அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவருவதற்காக பலர் முயற்சிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரின் டி சர்ட் கொண்டு வந்த நாங்களும் அண்ணலின் திரைப்படத்தை வெளிகொண்டு வர  முயற்சிக்கிறோம். அந்தப் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர்கள் வேந்தனும், லெமூரியனும். டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளிகொண்டுவரும் எங்களின் முயற்சியை இங்கு விவரித்து எழுதுகிறார் தோழர் லெமூரியன்.

***

07.03.2010 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு ஓரத்தில் காலை 11மணியளவில் தோழர் மதிமாறன் முயற்சியில் ஒரு சிறிய கலந்துரையாடல். கலந்துகொண்டவர்கள், தோழர்கள் சசி, வேந்தன், ஈழம் வெல்லும், மகிழ்நன், மற்றும் நான் (லெமூரியன்)

தமிழகத்தில் வெளியிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை? அதற்கு நாம் என்ன செய்வது? என்று விவாதித்தோம்.

பல முறைகளில் முயற்சிகள் செய்வது என்று முடிவெடுத்தோம். அதில் முதன்மையான முயற்சியாக தேசிய திரைப்பட துறையிடம் (N.F.D.C) அம்பேத்கர் திரைப்படம் குறித்த விவரங்களை கேட்பது, தமிழகத்தில் வெளியிடப்படாமல் இருப்பதற்கான காரணங்களை கேட்டு, அதை ஒரு புகாராக எழுதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், 31-03-2010 அன்று  தோழர்கள் வே. மதிமாறன் சசி, வேந்தன், சுவன், நிதி, அசோக், விவேக் மற்றும் நான்(லெமுரியன்) உட்பட நண்பர்கள் எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக (N.F.D.C) மேலாளரை சந்தித்தோம்.

ஆங்கிலத்தில் ROOTING என்ற வார்த்தை உண்டு. ‘நம்மால் முடியும் ஆனால் அதை செய்யக்கூடாது’ என்று தீர்மானித்துவிட்டால் அதை தாமதப்படுத்த இந்த ROOTING முறை சிறந்த வழியாகும். அதை திரைப்பட வளர்ச்சிகழக மேலாளர் செவ்வனே செய்ய முயற்ச்சித்தார்.

ஆனால் தோழர்கள் விடுவதாய் இல்லை. ‘விளக்கம்தான் பெற வந்தோம்’ என்ற தொனியில் அடுக்கடுக்காய் எடுத்து வைத்த கேள்விகளினால் மேலாளருக்கு மேல்மூச்சி வாங்கியதை உணர முடிந்தது.

முதலில் உங்கள் புகாரை மேலிடத்திற்கு அனுப்புகிறேன் அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும் என்று அம்பேத்கர் படத்தை பற்றி எதுவுமே தெரியாதவர்போல் பேச ஆரம்பித்தவர், தோழர்களின் வலிமையான கேள்விக்குப்பின், அந்தப் படத்தை ஐந்து முறை நான் பார்த்திருக்கிறேன் சிறந்த படம் என்று அசடு வழிந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

அம்பேத்கர் படம் பற்றிய விவரங்களை மும்பை தலைமை அலுவலகத்திடம் இருந்துதான் பெற முடியும் என்றார். மேலும் இதன் விநியோக உரிமையை சென்னையில்தான் யாரோ!  வைத்திருப்பதாக சந்தேகமாக சொல்வது போல் சொன்னார்.

அவர் யாரோ அல்ல. அவர் பெயர் விஷ்வா அவரிடம் பேசினோம். பணம் இருந்தால் இந்தப்படத்தை வெளியிட்டுவிடலாம். பணம் மட்டுமே இந்த படம் வெளியாக தடையாய் உள்ளது என்றார் விஷ்வா.” என்று நாங்கள் சொன்னதை சின்ன முகமாற்றத்தோடு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் N.F.D.C மேலாளர்.

சரி, பணம்தான் பிரச்சினை என்றால், விஷ்வா சுந்தர் என்ற தனிநபரை நம்பி எப்படி பண உதவி செய்யமுடியும்? எவ்வளவு தொகை தேவைப்படும்? அதற்கு என்ன வரையறை? அவர் பெரும் லாப நோக்கமற்றுதான் அந்தத் தொகையை சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டோம்.

சற்றும் எதிர்பாராத இந்த விவரங்களால் தடுமாறிய மேலாளர் பின்பு சுதாரித்து உதிர்த்த வார்த்தை VISHVAA SUNDAR (முழுப்பெயர் தெரிந்திருக்கிறது) IS A GOOD DISTRIBUTOR, HE RELEASED MANY FILMS” என்று சப்பை கட்டு கட்டினார்.

அவர் ஒரு வியாபார ரீதியிலான பெரிய விநியோகஸ்தர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் என்பதை நாங்களும் அறிவோம். இந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாக முன்பே தெரிந்து இருக்கும். அப்படி இருந்தும் அம்பேத்கர் படத்தை N.F.D.C யிடம் இருந்து அவர் வாங்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு வேளை அவர் தீவிரமான அம்பேத்கரிஸ்டா என்றால், அதுவும் இல்லை. அவர் ஒரு ANTI AMBEDKARIST. அதாவது அவர் ஒரு தீவிரமான இந்துமத உணர்வாளர். (பார்ப்பனர்)

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வேறு யாரும் வாங்கி விடக்கூடாது. வேறு யாரும் வாங்கினால் இதை வெளியிட்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இதை அவர் வாங்கியிருப்பாரோ என்று சந்தேகிக்கிறோம்.

இதுபோன்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக, விஷ்வா சுந்தர் இதுவரை அம்பேத்கர் படம் சம்பந்தமான எந்த ஒரு சிறிய விளம்பரமோ ஏன் ஒரு துண்டறிக்கையோ, சின்ன பத்திரிகைச் செய்தியோ  கூட வெளியிடவில்லை.

எனவே இதில் பணம் மட்டும் பிரச்சினை அல்ல எதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறோம். இதுவரை படத்தை வெளியிடாததற்கான காரணத்தை, அதைப் பற்றி விளம்பர படுத்தாதற்கான காரணத்தை நீங்கள் (N.F.D.C) விஷ்வா சுந்தரிடம் கேட்டிர்களா? அதற்கு அவர் என்ன விளக்கம் கொடுத்தார்?” இப்படி எங்கள் கேள்விகளை N.F.D.C மேலாளர் முன் அடுக்கினோம்.

மேலாளர் “Good Question” என்று சொல்லிவிட்டு அமைதிகாத்தார். பிறகு

Mr. RAMAKRISHNAN

MANAGER OF DOMESTIC DISTRIBUTION.

என்பவரின் தொடர்பு எண்ணை அளித்து, இவரை தொடர்புகொண்டால் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும் என்றார்.

மேலும் நமது தொலைபேசி எண்ணையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். நாம் அளித்த புகாரையும் மேலிடம் அனுப்பி விவரம் பெற ஆவன செய்வதாக ஒப்புக்கொண்டார். மனு அளித்ததற்கான ஒப்புதலை பெற்றுக்கொண்டு அவரிடம் இருந்து விடைபெற்றோம்.

சசி, அசோக்,லெமூரியன், வேந்தன், விவேக், கலாநிதி, சுவன், மதிமாறன் (N.F.D.C அலுவலகத்திற்கு முன்)

வெளியில் வரும்போது அவரது சட்டையையும்  மீறி துரித்து தெரிந்த  மேலாளரின் பூணூல் எங்களுக்கு ஏதோ உறுத்தலை தந்தது.

மேலும் இதற்கான முயற்சிகளை வேகப்படுத்திகொண்டிருக்கிறோம் விரைவில் வெற்றியும் பெறுவோம்..

நன்றி.

தோழமையுடன்,

பா.லெமூரியன்

தொடர்புக்கு: 9940475503

(முன்னதாக கரூர் வழக்கறிஞர் ராசேந்திரனின் எண்ணை தவறுதலாக கொடுத்துவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். அதை சரி செய்து லெமூரியனின் சரியான எண்ணை தந்திருக்கிறேன்.)

தொடர்புடைய கட்டுரைகள்:

‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
*
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
*
இந்து என்றால் ஜாதி வெறியனா?

38 thoughts on “அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி

  1. பயந்து சாவுறானுங்க பூணூல் பொறுக்கிகள் . முற்போக்கு பேசுகின்ற எந்த பார்பன கழிசடையும் இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டனுங்க அம்பேத்கர் என்ற பெயரை கேட்டாலே பேதியாகுது போல .

  2. தோழர்கலே ,First of all ,my salute to you all .

    அம்பேத்கர் படம் வெளிவர -பணம் ஒரு தடை இல்லை !!! we can raise the fund very easily.

    ஒருவர் விநியோக உரிமையை அரசிடம் இருந்து பெற்று,-படத்தை ஒரு குறிப்பிட காலத்துக்குள் வெளியிடா விட்டால்,அவரது விநியோக உரிமையை cancel செய்ய முடியும்

    என்னால் எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் .

    த சேகர்

    rousesekar@gmail.com

    velachery

  3. மிக நல்ல முயற்சி.

    சீக்கிறம் வெளியிட வாழ்த்துக்கள்.

  4. இவர்கள் அம்பெட்கார் படத்தை வெலியவரக்கூடாதுன்னு மட்டும் எதிர்பார்கல அதர்க்கும் மேல சிந்திப்பாங்க.

  5. பெரியார் படத்தை வெளியிட்ட ஆதிக்க அரசியல்வாதிகள் கருணா நிதியும் மா.மி கி.வீரமணியும், ஏன் திருமாவளவன் கூட இதெற்கெல்லாம் உதவ மாட்டார்களா?

    மக்களுடைய ஓட்டு மட்டுமே இவர்களுக்கு வேண்டும்! அதானே!

    என்ன கொடுமை ஐயா இது!?

  6. Thanks for the post.

    I once tried with an intention of getting the distribution rights for Tamil Nadu.. but could not. (thinking I can afford )

    Actually I wanted to watch the movie, it was not available….but then my research on the web led to some email address (not sure if it was the distributor or someone else) where I sent an email asking for the detail.. for which, I got a reply asking for the interested area of distribution but then I never got any response…

    I believe this is a good effort…. now that we know, who holds it. We should contact that person, find out how much money we need. If we sense that the person’s intention is bad and he really wants to hide the film from the eyes of others.. we should take legal actions citing his misbehavior and intention are wrong and immoral and so it’s illegal for him to hold the rights. We should plan to take help from politicians, govt..

    I am interested very much in this issue and I will join the effort.

  7. Dear வேந்தன், லெமூரியன்

    please arrange one get together for discussion regarding this issue.Invite all the well wishers of releasing this film. probably Saturday/Sunday-evening

    -tsekar

  8. மீனகம் வலைதலத்தில் அம்பேத்கர் படம் பார்க்கலாம்

    thank you மீனகம் !!! thank you very much

    http://meenakam.com/?p=13126

    -tsekar

  9. Dr. B.R. AMBEDKAR is one of the Great leaders of Indian Nation.

    He is one of the Important Arcitects of Modern India.

    He has drafted the worlds most elaborate constitution.

    Each and every Indian is indebted to him.

    We look forward that the movie can be viewd in TN soon.

    I object any hurdle provided for the same.

  10. நண்பர்களே, ஏதோ தவறான ஆதரங்களுடன் கருத்துகள் வைக்கப் பட்டிருக்கின்றன. அப்படம் 2000லேயே ரிலீஸ் ஆகி விட்டது. நானும் பார்த்திருக்கிறேன். அதற்கெனத் தனியாக ஒரு இணைத்தளம் இருக்கிறது. http://www.ambedkarfilm.com/default.html
    டிவிடிக்கள் விற்பனைக்கு உள்ளன. வாங்கிக் கொள்ளலாம்.

  11. தமிழில் இந்த திரைப்படம் எந்த திரை அரங்கிலும் வெளியிடப்படவில்லை, மராட்டியம், ஆங்கிலம் உட்பட ஓர் இரண்டு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த திரை அரங்கிலும் வெளியிடப்படவில்ல… தோழர் எங்கே பார்த்தார் என்று தெரியவில்லை… மேலும். DVD இல் YOUTUBE இல் கிடைக்கிறது என்பது உண்பதற்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை என்ற குடிமக்களின் கதறலுக்கு…. ரொட்டி கிடைக்கவில்லை என்றால் என்ன கேக் சாப்பிட சொல்லுங்கள் என்று ஒரு மகாராணி உரைத்தாலம்… திரைப்படமாய் எடுக்கப்பட்டு தமிழகத்தில் திரையிடப்படாமல் இருப்பதன் நோக்கம் என்பதே போராட்டங்களை முன்னோடுக்கும் அனைத்து தோழர்களின் கேள்வியாகும்

    சூனியர் விகடன் இதை பற்றிய கட்டுரை வெளியிட்டுள்ளது… பெரியார் திராவிட கழகங்கள் உட்பட சில அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தி உள்ளன…

  12. Vannakkam Mathimaran & Thozharkal Anaivarukkum

    Ellorum Marantha & sinthanai ellamal eruntha neratthil ,eppadiyana muyarzhi migavum arithana & avasiyamana paniyai seithukondu erukkireergal.ungal muyarzhikku enathu paaraattukal,ennaal mudinthu uzhaippum uthaviyum vazhanga kadamaipattullen.

    Nentri kalantha anbudan P.Selvaraj,Neelangarai,Chennai-600 041.

  13. \\\நண்பர்களே, ஏதோ தவறான ஆதரங்களுடன் கருத்துகள் வைக்கப் பட்டிருக்கின்றன. அப்படம் 2000லேயே ரிலீஸ் ஆகி விட்டது. நானும் பார்த்திருக்கிறேன். அதற்கெனத் தனியாக ஒரு இணைத்தளம் இருக்கிறது. http://www.ambedkarfilm.com/default.html
    டிவிடிக்கள் விற்பனைக்கு உள்ளன. வாங்கிக் கொள்ளலாம்.\\\\

    வெகுஜன மக்களின் பார்வையில் இருந்து இந்த படம் மறைக்கப்பட்டுள்ளது… தோழர் எதோ DVD வியாபாரம் செய்கிறார்…. தோழர்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்

  14. vedaprakash (12:59:17) :

    நண்பர்களே, ஏதோ தவறான ஆதரங்களுடன் கருத்துகள் வைக்கப் பட்டிருக்கின்றன. அப்படம் 2000லேயே ரிலீஸ் ஆகி விட்டது. நானும் பார்த்திருக்கிறேன். அதற்கெனத் தனியாக ஒரு இணைத்தளம் இருக்கிறது////

    வேதம் என்றாலே பொய்தானா? விசயம் தமிழ்நாட்டில் படம் ஆங்கலத்திலோயோ தமிழிலியோ வெளியாகவில்லை என்பதுதான்.

    ///மேலும். DVD இல் YOUTUBE இல் கிடைக்கிறது என்பது உண்பதற்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை என்ற குடிமக்களின் கதறலுக்கு…. ரொட்டி கிடைக்கவில்லை என்றால் என்ன கேக் சாப்பிட சொல்லுங்கள் என்று ஒரு மகாராணி உரைத்தாலம்… திரைப்படமாய் எடுக்கப்பட்டு தமிழகத்தில் திரையிடப்படாமல் இருப்பதன் நோக்கம் என்பதே போராட்டங்களை முன்னோடுக்கும் அனைத்து தோழர்களின் கேள்வியாகும்///
    என்று THEEKKATHIR நன்றாக அவாளுக்கு உரைப்பதுமாதிரி சொல்லியிருக்கிறார். அதற்கு பிறகும் தான் சொன்ன தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிற பண்பு இல்லை பாருங்கள். அதுதான் வேதம்.

  15. வணக்கம்!

    அம்பேட்கர் திரைபடத்தை வெளியிட தி.மு.க அரசு முயற்சிக்க வில்லை என்பதே உண்மை. 100 நாட்களில் கலைஞர் டிவி க்காக 4 அலைவரிசை தொடங்க முடிந்த முதல்வரால், ஒரு படத்தை தமிழில் டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது. நாம் பொகவேண்டியது தேசிய திரைப்பட துறையிடம் அல்ல, அறிவாலயத்திற்க்கு என்பதை ஏன் மறந்தீர்கள்? இதே திமுக அரசு பெறியார் படம் எடுக்க மானியமாக சுமார் 92 லட்சம் அரசு மானியம், சில கோடு கருப்பு பனமும் கொடுக்கப்பட்டது.

    ஆணால் அம்பேட்கர் திரைபடத்தை டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது, என்ன ஒரு சாதி வெறி பாருங்கள் கருநாநிதிக்கு!

  16. abraham lingan (03:54:20) :
    ///அம்பேட்கர் திரைபடத்தை டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது, என்ன ஒரு சாதி வெறி பாருங்கள் கருநாநிதிக்கு!///

    இது தவறான தகவல். அம்பேத்கர் திரைப்படத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் கொடுத்து, தமிழில் டப் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது. படத்தை வினியோ உரிமை வாங்கியவர் பணம் இல்லை என்று காரணம் சொல்லி வெளியிடாமல் இருக்கிறார்.

  17. //பெரியார் படத்தை வெளியிட்ட ஆதிக்க அரசியல்வாதிகள் கருணா நிதியும் மா.மி கி.வீரமணியும், ஏன் திருமாவளவன் கூட இதெற்கெல்லாம் உதவ மாட்டார்களா?

    மக்களுடைய ஓட்டு மட்டுமே இவர்களுக்கு வேண்டும்! அதானே!//

    hats off question.

  18. சுகுமாரன் (03:59:46) :

    abraham lingan (03:54:20) :
    ///அம்பேட்கர் திரைபடத்தை டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது, என்ன ஒரு சாதி வெறி பாருங்கள் கருநாநிதிக்கு!///

    இது தவறான தகவல். அம்பேத்கர் திரைப்படத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் கொடுத்து, தமிழில் டப் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது. படத்தை வினியோ உரிமை வாங்கியவர் பணம் இல்லை என்று காரணம் சொல்லி வெளியிடாமல் இருக்கிறார்.//

    திரு சுகுமாரன் ஐயா,

    அப்படியா!?

    அரசியல், ஊடகம் மற்றும் திரப்படத்துறையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரின் குடும்பம் இந்த படத்தை வெளியிட எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்லுங்களேன்!?

    நகைச்சுவையாக இருப்பது அந்த பத்து லட்சம் மட்டுமல்ல பதினோரு லட்சமும் தான்!

    பட வினியோக உரிமை வாங்கியவர் அவ்வளவு பெரிய ஆளா?

  19. தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.. முயற்சி கண்டிப்பாக வெற்றிபெரும்..

    //வெளியில் வரும்போது அவரது சட்டையையும் மீறி துரித்து தெரிந்த மேலாளரின் பூணூல் எங்களுக்கு ஏதோ உறுத்தலை தந்தது.//

    பூணூல் என்னும் பார்ப்பனீய நரம்பை அறுத்தெறிந்தால் தான் இவர்கள் கொட்டம் அடங்கும்..

    //மேலும் இதற்கான முயற்சிகளை வேகப்படுத்திகொண்டிருக்கிறோம் விரைவில் வெற்றியும் பெறுவோம்..

    நன்றி.

    தோழமையுடன்,

    பா.லெமூரியன்//

    கண்டிப்பாக தோழர்

  20. பெரியாரைக் குறித்து வெளிவந்த படம் அசல் பெரியாரைக் காட்டவில்லை. இடைவேளைக்குப் பிறகு படம் மொத்தமும் ஏதோ மாறுவேடப் போட்டி போல் இருந்தது. அதே போல இந்தப் படத்திலும் அண்ணல் அம்பேத்கர், காந்தியின் மீது கொண்டிருந்த விமர்சணங்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் படம் தமிழில் வெளியிடப்படாவிட்டால் அதைக் குறித்து விமர்சிக்கக் கூட வழியற்றுப் போய்விடும். அந்த வகையில் தோழர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  21. //abraham lingan (03:54:20) :
    ///அம்பேட்கர் திரைபடத்தை டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது, என்ன ஒரு சாதி வெறி பாருங்கள் கருநாநிதிக்கு!///

    இது தவறான தகவல். அம்பேத்கர் திரைப்படத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் கொடுத்து, தமிழில் டப் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது. படத்தை வினியோ உரிமை வாங்கியவர் பணம் இல்லை என்று காரணம் சொல்லி வெளியிடாமல் இருக்கிறார்.//

    கருணாநிதிக்கும் திராவிட கழகம்/கட்சிகளுக்கும் சப்பு கட்டு கட்ட தோழர் சுகுமாரன் போன்றோர் வெட்கப்படுவதில்லை! கடந்த சில மாதங்களுக்கு முன் தேசிய திரைப்பட துறையிடம் டப் செய்ய ஒப்புதல் கிடைக்கவில்லை என சம்மந்தப்பட்ட அமைச்சர் (தமிழக) ஜுனியர் விகடனில் பேட்டி தந்தார், ஆனால் நீங்கள் டப் செய்துவிட்டது என சொல்கிறீர்கள்.

    இப் படத்திற்க்கு போதுமான பனவசதியை மத்திய அரசு செய்யாததால், லன்டனில் படப்பிடிபு நடைபெற்ற போது மாணவர்கள் அறையில் தங்கிதான் படப்பிடிப்பு குழுவினர் படத்தை எடுத்தார்கள்.

    தமிழில் வெளிவாராததிற்க்கு காரணம் கருணாநிதியைத் தவிர வேறு காரனம் இருப்பதாக தெறியவில்லை.

    இதையும் நீங்கள் பார்பனனால்தான் இந்த படம் தமிழில் வெளிவரவில்லை என சொன்னால் அதை நம்ப சில முற்போக்கு சிந்தனை கூட்டங்கள் தயாராகவே இருக்கிறது.

    தொடரட்டும் உங்கள் நற்பணி…..

    தோழமையுடன்
    அப்ரகாம் லிங்கன்

  22. நான் பார்த்தது மும்பையில்.

    தேவையில்லாமல் தனி நபர் பெயரை விமர்சனம் செய்யும் போக்குத் தேவையில்லை.

    இணைதளத்தைக் குறிப்பிட்டு, http://www.ambedkarfilm.com/default.html, டிவிடிக்கள் விற்பனைக்கு உள்ளன. வாங்கிக் கொள்ளலாம், என்று குறிப்பிட்டேன். அதைக் கூட பார்க்காமல் விமர்சனம் செய்வது என்ன என்பது தெரியவில்லை.

    வியாபார நோக்கில் உள்ளதா இல்லையா, தமிழில் இருக்கிறதா இல்லையா என்பதை கீழேயுள்ளதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்:

    DVD and VCD of ‘Dr Babasaheb Ambedkar’ now available
    Saturday, December 29, 2007,21:03 [IST]
    http://news.oneindia.in/2007/12/29/dvd-and-vcd-of-dr-babasaheb-ambedkar-now-available-1198942401.html

    Mumbai, Dec 29 (UNI) The DVD and VCD of the film ”Dr Babasaheb Ambedkar”, directed by Dr Jabbar Patel, has been released by Ultra.

    Buzz up!
    A spokesperson of Ultra told UNI, ”The DVD and VCD of the film, which has been made in nine languages including Marathi, English, Tamil, Telugu and Gujarati, is now available for Rs 48 in regional languages, while the Hindi version will be available at Rs 69. The English version will be made available in a short while.” South Indian star Mammootty, who played the role of Dr Babsaheb Ambedkar, has given a steller performance and is supported by Sonali Kulkarni and Mrinal Dev.

    ”The response to the film was terrific and there is a huge demand and hence, we have decided to bring out the DVD and VCD. The music by Amar Haldipur is ALSO enthralling,” the spokesperson added.

    இதுவும் பொய்யா?

  23. பார்பனியம், பணம், சாதி, அரசியல் என்று நமது காரணங்கள் வேறு வேறாக இருக்கின்ற போதிலும், ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி மட்டும் இன்னும் விடை அளிக்கப்படாமலேயே உள்ளது…

    ஒன்றிணைந்து குரல்கொடுப்போம், மறைக்கப்படும் சரித்திரத்தை மீட்டெடுப்போம்.

    நன்றி…

    தொடர்பிற்கு:

    தோழர் வேந்தன்,
    பா. லெமூரியன் 9940475503

  24. @வேதபிரகாஷ்: படம் திரையரங்குகளில் ஏன் வெளியிடப்படவில்லை என்று கேட்டால், டிவிடிய வாங்கிப் பாத்துக்கோன்னு சொல்றது ஒன்னும் சரியான பதில் இல்லையே? அரசு மருத்துவமணைகளில் சரியாக கவனிக்கிறதில்லைன்னு சொன்னால் “காசிருந்தா பிரைவேட் ஹாஸ்பிடல்ல வைத்தியம் பாக்குறது தானே” என்று சொல்வது போல் உள்ளது.

  25. படத்தை விநியோக உரிமையை கையில் வைத்திருக்கும் தயாரிப்பாளர் வெளியிடுவாரா என்பதே இன்றைய திரைப்பட வியாபாரத்தின் பொருட்டு யோசித்தால் ரொம்ப ரொம்ப சிரமம்தான்..

    ஏனெனில் மிகப் பெரிய பட்ஜெட் படங்களைத் தவிர சிறிய பட்ஜெட் படங்களுக்குக்குகூட திரையரங்குகள் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.

    இப்போதெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களே நேரிடையாக படங்களை வாங்கித் திரையிடுவதால் அவர்களுக்கு லாபம் வரக்கூடிய படங்களை, கூட்டம் வரக்கூடிய படங்களாக மட்டும்தான் வாங்குகிறார்கள். இல்லையெனில் வேண்டாம் என்கிறார்கள்.

    இந்தப் போக்கால் ஏற்கெனவே எடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிய பட்ஜெட் சினிமாக்களைத் திரையிடவும் முடியாமல் அதன் தயாரிப்பாளர்கள் தவிக்கும் சூழலில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்னும் இந்தக் காவியத்தை திரையிட எந்தத் திரையரங்கு உரிமையாளர் முன் வருவார்..?

    இப்போது எல்லாமே வியாபாரம்தானே..? ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வர வேண்டும்.. தியேட்டர் வாடகை கட்டணம் அளவுக்காவது வசூல் கிடைக்க வேண்டும். முதல் நாள் வசூலே வாடகையைவிடக் குறைவு என்றால் மறுநாளே அந்தப் படத்தைத் தூக்கிவிடுவார்கள்..! இதுதான் இப்போது தமிழ்ச் சினிமாவுலகில் நடக்கிறது..!

    இந்தப் படத்தைத் திரையிட வேண்டுமெனில் அதை அரசுதான் செய்ய வேண்டும். அரசு விநியோக உரிமை வைத்துள்ளவரிடம் படத்தை வாங்கி தனது சொந்த முயற்சியில் பண வரவை எதிர்பாராமல் திரையரங்குள் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒரு தியேட்டரை வாடகைக்கு எடுத்து படத்தைத் திரையிட வேண்டும்..!

    இதனை லாப நோக்கமில்லாமல் செய்ய அரசால்தான் முடியும். தனி நபர் எவரும் முன் வர மாட்டார். இதுதான் இன்றைய யதார்த்த நிலைமை..!

  26. நான் சில கேள்வீ – RTI-ல் கேட்க இருக்கீறேன் –

    To

    The Public Information Officer(PIO),
    NATIONAL FILM DEVELOPMENT CORPORATION LTD.
    Discovery of India Building,
    Nehru Centre, 6th floor,
    Dr. A.B.Road, Worli
    Mumbai – 400 018

    Respected Sir,

    Sub: RTI Act-Information needed-reg

    Iam citizen of india and living in the above address.As i want to know the below informations from you

    Below questions are regarding the film – DR. BABASAHEB AMBEDKAR (Jabbar Patel/ 1998/ 140 Mins/ English/ Historical)

    Questions:

    1.What was the objectives for producing the film- DR. BABASAHEB AMBEDKAR ?

    2.When did you produce the film?

    3. How much budget allocated for this film? Is any sponsors for this film?

    4.What are the languages that the film is available?

    5.Is this film available in DVD/CD version? if yes ,what are are the languages that the film (DVD/CD)is available?

    6.Give the distributors list (Name and address)with area wise?

    7.Did the Tamilnadu govt sponsor any amount for dubbing the film into Tamil or any other purpose?if yes,when?

    8.Who is distributor for Tamilnadu? give the name and address?

    9.When did you give the distributing license for Tamilnadu? how much amount he paid for Tamilnadu distribution? How many years it is valid? Is it include DVD/CD rights?

    10.Who got the license for DVD/CD version in Tamil?give the name and address

    11.Tamilnadu distributor not yet released this film in the cinema theater,in this case what can you do?

    give your feed back

    Give me any questions that i want to add

  27. நான் சில கேள்வீ – RTI-ல் கேட்க இருக்கீறேன் –

    To

    The Public Information Officer(PIO),
    NATIONAL FILM DEVELOPMENT CORPORATION LTD.
    Discovery of India Building,
    Nehru Centre, 6th floor,
    Dr. A.B.Road, Worli
    Mumbai – 400 018

    Respected Sir,

    Sub: RTI Act-Information needed-reg

    Iam citizen of india and living in the above address.As i want to know the below informations from you

    Below questions are regarding the film – DR. BABASAHEB AMBEDKAR (Jabbar Patel/ 1998/ 140 Mins/ English/ Historical)

    Questions:

    1.What was the objectives for producing the film- DR. BABASAHEB AMBEDKAR ?

    2.When did you produce the film?

    3. How much budget allocated for this film? Is any sponsors for this film?

    4.What are the languages that the film is available?

    5.Is this film available in DVD/CD version? if yes ,what are are the languages that the film (DVD/CD)is available?

    6.Give the distributors list (Name and address)with area wise?

    7.Did the Tamilnadu govt sponsor any amount for dubbing the film into Tamil or any other purpose?if yes,when?

    8.Who is distributor for Tamilnadu? give the name and address?

    9.When did you give the distributing license for Tamilnadu? how much amount he paid for Tamilnadu distribution? How many years it is valid? Is it include DVD/CD rights?

    10.Who got the license for DVD/CD version in Tamil?give the name and address

    11.Tamilnadu distributor not yet released this film in the cinema theater,in this case what can you do?

    give your feed back

    Suggest me any questions that i want to add

  28. tomorrow/day after tomorrow,Iam going to send register post,

    Any more question want to add?

    please send your feed back as quick as possible.

    -tsekar

  29. I sent the letter to Public Information Officer(PIO),
    NATIONAL FILM DEVELOPMENT CORPORATION LTD.

    Waiting for reply.

    update you after the reply from NATIONAL FILM DEVELOPMENT CORPORATION LTD

  30. I sent the letter to Public Information Officer(PIO) on 22 /5/2010

    Not yet received any reply….till date

  31. Public Information Officer(PIO)-NFDC replied me on 20- july

    பெரும்பாலான என்னுடைய கேள்விகலுக்கு பதில் அளிக்க மறுத்து

    விட்டார் -எனவே -Central Information Commission -New delhi -இக்கு மேல்

    முறைஇடு செய்து இருகீரன் -July 26

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading