பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!
தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் இந்திய தேசியத்தை எதிர்ப்பதை விட திராவிடத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே ஏன்?
–ரவிச்சந்திரன், வெண்ணிறைபந்தல்.
தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களில் பலர் காங்கிரஸ் மனோபாவம் நிறைந்தவர்களாகவும்; காந்தி, காமராஜ், ராஜாஜி, கருப்பையா மூப்பனார் போன்று இந்திய தேசியத்திற்காகவே வாழ்ந்த தலைவர்களை தங்கள் வழி காட்டிகளாக கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த காங்கிரஸ் மனோபாவம் கொண்டவர்கள் காங்கிரஸ்காரர்களைவிட ஆபத்தானவர்கள்.
இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்களில் பலர், பார்ப்பனிய ஆதரவு, சுயஜாதி வெறி, தலித் விரோதம், இந்திய தேசியம் பேசிய ஜாதித் தலைவர்களை முன்னிறுத்துவது, பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களை புறக்கணிப்பது, திராவிட இயக்க எதிர்ப்பு, இட ஒதுக்கிடு எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு, பால்தாக்ரே, மோடி, வேதாந்தி போன்ற இந்து மதவெறியர்களை ஆதரிப்பது இதுதான் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் பேரில் முன்னிலைப்படுத்துகிற அரசியல்.
அதனால்தான், இன்று தமிழ்த் தேசியவாதிகளின் மத்தியில், ஜாதி ஒழிப்பு குறித்தும், பெரியார், அம்பேத்கர் குறித்தும் பேசுவதே தமிழர்களை பிரிப்பதற்கான சதி என்று அடையாளப்படுத்தப்படுகிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பலருக்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர; இந்து மதத்தையும், ஜாதியையும் எதிர்க்கும் பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பிடிப்பதில்லை என்பதும் தமிழ்த் தேசியவாதிகளின் இந்த மனோபாவத்துக்கு ஒரு சிறப்புக் காரணம்.
மறந்தும்; இந்துமதம், பார்ப்பனர்கள் குறித்து எப்போதும் வாய் திறக்காத ஒரே திராவிட இயக்கத் தலைவர் வைகோதான். வேதாந்தி, சேது பாலம் பிரச்சினை வந்தபோதும்கூட அவர் இந்து மதத்திற்கு எதிராக வாய் திறந்ததே இல்லை. பா.ஜ.க போன்ற மதவாத கட்சிகளோடு கூட்டு வைப்பதும், வாஜ்பாய் போன்றவர்களோடு நெருக்கமாக இருப்பதிலும் பெருமை கொள்பவர்தான் இந்த வைகோ. ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற காரணத்திற்காகவும் திராவிட இயக்கத்தின் கைதேர்ந்த சந்தர்ப்பவாதியான, வைகோவை மட்டும் ஆதரிக்கிறார்கள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.
அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் செல்வாக்குப் பெற்றவர் வைகோ. அவர் ‘விசா’ கொடுத்தால், வெளி நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களிடம் இருந்து சிறப்பு அழைப்பு கிடைக்கும். உலகம் முழுக்க இன்ப சுற்றுலா சென்று வரலாம் என்ற ஆர்வத்தில்தான் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் வைகோவை ஆதரிக்கிறார்கள்.
அதுபோக, முத்துராமலிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று ஒவ்வொரு ஆண்டும் அவரை வானுயுரப் புகழ்ந்து வீர முழக்கம் செய்கிற ஒரே தலைவர் வைகோதான். அவரை ஆதரிக்கிற முற்போக்காளர்கள் அதை ஒரு குற்றமாக கருதுவதே இல்லை.
தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் இந்திய தேசியத்தை சரியாக எதிர்த்தால், இந்திய அரசியல் சட்டத்தை எதிர்க்க வேண்டும். இந்தியா என்கிற ஒரு நாடே தேவையில்லை, என்பதோடு மிக குறிப்பாக தனித் தமிழ்நாடு கோரிக்கையைதான் மாற்றாக, தீவிரமாக முன்மொழிய வேண்டும்.
ஆனால், இவைகளை செய்தால், காலத்துக்கும் உள்ளபோய் களி திங்க வேண்டியதுதான்.
அதனால்தான் தமிழ் உணர்வு என்பதை ஈழ ஆதரவோடு நிறுத்திக் கொண்டு. இந்திய தேசிய எதிர்ப்புக்கு பதில், திராவிட இயக்க அல்லது பெரியார் எதிர்ப்பாக ‘வின்னர்’ பட வடிவேலுபோல் சீறுகிறார்கள்.
ஒரு தலைவருக்கு ஜாதிய பின்னணி இருந்தால் அவரை விமர்சிக்க பயப்படுவார்கள். அதுபோலவே, யாரிடம் ஜனநாயகத் தன்மை இருக்கிறதோ அந்தத் தலைவர்களைத் தான் விமர்சிக்கவும் முடியும். அது பெரியாரிடம் ஏராளமாக இருக்கிறது. பெரியாரை அவதூறு செய்தால் எந்த ஜாதிக்காரனும் அருவா தூக்கிட்டு வரமாட்டான் என்பது மட்டுமல்ல, மகிழ்ச்சியடைவான். குறிப்பிட்ட ஜாதிக்கார்களின் ஓட்டோ, ஆதரவோ, தனிப்பட்ட முறையிலான லாபமோ பாதிக்கப்படாது. மாறாக அதிகரிக்கும்.
ஜாதி செல்வாக்கு இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஆதரிக்கப்படுகிற ஓரே தமிழகத் தலைவர் தந்தை பெரியார் மட்டுமே. அதே காரணத்திற்காகவே, அவரை அவதூறும் செய்கிறார்கள். அவ்வளவு ஏன் இந்தக் காலத்திலேயே முற்போக்காளர்களிடம் ரவுடித் தனம் காட்டுகிற ஜாதிய உணர்வாளர்கள், அந்தக் காலத்தில் பெரியாரை தாக்கியும் இருக்கிறார்கள்.
பெரியார் எதிர்ப்பாளர்களின் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ள வரலாற்றின் இந்த சாட்சி உதவியாக இருக்கும்; 1956 பிப்ரவரி 20 ல் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ஒட்டி தமிழகத்திற்கு ஆதரவாக நடக்கவிருந்த பொதுவேலை நிறுத்தத்தில் திராவிடர் கழகம், திமுக, ஷெட்யூல் காஸ்ட் பெடரேஷன், தமிழரசுக் கழகம், கம்யுனிஸ்ட் கட்சி போன்றவை கலந்து கொள்வதாக அறிவித்தன.
‘பந்த நடத்தினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள்’ என்று போராட்டக் காரர்களை மிரட்டினார் முதல்வர் காமராஜர். இன்றுகூட ‘தேவிகுளம், பீர்மேடு பகுதி நம்மிடம் இருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்சினையே வராது’ என்கிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள். அதை கேரளாவிற்கு தாரை வார்த்ததில் காமராஜருக்கு அதிக பங்கு உண்டு.
ஆனால், தமிழ்த் தேசியவாதிகள் இன்றுவரை பெரியாரை, திராவிட இயக்கத்தை விமர்சிக்கிறார்களே தவிர, காமராஜரை ஒன்றும் சொல்வதில்லை. காரணம், காமராஜரை விமர்சித்தால் நாடார் ஜாதி உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும் அல்லது ஆதரவை இழக்க வேண்டிவரும். குறிப்பாக, நாடார்களால் நடதப்படுகிற பத்திரிகைகளால், புறக்கணிப்படுவோமோ என்கிற அச்சம் கூடுதலானது.
ஏனென்றால், காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க, கம்யுனிஸ்ட் கட்சிகள், தமிழ்த் தேசியம், ‘முற்போக்காளர்கள்’, பத்திரிகையாளர்கள், வியாபாரிகள் இப்படி எல்லாக் கட்சிகளிலும், துறைகளிலும் இருக்கிற நாடார் ஜாதி உணர்வாளர்களின் Icon காமராஜர்.
தீவிர நாடார் ஜாதி உணர்வாளர்கள் மத்தியில், ‘காமராஜரை தோற்கடித்தவர்கள்’ என்கிற காரணமும் திமுக எதிர்ப்பில் முக்கிய பங்காற்றுகிறது. அண்ணாதுரை மரணத்திற்கு பின், கலைஞரின் தலைமை காரணமாக முதலியார்கள், கலைஞரின் மேல் கொலைவெறியோடு இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நெடுஞ்செழியனைப்போல் அதிமுகவை ஆதரித்தார்கள். இன்றும் திராவிட இயக்க எதிர்ப்பு என்று பெயரில் கருணாநிதி எதிர்ப்பையும். ஜெயலலிதா ஆதரவையும் தங்களின் தமிழ் உணர்வாக வெளிப்படுத்துகிறார்கள்.
ஆக, திராவிட இயக்க எதிர்ப்பு என்ற பெயரில் பெரியாரையும் விமர்சிப்பவர்கள், பச்சையான ஜாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தான் பெரியாரை கடுமையாக திட்டிவிட்டு, மாற்றாக தன்ஜாதித் தலைவர்களை பரிந்துரைக்கிறார்கள்.
பெரியாரை தங்களின் அமைப்பின் சார்பாக அதிகாரப் பூர்வமாக பொதுக்கூட்டங்களில், பத்திரிகைகளில் பெரியார் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக இருந்தார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார் என்று அவரை சகட்டுமேனிக்கு அவதூறு செய்பவர்களுக்கு, ‘தில்’ இருந்தால், அவர்கள் சார்ந்திருக்கிற அமைப்பு ரீதியாக அவர்களின் பத்திரிக்கையிலோ அல்லது அதிகாரப் பூர்மாகவோ, தமிழ்த் தேசியத்திற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக இருந்த முத்துராமலிங்க தேவரை, ராமதாசை விமர்சிக்க சொல்லுங்களேன் பார்ப்போம். மாட்டார்கள்.
குறைந்தபட்சம் அவர்களை இவர்கள் ஆதரிக்காமல் இருந்தாலே, அதுவே பெரிய துணிச்சலான செயல்தான்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர்
பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழ்த் தேசியவாதிகளும்
‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்
தமிழ்த்தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்
‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’
என்ன செய்து கிழித்தார் பெரியார்?
காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்
பல நல்லது செய்தவர் என்பதாலேயே காமராஜரின் சறுக்கல்களுக்கு சப்பைக்கட்டு கட்டிவிட முடியாது. ”குளமாவது (தேவிகுளம்), மேடாவது (பீர்மேடு), எல்லாம் இந்தியாவுல தான் இருக்கு” என்று இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கையுடன் சொன்னார். இன்று இந்திய தேசியம் தமிழர் முதுகிலும் மூக்கிலும் வளைத்து வளைத்துக் குத்துகிறது. இது காமராசரைக் குற்றம் சொல்வதாகாது, அவர் மீதான விமர்சனம்.
//அண்ணாதுரை மரணத்திற்கு பின், கலைஞரின் தலைமை காரணமாக முதலியார்கள், கலைஞரின் மேல் கொலைவெறியோடு இருக்கிறார்கள்.//
தோழரே இன்றும் திமுகவிற்க்கு வடமாவட்டங்களில் பலமான ஆதரவு தருவது முதலியார் சாதியினர் தான். திமுக தலைமை பதவி தங்கள் சாதியினருக்கு கிடைக்காமல் கருணாநிதிக்கு கிடைத்ததே என்று கருணாநிதியின் மீது முதலியார்களுக்கு வருத்தம் உண்டே தவிர கொலைவெறி எதிர்ப்பு இருந்ததே இல்லை, இன்னமும் வடமாவட்டங்களில் சாதியளவில் திமுகவுக்கு முழு ஆதரவும் தருவது முதலியார்கள் தான்.
வடமாவட்டங்களில் முதலியார்/உடையார் கிராமங்களில் உதயசூரியன் சுவர்கள் முழுக்க இருப்பதும் வன்னிய கிராமங்களில் மாம்பழம் இருப்பதும் இந்த அரசியல் தான். வடமாவட்ட திமுகவின் முக்கிய பலமே முதலியார்/உடையார் சாதியே அதை புரிந்து தான் கருணாநிதியும் திமுகவில் எப்போதும் முதலியார்களுக்கு முன்னுரிமை அளித்துமே வந்துள்ளார்.
ஆறுச்சாமியின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது.
நீங்கள் உங்கள் மனம் போக்கில் சில குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள் அது தவறாக எனக்கு படுகிறது. இந்திய தேசியத்தின் தலைமகள் ஜெ வைகோவை இந்திய தேசிய தண்டனை உட்படுத்தியதை மறந்து விட்டிர்கள். மிக வெளிப்படையாக மன்மோகன்சிங் ப.சிதம்பரம் போன்றவர்களை கொச்சை மொழியில் சாடியதை வை கோ பேசிய மேடைப்பேச்சில் கேட்டிருக்கிறேன்.
இந்தியா உடையும் என்று வை.கோ சொன்னதை படித்திருக்கிறேன். ஆனால் நான் நிச்சியம் மதிமுக அல்ல. வை.கோ எனது ஆதர்சமும் அல்ல. மீண்டும் ஒரு விஷயம் நீங்கள் அனைத்து தமிழ்தேசியம் பேசுபவர்களையும் சாதி சித்தரித்து காட்டுவது நியாயமான கருத்தாக படவில்லை.
அனைத்து தமிழ்தேசியம் பேசுபவர்களையும் சாதி ஆதரவர்களாக சித்தரிப்பது நியாயமான கருத்தாக படவில்லை.
எந்த கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி கொண்டு நீங்கள் பிறரை விமர்சிக்கிறிர்களோ – அதே கருத்து சுதந்திரத்தால் பெரியாரும் விமர்சிக்கப்படுகிறார். பெரியாருக்காக எவரேனும் “அருவா” தூக்க வேண்டும் என்று விரும்பினால் – உங்களால் விமர்சிக்கப்படுபவர்களும் “அருவா” தூக்குவார்கள். சம்மதமா?
///தோழரே இன்றும் திமுகவிற்க்கு வடமாவட்டங்களில் பலமான ஆதரவு தருவது முதலியார் சாதியினர் தான். திமுக தலைமை பதவி தங்கள் சாதியினருக்கு கிடைக்காமல் கருணாநிதிக்கு கிடைத்ததே என்று கருணாநிதியின் மீது முதலியார்களுக்கு வருத்தம் உண்டே தவிர கொலைவெறி எதிர்ப்பு இருந்ததே இல்லை, இன்னமும் வடமாவட்டங்களில் சாதியளவில் திமுகவுக்கு முழு ஆதரவும் தருவது முதலியார்கள் தான். ///
குழலி நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அது திமுகவில்அன்பழகனைபோல் முக்கிய பொறுப்புகளில் இருக்கிற முதலியார்கள் மட்டும்தான். மீதி முதலியார்கள் பொதுவாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள்.
//புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பலருக்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர; இந்து மதத்தையும், ஜாதியையும் எதிர்க்கும் பெரியாரையோ, அண்ணல் அம்பேத்கரையோ பிடிப்பதில்லை என்பதும் தமிழ்த் தேசியவாதிகளின் இந்த மனோபாவத்துக்கு ஒரு சிறப்புக் காரணம்.//
correct ah sonninga…
தடுமாறாதீங்க தோழர். சாதி எதிர்ப்பு என்பது உங்களை பொன்றவர்க்கு மட்டுமே உரியது அல்ல.
சாதியை எதிர்தே தமிழ் தேசிய அரசியல் அமையும் போது மட்டுமே உன்மையான இந்திய வல்லான்மை எதிர்பாகவும் அமையும். இதை பெரும்பான்மை தமிழ் உணர்வாலர்கள் மட்டுமல்ல பெரியாரிய வாதிகளும் உணர்தால் நல்லது.தி.மு.க,ஆதி.மு.க இரண்டுமே பெரிய சாதி கட்சிகள் தான்! ஏரியாவுகு ஏத்த மாதிரி தான் தன் எம்.எல்.ஏ கல நிருத்துது. காமராசர் சாதி வெரியர் அல்ல ஆனா அவர் என்ன சாதியோ அந்த சாதி மக்கள் சாதியத்தோட அவரை பினைத்துவிட்டார்கள் அதே பொல ராமதாசு தலித்துகளுக்கு அடுத்த நிலையில உள்ள வன்னியர்கல பயன்படுத்தி இயங்கினாலூம் அரசியலில் பொதுவான திசைய நோக்கிதான் போராரு மைய அரச எதிர்த்து (வலிவுக்கு ஏர்ப்ப) குரல் கொடுக்கின்றார்.
ஆனா முத்துராமலிங்கர் சாதியத்துல ஊறியவர் மட்டும் அல்ல இந்திய தேசியத்திர்க்கு ஆதரவா இருந்தது மட்டும் அல்ல அந்த பிரிவு மக்கள முழுவதும் இந்திய தேசியர்திர்க்கு ஆதரவா சிந்தனையை திருப்பிவிட்டவர். அப்படிபட்டவரோட (செயலோட) ராமதாச நேர் நிருத்தும் போது உங்கள் நடு நிலைமை எப்படி பட்டது என்று புரியல!
உங்களுக்கு இது புரியும் என்றால்,
வை.கோ.வை கண்டிகாத இந்தியாரசு(தமிழ் தெசியம் சார்ந்து இயங்கும் போது),
ஒருவேளை ராமதாசோ , திருமாவளவனோ இந்திய அரசை எதித்து குறைந்த பட்சம் வைகோ அளவுக்கு அரசியல் பண்ணினால் அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்ற புரிதல் இருந்தால் மேல் சொன்ன பதிவில் குழப்பம் புரிபடும்!
(குழலிி சொல்வதும் ஏற்ப்பு உடையதே)
வே மதிமாறன் பதிவிர்க்கான்
மருமொழி.
http://mathimaran.wordpress.com/2011/12/26/483/
//‘பந்த நடத்தினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள்’ என்று போராட்டக் காரர்களை மிரட்டினார் முதல்வர் காமராஜர். இன்றுகூட ‘தேவிகுளம், பீர்மேடு பகுதி நம்மிடம் இருந்தால், முல்லைப் பெரியார் பிரச்சினையே வராது’ என்கிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள். அதை கேரளாவிற்கு தாரை வார்த்ததில் காமராஜருக்கு அதிக பங்கு உண்டு.//
999 ஆண்டு ஒப்பந்தம் உள்ளதால் அணைக்கும் நீருக்கும் பங்கம் வராது என்று விட்டுகொடுத்து இருக்கலாம். விட்டுக்கொடுத்து கன்னியாகுமரி, ஆழியாறு போன்றவற்றை பெற்றிருக்கலாம்.
அப்போது காமராஜருடன் இருந்த பெரியாரின் நிலைப்பாடு என்ன என்று விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
கழக ஆட்சியில் பட்டவர்த்தனமாக விட்டுக்கொடுத்த உரிமைகளை பேசியிருந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.
ஏன் மீன் பிடித்தல், படகு சவாரி, காவல்காக்கும் உரிமையினை விட்டுக்கொடுத்தார்கள்? விட்டுக்கொடுத்து எதை பெற்றார்கள்.
அதல்லாம் போகட்டும்.
“முல்லை பெரியாறு” எப்போது முல்லை “பெரியார்” ஆனது? என்ன எழுத்தாளரோ போங்கள். தெரியமல்தான் கேட்கிறேன் அணைகட்ட பெரியார் மண் சுமந்தாரா, கல் உடைத்தாரா?
திராவிட இயக்க பற்று, பெரியார் மீது அபிமானம் எல்லாம் இருக்கட்டும் மதிமாறன், எதற்கு ஒரு எல்லை வேண்டாமா?
“ர”கரம் “ற”கரம் தெரியாத
தகரம் தங்கத்தில் எழுதியதாம் !
kuzhali, rajanparthipan/// நீங்கள் இருவரும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று தேவர் ஜாதி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பேசியதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
//‘பந்த நடத்தினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள்’ என்று போராட்டக் காரர்களை மிரட்டினார் முதல்வர் காமராஜர். இன்றுகூட ‘தேவிகுளம், பீர்மேடு பகுதி நம்மிடம் இருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்சினையே வராது’ என்கிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள். அதை கேரளாவிற்கு தாரை வார்த்ததில் காமராஜருக்கு அதிக பங்கு உண்டு.//
கமெண்டை பிறசுறிக்காமல்
கறெக்சன் மட்டும் செய்யும்
கலை எல்லாம் பெறியாறு பாசரையில் சொல்லித்தந்ததோ !
விமர்சனத்தை எதிர்கொள்ள தைரியம் வேண்டுமோ இல்லையோ முதலில் “மதி” வேண்டும்.
தமிழனாம் திராவிடனாம் நீ யாராய் இருந்தாலும் எனக்கு நீ இனி “மதிமாரன்” தான்.
//தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று தேவர் ஜாதி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பேசியதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?//
I strongly oppose the stands on PCR act by Dr.Ramadoss, Dr.Sethuraman and etc BC leaders. I do not accept with drawing PCR act. one more info, I am a strong supporter of double vote for dalits. SC/ST Reserve constitutions are not enough to provide the enough power share for SC/ST people.
parppaniyathai ethirkkamal thamizh thesiyam ,eezha aadharavu pesubavargal purindhukollakollavendiya seydhi..kamarajar aatchiyil periyar nilai nilayay ezhuddhundal nandri..
அவ்வாரு ராமதாசு பேசி இருப்பின் அதை ஒருபோதும் ஏற்க முடியாது.
அதை எதிர்காமல் இருகவும் கூடாது! (முழு)தலித்திய சார்பாகவும் மற்ற உயர்சாதிய மனபாங்கில் இருந்து முழுவதுமாக விலகாமலும் எழுதும் எழுத்துகல் மையதில் இருந்து விலகியவையே!
periar, ambedhkar ivargalai vida inreiya arasiyallukku vaigo thevai. enenral apathilla arasiyal. mosamana, mikavum echarikkaiyudan irukka vendiathalavargal ivargal. echerikkai…echherikkai…. nalla seruppadi pathil thozhar.
தமிழ்த்தேசியம்:
தமிழர் வாழ்வியல் நடவடிக்கைகள்/ பிரச்சினைகள் ஆகியவற்றை- வீட்டிலும், வெளியிலும், கனவிலும் /நனவிலும் தமிழ் பேசும் தமிழர்களே, நமக்காக கையாள வேண்டும்.. இல்லாவிடில் பிற மாநிலத்தவர்களிடம் இருந்து முழுதாக ஒதுக்கப்படும்/ வெறுக்கப்படும் சூழ்நிலைக்கு ஆளாகுவோம். யாரும் நம்மை காப்பாத்த முடியாது. வீரம் வேறு- விவேகம் வேறு என்பதை உணரவும். தமிழர் முன்னேற்றம் விரும்புவோர் தயவு செய்து இவற்றை சிந்திக்கவும். வாழ்க தேசியம்.
// ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற காரணத்திற்காகவும் திராவிட இயக்கத்தின் கைதேர்ந்த சந்தர்ப்பவாதியான, வைகோவை மட்டும் ஆதரிக்கிறார்கள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள். //
மற்ற திராவிடத் தலைவர்களைப் போல் இல்லாமல் தமிழர் நலன் காக்க முன்னனியில் போராடிக்கொண்டிருக்கும் வைகோ திராவிட இயக்கப் பார்வையில் சந்தர்ப்பவாதிதான் !
சாதி வெறி பிடித்தவர்கள் யார் என்பது இக்கட்டுரையில் இருந்து தெள்ளத் தெளிவாய் விளங்குகிறது !
பெரியாரோ அம்பேத்காரோ இப்போது இருந்திருந்தால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க…
\\ஜாதி செல்வாக்கு இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஆதரிக்கப்படுகிற ஓரே தமிழகத் தலைவர் தந்தை பெரியார் மட்டுமே\\ good observation. Kamaraj is certainly a man with casteist mindset. Probably he may not be an extreme casteist. He contested in Nagercoil constituency only with the hope that he would win the election consolidating Nadar votes.
Anything to read about Thanthai Periyar radiates good feelings perhaps it is out of my inaction but to uphold Periyar and defend him in the social front is a necessary thing.
Pl c link: 37 to 52 which is self explanatory
http://www.vinavu.com/2011/12/01/mullai-periyar-video/#tab-comments
இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் சாதி வித்தியாசங்கள் இருப்பினும்- எல்லா சாதியினரும், மத குரு / அர்ச்சகர்கள் ஆகவும் ஆண்டவனை தொட்டு பூஜிக்கவும் / அபிஷேகம் செய்து அலங்கரிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்து மதத்தில் பிராமணர் தவிர பிறருக்கு அனுமதி மறக்கப்படுகிறது. பொறியியல் படித்தவன் பொறியாளர் ஆகலாம், மருத்துவம் படித்தவன் மருத்துவர் ஆகலாம்- ஆனால் அர்ச்சக மந்திரம் படித்தவன் அர்ச்சகராக பிராமண சாதியும் தேவை. இந்தக்கொடுமை உலகத்தில் எங்காவது உண்டா?
தமிழ்த்தேசியம்:
தெலுங்கருக்கு – நைனா, அம்மா; மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி; தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;
என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.
காமராஜர்,முத்துராமலிங்க தேவர்.பெரியார் இவர்கள் யாராக இருந்தாலும்,காலம் மாறும் போது,அவர்களின் சில கருத்துக்கள் இன்று ஒத்துவராத போது விமர்ச்னத்திற்கு உட்படுத்துவது தவறல்ல,அதனால் அவர்கள் மீது மதிப்பும் ,மரியாதையும் இல்லை என்பது அல்ல,சமூக நலன் கருதி,அவர்களின் சில கருத்துக்கள் இன்று ஒத்துவராத போது பகுத்தறிவுடன் அதை விமர்சித்து,புதிய கருத்துகளை பதிவு செய்வதே வளர்ச்சி,அதை தான் அந்த பெரும் தலைவர்களும் விரும்புவார்கள்,மாறாக அவர்களின் கருத்தை அப்படியே பின்பற்றவேண்டும்,விமர்சிக்க கூடாது என்றால் நாம் தேங்கிய குட்டையாக ஆகிவிடுவோம்.சாதி ரீதியாக இத்தகைய விமர்சனங்கள் ஏற்க மாட்டார்கள்,ஆனால் அவ்வாறு செய்வது மடமை என்பதே தெளிவான கருத்தாகும்,குறிப்பாக பெரியார்,அன்றே நான் சொல்கிறேன் என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டாம்,உனக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள் என்று தான் கூறியுள்ளார்,பகுத்தறிவு பிரச்சாரம் செய்த பெரியார்,அவ்வாறு தனனை விமர்சனத்திற்கு உடபடுத்துவதை நிச்சயம் விரும்புவார்,மேலும்,பெரியார் இன்று இருந்திருந்தால்,அவரே தான் சொன்ன கருத்துக்களை சிலவற்றை மாற்றியும் இருப்பார்,அதனால் தான் அவர் பெரியார் என்று போற்றப்படுகிறார்,நாம் பெரியாராக முயல்வோம்,விமர்சிக்கவே கூடாது என்று விதண்டாவாதம் செய்து சிறியோராக வேண்டாம்,
தமிழ்த் தேசியம் என்னும் பெயரில், தமிழினத்திற்காய் உழைத்த , உழைத்து வருகிற தொண்டர்கள் , கட்சிகள் , தலைவர்கள் [ தகுதியற்ற தலைவன் ] யாவரின் பணியையும் நாம் பாராட்டும் ஆதே வேளையில் , ” தலைவர்கள் ” என்போர்கள் இன்றையத் தலைமுறைகள் தன்மானத்தோடோ ! வாழ வைத்துச் சென்றது என்ன ? என்று இன்றைய இளையருக்குச் சொல்ல வேண்டும். ஆரம்ப காலத்தில் நல்லெண்ணத்துடன் தொண்டுசெய்ய வருகிறார்கள். பின்னர் காசுபணம் , பதவி சுகம் கண்டு கொள்ளை அடிக்க முற்பட்டுவிடுகின்றனர். இன்று தமிழனுக்காய் , திராவிட இனத்திற்காய் உழைக்கிறோம் என்று சொல்லும் பேர்வழிகளின் சொத்துகளைச் சொல்லி முடியாது . நிறக. தமிழ்த் தேசியம் என்பது , கண்டவனை எல்லாம் விமர்சிப்பதல்ல. இது வெட்டித்தனமான வேலை. [ கடந்தக் கால இழப்புகளைக் கருத்தில் கொண்டு ] , இன்றைய இளையத் தலைமுறை , ” தமிழகத்தை , தமிழினத்தை ” நிமரச்செய்ய வேண்டியதன் நோக்கமே ! தமிழ்த் தேசியத்தின் முன்னெடுப்பாகும் . தலைவர்கள் என்றுநாம் போற்றுகின்ற , முன்னோடிகளின் போராட்ட வடிவங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதிலிருந்து கிடைக்கும் பாடங்களையும் கவனத்தில் கொண்டு முன்னேறுவது. நாளைய தலைமுறை , தலைவர்களால் கைவிடப்பட்ட தமிழ்மக்கள் உரிமைகளை மீட்டெடுப்பதே ! தமிழ்த் தேசியத்தின் இலக்காகும் . நன்றி.
Good periyar is always great.he is the great who has even opposed god for depprressed community.no leader in the world opposed god if it spoil the humanity.Periyar is great he is apart from caste,language,nation,religion and god.
kadavulaye yedurtha maaveran periyar.
நீட்ட நாட்களுக்கு பிறகு இந்த கட்டுரையை படித்தேன், இது குறித்து பிறகு எழுதுகிறேன்