்கா! ஷுதி ஷுத்தமா பாடுவா,
என்பதாகத்தான் அவர்பேசுவார்.
நன்றி
இதை எழுதியவுர் கண்ணதாசன் தானே மதிமாறன்.
1. “Sonnadhu Nee Dhana” was composed by MSV – Ramamurthy combination, I guess. In fact, the best of Tamil film melodies came from that combination. MSV, after separating from Ramamurthy, in my opinion, could never create the previous magic in music. Unfortunately, Ramamurthy’s contribution is not much talked about. Ramamurthy always kept a low profile and he is not much of a salesman either. MSV won hands down in this respect.
2. Another lovely song was “Andha Sivagami Maganidam” in “Pattanathil Bootham” – I think this was composed by Govardhan. Whenever we listen to this song, we are transported to a different world.
இசையை ரசிக்கத் தெரியாதவன் இசை அறிவு துளிகூட என்னிடம்
கி…கிடையாது. நீங்கள் எழுதிய பாடல்களை வாய்ப்பு கிடைக்கும் போது கேட்டுவருகிறேன்.