தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!

தமிழ்நாட்டில் நிறைய முஸ்லீம்கள் இருந்தும் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் முஸ்லீ்ம் கட்சிகள் பலமாக இருக்கினறன?

-எஸ். ஜமால், மதுரை.

கேரளா போன்ற மாநிலங்களில் முஸ்லீம் கட்சிகள் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற இஸ்லாமியர் விரோதக் கட்சிகளும், இஸ்லாமியர் மீதான காழ்ப்புணர்ச்சி, வன்முறையும் வளர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரத்தின் காரணமாக, இந்துக்கள் மத்தியில் இந்து தீவிரவாத உணர்வு மழுங்கடிக்கப்பட்டது. இஸ்லாமியர்களை தங்கள் நேசத்திற்குரியவர்களாக பார்க்க, திராவிட இயக்கத்தின் சிறுபான்மை ஆதரவு நிலைபாடும் காரணமாக இருந்தது,

அதன் விளைவாகத்தான் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மீதான மதவாத வன்முறை மிக மிக குறைவு. அதன்பொருட்டே முஸ்லீம்கள் தங்கள் மத உணர்வையும், அரசியலையும் வேறு வேறாக பார்த்தார்கள். அதனால்தான் முஸ்லீம் கட்சிகளை ஆதரிப்பதைவிட திராவிட கட்சிகளை ஆதரிப்பதில் தீவிரம் காட்டினார்கள்.

திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக, பி.ஜே.பி ஆதரவு, கோவை குண்டு வெடிப்பை தொடர்ந்து ஒட்டு மொத்த இஸ்லாமியர் மீதான நடவடிக்கை போன்ற கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும், தங்கள் மத உணர்வுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதுபோலவே தாங்கள் சார்ந்த கட்சியின் தலைமைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

குறிப்பாக திமுகவில் இருக்கிற இஸ்லாமியர்கள் கலைஞரை தங்கள் குடும்ப உறுப்பினரைப் போலவே கருதினார்கள். கருதுகிறார்கள்.

இஸ்லாமியர்கள் மத சார்பற்ற சக்திகளின் பின்னால் அணிதிரண்டால்தான் இந்து தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியும். அவர்கள் தேர்தல் அரசியலைத் தாண்டி முற்போக்காளர்களோடு கை கோர்ப்பதுதான் சிறந்தது.

அந்த வகையில் தமிழக இஸ்லாமியிர்கள் தங்களை திராவிட இயக்கத்தவர்களாக, தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வது பாராட்டப்படக் கூடியது.

*

 தங்கம்டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

16 thoughts on “தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!

  1. //குறிப்பாக திமுகவில் இருக்கிற இஸ்லாமியர்கள் கலைஞரை தங்கள் குடும்ப உறுப்பினரைப் போலவே கருதினார்கள். கருதுகிறார்கள்.
    //
    அப்போ அண்ணாதிமுகவில் இருக்கும் முஸ்லீம்கள் ஜெயலலிதாவை எப்படிங்க கருதுகிறார்கள்?

  2. ///அப்போ அண்ணாதிமுகவில் இருக்கும் முஸ்லீம்கள் ஜெயலலிதாவை எப்படிங்க கருதுகிறார்கள்?///

    ராமதாசை விட நல்லவர் என்று கருதுகிறார்கள்.

  3. இங்கே கீழே தரப்படும் விடங்களை மூதூரிலிருந்து விரட்டப் பட்ட தமிழ் மக்களின் சார்பிலும் முன்வைக்கிறேன். ஆலஞ்சேனை எப்படி ஆலிம்நகராக மாறியது எப்படி?

    மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்ன? இவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு அரங்காக மாறியுள்ளது? ஏன்? எப்படி?

    முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்ன?

    முன்பு தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படி? மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன் சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?

    ஏன்? எப்படி? மூதூர் பிரதேச சபையில் ஒரு தமிழர் உதவி பிரதி தலைவராக கூட இல்லை ஆனால் வடகிழக்கின் வேறு இடங்களில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில்(யாழ்) முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்றது முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர் சிறுபான்மையாக உள்ள இடங்களில் மூஸ்லீம்களால் வழங்கப்படுவதில்லை.

    இப்படியான தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சின் காரணமாகவே முஸலீம்களால் வி எஸ் தங்கராசா ஜிகாத்தினால் கொல்ப்பட்டார் இது தமிழ் கிராமங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இது சில பகுதிகளில் முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதாகவும் கருதியியே இவரது கொலை நடைபெற்றதாக பேசப்படுகின்றது. இதே போலவே மூதூரில் விஏ தங்கராசாவும் டாக்டர் அந்தோனியும்(கத்தோலிக்கர்) கொல்ப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

    தமிழர் பிரதேசத்திற்காக பஸ்ஓட அனுமதிகொடாமல் முஸ்லீம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டதிற்கான அடிப்படைக்காரணம் என்ன? பிரதேசங்களில் முஸ்லீம் ஆட்டோகாரர்களின் உழைப்பிற்காகவே அதுமட்டுமல்ல மூதூர் அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் ஒருவர் இது வரை ஆட்டோ ஓட்ட முடியாது அப்படி ஒருவர் ஆட்டோ ஓடினால் அவர் கொல்ப்படுவார்.(இது சந்தேகத்திற்க்கு இடமில்லாத கருத்து) தமிழர் பெரும்பான்மையினராக உள்ள இடங்களில் இருக்கும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முஸ்லீம் பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்க்கு வழங்கப்படுவதில்லை இத பற்றி கேட்போது முஸ்லீம்களுடன் மக்களுடன் மட்டுமே உறவுகொள் சகோதரன் என்று சொல் மற்வர்களுடன் அல்ல என்ற கருத்துப்பட பதில் வந்ததாம்.

    மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மனேஜர் நாகரத்தினம் மயில்வாகனம் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் வேலை முடிந்து வரும் போது முஸ்லீம்களால் துரத்தப்பட்டு அடிக்கப்பட்டு இனிமெல் தமிழன் முஸ்லீம் பிரதேசத்திற்க்கு வேலைக்கு வரக்கூடாது என் மிரட்டப்பட்டார் ஏன்?(உறவினர்கள் சாட்சியமாக உள்ளனர்)

    1990களில் சலீம் (முஸ்லீம் பயங்கரவாதி) தலைமையில் மூதூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது எப்படி? யார் இந்த அலுவல்களுக்கு உறுதுணையாக இருந்தது விலாசங்களை பார்த்து அந்தக் காலங்களில் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கொலை செய்ப்பட்டனர் விசாரணைகள் எங்கே? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா?

    இந்த எழுத்தாளர் அபு நிதாஸ் பதில் தருவாரா? இந்த பயங்கரவாதிக்கும் இராணுவத்திற்க்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்த முஸ்லீம் கட்சி? எது?இயகம் எது? என்று இந்த எழுத்தாளருக்கு தெரியாதா? (இந்த எழுத்தாளர் மூதூர் முஸ்லீம் சம்பவங்களை இங்கே முன்வைக்கும்போது ஏன் தமிழ் மக்களின் பாதிப்பை தேடவில்லை)

    பல தமிழ்ப் பெண்களை முஸ்லீம் அரச இராணுவத்துடன் இணைந்து வேலை செய்தவர்களும் இவர்களுக்கு ஆதரவானவர்களும் தமிழ்ப் பெண்களை கற்பழித்தனர் அழகான பெண்கள் தெரிவு செய்பயப்பட்டு அவர்களின் கணவர்களை இராணுவ காவலில் வைத்துவிட்டு பெண்களை கற்பழித்துவிட்டு இவர்களது கணவன்மார்களை இராணுவ முகாம்களிலிருந்து விடுதலை செய்தனர் இது இந்த எழுத்தாளருக்கு தெரியாதா? கேள்விப்படவில்லையா? ஆனால் எந்த ஒரு முஸ்லீம் பெண்ணும் வேறு எந்த மதத்தவர்களால் இலங்கையில் கற்பழிக்கப்படவோ துன்புறுத்தப்படவோ இல்லை

    எந்த ஒரு முஸ்லீம் பெண்ணோ தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் கற்பழிக்கவோ கேவலப்படுத்தப்படவோ இல்லை என்பதை இங்கு தெரியப்படுத்துகிறேன் எக்காலத்திலும் கிழக்கில் தமிழர்களால் இப்படியான சம்பவங்கள் நடாத்தப்படவில்லை தமிழ் பெண்களை கற்பழித்வர்களில் சலீம், சுரேஸ், காசிம், பாரூக் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள் இப்படி கற்பழிக்கப்பட்ட பெண்கள் பலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் (சாட்சியம் உண்டு) ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா?

    காத்தான் குடி பள்ளிவாசல் கொலைகளின் பின்னரான – ஆறுமுகத்தான் குடியிருப்பு அகதி முகாம் படுகொலை சத்துருகொண்டான் அகதி முகாம் படுகொலைக்கு இந்த கொலைகளை சலீம், காசிம் தலைமையில் முகாமை சுற்றிவளைத்து ஒவ்வொருவராக ஒருவாசலால் வர அழைத்து கொலை செய்தார்கள் (ஆதாரம்: எமில்டர் பற்றிமாகரன் நொக்சர்3)(மனித உரிமைகள் குழுவினர்கு கூறியுள்ளனர்) இது வரையில் எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் இதற்காக மன்னிப்பு கேட்டதில்லை ஏன்? என்ற கேள்வி தமிழர்களிடையே எழுகின்றது? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்களா?

    இது காத்தான்குடி கொலைகளுக்கு தமிழர் சார்பில் பலர் மன்னிப்பு கேட்டிருந்த போதும் இவற்றிக்கு எந்த முஸ்லீம் தலைவர்களும் மன்னிப்பு கேட்கவில்லையே! ஏன்?

    உடையார் குடும்பத்திற்க்கு சொந்தமான நிலம் ஆலங்கேணியில் கைலாசபிள்ளை குடும்பம் செல்வம் குடும்பம் ஆகியோர்களை கடத்தி முஸ்லீம்களே கொலை செய்தனர் என்றும் இவர்களின் சொந்த நிலங்கள் முஸ்லீம்கள் பெயருக்கு மாற்ப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. எப்படி மாற்றப்பட்டது? எந்த அரசியல்வாதி இதன் பின்னால்? (முஸ்லீம்காங்கிரஸ் இதற்க்கு பொறுப்பு)

    2006ல் மணற்சேனையில் விறகு வெட்டி விற்கும் தமிழரை முஸ்லீம் பகுதிகளில் விற்பவர் கொலைசெய்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (அவர்களது லான்மாஸ்டர் கையளிக்கப்படவில்லை) இந்த லான் மாஸ்டர் இன்றும் முஸ்லீம்களால் பாவிக்கப்படுகின்றதே அது எப்படி முடிகிறது?

    யோகன் மகன் ஜதீஸ்வரனை பஸ்சிலிருந்து இறக்கி தமிழனை கொலை செய்ய வேண்டும் என்று கொலை செய்ப்பட்டது இவற்றிக்காக எந்த மூதூர் இஸ்லாமிய அமைப்பினரும் மன்னிப்போ அனுதாபமோ பேசவில்லை? ஏன்?

    இப்போதும் 58 பிரதேசத்ற்க்கு தமிழர்கள் போக முடியாத நிலையே உள்ளதாக அறியப்படுகின்றது நிந்தாவூரில் பிள்ளையார் கோவில் இடித்தும் அதே இடங்களில் மக்கள் குடிசைகள் அழிக்கப்பட்டதும் இப்படியான சம்பவங்களுக்கு பின்னால் பல முஸ்லீம் அரசியல் தலைவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னணியில் இருந்தாகவும் இதற்கான காரணம் முஸ்லீம்களுக்காக தொடர்ச்சியான பிரதேசத்தை பெறவே எனவும் தெரியவந்துள்ளது. இது சரியானதா?

    இந்த கோயிலும் குடியிருப்பு காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படுமா? இந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடுதான் என்ன?

    ஈபிஆர்எல்எப் தோழர்கள் பலர் முஸ்லீம் அமைப்பினரால் வீடு தேடிச்சென்று கொல்ப்பட்டது இதற்காக யாரும் எந்த குரல் எழுப்பவில்லை ஏன்? சலீம், காசிம், மொக்கனிபா, வைத்துல்லா போன்றோர் துறைமுகத்திற்க்கு பக்கத்தே உள்ள புத்தர் கோயிலில் வைத்து தமிழ் பெண்களை கற்பழித்ததாக பெண்கள் கூறினர் அவர்களில் பலர் கற்பழிக்கப்பட்டவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் (மனித உரிமைகள் குழுவினர்க்கு கூறியுள்ளனர்)இந்த இராணுவத்துடன் இணைந்து இந்த வேலைகளை செய்த, கற்பழித்த, முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு முஸ்லீம் அரசியல் தலைவர்களின் ஆதரவு இருந்துள்ளது.

    வைத்துல்லா முஸ்லீம் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கிறீஸ்தவ பெண்களில் மார்பில் கைவைத்து எல்லாரும் முஸ்லீம் காங்கிரஸ்க்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தியதும் இல்லாவிட்டால் தான் மீண்டும் கொலைகளை ஆரம்பித்து விடுவேன் என்று பொது இடத்தில் வைத்து மிரட்டியுள்ளார் (இந்த இடத்தில் நின்ற பலர் சாட்சியங்களாக உள்ளனர்) வைத்துல்லாவுக்கும் முஸ்லீம் காஸ்கிரஸ்க்கும் உள்ள தொடர்பு என்ன?

    முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் தமிழர்களால் முஸ்லீம்கள் இப்படி இம்மிசைக்கப்படவில்லை என்பது ஆழமானகருத்து. மூதூரில் புனித அந்தோனியார் கோவில் தாக்குதலில் முஸ்லீம்கள் யேசுவின் சிலையை உடைத்து கடலில் போட்டனர் இதை மீள எடுத்து வந்து சிலையை திரும்ப நிலை நிறுத்தியதிற்காக டாக்டர் அந்தோனியை முஸ்லிம்கள் கொலை செய்யதனர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதி தலைவர் ரங்கா, சம்பூர் கூனித்தீவு சிவராசாவை, தபாற்கந்தோர் பால்ராஜ் ஆசிரியர் வசந்தன் (கணித ஆசிரியர் இவர்களை கடத்தி கொலை செய்தனர்.

    மல்சேனை 64ல் பஸ்சில் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பலர் ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா? எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? 1994ல் தேர்தல் காலத்தில் மூஸ்லீம் காங்கிரஸ் வெற்றிக்காக ஆனன்சேனை மூதூர் ரஞ்சன் மோகன் போன்றோர் கடத்தி கொலை செய்ப்பட்டனர் ராஜதுரை நாகேஸ்வரன் ராஜதுரை ரவிச்சந்திரன் சம்பூர் கட்டைப்பறிச்சான் கொலைகள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த பிரதேசங்கள் உடைமைகள் உயிர்கள் மிகப் பல இதைப்பற்றி முஸ்லிம் தலைவரகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை முஸ்லீம்களால் நடைபெற்ற கொலைகளுக்கும் மன்னிப்பும் கேட்கவுமில்லை.

    எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா? எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? திருகோணமலை லிங்க நகரில் 5 அல்லது 6 முஸ்லீம் குடும்பங்களே இருந்த காலத்தில் இவர்களுக்கு எந்த தமிழர்களும் எந்த இடைஞசல்களும் செய்வில்லை இவர்கள் திரகோணமலையில் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தே பள்விவாசல் கட்ட தமிழரே நிலம் வழங்கினார் இந்தப்பள்ளிவாசல் என்றுமே தாக்கப்படவில்லை மூதூரில் பல தமிழர்கள் தமிழர் கோவில்கள் சேர்ச்சுகள் தாகக்பட்டபோதும் இவைகள் பத்திரமாகவே இருந்தன தமிழர்கள் முஸ்லீம்களை இந்தக்காலங்களில் ஜனநாயகமாகவே நடாத்தினர். தமிழர்கள் முஸ்லீம்களை ஏற்றுக்கொண்டது போல் முஸ்லீம்கள் தமிழர்களை ஏற்றுக்கொள்ளவில்லை

  4. கேரளத்தின் மஞ்சேரி, மலைப்புறம், கொல்லம், கொச்சி,மலபார் ஆகிய இடங்களிலிருந்தும் தமிழ்நாட்டின் காயல் பட்டணம், கீழக்கரை பகுதிகளிலிருந்தும் இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் “தனி இனம்” என்பது மிகப் பெரும் வரலாற்றுக் காமெடி.- நந்தா

    நிஸ்தாருக்கு அவரின் இஸ்லாத்தில் சொல்லப்படும் “காபிர்கள்” என்பவர்கள் இலங்கயில் இருக்கிறார்களா அல்லது அவர்களை கொல்ல வேண்டும் என்று அரேபிய முகம்மது கேட்டிருப்பது பற்றி மவுனம்… ஒரே மவுனம்..

    என்ன நிஸ்தாரே உங்களுக்கு இஸ்லாம் சொல்லுவது புரியவில்லையா அல்லது காபிர்கள் என்ற இஸ்லாமியர் அல்லதவர்களைக் கொல்ல வேண்டும் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட வேண்டும் அவர்களின் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும் என்று பாலைவன வாசி முகம்மதுவின் காட்டு மிராண்டி சித்தாந்தங்களை பகிரங்கப்படுத்தைனால் உதை விழும் என்ற பயமா?

    அரேபியாவில் பல்கலைக் கழகம் இருந்திருந்தால் இந்த கைவெட்டு. கால் வெட்டு, கும்பலாக கற்பழிப்பு என்பன இஸ்லாமில் வந்திருக்க முடியாது. இஸ்லாம் வந்த பின் பல்கலைக் கழகங்கள் தொலைந்ததுதான் வரலாறு.

    மதரசா என்று பாடசாலைகளைத்தான் அரபியில் அழைக்கிறார்கள். ஆனால் இந்தியா பாகிஸ்தான் இலங்கை போன்ற இடங்களில் மதரசா என்பது “இஸ்லாமிய” பயங்கரவாதம் பற்றிப் போதனைகள் செய்யப்படும் இடங்கள் மாத்திரமே ஆகும்.

    கேரளத்தின் மஞ்சேரி, மலைப்புறம், கொல்லம், கொச்சி,மலபார் ஆகிய இடங்களிலிருந்தும் தமிழ்நாட்டின் காயல் பட்டணம், கீழக்கரை பகுதிகளிலிருந்தும் இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் “தனி இனம்” என்பது மிகப் பெரும் வரலாற்றுக் காமெடி.

    இந்த நிஸ்தார் இலங்கை முஸ்லிம்களுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கப்சா விடுவதன் அர்த்தம் என்ன?

    இன்றும் கொழும்பு, வவுனியா, அனுராதபுரம் போன்ற இடங்களில் வாழும் கேரளத்து முஸ்லிம் வம்சாவழியினர் கேரளத்துடந்தான் சம்பந்தம், கொடுக்கல் வாங்கல் செய்கிறார்கள். அவர்கள் தங்களை அரேபியர்கள் என்று அழைப்பது கிடையாது.

    இந்து தமிழர்களாகவிருந்து முஸ்லிமாக மாறியவர்கள் அல்லது அவர்களின் பரம்பரைகள்தான் இலங்கை முஸ்லிம்களில் பெரும் பகுதியினர். ஒரு காலத்தில் இந்துக்களாகவிருந்தோம் என்பதை பகிரங்கமாக சொல்ல விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதனை மூடி மறப்பதில் கவனம் காட்டும் நிஸ்தார் போன்றவர்கள் வரலாறு பற்றி எதற்காக கதைக்க வேண்டும்?

    முத்தையா ஆக இருந்து முகம்மது ஆகியவுடன் அவன் இந்தியாவில் தனக்கு சம்பந்தம் கிடையாது என்று அரேபியாவுக்குப் போய் வரலாறு தேடுகிறார்கள்.

    இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை தற்போதைய தமிழர்- சிங்களவர் நெருக்கம்தான். அதனை எப்படிக் குட்டிச் சுவராக்குவது என்பதும் முஸ்லிம் என்ற பெயரில் அரசுப் பணத்தினை அடித்துக் கொண்டு போவது எப்படி என்பதும்தான்.

    யாழ் போன முஸ்லிம்கள் இந்தியா கொடுக்கும் வீடுகளில் தங்களுக்கும் ஒரு “இஸ்லாமிய” கோட்டா கேட்கிறார்கள். எந்த அடிப்படையில் என்றால் தாங்களும் “தமிழர்கள்” என்ற அடிப்படையில்த்தான்!

    இலங்கை முஸ்லிம்கள் தனியினம் என்றால் இலங்கை அரசுடன் “தனியினம்” என்ற அடிப்படையில் டீல்களை முடிக்க வேண்டும். தமிழ் என்று எதற்காக புகுந்து கூத்தடிக்க வேண்டும்?

  5. hi dravida kunji. romba soriya vendam. i asked mathimaran, let him reply. why are u sorinjing too much mr.dravida kunji. ippadiye over a sorinjithaan aapu adichi irukaangale innuma?

  6. ஸலாம் சகோ.மதிமாறன்,
    சில இடங்களில் ஒருமித்த கருத்து இல்லாவிடினும் மொத்தமாக நோக்கின் இது நல்லதொரு பதில்…. நன்றி.

    ///தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரத்தின் காரணமாக, இந்துக்கள் மத்தியில் இந்து தீவிரவாத உணர்வு மழுங்கடிக்கப்பட்டது.///—உண்மை..!

    ///திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக, பி.ஜே.பி ஆதரவு, கோவை குண்டு வெடிப்பை தொடர்ந்து ஒட்டு மொத்த இஸ்லாமியர் மீதான நடவடிக்கை போன்ற கசப்பான சம்பவங்கள்///—இதனால்தான்…. திராவிட இயக்க சிறுபான்மையாக அல்லாமல்… முஸ்லிம்களின் குரலுக்கான ஒரு “கழகம்” தேவைப்பட்டது..!

    விளைவு…. “த.மு.மு.க” பிறந்தது..! அன்றுமட்டும் கருணாநிதி நீதியாக நடந்து கொண்டிருந்திருந்தால்…. இன்று இத்தனை முஸ்லிம் இயக்கங்கள் முளைத்திருக்காது..!

  7. ஸலாம் சகோ.மதிமாறன்,
    ///தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரத்தின் காரணமாக, இந்துக்கள் மத்தியில் இந்து தீவிரவாத உணர்வு மழுங்கடிக்கப்பட்டது.///—உண்மைதான்.

    ///திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக, பி.ஜே.பி ஆதரவு, கோவை குண்டு வெடிப்பை தொடர்ந்து ஒட்டு மொத்த இஸ்லாமியர் மீதான நடவடிக்கை போன்ற கசப்பான சம்பவங்கள்///—தான்… ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைக்குரலாக முஸ்லிம்களுக்கான ஒரு “கழகம்” தேவைப்பட்டது..!

    விளைவு… அப்போது “தமுமுக” பிறந்தது..!

    அன்று மட்டும் கருணாநிதி நீதியோடு நடந்திருந்தால்… இன்று இத்தனை முஸ்லிம் அமைப்புகள் முளைத்து இருக்காது..!

  8. தமிழ் ஈழத்திலுள்ள தமிழர்களில் சிலர் இசுலாம் மார்க்கம் முன்னிறுத்திய கடவுளை ஏற்றுக் கொண்டு அதை வழிபட்ட ஒரே காரணத்துக்காக, ஆரிய பார்ப்பன மதத்தவராலும், கிறித்தவ மதத்தவராலும் அன்னியரெனப் பார்க்கப் படும் அலங்கோலமானது, சிங்களவனுக்கு எப்படிப்பட்ட வசதியைக் செய்து கொடுத்திருக்கிறது, கொலைகாரக் காங்கிரசுக்காரனின் அருமைத் தலைவரான இராசபக்சேவின் இனவெறிக் கூட்டத்திற்கு? தமிழனைப் பிரித்து மேய்வதற்கு, சிங்களன் சல்லிக்காசு செலவில்லாமல், அவன் நினைத்த காரியம் கனகச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இப்போதோ; இல்லாத கடவுளால் பிரித்து கொட்டப்பட்ட அப்பாவித் தமிழர்கள், தன்னுடைய தலையாய எதிரிக்கு கொம்பு சீவி அவனை அழகு படுத்திக் குளிர்விக்கும் ஈழத்து எட்டப்பன் கருணாவின் உண்மைத் தம்பிகளை, தமதின இரட்சிப்பாளர்களாக எண்ணீ ஏமாறும் அப்பாவித்தமிழன், அந்த ஓநாய்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் அறிவீனத்துக்குட்பட்ட கொடுமைதான் என்னே? தமிழனைப் பிரித்து கூறுபோட்டது எது? இசுலாமியனின் மத உணர்வு சிங்களனின் காலை அலங்கரித்ததின் அலங்கோலம்தான் என்ன? சிங்களக் காடையன் தன் கைத்தடியாய் இசுலாத்தைக் கொண்டதென்ன? தன்னுடைய பெருமைமிகு மொழியின் பெயரால் தம்மை அழைத்துக் கொள்ளாமல், கேடுகெட்ட மதத்தின் பெயரால் தன்னை அடையாளப் படுத்தும் அசிங்கம் ஏன் தமிழனுக்கு நேர்ந்தது? இந்த மத அசிங்கத்தை முன்னிறுத்தி தன்னை வெளிப்படுத்த, தமிழீழத்திலுள்ள சிறுபான்மைக் கிறித்தவனோ அல்லது பெரும்பானமை பார்ப்பன மதத்தவனோ உட்படவில்லையே! இசுலாத்தில் உள்ள தமிழன் மட்டும் எப்படி இந்த அசிங்கத்தைச் சுமந்து, சிங்களனுக்குத் துணை போனான்? தமிழனை எரித்து அந்நெருப்பில் குளிர் காய்ந்த கொடுமைக்கார அரசுகளான கொலைகார இந்தியா, பாகிசுதான், சீன, சிங்களம் போன்ற, குருதியையுண்டு வாழும் இவர்களுக்கு, தமிழனை அழித்த கொடுமை மிக இலகுவாகக் கைக்கூடிய கமுக்கம் தான் என்னே?
    இல்லாத கடவுளை நம்பும் இசுலாமிய, ஆரிய வேத, கிறித்தவ மத சகோதரர்களே… நீங்கள் ஒரு விடயத்தை நினைவில் எண்ணிப்பாருங்கள்..! நாம் கடவுளை நம்பினால்தான் நம்மால் உலகத்தில் வாழமுடியும் என்ற நெருக்கடி எதாவது நமக்கிருக்கிறதா? நாம் கடவுளை நம்புவதானது, நம் தலையில் பாயத்தயாராய் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கூரான கத்தியைப் போன்றது, இப்படி ஒரு கொலைவெறி ஆபத்தின் துணையோடுதான் நம் வாழ்க்கையைக் கழிக்க வேண்டுமா? இந்தக் கடவுள்களுக்காக ஏகப்பட்ட வழிபாடு நடத்தி, பணத்தை விரயமாக்கி, நேரத்தை செலவழித்து நாம் கண்ட பலன்தான் என்ன? ஒரு மன ஆறுதலுக்குத்தான், என்று இழுக்கும் அன்பர்களே.. அப்படிக் கிடைத்த மன ஆறுதல் நம்மிடம் நிரந்தரமாக இருந்து விட்டதா? இல்லையே..! பின் எதுக்காக அப்படி ஒரு தற்காலிக ஆறுதல் தேடி பணத்தைச் செலவு செய்து, அடுத்த மதத்தவனின் பகைமையைச் சம்பாதிக்கணும்? இந்த பாழடைந்த கடவுள்களூக்காகச் செலவிடும் நேரத்தில் நிரந்தர ஆறுதலுக்கும் நிம்மதிக்கும் என்ன செய்யலாம் என்று கொஞ்சம் யோசிக்கலாமே… இந்தக் கடவுள்களைக் கும்பிட்டதினாலே நமது நிம்மதி போச்சு, சில நேரங்களில் உயிரும் போகுது, அதுவும் கோரமான சாவு; இப்படி நமது உயிரை அநியாயமாய் எடுக்கும் இந்த வெத்து வேட்டுக் கடவுள்களை கண்டிப்பாகக் கும்பிடத்தான் செய்யணுமா நாம்? எந்த கடவுளையும் கும்பிடப் போவதில்லை, என்று முடிவு கட்டி எதையும் வழிபடாவிட்டால் நமக்கு என்ன நேர்ந்து விடும்? ஒன்றுமே ஆகாது! என்ன ஒன்னு.. மிகப் பெரிய ஆபத்திலிருந்து மக்கள் மீண்டு நிம்மதியாகவும், மானமுள்ளவர்களாகவும், மற்றவர் மானத்தை மதிப்பவர்களாகவும், மக்களை ஏமாற்றும் செயல் அறவே நீங்கிய நிலையும் பணம் விரையமாவது தடுக்கப் பட்டு, பொன்னான பொதுவுடமைச் சமூகம் அமைக்கப் பட்டு… இப்படி எண்ணற்ற நன்மைகள் நமக்கு நேரும். ஆனால் இந்த உயரிய பொற்காலத்தைச் சாதிக்க, இந்தப் பாழும் கடவுளால் சுகங்களை அனுபவிக்கும் ஒருசில ஒட்டுண்ணிகள் மிகப்பெரிய நெருக்கடியையும், பெரிய அச்சத்தையும் நமக்கு ஊட்டுவார்கள், அதை அப்படியே ஒதுக்கிவிட்டு முன்னேறும்போது, ஒரு கட்டத்தில் இந்த மத(ட)த் தலைமை ஒட்டுண்ணிக் கும்பல், தானே உழைத்து உண்ணும் உயரிய நிலைக்கு கண்டிப்பாக மாறுவார்கள். மேலும், மக்களைச் மூடப்படுகுழியில் தள்ளி அதன்மூலம், உழைக்கும் மக்களின் குருதியைச் சுவைக்கும் பார்ப்பன ஒட்டுண்ணிக் கும்பல் தமிழ்நாட்டை விட்டு மக்களால் அடித்து துரத்தப் படுவார்கள்.
    உழைக்கும் தமிழர்கள், இணையத்தில் உலாவும் தழிழ் அன்பர்கள், தமிழ் ஈழத்தை, தமிழ் நாட்டைச் சார்ந்த தமிழ் உறவுகள் தன் குடும்பத்தின் நிம்மதியான எதிர்கால வாழ்க்கையைக் கருதி, நம் அறிவீனத்தால் ஆட்டம் போட்டு உயிரை எடுக்கிற இந்தக் கேடுகெட்டக் கடவுள்களுக்கு சமாதி கட்டும் விதமாக, இந்த பாழாய்போன வெத்து வேட்டுக் கடவுள்களை ஆழக்குழி வெட்டி புதைத்து, நிம்மதியாக இந்த உலக வாழ்க்கையை, இன்பங்களை அனுபவிப்போம் என்று என் தமிழ் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! காசிமேடு மன்னாரு.

Leave a Reply

%d bloggers like this: