ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார்.

பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

என்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் இப்படியும் பேசியிருக்கிறார்.

இப்படி பேசிய ரஜினிகாந்த் மேல் எனக்கு கோபம் இல்லை.

ரஜினியிடம் எதையாவது வித்தியாசமாக பேசி, அவர் கவனத்தை கவர்ந்து தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் எவனோ ரஜினியிடம் பொய் சொல்லியிருக்கிறான்.

பெரியார் இயக்கத்தை பற்றி தவறாகவும், கண்ணதாசனை பெரிய இலக்கிய ரசிகனாகவும் பெருமைப் படுத்தி பொய் தகவலை ரஜினியிடம் தந்த, அந்த எழுத்தாள கூமுட்டை எவன்னு தெரியல. அவன் மேலதான் கோபம்.

கம்பராமாயணத்தை எரித்த பெரியார் இயகத்தவர்கள் எவரும் அதை படிக்காமல், எரிக்கவில்லை. இன்னும் சரியாக சொன்னால் படித்ததினால்தான் எரித்தார்கள்.

கருவூர் ஈழத்து அடிகள், குத்தூசி குருசாமி, திருவாரூர் தங்கராசு போன்ற மேதைகள் கம்பராமாயணத்தை கந்தலாக்கி தொங்க விட்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்த ‘இந்து தமிழ் அறிஞர்களை’, நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்து தோற்கடித்து, கம்பராமாயணத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய பெருமை பெரியார் இயக்கத்தையே சேரும்.

குறிப்பாக பெரியாரோடு இருந்தபோது அண்ணா கம்பராமாயணத்திற்கு எதிராக, தமிழ் அறிஞர்களான, ரா.பி.சேதுபிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்றவகளோடு ஓரே மேடையில் விவாதித்து, கம்பராமாயணத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார். அண்ணாவோடு விவாதிக்க முடியாமல் அவர்கள் இருவரும், ‘ரயிலுக்கு நேரமாச்சு..’ என்று பாதியிலேயே ஓடிய சம்பவங்கள்தான் தமிழகத்தில் உண்டு.

அதன் பிறகு கம்பராமாயண ரசிகர்கள், பக்தர்கள் யாரும் பெரியார் தொண்டர்களிடம் விவாததிற்கு வராமல் தூர இருந்து மண்ணை வாரி தூற்றி தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.

ஏனென்றால், ‘ரா.பி.சேதுபிள்ளை சோமசுந்தர பாரதியார் போன்ற தில்லாலங்கடிகளுக்கே இதுதான் நிலமை என்றால், நம் நிலை என்னவாகும்?’ என்ற பயமே காரணம்.

மற்றபடி பெரியார் இயக்கத்தவர்கள் யாரும், கம்பராமாயணத்தை படிக்காமல் எரிக்கவில்லை.

தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் பயிற்சி இல்லாத, பள்ளிக் கல்வியைக்கூட முறையாக படிக்காத பெரியார் தொண்டர்கள் கூட, ராமாயணத்தை உரைநடையாக படித்து, அதை புரிந்துகொண்டுதான் எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.

பெருமை பொங்க ராமாயணத்தை சிலாகித்து பேசுகிறவர்களின் பேச்சிலிருந்ததே, அவர்களின் வார்த்தைகளிலிருந்தே, எதிர்கேள்வி கேட்டு, அவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு.  அதனால்தான் ராமனும், ராமாயணமும் அயோத்தியில், வடநாட்டில் அனுமாரைப்போல் தன் வாலில் பற்றிய தீயை நாடு முழுக்க பற்ற வைத்துக் கொண்டு இருக்கும்போது, தமிழ் நாட்டில் ‘வாலாட்டிய’ ராமனின் வாலை ஒட்ட நறுக்க முடிந்தது.

உண்மை இப்படி இருக்க, பெரியார் தொண்டர்கள் கண்மூடித்தனமாக ஒரு விசயத்தை எதிர்ப்பார்கள் என்கிற அர்த்ததில் ரஜினியிடம் சொன்ன எழுத்தாள கூமுட்டையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாறாக, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணத்தை ஆதரிக்கிறவர்கள்தான் அதை படிக்காமலேயே ஆதரிக்கிறார்கள். அதற்கு ரஜினியே உதாரணம்.

மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.

முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.

கம்பராமாயணத்தின் மீது பெரியார் இயக்கத்தினர் கேட்ட கேள்விகள், பதில் சொல்வதற்கு நாதியற்று தலைமுறை தாண்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

ரஜினிக்கு கண்ணதாசன் மூலமாக பெரியார் இயக்கத்தை குறித்து தவறான தகவலும், கம்பராமாயணத்தின் பெருமை குறித்தும் பேசிய எழுத்தாள புடுங்கிகள் அதற்கு பதில் சொல்லலாமே? தங்களை இன்னும் பெரிய மாமேதைகளாக ரஜினியிடம் காட்டிக் கொள்வதற்கு நல்ல வாய்ப்புதானே? வாங்க… கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.. பரிசை தட்டிக்கிட்டு போங்க..(பரிசு ரஜினி குடுப்பாரு)

இந்து மதம்தான் உலகின் சிறந்த மதம். கண்ணன்தான் கடவுளிகளிலேயே சிறந்தவன் என்று அர்த்தமுள்ள இந்து மதம், யோக மாலிகா, ராக மாலிகா என்று இந்து பெருமையோடு எழுதிக்கொண்டிருந்த கண்ணதாசன், கிறித்துவ பாதிரியார்களின் ‘பாசமான’ ‘கவனி’ப்பால் ஈர்க்கப்பட்டு, சாகும்போது மரணசாசனம்போல் இயேசு காவியம் எழுதிவிட்டு செத்துவிட்டார்.

ஆக, கண்ணதாசனின் சந்தர்ப்பவாதத்தை, தேவைகளுக்கு அடிமையாகிற மனோபாவத்தை குறிப்பிடுவதற்கு வேண்டுமானல், ரஜினியிடம் இலக்கிய கூமுட்டைகள் இப்படி சொல்லியிருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும்:

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்,  கொளுத்த வேண்டியதுதான் பாக்கி.

ஒரு நிமிசம் கம்பராமாயணத்தை பிரிச்சு பார்த்த கண்ணதாசன், அப்படியே ஆனந்தத்தில் அதிர்ச்சி ஆயிட்டாரு. ஏன்னா அதோட ஒவ்வொரு பக்கதிலேயும் நூறு நூறு ரூபாய்களா இருந்தது.

பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. அப்படியே அமுக்கி வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயிட்டாரு. அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

இலக்கிய கூமுட்டைகள் ரஜினிகாந்திடம் இப்படி சொல்லியிருந்தால் அது கண்ணதாசனின் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாகவும். நம்பகத் தன்மை உள்ளதாகவும் இருந்தருக்கும்.லாஜிக்கும் இடிக்காமல் இருக்கும்.

ஆனால், சொல்லமாட்டார்கள்.

 ஏனென்றால் இவர்களும் கண்ணதாசனைபோலவே பணம், புகழ், பிரபலபோதைக்கு அலைகிற எழுத்தாளர்கள்தானே.

அதாங்க காரிய கூமுட்டைகள்.

தொடர்புடையவை:

கம்பராமாயணத்தில் அறிவியல்!

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

46 thoughts on “ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

 1. அய்யா வணக்கம்!

  இந்த பதிவில் உங்களுடைய பக்கத்தில் இருந்தே மட்டுமே பார்க்கிறீர்கள் போல் உள்ளது. ஏனெனில் கண்ணதாசன் மன்னிக்கவும் முத்தையா இயல்பிலேயே கவிஞன் அதனால் கவிரசம் சொட்டும் என் சொல்லப்படுகின்ற கம்பராமாயணத்தின் மேல் காதல் கொண்டு இருப்பதற்கு சாத்தியமுண்டு. தாங்கள் சொல்வது போல் மனதளவில் முழுமையாக நாத்திகனாக மாறாதிருந்த அவர் ஆத்திகமே தனக்கு ஏற்றது என் அப்போது நினைத்து ஏற்றிருக்கலாம். இதில் சந்தர்ப்பவாதம் எங்கிருக்கிறது.

 2. //மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.//

  கலக்கல்

 3. சிந்திக்க வைக்கும் மிக நல்ல கட்டுரை .பாராட்டுக்கள்

 4. கோவிலில் சிலை வழிபாடு செய்பவர்களை கிண்டலடித்துவிட்டு, தனக்கு சிலை வைத்துக் கொண்டு அதற்க்கு மாலை மரியாதை செய்ய வைத்தது, நாமம், குடுமி போன்ற அடையாளம் எதுவும் இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு தாங்கள் மட்டும் கறுப்புச் சட்டையை போட்டுக் கொண்டு கூட்டமாக நிற்ப்பது, வருடா வருடம் பிறந்தநாள் கொண்டாடுவது, ஊரெல்லாம் காக்கா கக்கா போவதற்கு பெரியார் சிலைகள் வைத்தது என்று பெரியார் கட்சிக் காரர்களின் கொள்கைப் பிடிப்பு அபாரமானது.

  http://www.tntj.net/7001.html

  நாத்தீகர்களின் இந்த போலித் தனமான கொள்கைகளை கந்தலாக்கி தொங்க விட்டிருக்கிறார்கள், முடிந்தால் \\பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு. \\ இதையெல்லாம் வைத்துக் கொண்டு பதில் தரவும்.

 5. உங்கள் தலைமை தளபதி அண்ணாதுரை ஏன் அய்யாவின் உயிர் மூச்சான கடவுள் இல்லை என்ற கொள்கையிலிருந்து விலகி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பம்மாத்து பண்ணினார்,இதற்க்கு விளக்கம் சொல்லுங்கள், அப்புறம் கண்ணதாசன் போன்ற சில்லறை தேவதைகளை பார்க்கலாம்.

 6. அற்புதமான விளக்கம்.
  கடவுளை காட்டி பேசி பேசியே மக்களை ஏமாற்றி வைத்திருப்பார்கள்.
  எயித்து பிழைப்பவன் கடவுள் பெருமையை சொல்வது இயற்கை.
  உடல் நோகாமல் அடுத்தவன் உழைப்பில் தின்பவர்கள் கடவுளை போற்றுவதில் வியப்பில்லை.
  மின்சாரம் இல்லை நாட்டில். அதை சரி பண்ண மனிதனால் மட்டுமே முடியும்.
  அதை செய்யாமல் கடவுள் பஜனை செய்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
  உணவு, அடிப்படை வசதிகள் எல்லாம் மனிதனால் மட்டுமே முடியும். கடவுள் என்ற ஒன்றை சொல்லி
  மனிதனால் செயல் படுத்த கூடிய பலவற்றை மறந்து நிற்கிறார்கள்.
  கோவிலுக்கு கொட்டி கொடுபவர்கள், பள்ளிகளில் கழிவறை வசதி செய்ய முன் வருவார்களா?
  அரசின் மருத்துவ வசதிகளை மேம்படுத்த தருவார்களா?
  இதை தனி மனிதன் செய்யாவிட்டாலும் அரசு, தன்னால் இவைகளை செய்ய முடியும் என்று நினைத்து
  செய்ய வேண்டும். கடவுளை நம்பி இருந்தால், நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது.
  கண்ணதாசன் அல்லது கம்பன் இவர்களால் அடிபட்ட சமூகத்துக்கு என்ன நன்மை.
  அடுத்தவன் உழைப்பில் தின்பவர்கள், வெறிபிடித்த மாதிரி பெநாத்திகர் சமூகத்தை எளிய மக்களை கடவுளை காட்டி ஏமாற்றாமல் மனிதனை நம்ப சொல்கிறார்கள்.
  இதில் நோகாமல்ரியாரை, நாத்திகர்களை தாக்குவது வியப்பான விசயமில்லை

 7. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றால் மனித குலம் மற்றும் மனிதம் பற்றியதுதான் அது.

  பொதுவாகவே கடவுள் கசமாளம்னு பினாத்துறவங்கள பார்த்தா எனக்கு பரிதாமா இருக்கும். கண்ணதாசன் போன்ற பச்சோந்திங்கள என்னன்னு சொல்றது!

 8. “உங்கள் தலைமை தளபதி அண்ணாதுரை ஏன் அய்யாவின் உயிர் மூச்சான கடவுள் இல்லை என்ற கொள்கையிலிருந்து விலகி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பம்மாத்து பண்ணினார்,இதற்க்கு விளக்கம் சொல்லுங்கள், அப்புறம் கண்ணதாசன் போன்ற சில்லறை தேவதைகளை பார்க்கலாம்.”

  இதென்னப்பா வம்பா போச்சு சங்கரச்சாரியார் கண்ட பொம்பளைக கிட்ட எல்லாம் போனாரு அதனால் இந்து மதத்தை விட்டு வந்துடுவீங்களா- இந்த கட்டுரைக்கு பதில் பதிவு செய்வது தான் நேர்மை விசயன்

 9. அருமையான பதிவு .. அவ்வளவும் அறிவு சார்பு கேள்விகளே பெரியார் எழுப்பினர் .. ராவணனை தவறாக சித்தரிக்கும் ராமாயணத்தை எரிப்பது தவறு இல்லை .. தமிழர்களை இழிவு படுத்தியே அணைத்து கதை உருவாக்க பட்டது ,, சரி இராவணன் தானே தோற்கடிக்க பட்டன் என்று கூறப்படும் இந்நிலையில் தமிழரிடம் அடி வாங்கிய ராமன் என்று கூற காரணம் . ?? ஏதும் இருந்தால் பகிரவும் .. நான் facebook விலக அனைவரிடத்திலும் எடுத்து செல்கிறேன் .

 10. @vijayan (11:10:25) :
  \\“உங்கள் தலைமை தளபதி அண்ணாதுரை ஏன் அய்யாவின் உயிர் மூச்சான கடவுள் இல்லை என்ற கொள்கையிலிருந்து விலகி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பம்மாத்து பண்ணினார்,இதற்க்கு விளக்கம் சொல்லுங்கள், அப்புறம் கண்ணதாசன் போன்ற சில்லறை தேவதைகளை பார்க்கலாம்.”\\

  நீங்க அண்ணாதுரைகிட்ட இருந்து காந்தி லெவலில் உண்மை சத்தியம் நேர்மை என்று ரொம்ப அதிகம் எதிர் பார்க்கிறீங்க. அவருக்கு பேரு மட்டும் தான் தென்னாட்டு காந்தி. [அதுவும், அவரு கட்சிக் காரனுன்களே வச்சது!!]. மத்தபடி மைசூர்பாகுக்கும் மைசூருக்கும் என்ன சம்பத்தமோ அந்த சம்பந்தம்தான் இவருக்கும் காந்தி கொள்கைகளுக்கும். இவரு கொள்கை மாறினதுக்கு காரணம் வேற ஒன்னும் இல்லை, பதவி ஆசை தான். இது மட்டுமல்ல, காமராஜர் மீது இல்லாத பழிகளைக் கூறியது போல பல தில்லாலங்கடி வேலையைச் செய்துதான் இந்த குள்ள நரிக் கூட்டம் ஆட்சியைப் பிடித்தார்கள். ஒரு நல்ல தலைவன் என்றால் தனக்கு அடுத்து சிறந்த முறையில் தொண்டர்களை வழி நடத்திச் செல்லும் தகுதியானவன் யார் என்பதை தெரிவு செய்யத் தெரிந்தவனாக இருக்க வேண்டும், ஆனால் இந்த மூஞ்சி தேர்ந்தெடுத்தது யாரைத் தெரியுமா? சரித்திரம் காணாத அளவுக்கு ஊழல் பண்ணிய பெருச்சாளி மஞ்சள் துண்டு :(. மக்கள் பிச்சைக் காரர்கள், இவர் உலகின் முன்னணி பணக்காரர், விளங்குமா தமிழ்நாடு? கேட்டால் சங்கராச்சாரியார் சரசம் செய்தார், அதனால் நான் கொள்ளையடிக்கிறேன் என்று ‘பகுத்தறிவு’ ரீதியாக பதில் வரும். இவர்கள் கொள்ளையடிப்பார்கள், சாராயம் விற்ப்பார்கள், ஆனால் அதற்கும் ஆன்மீகவாதி சரசம் செய்ததற்கும் என்ன சம்பந்தம் என்று இவர்கள் வருடா வருடம் நினைவு நாட்களில் மாலை மரியாதையைச் செலுத்தும் அந்த அண்ணா சமாதியில் படுத்துக் கொண்டிருக்கும் அவரது எழும்புக் கூடுதான் பதில் சொல்ல வேண்டும்.

 11. @K Jayadev Das
  /*ஒரு நல்ல தலைவன் என்றால் தனக்கு அடுத்து சிறந்த முறையில் தொண்டர்களை வழி நடத்திச் செல்லும் தகுதியானவன் யார் என்பதை தெரிவு செய்யத் தெரிந்தவனாக இருக்க வேண்டும், ஆனால் இந்த மூஞ்சி தேர்ந்தெடுத்தது யாரைத் தெரியுமா? சரித்திரம் காணாத அளவுக்கு ஊழல் பண்ணிய பெருச்சாளி மஞ்சள் துண்டு*/

  மிக எளிமையான பண்புள்ள தலைவர் பேரறிஞர் அண்ணா
  அவரை இந்த மூஞ்சி என்று சொல்லுவதில் இருந்து தெரிகிறது உன் பார்ப்பன எண்ணம்.

  கலைஞர் ஊழல் செய்வதற்க்கும் அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம்
  சரி அண்ணாதான் தன்க்கு பின் கலைஞரை தப்பாக தேர்ந்துவிட்டார் என்றே வைத்துகொள்வோம்
  ஆனா அப்படிபட்ட கலைஞர் படைத்த
  அந்த கடவுகளை என்ன செய்ய
  படைத்த அந்த கயவனை என்ன செய்யலாம்?

 12. @K Jayadev Das
  சமற்கிருதத்தில் பெயர் வைத்துள்ள நீ உங்க தாய்மொழி சமற்கிருதத்தில் எழுத வேண்டியதானே.
  சமற்கிருதத்திலேயே பேச வேண்டியதானே.
  வந்தேறிய ஆரிய கூட்டங்கள் எல்லாம் தமிழர்களை பற்றி
  இல்லாததும் பொல்லாததும் பேசுது
  எல்லாம் நேரம்!

 13. @அ.ப.சிவா
  /*இதென்னப்பா வம்பா போச்சு சங்கரச்சாரியார் கண்ட பொம்பளைக கிட்ட எல்லாம் போனாரு அதனால் இந்து மதத்தை விட்டு வந்துடுவீங்களா*/
  அண்ணே உங்களுக்கு எம்புட்டு அறிவு
  என்ன அறிவு என்ன அறிவு.

  மக்கள் சங்கரச்சாரியாரின் சல்லாபத்தால் இந்து மதத்தை எதிர்க்கவில்லை
  இந்து மதம் தமிழ் மொழிக்கு,
  தமிழ் இனத்துக்கு, தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது,
  ஆரிய இந்து மதம் முழுவதும் ஆபாசம் நிறைந்தது
  அதை தமிழர்கள் மேல் திணிக்கிறது ஆரிய கூட்டம் அதை எதிர்ப்பது தமிழனின் கடமை

 14. நானும் அந்த நிகழ்வில் இருந்தேன்.எஸ் ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது கிடைத்ததுக்காக பாராட்ட வந்த விழாவில் தான் ரஜினி இப்படி பேசினார்,எனக்கு கடுப்பு இந்த ஆளுக்கு இலக்கியம் தெரியலைன்னா எஸ் ரா வாழ்க என்று போயிருக்கலாம், இவர் இப்படி பேச போறார் என்று தான் வைரமுத்து முன்பே கிளம்பி போய் விட்டார் போலும்.

  ரஜினியை எல்லோரும் கிறுக்கன் என்பார்கள் , நான் அன்று தான் அதை உணர்ந்தேன்.

  இலக்கியவாதிக்கு பாராட்டு விழாவில் கடவுள் இருக்கிரார், அதுவும் படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளி இருப்பார், போடா……………….என்னை படைத்தது என் அப்பா அம்மா ய்யா என்று கடுப்போடு கிளம்பிவந்தேன்.

 15. pugal
  அ.ப.சிவா சொன்னதில் என்ன தவறு? இந்து மதம் என்பதே ஒழுக்கக் கேடும் ஊதாரித்தனம் நிறைந்தது் என்பதற்ககவும் அததை எதிர்த்தார்கள்.

  மற்றவர்களுக்கு தெளிவாக பதில் சொன்ன நீங்கள், அ.ப.சிவாவிற்கு பதில் குழுப்பமாக சொல்லியிருக்கீறிரு்கள்.
  உங்கள் பதிலில் அ.ப.சிவா நீங்கள் கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கம் கூடுதலாக இருக்கிறது.

 16. \\சமற்கிருதத்தில் பெயர் வைத்துள்ள நீ உங்க தாய்மொழி சமற்கிருதத்தில் எழுத வேண்டியதானே. சமற்கிருதத்திலேயே பேச வேண்டியதானே.\\ சம்ஸ்க்ருதம் தெரிஞ்சா எழுதிடுவேன், ஆனா எனக்கு தெரியாதே என்ன பண்றது? அது சரி, தமிழனாகிய நீங்க எதுக்கு வெள்ளைக்காரன் கண்டுபுடிச்ச கம்பியூட்டருல பிளாக் படிக்கிறீங்க? தமிழன் கண்டுபுடிச்ச ஓலையையும், எழுத்தாணியையும் வச்சு எழுதின குறிப்பேடுகளை மட்டும் படிக்க வேண்டியதுதானே? நீங்க மட்டும், செல் போன், வாஷிங் மெசின், டிவி ன்னு அத்தனையையும் எவனோ கண்டுபுடிச்சதை நாள் பூரா யூஸ் பண்ணுவீங்க, நான் மட்டும் சம்ஸ்க்ருதத்துல எழுதிகிட்டு இருக்கனுமா? என்ன லாஜிக் இது? நல்லது எங்கேயிருந்தாலும் எடுத்துக்கணும், அவ்வளவுதானே? அதே மாதிரி அண்ணாதுரை தமிழன் என்பதற்காக அவரு பண்ணின அயோக்கியத் தனங்களை ஏத்துக்க முடியுமா? இதைச் சொல்வதால் நான் பார்பனன் ஆகிவிடுவேன் என்றால் காமராஜர் மிகச் சிறந்த முதல்வர் என்று சொன்னால் நான் நாடார் ஆகிவிடுவேனா? என்ன பேத்தல் இது. “தலித் என்பதால் ராசா யோக்கியன்” என்று மஞ்சள் துண்டுவின் கொள்கையைப் போல நீங்கலாக ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அதற்க்கு நான் பொறுப்பல்ல.

 17. \\வந்தேறிய ஆரிய கூட்டங்கள் எல்லாம் தமிழர்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசுது எல்லாம் நேரம்!\\ ஆப்பிரிக்கா காரன் மாதிரி கருத்த தோலுடையவர்கள் மட்டுமே இந்திய மண், தட்பவெட்பநிலை தோற்றுவிக்கும் என்று சொல்கிறார்கள். நீங்களோ, உங்களது உறவினர்களில் பலரோ நல்ல வெள்ளைத் தோளோடு இருக்கக் கூடும், அப்படியென்றால், அதெல்லாம் கலப்படம் என்று தான் பொருள். யார் எங்கிருந்து வந்தார்கள் என்று யாருக்குத் தெரியும்? இன்றைக்கு நான் தமிழன் அவ்வளவுதான். அப்படிப் பார்த்தால் கருணாநிதியை ஆந்திராவுக்கும், ஜெயலலிதாவை கர்நாடகாவுக்கும் ஓட்ட வேண்டும், செய்வீர்களா?

 18. பாப்பான் தமிழனுக்கு புரியாத பாஷையில் ஆபாசத்தை எழுதினான்,மனிதகுலத்தை மேம்படுத்தவந்த திராவிட இயக்கத்தினர் மேடைதோறும் நம் மொழியில் மக்களுக்கு புரியும் வகையில் சிற்றின்ப சேற்றை அள்ளி அள்ளி வழங்கினார்கள், தனிப்பட்ட வாழ்விலும் யாருக்கும் முன்னுதாரமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள்.சில உதாரணங்கள்:இவரோ மனைவியை இழந்தவர் அவரோ கணவரை இழந்தவர் இருவரும்தனியறையில் என்ன பேசி இருப்பார்கள் தம்பி.நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல,அவள் கற்பில் சிறந்த கண்ணகியுமல்ல.

 19. \\இந்து மதம் தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது, ஆரிய இந்து மதம் முழுவதும் ஆபாசம் நிறைந்தது. அதை தமிழர்கள் மேல் திணிக்கிறது ஆரிய கூட்டம் அதை எதிர்ப்பது தமிழனின் கடமை.\\ ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று வைணவ, சைவ மார்க்கங்களை பரப்பிய பக்தர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள், நாலாயிரத் திவ்ய பிரபந்தம், பெரிய புராணம் போன்ற நூல்களையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. வணிகர், அரசர், இடையர், வேளாளர் என்று எல்லா சமூகத்தையும் சேர்ந்தவர்கள். இங்கே ஆரிய கூட்டம் என்பது எங்கேயிருந்து முளைத்தது என்று தெரியவில்லை. அதுசரி, அதென்ன தமிழன் பண்பாடு? அதை யார் இன்றைக்கு பின்பற்றுகிறார்கள் என்று தெளிவு படுத்த முடியுமா? இந்து மதம் இந்தப் பண்பாட்டுக்கு எந்த விதத்தில் எதிரானது என்று சொல்ல முடியுமா? சாராயத்தைக் குடித்து விட்டு நாடு ரோட்டில் விழுந்து கிடப்பது, மணல், சந்தனக் கட்டை என்று தமிழகத்தின் எல்லா வளத்தையும் கேரளாவுக்குக் கடத்துவது, எத்தனை ஊழல் பண்ணினாலும் எதிர்த்துக் கேட்காமல் பணத்துக்கும், சாராயத்துக்கும் ஓட்டு போடுவது- இதுதான் இன்றைய தமிழனின் புண்ணாக்குப் பண்பாடு, இதில் பெருமை என்ன வேண்டிக் கிடக்கிறது?

 20. \\ஆனா அப்படிபட்ட கலைஞர் படைத்த அந்த கடவுகளை என்ன செய்ய படைத்த அந்த கயவனை என்ன செய்யலாம்?\\ மஞ்சள் துண்டு உங்களது பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர், பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் என்றும் தன்னைச் சொல்லிக் கொள்பவர். ஆனால் செய்தது என்ன? ஊர் முழுவதும் சாரயக் கடையைத் திறந்துவிட்டு காசு பார்த்தவர், நாட்டைக் காட்டிக் கொடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் மாதிரி பல ஊழல்களைப் பண்ணி பாடையில் போகும்போது உலகிலேயே முன்னணி பணக்காரனாக போகவேண்டும், அவருக்குப் பின்னர் அவரது பிள்ளைகள் கொள்ளையடிக்க வேண்டுமென்பதற்காக ஆறு கோடி தமிழர்களின் பிழைப்பில் மண்ணை வாரிப் போட்டவர். இந்து மதம் மூட நம்பிக்கையானது, பாப்பனன் ஊரை ஏய்க்கிறான் என்று சொல்லி விட்டு ஆட்சியைப் பிடித்த பெரியாரின் தொண்டன் நாட்டுக்கு எதைப் பிடுங்கினான் என்று கேட்டால், கடவுளைக் கையைக் காண்பிக்கிறீர்களே? ‘எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை கிடையாது, ஆனால் கடவுளுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது’ என்ற மஞ்சள் துண்டுவின் கொள்கையைப் போல தெளிவான கொள்கை உமக்கும் இருக்கிறது!!

 21. பக்தி என்ற ஒன்று புரியாத நாத்திகர்களுக்கு கம்ப ராமாயணமும் புரியாது.

 22. உலகப் பார்வையின்றி, ஒரு மதத்தை மட்டுமே குறித்து எதிரான கருத்தை தாங்கள் முன் வைப்பது நியாயமல்ல.

 23. pugal
  கலைஞர் ஊழல் செய்வதற்க்கும் அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம்
  சரி அண்ணாதான் தன்க்கு பின் கலைஞரை தப்பாக தேர்ந்துவிட்டார் என்றே வைத்துகொள்வோம்
  ஆனா அப்படிபட்ட கலைஞர் படைத்த
  அந்த கடவுகளை என்ன செய்ய
  படைத்த அந்த கயவனை என்ன செய்யலாம்?

  தம்பி புகழு…

  ஒன்றே குலம்
  ஒருவனே தேவன் உங்களு சொன்னதுதான்

  எது அக்குலம்
  எவன் அத்தேவன்..சொல்லுங்கோ நமக்கு அவ்வளவு அறிவு இல்லையுங்கோ…

 24. ////முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.////

  என்னிடமும் இக் கேள்வி தொடர்கின்றது. யாரும் பதில் சொல்ல முற்பட்டார்களா தெரியாது.
  கண்ணதாசன் என்ற பெயரில் தி.மு.க வில் கூட இருந்தார்.
  அண்ணாவின் பக்கமும் தவறுதான்.

 25. ஜெயதேவ்,
  சும்மா பிரிச்சு மேயறீங்களே… கலக்குங்க
  I like your debat 🙂

 26. முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காமல் போனது பற்றி ஷங்கர்…

  “இந்த முதல்வன் கதையையே எனக்காகத்தான் ஷங்கர் பண்ணார்… ஆனா நான் நடிக்க முடியாம போச்சு!”

  நாலடியார் அவர்கள் – நாலாம் வகுப்பு மாணவருக்கான ” நாலடியார்” பாடல்களை படித்து பக்குவமடையவேண்டும். ஹி..ஹி..ஹி.. நம்ம …….ள அடிச்சுக்கணும். ஆசை யாரைத் தான் விட்டு வைத்துள்ளது???

 27. முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காமல் போனது பற்றி ஷங்கர்…

  “இந்த முதல்வன் கதையையே எனக்காகத்தான் ஷங்கர் பண்ணார்… ஆனா நான் நடிக்க முடியாம போச்சு!”-விஜய்

  நாலடியார் அவர்கள் – நாலாம் வகுப்பு மாணவருக்கான ” நாலடியார்” பாடல்களை படித்து பக்குவமடையவேண்டும். ஹி..ஹி..ஹி.. நம்ம …….ள அடிச்சுக்கணும். ஆசை யாரைத் தான் விட்டு வைத்துள்ளது???

 28. அண்ணா வணக்கம் நலமா?
  கம்பனா? காமுகனா? திருவாரூர் தங்கராசு அய்யா எழுதியது. கம்பனை பிரித்துமேய்ந்ததிருப்பார், படித்துள்ர்களா?

Leave a Reply

%d bloggers like this: