இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக
சட்டசபை தேர்தல் நேரத்தில் திமுக-அதிமுக இரண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு இலவசத் திட்டங்களை, குறிப்பாக பெண்களுக்கு திருமணம் இலவசத் தி்ட்டங்களை அறிவித்தன.
அதைக் கண்டித்து. ‘பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்’ என்று தங்கம் இதழிலும் http://vemathimaran.com/2011/04/04/article-385-1/ எழுதியிருந்தோம்.
இலவச சானிடரி நாப்கின் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அதிமுக தராத போதும், பட்ஜெட்டில், இலவச நாப்கின் திட்டத்தை அறிவித்தது. இப்போது அதை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது அதிமுக அரசு. அதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம் என்றும், இது போன்ற சுகாதார விழிப்புணர்வு எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைக்க வழி வகுக்கும் என்று அரசு கருதுகிறது.
இதனைச் செயல்படுத்தும் விதமாக, அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும்.
இந்த மாதவிடாய் பஞ்சுகள், அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.
மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும்.
இதுவன்றி சிறைச்சாலைகளிலுள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.
பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பஞ்சுகளை தூக்கி குப்பையில் எரிந்து சுற்றுப்புற சுகாதாரம் மாசு அடைவதை தடுக்க அந்தந்த கிராமப்பகுதிகளில் குழிகள் தோண்டி புதைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இளம் பெண்களால் பயன்படுத்தப்பட்ட பஞ்சுகளை சுகாதார முறையில் அழிக்க சூளை அடுப்பு நிறுவிடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பெண்ணிற்கும் வளர் இளம் பெண்கள் நலக் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது. வளர் இளம் பெண்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு எடை, உயரம், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு ஆகியவை இந்தக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு அவர்களின் நலன் கண்காணிக்கப்படும். வளர் இளம் பெண்களின் ரத்த சோகை தடுப்புத் திட்டமாக ஒவ்வொரு பெண்ணிற்கும் வாரந்தோறும் ஒரு இரும்பு சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல்புழு நீக்க மாத்திரையும் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத்துறை, சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித்துறைகளின் அலுவலர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு ஒன்றினை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 44 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவாகும்,
என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையவை:
பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்
இலவச கழிப்பறைக்கே வழிய காணோமாம்? இதில இலவச நாப்கின் தந்து……….
தமிழக அரசின் பெண்களின் சிரமத்துக்குத் தோழ் கொடுக்கும் இந்த உன்னதத் திட்டம் உண்மையாகவே மிகவும் புரட்சிகரமான ஒரு திட்டமாகும். இந்த புரட்சிகரத் திட்டத்தை தமிழக அரசுக்கு முதன் முதலாக இணையத்தின் வாயிலாக வரைந்து வழங்கிய நண்பர் மதிமாறன் அவர்கள் முழுப் பாராட்டுக்கு உரியவர். பெரியார்த் தொண்டர்களின் சமூகம் சார்ந்த கருத்துக்களே குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்கப் பட்டு நிறைவேற்றப் படுகின்றன அரசுகளால்! தந்தைப் பெரியார் என்னும் தன்னலமற்ற தலைவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு தலையாய பெருமை, அந்தத் தலைவரின் புரட்சிகரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, தம்மைத் தரம் உயர்த்திக் கொண்டோர் சார்பாக நண்பர் மதிமாறனை மீண்டும் பாராட்டி மகிழ்கிறோம். காசிமேடு மன்னாரு.
நல்ல கல்வி ,சுகாதரகல்வியும் அவசியம்
இந்த திட்டம் பாராட்டுக்குறியதுதான். ஆனால் இத்தி்ட்டம் மட்டுமே போதுமானதல்ல என்பதையும் கவணத்தில் கொள்ளவேண்டும்.
தென்னக அரசுகள் குறிப்பாக தமிழ்நாடு மாநில அரசு சமூக நலத் திட்டங்கள் தீட்டுவதிலும், அவற்றை செயல் படுத்துவதிலும் வட, மற்றும் கிழக்கு இந்திய மாநில அரசுகளை விடவும் சிறந்த முறையில் செயல் படுகின்றன /படுகிறது என்று பல ஆண்டுகளாக் கண்டு வருகிறேன். ஏழை பெண்களின் அடிப்படை சுகாதாரத்தேவை என்று கண்டுணர்ந்து விநியோகம் செய்ய எத்தனிக்கும் அரசுக்கு பாராட்டு.
This deserves appreciation.Com.Mathimaran’s thought has come to reality.
Congrats com.Mathimaran.
தோழர். மதி அவர்களின் பொது நலம் சார்ந்த சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி என்றே இதைச் சொல்லலாம். நம் அரசும் சானிட்டரி நாப்கின் திட்டம் போன்ற அருமையான திட்டங்களை தொடர்ந்து அறிவித்து அதை முறைப்படுத்தி சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
தோழரின் மக்கள் நலம் சார்ந்த இச்சிந்தனை இன்று அரச ஆணையாக மக்களிடம் போய் சேரப்போகிறது… அது போன்றே அவர் அடிக்கடி வளியுறுத்தும் சமத்துவ கிராமங்கள்(சமததுவபுரம் அல்ல) திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகச் சிறப்பாக இருக்கும்…..
தங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. முதன்முறையாக கிராமப்புற தாய்மார்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி!! தங்களுக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுக்கள்!
தோழர் கூட இந்த திட்டத்தை பா.ஜ.க- தேர்தல் அறிக்கையிலே இருந்து தான் சுட்டுட்டாரு !
பா.ஜ.க வை சேர்ந்த Ram பொய்யாக தொடர்ந்து எழுதிவருகிறார். அவருடைய பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்.
பா.ஜ.க. ஆளுகிற மாநிலகளில் இதை அமுல்படுத்த வக்கில்லாத பா.ஜ.க என்ன புடுங்குவதற்காகவா தேர்தல் வாக்குறியாக அறிவித்தது.