கரு நீலம் வழங்கும் ‘துக்கம்’

மிழக மேற்கு மாவட்டத்தில் ஆதிக்க ஜாதியை சேர்ந்த கவுண்டர்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த மக்களின் மரண துயரத்தின் போதும்; எப்படி தங்களின் ஆதிக்க ஜாதி திமிரை கொண்டாடுகிறார்கள், என்பதை உள்ளடக்கமாக கொண்டது ‘துக்கம்’ குறும்படம். 24-12-2011 அன்று வெளியிடப்பட்டது.

தோழர் நீல வேந்தனின் கவிதையை உள்ளடக்கமாக கொண்டு, எழுதி இயக்கி இருக்கிறார் கவிஞர். அ.ப.சிவா.

சூலூர் அருகில் உள்ள கண்ணம்பாளையம் கிராம மக்களையே இதில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அ.ப.சிவா.

‘துருவன்’ என்கிற முக்கிய பாத்திரத்தில் தோழர் வீரமணி நடித்திருக்கிறார். படத்தொகுப்பு கி. இளவரசன்.

கரு நீலம் தயாரிப்பாக வந்திருக்கிறது இந்த குறும்படம்.

‘கரு நீலம்’ என்கிற வண்ணம் பெரியார் – டாக்டர் அம்பேத்கரை குறியீடாக கொண்டது என்பதே இந்த பெயருக்கு காரணம்.

தொடர்புக்கு:

அ.ப.சிவா – 9843 068294

நீல வேந்தன் – 944 3937063

வீரமணி – 9842 888764

evrsiva@gmail.com

ராஜாஜி – காமராஜ் யார் தமிழர் தலைவர்?

ராஜாஜிதான் தமிழர்களுக்கான தலைவர் காமராஜர் தமிழர் நலனுக்கு எதிரானவர் என்று என் நண்பன் சொல்கிறான்?

-கு. செல்வநம்பி.

காமராஜரை பெரியரோடு, டாக்டர் அம்பேத்கரோடு ஒப்பிட்டு விமர்சிக்க முடியும்.

ஆனால், ஒருவன் ராஜாஜியோடு ஒப்பிட்டு காமராஜரை இகழ்கிறான் என்றால் அவன் நிச்சயம் குழந்தையை கழுத்த நெறுச்சி கொன்னுட்டு, அந்த தாயை பாலியல் வன்கொடுமை செய்து மகிழ்ச்சியடைகிற ஒரு சமூக விரோதியாகத்தான் இருப்பான்.

தன் ஆட்சியில் இந்தி திணிப்பை செய்த ராஜாஜி, தான் ஆட்சியில் இல்லாதபோது இந்தி எதிர்ப்பு, தேவிகுளம், பீர்மேடு போராட்டங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான நிலை என்பதெல்லாம் தமிழ் உணர்வின் காரணமாக செய்யவில்லை. காமராஜருக்கு எதிரான நிலையில் இருந்துதான் செய்தார்.

எப்படியாவது காமரஜருக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி அவர் ஆட்சியை அகற்றிவிட்டு மீண்டும், தன்னுடைய தமிழ் விரோத, குலக் கல்வித் திட்ட, பார்ப்பன ஆட்சியை கொண்டு வரும் நோக்கத்திற்காகத்தான் அவர் செயல்பட்டார். ராஜாஜியின் அந்த சதியை முறியடிக்கத்தான் பெரியார், காமராஜ் ஆட்சியை உறுதியாக ஆதரித்தார்.

ராஜாஜியின் தமிழ் உணர்வு பற்றி, பெரியாரின் பார்வையில் சொல்ல வேண்டும் என்றால், ‘பாரப்பனர்கள் கோழிக்கு ரெண்டு கால் என்று சொன்னால் நான் கோழிக்கு மூன்று கால் என்று சொல்வேன்.’ என்பார்.

அவர்களின் அந்த உண்மைக்கு பின்னால் பெரிய சதி மறைந்திருக்கும் என்பதே பெரியாரின் கூற்று. அதையே ராஜாஜி தொடர்ந்து நிரூபித்தார்.

இந்த கேள்வியை கேட்ட திரு. செல்வநம்பி, உங்கள் நண்பர், பார்ப்பனராக இருக்க வாய்ப்பில்லை. பார்ப்பனர்களிடம் பொறுக்கி திங்கலாம், பார்ப்பன பத்திரிகைகளில் கட்டுரை எழுதியே தமிழர் தலைவனாக ஆகிவிடலாம் என்பது போன்ற திட்டம் உள்ளவராக இருக்கலாம். ஜாக்கிரதை.

உங்கள் வேட்டியும் நீங்களும்.

 

தொடர்புடையவை:

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்


தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் பாரதிராஜா போன்றவர்கள் கேரளாவிற்கு எதிராக மிக சிறப்பாக பேசியருக்கிறார்களே?

-க. செல்வம்.

எழுத்தாளனும், பேச்சாளனும் தன் கருத்துக்களை பேச்சிலும், எழுத்திலும் பகிர்ந்து கொள்வதுபோலவே, ஒரு சினிமாக்காரனும் செய்வது மோசடியானது.

தன் ஜாதி அடையாளத்தோடு படம் எடுத்துவிட்டு, மேடையில் ‘தமிழன்’ என்று சவடால் விடுவது கடைந்தெடுத்த ………..!

இவர்கள் மேடையில் பேசும்போது தமிழ் மக்கள் விரோதமாக, தங்களின் ஜாதிவெறியோடுகூட பேசட்டும். ஆனால், தங்கள் சினிமாக்களில் குறைந்த பட்சமாவது ‘தமிழன்’ என்ற பொதுஅடையாளத்தோடாவது படம் எடுக்கட்டும்.

ஏனென்றால் மேடை பேச்சு சில எல்லைகளுக்குள்தான். ஆனால் இவர்கள் சினிமா விரிந்த எல்லையை கொண்டது.

ஆகவே, மேடையில் ஒன்றும், சினிமாவில் வேறொன்றுமாக இருக்கிற, இந்த டபுள் ஆக்சன் இயக்குநர்கள், தங்கள் ‘தமிழ் உணர்வை’ சினிமாக்களில் செய்ய முன்வரட்டும்.

‘பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அது உடைந்து மக்கள் பலியாகுகிறார்கள்’ என்று 999 என்ற பெயரில் சினிமா எடுத்து உலகம் முழுக்க பரப்பி இருக்கிறார்கள் மலையாள சினிமாக்காரர்கள்.

இவ்வளவு வாய் கிழிக்கும் இந்த டபுள் ஆக்சன் இயக்குநர்கள், ‘பெரியாறு அணை பலமாகத்தான் இருக்கிறது. அதை இடித்தால் 7 மாவட்ட தமிழக மக்கள் பட்டினியால் சாவார்கள்’ என்று ஒரு படம் எடுப்பார்களா? அதுதான் இவர்கள் செய்ய வேண்டிய உண்மையான போராட்டம்.

இல்லை என்றால்; செல்போன்ல மிஸ்டு கால் கொடுக்குறது, சூட்டிங்கிற்கு லேட்டா போறது, பட்ஜெட்டை தாண்டி படம் எடுக்கிறது, சொன்ன தேதியில படத்த முடிக்காம இழுத்தடிக்கிறது, நடிகைகளோடு கிசு, கிசுக்கப்படுகிறது இவைகளைகூட தமிழன ஆதரவு போராட்டமாக அறிவித்து ‘நோண்பு’ கொண்டாடிவிட்டு போய்விடுவார்கள்.

தொடர்புடையவை:

தங்கர்பச்சான், கமல், வைரமுத்து: 7ஆம் அறிவு தமிழரின் பெருமை

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் இந்திய தேசியத்தை எதிர்ப்பதை விட திராவிடத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே ஏன்?

ரவிச்சந்திரன், வெண்ணிறைபந்தல்.

தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களில் பலர் காங்கிரஸ் மனோபாவம் நிறைந்தவர்களாகவும்; காந்தி, காமராஜ், ராஜாஜி, கருப்பையா மூப்பனார் போன்று இந்திய தேசியத்திற்காகவே வாழ்ந்த தலைவர்களை தங்கள் வழி காட்டிகளாக கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த காங்கிரஸ் மனோபாவம் கொண்டவர்கள் காங்கிரஸ்காரர்களைவிட ஆபத்தானவர்கள்.

இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்களில் பலர், பார்ப்பனிய ஆதரவு, சுயஜாதி வெறி, தலித் விரோதம், இந்திய தேசியம் பேசிய ஜாதித் தலைவர்களை முன்னிறுத்துவது, பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களை புறக்கணிப்பது, திராவிட இயக்க எதிர்ப்பு, இட ஒதுக்கிடு எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு, பால்தாக்ரே, மோடி, வேதாந்தி போன்ற இந்து மதவெறியர்களை ஆதரிப்பது இதுதான் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் பேரில் முன்னிலைப்படுத்துகிற அரசியல்.

அதனால்தான், இன்று தமிழ்த் தேசியவாதிகளின் மத்தியில், ஜாதி ஒழிப்பு குறித்தும், பெரியார், அம்பேத்கர் குறித்தும் பேசுவதே தமிழர்களை பிரிப்பதற்கான சதி என்று அடையாளப்படுத்தப்படுகிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பலருக்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர; இந்து மதத்தையும், ஜாதியையும் எதிர்க்கும் பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பிடிப்பதில்லை என்பதும் தமிழ்த் தேசியவாதிகளின் இந்த மனோபாவத்துக்கு ஒரு சிறப்புக் காரணம்.

மறந்தும்; இந்துமதம், பார்ப்பனர்கள் குறித்து எப்போதும் வாய் திறக்காத ஒரே திராவிட இயக்கத் தலைவர் வைகோதான். வேதாந்தி, சேது பாலம் பிரச்சினை வந்தபோதும்கூட அவர் இந்து மதத்திற்கு எதிராக வாய் திறந்ததே இல்லை. பா.ஜ.க போன்ற மதவாத கட்சிகளோடு கூட்டு வைப்பதும், வாஜ்பாய் போன்றவர்களோடு நெருக்கமாக இருப்பதிலும் பெருமை கொள்பவர்தான் இந்த வைகோ. ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற காரணத்திற்காகவும் திராவிட இயக்கத்தின் கைதேர்ந்த சந்தர்ப்பவாதியான, வைகோவை மட்டும் ஆதரிக்கிறார்கள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.

அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் செல்வாக்குப் பெற்றவர் வைகோ. அவர் ‘விசா’ கொடுத்தால், வெளி நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களிடம் இருந்து சிறப்பு அழைப்பு கிடைக்கும். உலகம் முழுக்க இன்ப சுற்றுலா சென்று வரலாம் என்ற ஆர்வத்தில்தான் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் வைகோவை ஆதரிக்கிறார்கள்.

அதுபோக, முத்துராமலிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று ஒவ்வொரு ஆண்டும் அவரை வானுயுரப் புகழ்ந்து வீர முழக்கம் செய்கிற ஒரே தலைவர் வைகோதான். அவரை ஆதரிக்கிற முற்போக்காளர்கள் அதை ஒரு குற்றமாக கருதுவதே இல்லை.

தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் இந்திய தேசியத்தை சரியாக எதிர்த்தால், இந்திய அரசியல் சட்டத்தை எதிர்க்க வேண்டும். இந்தியா என்கிற ஒரு நாடே தேவையில்லை, என்பதோடு மிக குறிப்பாக தனித் தமிழ்நாடு கோரிக்கையைதான் மாற்றாக, தீவிரமாக முன்மொழிய வேண்டும்.

ஆனால், இவைகளை செய்தால், காலத்துக்கும் உள்ளபோய் களி திங்க வேண்டியதுதான்.

அதனால்தான் தமிழ் உணர்வு என்பதை ஈழ ஆதரவோடு நிறுத்திக் கொண்டு. இந்திய தேசிய எதிர்ப்புக்கு பதில், திராவிட இயக்க அல்லது பெரியார் எதிர்ப்பாக ‘வின்னர்’ பட வடிவேலுபோல் சீறுகிறார்கள்.

ஒரு தலைவருக்கு ஜாதிய பின்னணி இருந்தால் அவரை விமர்சிக்க பயப்படுவார்கள். அதுபோலவே, யாரிடம் ஜனநாயகத் தன்மை இருக்கிறதோ அந்தத் தலைவர்களைத் தான் விமர்சிக்கவும் முடியும். அது பெரியாரிடம் ஏராளமாக இருக்கிறது. பெரியாரை அவதூறு செய்தால் எந்த ஜாதிக்காரனும் அருவா தூக்கிட்டு வரமாட்டான் என்பது மட்டுமல்ல, மகிழ்ச்சியடைவான். குறிப்பிட்ட ஜாதிக்கார்களின் ஓட்டோ, ஆதரவோ, தனிப்பட்ட முறையிலான லாபமோ பாதிக்கப்படாது. மாறாக அதிகரிக்கும்.

ஜாதி செல்வாக்கு இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஆதரிக்கப்படுகிற ஓரே தமிழகத் தலைவர் தந்தை பெரியார் மட்டுமே. அதே காரணத்திற்காகவே, அவரை அவதூறும் செய்கிறார்கள். அவ்வளவு ஏன் இந்தக் காலத்திலேயே முற்போக்காளர்களிடம் ரவுடித் தனம் காட்டுகிற ஜாதிய உணர்வாளர்கள், அந்தக் காலத்தில் பெரியாரை தாக்கியும் இருக்கிறார்கள்.

பெரியார் எதிர்ப்பாளர்களின் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ள வரலாற்றின் இந்த சாட்சி உதவியாக இருக்கும்; 1956 பிப்ரவரி 20 ல் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ஒட்டி தமிழகத்திற்கு ஆதரவாக நடக்கவிருந்த பொதுவேலை நிறுத்தத்தில் திராவிடர் கழகம், திமுக, ஷெட்யூல் காஸ்ட் பெடரேஷன், தமிழரசுக் கழகம், கம்யுனிஸ்ட் கட்சி போன்றவை கலந்து கொள்வதாக அறிவித்தன.

‘பந்த நடத்தினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள்’ என்று போராட்டக் காரர்களை மிரட்டினார் முதல்வர் காமராஜர். இன்றுகூட ‘தேவிகுளம், பீர்மேடு பகுதி நம்மிடம் இருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்சினையே வராது’ என்கிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள். அதை கேரளாவிற்கு தாரை வார்த்ததில் காமராஜருக்கு அதிக பங்கு உண்டு.

ஆனால், தமிழ்த் தேசியவாதிகள் இன்றுவரை பெரியாரை, திராவிட இயக்கத்தை விமர்சிக்கிறார்களே தவிர, காமராஜரை ஒன்றும் சொல்வதில்லை. காரணம், காமராஜரை விமர்சித்தால் நாடார் ஜாதி உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும் அல்லது ஆதரவை இழக்க வேண்டிவரும். குறிப்பாக, நாடார்களால் நடதப்படுகிற பத்திரிகைகளால், புறக்கணிப்படுவோமோ என்கிற அச்சம் கூடுதலானது.

ஏனென்றால், காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க, கம்யுனிஸ்ட் கட்சிகள், தமிழ்த் தேசியம், ‘முற்போக்காளர்கள்’, பத்திரிகையாளர்கள், வியாபாரிகள் இப்படி எல்லாக் கட்சிகளிலும், துறைகளிலும் இருக்கிற நாடார் ஜாதி உணர்வாளர்களின் Icon காமராஜர்.

தீவிர நாடார் ஜாதி உணர்வாளர்கள் மத்தியில், ‘காமராஜரை தோற்கடித்தவர்கள்’ என்கிற காரணமும் திமுக எதிர்ப்பில் முக்கிய பங்காற்றுகிறது. அண்ணாதுரை மரணத்திற்கு பின், கலைஞரின் தலைமை காரணமாக முதலியார்கள், கலைஞரின் மேல் கொலைவெறியோடு இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நெடுஞ்செழியனைப்போல் அதிமுகவை ஆதரித்தார்கள். இன்றும் திராவிட இயக்க எதிர்ப்பு என்று பெயரில் கருணாநிதி எதிர்ப்பையும். ஜெயலலிதா ஆதரவையும் தங்களின் தமிழ் உணர்வாக வெளிப்படுத்துகிறார்கள்.

ஆக, திராவிட இயக்க எதிர்ப்பு என்ற பெயரில் பெரியாரையும் விமர்சிப்பவர்கள், பச்சையான ஜாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தான் பெரியாரை கடுமையாக திட்டிவிட்டு, மாற்றாக தன்ஜாதித் தலைவர்களை பரிந்துரைக்கிறார்கள்.

பெரியாரை தங்களின் அமைப்பின் சார்பாக அதிகாரப் பூர்வமாக பொதுக்கூட்டங்களில், பத்திரிகைகளில் பெரியார் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக இருந்தார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார் என்று அவரை சகட்டுமேனிக்கு அவதூறு செய்பவர்களுக்கு, ‘தில்’ இருந்தால், அவர்கள் சார்ந்திருக்கிற அமைப்பு ரீதியாக அவர்களின் பத்திரிக்கையிலோ அல்லது அதிகாரப் பூர்மாகவோ, தமிழ்த் தேசியத்திற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக இருந்த முத்துராமலிங்க தேவரை, ராமதாசை விமர்சிக்க சொல்லுங்களேன் பார்ப்போம். மாட்டார்கள்.

குறைந்தபட்சம் அவர்களை இவர்கள் ஆதரிக்காமல் இருந்தாலே, அதுவே பெரிய துணிச்சலான செயல்தான்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர்

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழ்த் தேசியவாதிகளும்

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

பெரியார்; தலித் விரோதியா?

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

தமிழ்த்தேசியம்:  ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

பெரியார்-அம்பேத்கரின் இன்றைய தேவை

தொடர்புடையது:

‘துக்கம்’ குறும்படம் வெளியீடு

துணிக்கடைகளை, நகைக்கடைகளை நகருக்கு அப்பால் மாற்ற வேண்டும்!

பிரம்மாண்டமான துணிக்கடைகள் நிறைந்த நகரம் சென்னை

டி. நகரில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்தது சரியா?

-எஸ். கருத்தமுத்து, திருநெல்வேலி.

தியாகராயர்நகரில் மட்டுமல்ல, சவுக்கார்ப் பேட்டை போன்ற ஏரியாக்களிலும் முறையன்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ மட்டும்தான் நடுத்தர குடும்பங்கள் துணி எடுக்க முடியும். திருமணம் போன்ற விசேச நாட்களில் மட்டுமே நகைக்கடைகளுக்கும் செல்வார்கள்.

நகைக்கடைகளை நகருக்கு மத்தியில் வைத்துவிட்டு, மக்கள் அன்றாடம் உபயோகிக்கிற காய்கறி சந்தையை நகருக்கு ஒதுக்குப்புறமாக வைப்பது என்ன நியாயம்?

சென்னை புதுப்பேட்டையில் இருக்கிற காய்லாங்கடை நடத்துகிறவர்களும்,  அந்தக் கடையில் வாங்குபவர்களும் மிக எளிய மக்கள், அந்தக் கடைகளை காலி செய்து தாம்பரத்தை தாண்டி போக சொல்லியிருக்கிறார்கள். காயலங்கடைக்கே உரிய கலையழகை ஒழித்து, அவர்களை அகதிகள் போல் மாற்றுகிற திட்டமல்லவா இது?

உண்மையில் தாம்பரத்தை தாண்டி வெளியில் கொண்டுபோக வேண்டிய கடைகள், சென்னை நகரத்தின் மத்தியில் இருக்கிற பிரம்மாண்டமான நகைக்கடைகளும், துணிக் கடைகளும்தான். இவைகளை இடமாற்றினாலே போதும். நகரத்தின் நெரிசல் குறையும்.

ஆனால் அரசு அதை செய்யாது. ஏனென்றால் சென்னை போன்ற பெருநகரங்களை பெரிய முதலாளிகளுக்கும், அவர்களிடம் வேலை செய்கிற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமான நகரமாக மாற்றி வருகிறார்கள்.

அதனால்தான் எளிய மக்களை அப்புறப்படுத்துவது நடக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் அதிகமான விலையேற்றதில் நிலங்கள் விற்கப்படுகிறது, வாடகை கட்டுக்கடங்காமல் உயர்த்தப்படுகிறது.

வாடகை பிரச்சினையின் காரணமாகவே பல குடும்பங்கள் நகரத்தை காலி செய்து அவர்களாகவே, புறநகர் பகுதிக்கு சென்றுவிடுகிறார்கள். இன்னும் கொஞ்சநாட்களில் சொந்த வீடு வைத்திருக்கிற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ‘நல்ல விலை வந்தது’ என்று வீட்டை விற்றுவிட்டு புறநகர் பகுதிக்கு சென்று விடுவார்கள்.

இனி சென்னை போன்ற பெரு நகரங்களில், கூலி வேலை செய்பவர்களும், தொழிலாளர்களும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இல்லையென்றால், அவர்களை சார்ந்திருக்கிற, அண்ணாச்சி மளிகைக் கடை, நாயர் டீ க்கடை, பாயோட கறி க்கடை இவைகளையும் காண முடியாது.

இவர்களை விரட்டி விட்டு, பன்னாட்டு கம்பெனிகளும், பெரும் முதலாளிகளும், அவர்களின் அதிகாரிகளும் மட்டும்தான் இருப்பார்கள். அவர்களுக்காக மட்டுமே, நட்சத்திர விடுதிகளும், கேளிக்கை அரங்குகளும் இருக்கும்.

‘ஷாப்பிங் மால்கள்’ என்ற பெயரில் அழுக்கான உடை கொண்ட தொழிலாளர்களை அனுமதிக்காத கடைகள், அதிகம் கட்டணம் கொண்ட திரையரங்குகள் என்று அதன் அறிகுறிகள் இப்போதே ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

சந்திரபாபு, பின்லேடன், ஜாதியா? வர்க்கமா? விக்ரம்,கே.வி. மகாதேவன்

பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து

‘அட்சய திரிதியை‘ நகை வாங்கினால் நல்லது

உறவுகளை உரசிப்பார்க்கும் தங்கம்

‘துக்கம்’ குறும்படம் வெளியீடு

தொடர்புடையது:

பெரியார்-அம்பேத்கரின் இன்றைய தேவை

கனிமொழியை ‘காப்பாற்றிய’ கடவுள்!

கனிமொழி சிறைக்கு போவதற்கு முன், தன் தாயுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றபோது சாமி கும்பிட மறுத்ததினால்தான் இவ்வளவு சிக்கல்களுக்கு உள்ளானார்?

-கரு. இராமநாதன்.

இது என்ன புது புரளியா இருக்கு..!

கனிமொழிக்காவது பராவாயில்லை,

சில நாட்களுக்குமுன் செய்திதாளில் ஒரு தொழில் அதிபர், ’திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று தன் வேண்டுதலை மொட்டையடித்து நிறைவேற்றிவிட்டு திரும்பியபோது, விபத்தில் குடும்பத்தோடு பலியானார்.’ என்று படித்த ஞாபகம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சுனாமி வந்தபோது, வேளங்கண்ணி கோயிலில், நீண்டகால ஆயுளுக்காக வேண்டுதலில் இருந்தவர்கள், சுவற்றில் மோதி சிதறிய பரிதாபம், மெக்காவில் நெரிசலிலும், தீ விபத்திலும் மாண்ட கொடூரம்..

இதையெல்லாம் பாக்கும்போது, ஆண்டவன் தன்னை நம்பாதவங்களைத்தான் சோதிக்கிறான்; நம்புறவங்களை கை விட்டுருவான் போல.

தொடர்புடயைவை:

‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்

கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

அன்னா அசாரே ஒருமுறை கூட…

‘ஒருமுறை தான் அடித்தாரா?’ என்று சரத்பவார் தாக்கப்பட்டதை பற்றி காந்தியவாதியான அன்னா அசாரே குறிப்பிட்டிருக்கிறாரே?

-டி. ஜான்சன், சென்னை.

நமக்கு கூட கவலையாதான் இருக்கு. சரத்பவார் ஓரே ஒருமுறை அடிவாங்குனாரே என்பதற்காக அல்ல; அன்னா அசாரே ஒருமுறை கூட அடி வாங்கலையே என்று.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

‘வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’- ட்ரைனிங் சென்டர்ஸ்; அன்னா அசாரே அழைக்கிறார்!

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

துரோகம் செய்யும் தேங்காய் தமிழர்கள்!

கேரளாவில் இருந்து, தமிழகத்திற்குத் தேங்காய் விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

கேரள தேங்காயை பணம்கொடுத்து வாங்கிய, தமிழர்கள் அதைக் கொப்பரை தேங்காயாக மாற்றி, மீண்டும் கேரளாவிற்கே இலவசமாகத் தருகிறார்கள். அதுவும் தன் தலைமேல் சுமந்து சென்று.

அப்படிச் சுமந்து சென்ற தமிழர்களையும் விரட்டி, விரட்டி அடிக்கிறார்களாம் எல்லையில் கேரளத்தவர்கள். இத்தனைக்கும் தேங்காய்க் கொண்டு செல்லும் தமிழர்களுக்குப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் நோக்கம் எல்லாம் ஒன்றுமில்லை. பெரியாறு அணை இருந்தா என்ன? இல்லாட்டி என்ன என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் இந்தத் தேங்காய் தமிழர்கள்.

மலையாளிகளிடம் இருந்து காசு கொடுத்து வாங்கிய தேங்காயை, தன் சொந்த செலவில் கொண்டுபோய் அவர்களிடமே இலவசமாகத் தருவதற்காகத்தான் போகிறார்கள். ஆனாலும் அவர்களையும் அடிக்கிறார்கள் கேரளத்தவர்கள். ‘அடிவாங்கியாவது, தேங்காயை கொண்டுபோய்ச் சும்மா கொடுத்துவிட்டுத்தான் வருவேன்’ என்று அடம்பிடிக்கிறார்கள் தேங்காய் தமிழர்கள்.

அதனால் உயிரை பணயம் வைத்து, மாற்று வழியில் போய்த் தேங்காயை இலவசமாகக் கொடுத்துவிட்டு, ஏதோ புரட்சிகர நடவடிக்கையைச் செய்தது போல் ரகசியமாக வருகிறார்கள் தேங்காய் தமிழர்கள்.

இந்தச் சூழலில், ‘கேரளாவிற்குச் செல்லும் 13 வழிகளை மூட வேண்டும்’ என்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக்கிறார் வைகோ. இந்தப் போராட்டத்திற்கு எதிராக மலையாளிகள் செயல்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் தேங்கய் தமிழர்கள் செயல்படுவார்கள்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள எல்லைப் பகுதியில் பஞ்சம் பிழைக்கப் போன தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட விவரங்களைக் கதறி, கண்ணீர் மல்க சொல்லும்போது, நம் நெஞ்சம் பதறுகிறது. நேரில் பார்த்த கம்பம், தேனி பகுதி தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள்.

ஆனாலும், இந்தத் துயரம், எதுவும் சீண்டவில்லை தேங்காய் தானத் தமிழர்களுக்கு, இந்த ரணக் களத்திலும் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கேரளவிற்குச் சென்று தேங்காயை தந்துவிட்டு வருகிறார்கள். காரணம் கேட்டால், ‘நாங்கள் தமிழர்கள் இல்லை அய்யப்ப பக்தர்கள்’, என்கிறார்கள்.

உம்மண்சான்டி சாமியும், அச்சுதானந்த சாமியும் இன்னும் சில மலையாள சாமிகளும் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பேன், தமிழ் சாமிகளை விரட்டி அடிப்பேன் என்று உறுமுகிறார்கள்.

இதை மன்மோகன் சாமி கண்டு கொள்ளாமல் இருக்கிறார். சோனியா சாமியும். சிதம்பரம் சாமியும், கேரள காங்கிரஸ் சாமிகளின் அடாவடித்தனத்தைக் கண்டிக்க மறுக்கிறார்கள்.

அதேபோல். கேரள கம்யுனிஸ்ட் சாமிகளின் அட்டகாசத்தைக் கண்டித்து, பிரகாஷ் கரத் சாமியும் ஒன்றும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்.

காரணம், தமிழ்நாட்டை விடக் கேரளாவில்தான் இரண்டும் கட்சிகளுக்கும் ஓட்டுச் சாமிகள் அதிகம். தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் கருத்துக் கூறினால், உடனே ஆளும் கட்சியாக இரண்டு கட்சிகளும் வர எப்போதுமே வாய்பில்லை; மாறாகக் கேரளாவில் செல்வாக்கு குறைந்துவிடும் என்ற தேர்தல் காரணத்தினாலேயே இந்த அக்கப்போரு நடக்கிறது.

ஆனாலும், இவ்வளவு பிரச்சினை நடக்கும்போதும் நம்ம தமிழ் அய்யப்பசாமிகள் சுப்பிரமணிய சுவாமியைப்போல் நடந்து கொள்வது ரொம்ப மோசம்.

கேரளாவிற்குள் நுழைகிற முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிற ஆயிரங்கணக்கான தேனி மாவட்ட மக்களைக் காவல்துறை தடியடி நடத்தி தடுத்து நிறுத்துகிறது. ஆனால், சபரிமலைக்குச் செல்லும் தேங்காய் தமிழர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் இருக்கும். அவர்கள் நினைத்தால்…

‘ஒண்ணும் பண்ண முடியாது. தேங்காயை கல்லுல உடைச்சிட்டு, மண்டையை மலையாளிகிட்ட உடைச்சிகிட்டு வருவாய்ங்க’

“இப்படிச் சுயமரியாதை இல்லாமல் இருப்பவனுக்குப் பேர் தமிழனா? திரும்பத் தமிழ்நாட்டுக்குள்ள வராதே. என்று அவர்களைத் தடுக்க வேண்டும்” எனப் பொங்கினார் ஒரு கோபக்காரத் தமிழர்.

தொர்புடையவை:

‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

வாழ்க புரட்சித் தலைவி! வாழ்க அச்சுதானந்தன்! – What a trick?

முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)