காந்தியக் கேள்விகள்; அதிகமில்லை ஜென்டில்மேன்..

உங்களது கேள்விகளை தெரிந்து கொள்ளலாமா?

R.Puratchimani  

ரொம்ப அதிகமில்லை ஜென்டில்மேன். மூணே கேள்விகள்தான்.

*

 ‘காந்தி – நண்பரா துரோகியா?’ புத்தகத்திலிருந்து….

தன் பொதுவாழ்க்கையை தென்னாப்பிரிக்காவில் கருப்பர்-வெள்ளையர் இனப் பிரச்சினையில் இருந்தே துவங்கியதாக காந்தியே குறிப்பிடுகிறார்.

அதற்கு ஆதாரமாக ரயிலில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினையை சாட்சியாக்குகிறார்.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் ‘மாரிட்ஷ்பர்க்’ ரயில் நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமரியாதை, நிற வேறுபாட்டினால் அல்ல; ரயிலில் டிக்கெட் எடுக்காத காரணத்தால்தான் என்று காந்தியின் எழுத்துக்களில் இருந்தே நான் நிரூபித்திருக்கிறேன்.

அது சம்பந்தமாக நான் எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு, அதன் பிறகு காந்தியை ஆதரிக்கட்டும், பரிந்துரைக்கட்டும் அறிவாளிகள்.

மாறாக, பாரதி பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பதுங்கி கொண்டதைப் போல் செய்வார்களேயானால்…

*

புத்தகக் காட்சியில்,‘கீழைக்காற்று, கருப்பு பிரதிகள், அலைகள், தடாகம், புலம், முரண்” கடைகளில் கிடைக்கும்.

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையது:

மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

காந்தி – நண்பரா துரோகியா?

8 thoughts on “காந்தியக் கேள்விகள்; அதிகமில்லை ஜென்டில்மேன்..

 1. மன்னிக்கவும், எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று கேள்விகளைக் காணோம்?! புத்தகத்தில் இருக்கிறதா??

 2. டிக்கெட் எடுக்காதவன் வெள்ளைக்காரனாக இருந்திருந்தால் தூக்கி வெளியே வீசியிருப்பார்களா?

 3. //தென்னாப்பிரிக்காவில் ‘மாரிட்ஷ்பர்க்’ ரயில் நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமரியாதை, நிற வேறுபாட்டினால் அல்ல; ரயிலில் டிக்கெட் எடுக்காத காரணத்தால்தான் என்று காந்தியின் எழுத்துக்களில் இருந்தே நான் நிரூபித்திருக்கிறேன்.//

  -தென்னாப்பிரிக்காவில் நிறவெறியில்லை என்பது தான் இந்த கேள்வியின் அடிப்படையா ? சுத்தம்!!!

 4. அட,காந்திக்குஅப்பவே கள்ளத்தனமா? அந்தக் கள்ளத்தனம்தான் இந்தியாவரை நீண்டு இருக்கா!!

 5. சார்.. எனக்கு ஒண்ணு புரியல சார்… நீங்கலாம் யார தான் சார் நல்லவன், உத்தமன்னு சொல்வீங்க? யார பாத்தாலும் அது நொள்ளை இது சொத்தைனு பாடுறத மொதல்ல நிறுத்துங்க… நீங்க 100% நல்லவரா? ஒரே ஒரு நிமிஷம் உங்க மனசாட்சிய கேட்டுட்டு பதில் சொல்லுங்க பாப்போம்!

 6. சார்,
  கேள்விகள் எங்கே? உங்களுக்கு பதில்களை தெரிந்து கொள்வதற்கான ஆவல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
  இது புத்தகத்தை விற்கும் தந்திரம் என்று இப்பொழுதுதான் உணர்கிறேன். நீங்கள் சம்பாதிக்க காந்தி தேவைப்படுகிறார் எனபதை ஒத்துக்கொள்ளுங்கள். ஆகா காந்தியை உங்களாலும் இந்தியர்களாலும் விட்டொழிக்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபனமாகிறது

  நன்றி

  // ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை
  மேலும் கீழுமாகப் பார்த்தார். நான், கறுப்பு மனிதன்’ என்பதை
  அறிந்ததும் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே
  போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார்.
  அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது, வேறு ஒரு அதிகாரி
  என்னிடம் வந்து, “இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போக
  வேண்டும்” என்றார்.

  “என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே” என்றேன்.
  http://218.248.16.19/slet/lA100/lA100pd1.jsp?pno=134&bookid=221

Leave a Reply

%d bloggers like this: