தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் பாரதிராஜா போன்றவர்கள் கேரளாவிற்கு எதிராக மிக சிறப்பாக பேசியருக்கிறார்களே?

-க. செல்வம்.

எழுத்தாளனும், பேச்சாளனும் தன் கருத்துக்களை பேச்சிலும், எழுத்திலும் பகிர்ந்து கொள்வதுபோலவே, ஒரு சினிமாக்காரனும் செய்வது மோசடியானது.

தன் ஜாதி அடையாளத்தோடு படம் எடுத்துவிட்டு, மேடையில் ‘தமிழன்’ என்று சவடால் விடுவது கடைந்தெடுத்த ………..!

இவர்கள் மேடையில் பேசும்போது தமிழ் மக்கள் விரோதமாக, தங்களின் ஜாதிவெறியோடுகூட பேசட்டும். ஆனால், தங்கள் சினிமாக்களில் குறைந்த பட்சமாவது ‘தமிழன்’ என்ற பொதுஅடையாளத்தோடாவது படம் எடுக்கட்டும்.

ஏனென்றால் மேடை பேச்சு சில எல்லைகளுக்குள்தான். ஆனால் இவர்கள் சினிமா விரிந்த எல்லையை கொண்டது.

ஆகவே, மேடையில் ஒன்றும், சினிமாவில் வேறொன்றுமாக இருக்கிற, இந்த டபுள் ஆக்சன் இயக்குநர்கள், தங்கள் ‘தமிழ் உணர்வை’ சினிமாக்களில் செய்ய முன்வரட்டும்.

‘பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அது உடைந்து மக்கள் பலியாகுகிறார்கள்’ என்று 999 என்ற பெயரில் சினிமா எடுத்து உலகம் முழுக்க பரப்பி இருக்கிறார்கள் மலையாள சினிமாக்காரர்கள்.

இவ்வளவு வாய் கிழிக்கும் இந்த டபுள் ஆக்சன் இயக்குநர்கள், ‘பெரியாறு அணை பலமாகத்தான் இருக்கிறது. அதை இடித்தால் 7 மாவட்ட தமிழக மக்கள் பட்டினியால் சாவார்கள்’ என்று ஒரு படம் எடுப்பார்களா? அதுதான் இவர்கள் செய்ய வேண்டிய உண்மையான போராட்டம்.

இல்லை என்றால்; செல்போன்ல மிஸ்டு கால் கொடுக்குறது, சூட்டிங்கிற்கு லேட்டா போறது, பட்ஜெட்டை தாண்டி படம் எடுக்கிறது, சொன்ன தேதியில படத்த முடிக்காம இழுத்தடிக்கிறது, நடிகைகளோடு கிசு, கிசுக்கப்படுகிறது இவைகளைகூட தமிழன ஆதரவு போராட்டமாக அறிவித்து ‘நோண்பு’ கொண்டாடிவிட்டு போய்விடுவார்கள்.

தொடர்புடையவை:

தங்கர்பச்சான், கமல், வைரமுத்து: 7ஆம் அறிவு தமிழரின் பெருமை

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

15 thoughts on “தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!

  1. டபுள் ஆக்சன் இயக்குநர்கள் – WOW.. new term

    இவர்கள் செய்ய வேண்டிய உண்மையான போராட்டம் – அருமை

  2. ஒரு நாளும் அப்படி படம் எடுத்து தமிழன் என்று காட்டிக்கொள்ள அவர்கள் ஒன்னும் உண்மையான தமிழர்கள் இல்லையே,

  3. நீங்க நல்லா கவனிச்சீங்களா.. இன்னிக்கி மார்கெட்டுல விலைபோற எவனும் அங்க காணல… முக்கியமா செல்வராகவன்,ஷங்கர்,லிங்குசாமி.. அடுத்து அரசியல்ல ஆச்சும் பொழப்ப பாக்கலாமா.. னு யோசிச்சு வந்த கூட்டம் தான். குறைந்தபட்சம் உதவிஇயக்குநர்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்கட்டும். மற்ற சமுக அக்கறைகள அப்புறம் பேசலாம். ஃபிராடு பசங்க…

  4. ethou kalaithurai sarba support kedaikuthenu santhosa pattupoma atha vittutu kutham solrathu nalla illa.uppadi othuma illama than tamila ellathulayum adi vangarathu.ondru pattal undu valzvu,tamil desiyam kappom.

  5. ‘பெரியாறு அணை பலமாகத்தான் இருக்கிறது. அதை இடித்தால் 7 மாவட்ட தமிழக மக்கள் பட்டினியால் சாவார்கள்’ என்று ஒரு படம் எடுப்பார்களா? Naanum Poraatthil Kalanthukonden,ethai naan palaperidam sonnen avarkal nammidaiye otrumai illai, producer illai, pala pirachanaikal irukkirathu,satthiyam illai, enkiraargal.

  6. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர்
    இனி இருக்கக்கூடாது.- பாரதிராஜா….

    திராவிட அரசியல் வாதி வைகோ அவர்களை யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள்??? எங்களுக்கென்று தனி அப்பா, அம்மா வேண்டுமென்று தானே நாங்கள் கேட்கிறோம்?
    இதில் என்ன தவறு கண்டீர்கள்? தர்மம் ஒரு நாள் வெல்லும். வாழ்க வையகம்.

  7. முல்லைப் பெரியாறு: டிசம்பர் 30-ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்:”தமிழர்களுக்கு என்று தனி அமைப்புகள், தமிழ்த் திரைப்பட துறையில் மட்டும் இல்லை”: பாரதிராஜா

    தெலுங்கருக்கு – நைனா, அம்மா;
    மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
    கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி;
    தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;

    என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம்
    என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.

    கேரள எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இருக்கட்டும். கச்ச தீவை இழந்தது போதும்.தமிழர் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது சோனியா அரசு மட்டும் தானா???? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே/ வாழும் நாட்டிலே???
    சூடுபட்டும் சொரணை வரவில்லையா தமிழனுக்கு

  8. நம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாதிப்பு தன் வீட்டிற்குள் வந்த பிறகுதான் போராட வருகிறான் வீதியிலிறங்கி. மலையாளியால் தன்னுடைய எதிர்காலமே போகும் என்ற நிலையில்தானே அந்தப் பகுதி மக்கள் வீதிக்கு வந்தார்கள்? இந்த மலையாளி ஆதிக்க எதிர்ப்பு உணர்வு ஏன் குமரி மாவட்ட மரமண்டைகளிடம் இல்லை? குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள தேங்காப் பட்டினத்திற்கு அடுத்த ஊரிலிருந்து ஏறக்குறைய கொல்லங்கோடு வரைக்கும் உள்ள கடற்கரை ஊர்களின் மீனவ தமிழர்கள், தமிழ் நாட்டில் இருந்தாலும், தாய் மொழியில் தமிழனாக இருந்தாலும் இன்னும் மலையாளிக்கு அடிமை சேவகம் தானே செய்கிறார்கள்! அதாவது திருவனந்த புரம் மறைமாவட்டக் கட்டுப் பாட்டில்தான் இருக்கிறார்கள். மலையாளிதான் திருவனந்தபுரத்திலிருந்து வந்து இவர்களது மத(ட)ச் சடங்குகளையும் வழிபாடுகளையும் நடத்துகிறான், வரி வசூலெல்லாம் திருவனந்தபுரத்துக்கு கொடுக்கும் இவனுடைய தாய் மொழியான தமிழ் மொழியில் நடத்துகிறானா? இல்லை. அவனுடைய தாய் மொழியான மலையாளத்திலல்லவா நடத்துகிறான். இந்த மானங்கெட்ட தனத்தை உணராமல், மரமண்டைகளான கிறித்தவ தமிழன்கள் மலையாளிக்கு அடிபணிந்து கால் கழுவி விடுகிறார்கள் என்றால், இவர்களை விட சுரணக் கெட்ட தமிழர்கள் வேறு உண்டா? முல்லை பெரியாறு பிரச்சினை இந்த அளவிற்கு வந்த பிறகும் தமிழனிடம், தமிழ் நாட்டில் மலையாளத்திலேயே இன்னமும் மலையாளி வழிபாடு நடத்துகிறானென்றால், இந்த குமரி மாவட்ட தமிழர்கள் சோற்றைதான் தின்கிறார்களா அல்லது வேறு எதையாவது தின்கிறார்களா என்பது தெரியவில்லை.
    மலையாளி ஒரு மக்கள் விரோதி, அவன் எங்கு இருந்தாலும் அவனுடைய தன்நலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான், வெளிநாட்டில் அவன் மேல் நிலையில் வாழ்வதெல்லாம் பெரும்பாலும் தன் மனைவியை தன்னுடைய முதலாளிக்கு கூட்டிக் கொடுத்தே அந்தப் பதவிக்கு வருகிறான். இதை நான் உணர்ச்சி மேலிடக் கூறவில்லை. என்னுடைய ஒன்பது ஆண்டு வெளிநாட்டு அனுபவத்தில், நான் நேரடியாகக் கண்ட உண்மை! (இதை என்னால் எளிதிலே நிரூபிக்க முடியும்) அப்படிப்பட்ட மானங்கெட்ட மலையாளிக்கு இந்த குமரி மாவட்டத் தமிழர்கள் அடிமையாக இருந்து, அவனின் தாய்மொழியான மலையாளத்தில் அவன் வழிபாடு நடத்த, இந்த ஆட்டு மந்தைகள் பொறுப்பாக அவனுக்கு மலையாளத்தில் பதில் சொல்லி விட்டு, வீட்டில் வந்து தமிழில் பேசிக் கொள்கிறார்கள், இப்படிப் பட்ட படு கேவலமான நிலையிலல்லவா இன்றைய உணர்வற்ற தமிழன் உள்ளான். இப்படி உணர்வற்றுக் கிடக்கும் இவனின் வீட்டிற்கு பிரச்சினை வந்து எப்போது கதவைத் தட்டுகிறதோ அப்போதுதான் இவனுக்கு தமிழன் என்ற உணர்வு வரும். அதுவரைக்கும் நமது புலம்பலுக்கும் ஆத்திரத்திற்கும் முடிவு வரப் போவதில்லை. காசிமேடு மன்னாரு.

  9. ajith entra malaiyalthan patri vaye thirakkatha pura(ttu)tchi thamizhan sathiyaraj enge?

  10. வேடிக்கை மட்டும் பார்க்கும் வேலையற்றவன் says:

    தங்கரும், பாரதியும் முல்லை பெரியார் அணை சம்பந்தப்பட்ட ஒரு படமெடுக்க வந்தால் கூட படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் வேண்டுமே ….. தங்கர் ஒரு விழாவில் இப்படி ஆதங்கபட்டுகொண்டர் தமிழுக்காவும் தமிழனுக்ககவும் படம் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் ஒரு தயாரிப்பாளர் கூட இல்லை என்றார் .

  11. தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா??? ஹி.. ஹி..

    “தன்மதிப்பு தெரியாமல் வாழ்கிறான் தமிழன்: குமரி அனந்தன்”

    கருத்துக்கள்:” இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே …..இந்தி கத்துக்காம ,ஹைதராபாத், மும்பை பக்கம் போனா ரணகளமாயிடுது …. By கபிலன்”

    “தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா??? ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம்??? மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் ???-By கடலூர் சித்தன்.ஆர்”

    Pl c link:
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=550825&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%A9%

  12. “அரசியலுக்கு அடிபோடுகிறீர்களா அரைத் தமிழரே!!!”

    என் வாழ்க்கையிலும் போராட்டங்களைச் சந்தித்துள்ளேன்: நடிகர் விஜய் உருக்கம்:

    ஹி..ஹி..ஹி.. ரஜினியே முழம் போட்டு பார்த்திட்டாரு- கொஞ்சம் பொறுங்க காலம் கனியும் வரை!- V.V. தமிழன் மீண்டும் ஏமாறாமலா போவான்???

    Pl c link:

    http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading