கனிமொழியை ‘காப்பாற்றிய’ கடவுள்!
கனிமொழி சிறைக்கு போவதற்கு முன், தன் தாயுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றபோது சாமி கும்பிட மறுத்ததினால்தான் இவ்வளவு சிக்கல்களுக்கு உள்ளானார்?
-கரு. இராமநாதன்.
இது என்ன புது புரளியா இருக்கு..!
கனிமொழிக்காவது பராவாயில்லை,
சில நாட்களுக்குமுன் செய்திதாளில் ஒரு தொழில் அதிபர், ’திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று தன் வேண்டுதலை மொட்டையடித்து நிறைவேற்றிவிட்டு திரும்பியபோது, விபத்தில் குடும்பத்தோடு பலியானார்.’ என்று படித்த ஞாபகம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சுனாமி வந்தபோது, வேளங்கண்ணி கோயிலில், நீண்டகால ஆயுளுக்காக வேண்டுதலில் இருந்தவர்கள், சுவற்றில் மோதி சிதறிய பரிதாபம், மெக்காவில் நெரிசலிலும், தீ விபத்திலும் மாண்ட கொடூரம்..
இதையெல்லாம் பாக்கும்போது, ஆண்டவன் தன்னை நம்பாதவங்களைத்தான் சோதிக்கிறான்; நம்புறவங்களை கை விட்டுருவான் போல.
தொடர்புடயைவை:
‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்
//ஆண்டவன் தன்னை நம்பாதவங்களைத்தான் சோதிக்கிறான்; நம்புறவங்களை கை விட்டுருவான் போல.//
போன வருஷம் சபரிமலையில நெரிசலில் இறந்தவங்க சரியா விரத த்த கடைபிக்காத தனாலதான்னு சொல்றாங்க.
அது சரி மலையாளிகள் தாக்குறாங்கன்னு, சபரி மலைக்கு போகாமல் மாலைய பழனிக்குப் போய் கழற்றாங்களாமே, ஐயப்பன் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே அப்படி செய்றாங்க. இல்ல ஐயப்பன் காப்பாத்துவார்னு மலைக்கு போய் அவங்ககிட்ட அடி வாங்கறத்துக்கு பக்தர்கள் என்ன இளிச்ச வாயர்களா.
ஆண்டவனே பக்தர்களை நம்பித்தான் இருக்கான்.பக்தர்களை எப்படி காப்பாத்துவான்
ஆகா! எம்பெருமான் முருகனின் படம் அற்புதமாயிருக்கிறது, நன்றி.