‘நான் தேவன்டா’ சிவாஜியின் பெருமை-‘கண்ணதாசன் குழந்தை மாதிரி’- ; இளையராஜா மட்டும்…

நீங்கள் ஆதரிக்கும் இளையராஜா பிராமண ஆதரவாளராக தானே இருக்கிறார்? அவரை மட்டும் விமர்சிக்க மறுப்பது ஏன்

தமிழ்மகன், திருநெல்வேலி.

இதுகுறித்து நான் ஏற்கனவே பல முறை விளக்கி இருக்கிறேன். தங்கம் வாசர்களுக்கு அதை மீண்டும் தருகிறேன்.

தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை.

99 சதவீதம் இளையராஜா நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதைபாடறியேன்படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா.

சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியதுதான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். தியாகய்யரையே மெட்டுக்கு பாட்டெழுத வைத்தார்.

அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது.

 “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.

ஆனால் அவரை விமர்சிப்பவர்கள், இதுபோன்ற அவருடைய சாதனைகளை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை உள்ள திரை இசை அமைப்பாளர்களை பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவோ, அல்லது பார்ப்பனியத்தை ஆதரிக்காதவர்களாகவோ இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை சிறந்த திரை இசை அமைப்பாளர்களாக மட்டும் பார்க்க தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இளையராஜாவை மட்டும் அப்படி பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக எதிர்த்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதிய பார்ப்பன மோகியான கண்ணதாசனை அதையெல்லாம் தாண்டி, ‘அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்றும், இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பார்ப்பன எதிர்ப்பா? இளையராஜா மீதான வெறுப்பா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்

தமிழ் திரைப்படங்களில் வெற்றி பெற்று பெரிய நடிகராக ஆகி இருந்தால், மோகன்லால் மலையாள சினிமாவில் தமிழர்களுக்கு எதிரான காட்சி வைத்திருக்க மாட்டார் என்ற உங்கள் கூற்று எப்படி சரி?

-தமிழன், சென்னை.

தமிழ் உணர்வு பொங்கி வழியும் நமது பச்சைத் தமிழன் விஜய், கேரளாவில் மலையாளிகளிடம் செல்வாக்கு பெற்றவர் என்பதினால் முல்லை பெரியாறில் அமைதி காத்தாரே அதுபோல்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

மோகன்லாலும் முல்லைப் பெரியாறும் தமிழ் சினிமா வீரர்களும் ராஜபக்சேவும்

ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)

வெங்காயம்: கலங்க வைத்த கூத்துக் கலைஞன்; இயக்குநர் சேரனுக்கு நன்றி

பாராட்டுக்குரிய சேரனுடன் ராஜ்குமார்

னிதர்களை இழிவாக நடத்துகிற மதம், ஜாதி அவைகளின் தொடர்ச்சியான மூடநம்பிக்கை; இவைகளின் மீதான கோபம், வெறுப்பு, பிரபலங்களின், ‘அறிவாளி’களின் முட்டாள்தனத்தால் அவர்கள் மீது ஏற்படுகிற அலட்சியம் என்று பல நிலைகளில் பெரியார் பயன்படுத்திய சொல் ‘வெங்காயம்’.

பல மோசடி மூடர்களின் தோலை ‘உரி’ த்த பெரியார், ‘உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லை’ என்ற அர்த்தத்தில்தான் ‘வெங்காயம்’ என்ற சொல்லை பயன்படுத்தினார்.

‘ஒன்றுமில்லை’ என்ற அர்த்ததில் பெரியார் உச்சரித்த ‘வெங்காயம்’ என்ற சொல்லுக்கு தமிழக அரசியலில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

பெரியாரின் உணர்வைப் போலவே, கோபம், அலட்சியம். வெறுப்பு என்று சமூக பிரச்சினையை அலசி இருக்கிறது. சங்ககிரி ராஜ்குமாரின் ‘வெங்காயம்’.

இரண்டாம் முறையாக வெளியாகி இருக்கிறது.

முதல் முறை வெளியானபோது, திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே… ‘ஓடி’ முடிந்துவிட்டது.

சரி இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று முடிவான பிறகு, இயக்குநர் சேரன் பெருமையுடன் வழங்கும் என்ற வித்தியாசமான முறையோடு தினத்தந்தியில் வெளியான விளம்பரம் பார்க்க தூண்டியது.

CHALLENGE நிறுவனத்தின் இந்த விளம்பர யுக்தி, பல புதிய பார்வையாளர்களை படத்திற்கு பெற்று தந்திருக்கிறது.

படம் புதிய யுக்திகளை குறிப்பாக வசனம் பேசும் முறை, கிராமப்புற நடிகர்களின் நடிப்பு இதுவரை எந்த படத்திலும் இவ்வளவு இயல்பாக வந்ததில்லை.

அதிலும் குறிப்பாக தெருக்கூத்து கலைஞராக வருகிறவரின் யதார்த்தமான நடிப்பு, இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒன்று.

அவர், அவருடைய மகள், மகன் மூவரும் கலங்க வைக்கிறார்கள். படம் பார்த்த யாருடனும் இந்த மூவரும் இரண்டு நாட்கள் அவர்களின் தூக்கத்தில் கூட பயணிப்பார்கள்.

இந்த படத்தை எடுத்த சங்ககிரி ராஜ்குமாருக்கும் தயாரிப்பாளரான அவருடைய தந்தைக்கும் நன்றி சொல்வதைவிட,

இதை பலரும் பார்க்கும் வண்ணம் தன் பணத்தை வாரி இறைத்து தைரியத்துடன், சமூக பொறுப்புடன் மீண்டும் வெளியிட்டிருக்கிற இயக்குர் சேரனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு

ஜோதிடத்தால், ஏற்படுகிற அழிவை காட்டுகிறது படம்.

வேதத்தில், மகாபாரதத்தில், ராமாயணத்தில் இருக்கிறது ஜோதிடம். அதன் மூலவர்கள் பார்ப்பனர்களே. அவர்களிடம் இருந்தே மற்றவர்கள் கற்றுக் கொண்டார்கள். படத்தில் வரும் மூன்று ஜோதிடர்-சாமியார்களில் ஒருவரைகூட பார்ப்பனராக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் காட்டவில்லை.

ஆனாலும், ஒரு பார்ப்பனர்கூட இந்த படத்தை பாராட்டி எழுதவில்லை என்பதை பெரியாரின் தொண்டரான இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் குறித்து வைத்துக் கொண்டு அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளவேண்டும்.

தொடர்புடையது:

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

மெரினா படம் சென்னையைச் சரியாகதானே காட்டியது?

-சிவகாமியின் செல்வன், திருத்துறைப்பூண்டி

சென்னையைச் சரியாகக் காட்டவில்லை. ஆனால், மோசமாகவும் காட்டவில்லை. மற்றபடி தமிழ் சினிமா சென்னையை, சென்னை மக்களைச் சென்னை மொழியை. இழிவானதாக இழிவானவர்களாகத் தொடர்ந்து சித்திரித்துக் கொண்டு வந்திருக்கிறது.

குறிப்பாகச் சென்னை மொழியை மிகக் கேவலமாக அவமானபடுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் பேசுவது போன்று செயற்கையான, சென்னை தமிழைச் சென்னையில் நீங்கள் எங்குமே பார்க்க முடியாது.

சென்னை தமிழை இப்படிக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தியதற்கான முழுக் காரணமும் சென்னை வாழ் பார்ப்பனர்களே.

சென்னையின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்ட, வன்னிய, மீனவ மக்களை; பார்ப்பனர்களின் நாடகங்களில் ரவுடிகளாகச் சித்திரித்து, அந்தக் கதாபாத்திரத்தை பார்ப்பனரே ஏற்று, இழிவான உச்சரிப்புகள், செய்கைகள் மூலம் சென்னை மக்களையும் இனிய சென்னை மக்கள் மொழியையும் கொச்சைப்படுத்தினார்கள்.

அதில் சோ போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜாம்பஜார் ஜக்கு போன்ற வேடங்களில் அவர் பேசிய மொழி இந்த உலகத்தி்ல் எங்கேயும் யாராலும் பேசப்படாத மொழி.

நாடகத்தின் தொடர்ச்சியாகச் சினிமாவுக்கு வந்த பார்ப்பனர்கள், சென்னை சேரி மக்களுக்கு எதிரான கருத்தோடும், கதாபாத்திரத்தோடுமே வந்தார்கள். மதுரை மற்றும் கோவை பகுதிகளில் இருந்து சினிமாவிற்கு வந்த இளைஞர்களும்கூட, சென்னை மொழியைக் குறித்துப் பார்ப்பனர்கள் கற்றுத் தந்த கண்ணோட்டத்தோடே படம் எடுத்தார்கள்.

உண்மையில் சென்னை தமிழ் என்பது, சென்னையில் மட்டும் பேசப்படுகிற மொழியல்ல; அது வடஆற்காடு, திருவண்ணாமலை. விழுப்புரம் மாவட்டத்து பேச்சு மொழி. மிக அதிகமாக வட ஆற்காடு மாவட்ட மொழி.

கஸ்மாலம், நாஷ்ட்டா போன்ற சொற்கள் எல்லாம் உருது சொற்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் உருது பேசுகிற இஸ்லாமியர்கள் அதிகம். தாழ்த்தப்பட்ட மக்களும், உருது இஸ்லாமியர்களும் நெருங்கி வாழ்கிற பகுதிகளில் உருது வார்த்தைகள் கலந்து பேசுகிற தமிழே சென்னை தமிழாக அறியப்படுகிறது.

சரியாகச் சொன்னால், சென்னை தமிழ் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான ஒற்றுமையின் அடையாளம். அதற்குச் சாட்சியாகச் சென்னை, வேலூர், ஆற்காடு, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளின் மத்தியில் இஸ்லாமியர்களின் பச்சை கொடி பறப்பதை பார்க்கலாம். இருவரும் கலந்தே வாழ்கிறார்கள்.

சினிமாவில், சென்னை தமிழை ஓரளவுக் சரியாகப் பயன்படுத்திய ஒரே தமிழ்த் திரைப்படம், வெங்கட் பிரபுவின் சென்னை 28.

சென்னை மக்களின் வாழ்க்கை குறித்துச் சரியான அரசியல் பார்வையோடு திரைப்படம் எடுக்கக் கூடியவர் இன்றைய இயக்குநர்களில் இயக்குநர் எஸ். பி. ஜனநாதனுக்கு இருப்பதாக உணர்கிறேன். அதற்கான அறிகுறிகள் அவரின் ‘ஈ’ படத்தில் இருந்தது.

‘சென்னையில் குறிப்பாக மீனவ மக்களோடு வளர்ந்தவன். சென்னையைக் குறித்துச் சிறப்பான படம் எடுப்பது தனது லட்சியம்’ என்றும் என்னிடம் தெலைபேசியில் பேராண்மை படம் விமர்சனம் தொடர்பாகப் பேசும்போது இயக்குநர் எஸ் பி ஜனநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.

ரேடியோவில் ஒலிபரப்பான பேட்டி என்று நினைக்கிறேன், ஒருமுறை எழுத்தாளர் சிவசங்கரி “ச்சீ என்ன தமிழ் இதெல்லாம்..? கஸ்மாலம், நாஸ்ட்டா, கயித, குந்து’ என்று அலுத்துக்கொண்டார்.

இப்படிச் சிவசங்கரி மட்டுமல்ல; தாடி வைச்சிக்கிட்டுத் தன்னை எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்கிற திருப்பூர் கண்ணனோ, கோபாலனோ பெயர் நினைவில்லை அவர் உட்பட ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

‘ஸ்நானம், ஜலம், பேஷா, நன்னா, நேக்கு, நோக்கு, உக்காத்தி வைச்சி’ இதெல்லாம் உங்களுக்குத் தமிழா தெரியும்போது, ‘கஸ்மாலம், நாஸ்ட்டா, பேமானி, கயித, குந்து’ இதெல்லாம்தான் எங்களுக்குச் சிறப்பான தமிழ், இதுதான் எங்களின் செம்மொழி தமிழ்.

சமஸ்கிருதம் கலந்து பேசினால், உயர்வான தமிழ், மணிபிரவாள நடை.

உருது கலந்து பேசினால் மட்டமான தமிழ், இழிவான நடையா?

இது வெறுமனே மொழி பிரச்சினையல்ல. ஆயிரம் ஆண்டுகால அரசியலே இதுதான்.

*

தங்கம் மார்ச் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

தீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவி

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கப்போகிறதாமே?

-சையது, திருச்சி.

கையில் தீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவியின் சிலை  இனி வேறு எந்த நாட்டை போய் சூறையாடலாம் என்று அடையாளம் காட்டுவதற்காகதான் என்று எப்போதோ படித்த ஞாபகம்.

அரபு நாடுகளின் மேல் அமெரிக்கா போர் தொடுப்பதற்கு முன், தன் ஏவல் நாய் இஸ்ரேலை ஏவி விட்டு ஆழம் பார்த்துதான் ஆட்டத்தை ஆரம்பிக்கும். சுதந்திர தேவியை போல் அமெரிக்காவிற்கு விளக்கு பிடிப்பதற்கு சவுதி அரேபியா போன்ற நாடுகளும் பாலைவன பகுதியில இருக்கத்தானே செய்கிறது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

ஒபாமா; அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளைமாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

?!?!…தமிழர்களாமே…?!?!

பெரியார், அம்பேத்கார் இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையாமே

சிவபாலன், தஞ்சாவூர்.

.சிதம்பரம், நாராயணசாமி இவர்கள் எல்லாம் பச்சைத் தமிழர்களாமே?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

காதலர் தின எதிர்ப்பு; கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவிற்கு பண்பாடு

உங்களது காதலர் தினம் ஆதரவு இந்து அமைப்புகள் எதிர்ப்பதால் தான் என்பது என் குற்றச்சாட்டு

-சக்தி, சென்னை.

உங்கள் கேள்வியில் பாதி உண்மை இருக்கிறது.

நான் காதலர் தினத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், காதலை ஆதரிக்கிறேன்.

காதலர் தினத்தை எதிர்க்கிற மத பழமைவாதகளின் மோசடியைதான் எதிர்த்தேன். எல்லா மதவாதிகளுமே மத அடிப்படையில் காதலை, காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்.

இந்து அமைப்புகள் அதை நாட்டுப்பற்று, பண்பாடு என்ற பெயரில் எதிர்ப்பதை கண்டிக்கிறேன்.

கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவுக்கு பண்பாடுகளை கொண்டவர்கள் காதலர் தினத்தை எதிர்ப்பது வேடிக்கைதான்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

மூத்த காதல் இணையர்களுக்கு பாராட்டு..

இலக்கியத்தில், அரசியலில் உடன் பிறந்த வியாதிகள்

பெரியாரோடு இருந்தவர்கள் என்று சொல்லப்பட்ட, இரா.செழியன், க. ராசாராம், ஆர்.எம். வீரப்பன் போன்றவர்களும்,

தமிழ்த் தேசியம், விடுதலை புலி ஆதரவு, திராவிட அரசியல், தலித் அரசியல் என்று பேசுகிற பலரும் அவர்களின் அரசியலுக்கு நேர் எதிராக இருக்கிற சோ, இந்து ராம், காலச்சுவடு, தினமணி போன்ற பார்ப்பனர்களிடமும், இன்னும் சில பார்ப்பன ஊடகங்களிடமும் மிகவும் மரியாதையாகவும், இணக்கமாகவும் அவர்களுடன் சேர்ந்தும் செயல்படுகிறார்களே?

-தமிழ்.

‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. துரியோதனனின் அரசவைக்கு வர இருக்கிற கிருஷ்ணனுக்கு ‘யாரும் எழுந்து மரியாதை செய்யக் கூடாது’ என்பது மன்னன் துரியோதனனின் உத்தரவு.

அப்படியிருந்தும் கிருஷ்ணனின் வருகையின்போது ‘விதுரன்’ எழுந்து மரியாதை செய்வது மட்டுமல்லாமல், கிருஷ்ணனை ஆதரித்தும் பேசுவார். உடனே துரியோதனன், விதுரனைப் பார்த்துக் கோபத்துடன்,

“சிற்றப்பா, உடன் பிறந்த வியாதி நீ” என்பான்.

இந்த வசனம் துரியோதனனின் சிற்றப்பா விதுரனுக்கு மட்டும்தானா பொருந்துகிறது?

தொடர்புடையவை:

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

கலைஞன் பரப்பிய வெளி: சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

குஷ்புவின் தமிழ் உணர்வும் திமுகவின் தமிழ் விரோதமும்

நக்கீரனுக்கு நன்றி

இன்றைய இளைய தலைமுறைகளிடம் தமிழ்மொழி உணர்வு குறைந்துள்ளதாக குஷ்பு சொல்கிறாரே?

-மொய்தீன், திருநெல்வேலி.

ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், அவருடைய அண்ணன் மகன் தயாநிதி அழகிரி இவர்களின் ‘தமிழ் உணர்வை’ வைத்து அந்த முடிவுக்கு வந்திருப்பாரோ?

தமிழ் மொழிக்காகவே தன் கட்சியை அர்பணித்திருப்பதாக சொல்லுகிற திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடைபெற்ற கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை குஷ்புவிற்கே அளித்திருந்தனர்.

மேடையில் தமிழ் உணர்வும், பகுத்தறிவும் பொங்கி வழிகிற அதன் தலைவர்களுக்கு முன், ‘பெரியார் கொள்கை’ என்று சொல்வதற்கு பதில் ‘பெரியார் கொள்ளை’ என்று பேசியவர்தான் குஷ்பு.

தமிழ் சரியாக பேச வராத தன்னை, முக்கியமான தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, நடத்துனராக நியமித்து, அதில் தவறாக பேசிய பிறகும் தனக்கு கட்சியில் முக்கிய பதவியும் தந்த தன் கட்சியின் தமிழ் உணர்வை கிண்டல் செய்கிறாரோ என்னவோ?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

மிழ் சினிமாவில் வரலாற்று படங்களை குறிப்பாக தமிழகத்து சுதந்திர போராட்ட வீரர்களான, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த,  பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. தமிழ் தியாகிகளை பற்றி படம் எடுத்த பந்துலு ஒரு கன்னடக்காரர்.  அவர் மீதான மதிப்புக்கு இதுவும் காரணம்.

எம்.ஜி.ஆர் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் வித்தியாசமான பின்னணியும் பிரம்மாண்டமும் கொண்ட படம். அதை தயாரித்து இயக்கியவரும் பி.ஆர். பந்துலுவே.

மகாபாரதத்தின் கிளைக்கதையாக அமைந்த ‘கர்ணன்’ திரைப்படம் ஒரு புராணப்படமாக அறியப்பட்டாலும், என்னை பொறுத்தவரை ‘கர்ணன்’ சிறந்த அரசியல் திரைப்படம்.

எனக்கு தெரிந்த வரையில், ‘கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு, மகாபாரதத்தின் கிளைக்கதையாக, பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பார்வையோடு இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பரதன் இயக்கிய ‘வைசாலி’ மலையாள படம் மிக முக்கியமான ஒன்று.

தொலைக்காட்சியில் மட்டுமே ‘கர்ணன்’ படத்தை பார்த்து வியந்திருக்கிறேன். மீண்டும் திரைக்கு வரவிருக்கிற இந்த படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பேரார்வத்தில் இருக்கிறேன்.

என் பேரார்வத்திற்கு காரணம் பி.ஆர். பந்துலு, இந்த படத்தில் நுட்பமான வசனங்களுக்கு சொந்தக்காரரான சக்தி கிருஷ்ணசாமி; இவர்தான் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வசனம். மற்றும் சிவாஜி கணேசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி.

கோபம், பெருமிதம், வெட்கம். கருணை, கம்பீரம், காதல், கண்ணீர் கலந்து நம் கண்முன் கர்ணனை நிறுத்திய சிவாஜியின் நடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.

பெருமிதம்

அதுபோல் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் பாடல்கள்; கர்நாடக சங்கீதத்தின் நுட்பம் என்றால், அது கே.வி. மகாதேவன்தான் என்று ஒரு அடையாளம் உண்டு, அது உண்மையும்தான்.

காரணம், பக்தி இலக்கியங்களை திரைப்படமாக்குவதில் சிறந்தவராகவும், நாட்டியத்திற்கும் நாதஸ்வர இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட, ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற மிகச் சிறந்த பொழுது போக்கு படங்களை எடுத்த ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் கே.வி. மகாதேவன், ‘கர்நாடக இசை மேதை’ என்பதை நிரூபித்திருப்பார்.

‘கர்ணன்’ திரைப்படம் கே.வி. மகாதேவைனை போலவே, விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கர்நாடக மற்று இந்துஸ்தானி இசையின் மேதைகளாக அடையாளம் காட்டியது.

கேட்ட மாத்திரத்தில் யாரையும கலங்க வைக்கிற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்.. பாடலும், ‘ஆயிரம் கரங்கள் நீட்டி.. அணைக்கின்ற தாயே போற்றி…’  ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…’

’இரவும் நிலவும் வளருட்டுமே.’. என்று இந்துஸ்தானி இசையில் அமைந்த இனிமை, ‘என் உயிர் தோழி கேளொரு செய்தி..’ என்ற இன்னொரு இனிமை என்று விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் விரிந்த இசையறிவுக்கு இவைகள் சாட்சி.

நம்பிக்கை துரோகம், நயவஞ்சகம், தந்திரம், மோசடி. உறவாடி கழுத்தறுப்பது என்று இன்றைய நிகழ்கால அரசியலோடு பொருத்தி பார்ப்பதற்கு மட்டுமல்ல; இந்திய அரசியலில் என்றைக்குமே நிகழ்கால அரசியலாக இருக்கிற பார்ப்பன உயர்வும், சத்திரியர்களின் கவுரமான அடிமைத்தனமும், பார்ப்பன, சத்திரியர்களின் சூத்திர வெறுப்பும்,  சூத்திர இழிவும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

யாராலும் வெல்லமுடியாத அளவிற்கு கர்ணன் பெரிய வீரன், அறிவாளி, நல்லவன், உயர்ந்த குணங்கள் கொண்டவன்; ஆனாலும் துரோணாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களால் மட்டுமல்ல, பிஷ்மர்  போன்ற சத்திரிய ‘நல்லவர்’களாலும் அவன் அவமானப்படுத்தப்படுகிறான், காரணம் அவன் சூத்திரன்; என்று பதிவு செய்திருக்கிறது இந்த படம்.

அதுமட்டுமல்ல, கடவுள் கண்ணன் ஒரு நியாயவாதியல்ல, காரியவாதி. கவுரவர்களுக்கு ஒரு சகுனி. அதே சகுனி வேலையை பாண்டவர்கள் சார்பாக செய்வதற்கு, ஒரு கடவுள் கண்ணன் என்று பதிவு செய்திருக்கிறது படம்.

இந்த படம் எடுத்தவர்களுக்கு இதை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இருந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், படம் அதை சொல்லியிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால், தொலைக்காட்சியில் பார்த்த இந்த படத்தை, திரையரங்கில் சென்று பார்த்த பிறகு என் கருத்துக்களில் எதுவும் மாற்றம் இருந்தால், இந்த படம் குறித்து மீண்டும் எழுத வாய்பிருக்கிறது.

வணக்கம்.

மார்ச்11, 2012

தொடர்புடையவை:

பக்திப் படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு