ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை ஆதிக்க சாதிக்காரர்கள்,  ஏன் எதிர்க்கிறார்கள்?

-க. மாயாண்டி, மதுரை.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகள் நடக்கிறது.

மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்பதினால்தான் அதை சைவ ஜாதி அறிவாளிகள் எதிர்க்கிறார்கள்.

ஆனால், இவைகள் எல்லாவற்றையும்விட இந்த ஜல்லிக்கட்டில் ஈடுபடும் இளைஞர்கள் உடல்ரீதியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். உயிரையும் இழக்கிறார்கள். ஆகவே, அது தடை செய்யப்படுவதில் தவறு இல்லை.

மற்றப்படி, தமிழர்களின் ‘வீர’ விளையாட்டு, என்று சொல்லப்படுகிற ஜல்லிக்கட்டில், எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை என்பது இவை எல்லாவற்றையும்விட மோசமானது.

காரணம், ஒரு ஜாதி இந்துவின் மாட்டை, தாழ்த்தப்பட்டவர் அடக்கிவிட்டால், அதை அவமானமாக கருதுவார்கள், ஜாதி இந்துக்கள்.

ஏனென்றால், ‘தாழ்த்தப்பட்ட மக்களைவிடவும் தங்கள் மாடுகள் மேன்மையானது’ என்கிற எண்ணம் ஒவ்வொரு ஜாதி இந்துக்குள்ளும் இருக்கிறது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

‘சுற்றுலாபொருட்காட்சி’தான் உண்மையான ‘தமிழர்திருவிழா’; பொங்கல் அல்ல.

மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு

7 thoughts on “ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

 1. தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரத்தில் அருந்ததியர் மக்கள் ஆன் நாய் வளர்க்கக்கூடாது என்று ஆதிக்க சாதியார் ஊர்க்கட்டுப்பாடு வைத்த தமிழ்நாடு இது..

 2. ஜாதி இந்துவின் மாட்டை, தாழ்த்தப்பட்டவர் அடக்கிவிட்டால், அதை அவமானமாக கருதுவார்கள், ஜாதி இந்துக்கள்.???????

  ரஜினி/தனுஷ்/கங்கை அமரன்/தயாநிதிமாறன்/பாக்யராஜ் – இவங்களுக்கெல்லாம் பெண்ணை கல்யாணம் செய்து வைத்து உயர் ஜாதி அந்தஸ்தை கொடுத்த அவாளை குறை கண்டு பிடிப்பது நம்மை நரகத்தில் தள்ளிவிடும்!!!. ஹி…ஹி…ஹி.. பின்னர் நம்மை ஏன் கோயிலில் ஒன்றாக பணியாற்ற
  அனுமதி மறுக்கிறார்கள்? – கல்யாணம் பண்ணா தான் அனுமதித் தகுதியா??? – பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு!!!

 3. தமிழா!!! நாய் செய்த பாக்கியம் நாம் செய்யவில்லையா???

  ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர்!!!

  சினிமா நடிகை த்ரிஷாவுக்கு நாய் வளர்பவரை கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கும் என்கிற சேதி மறு நாளே நமக்கு தெரிந்து விடுகிறது – ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர் பற்றிய தகவல் ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது தெரியும் இந்நிலை – வரும் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே????-தங்கராஜா/தினமணிக்கு நன்றி.

  Pl c link:
  http://www.dinamani.com/edition/story.aspx?artid=545532

Leave a Reply

%d