சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

மெரினா படம் சென்னையைச் சரியாகதானே காட்டியது?

-சிவகாமியின் செல்வன், திருத்துறைப்பூண்டி

சென்னையைச் சரியாகக் காட்டவில்லை. ஆனால், மோசமாகவும் காட்டவில்லை. மற்றபடி தமிழ் சினிமா சென்னையை, சென்னை மக்களைச் சென்னை மொழியை. இழிவானதாக இழிவானவர்களாகத் தொடர்ந்து சித்திரித்துக் கொண்டு வந்திருக்கிறது.

குறிப்பாகச் சென்னை மொழியை மிகக் கேவலமாக அவமானபடுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் பேசுவது போன்று செயற்கையான, சென்னை தமிழைச் சென்னையில் நீங்கள் எங்குமே பார்க்க முடியாது.

சென்னை தமிழை இப்படிக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தியதற்கான முழுக் காரணமும் சென்னை வாழ் பார்ப்பனர்களே.

சென்னையின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்ட, வன்னிய, மீனவ மக்களை; பார்ப்பனர்களின் நாடகங்களில் ரவுடிகளாகச் சித்திரித்து, அந்தக் கதாபாத்திரத்தை பார்ப்பனரே ஏற்று, இழிவான உச்சரிப்புகள், செய்கைகள் மூலம் சென்னை மக்களையும் இனிய சென்னை மக்கள் மொழியையும் கொச்சைப்படுத்தினார்கள்.

அதில் சோ போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜாம்பஜார் ஜக்கு போன்ற வேடங்களில் அவர் பேசிய மொழி இந்த உலகத்தி்ல் எங்கேயும் யாராலும் பேசப்படாத மொழி.

நாடகத்தின் தொடர்ச்சியாகச் சினிமாவுக்கு வந்த பார்ப்பனர்கள், சென்னை சேரி மக்களுக்கு எதிரான கருத்தோடும், கதாபாத்திரத்தோடுமே வந்தார்கள். மதுரை மற்றும் கோவை பகுதிகளில் இருந்து சினிமாவிற்கு வந்த இளைஞர்களும்கூட, சென்னை மொழியைக் குறித்துப் பார்ப்பனர்கள் கற்றுத் தந்த கண்ணோட்டத்தோடே படம் எடுத்தார்கள்.

உண்மையில் சென்னை தமிழ் என்பது, சென்னையில் மட்டும் பேசப்படுகிற மொழியல்ல; அது வடஆற்காடு, திருவண்ணாமலை. விழுப்புரம் மாவட்டத்து பேச்சு மொழி. மிக அதிகமாக வட ஆற்காடு மாவட்ட மொழி.

கஸ்மாலம், நாஷ்ட்டா போன்ற சொற்கள் எல்லாம் உருது சொற்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் உருது பேசுகிற இஸ்லாமியர்கள் அதிகம். தாழ்த்தப்பட்ட மக்களும், உருது இஸ்லாமியர்களும் நெருங்கி வாழ்கிற பகுதிகளில் உருது வார்த்தைகள் கலந்து பேசுகிற தமிழே சென்னை தமிழாக அறியப்படுகிறது.

சரியாகச் சொன்னால், சென்னை தமிழ் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான ஒற்றுமையின் அடையாளம். அதற்குச் சாட்சியாகச் சென்னை, வேலூர், ஆற்காடு, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளின் மத்தியில் இஸ்லாமியர்களின் பச்சை கொடி பறப்பதை பார்க்கலாம். இருவரும் கலந்தே வாழ்கிறார்கள்.

சினிமாவில், சென்னை தமிழை ஓரளவுக் சரியாகப் பயன்படுத்திய ஒரே தமிழ்த் திரைப்படம், வெங்கட் பிரபுவின் சென்னை 28.

சென்னை மக்களின் வாழ்க்கை குறித்துச் சரியான அரசியல் பார்வையோடு திரைப்படம் எடுக்கக் கூடியவர் இன்றைய இயக்குநர்களில் இயக்குநர் எஸ். பி. ஜனநாதனுக்கு இருப்பதாக உணர்கிறேன். அதற்கான அறிகுறிகள் அவரின் ‘ஈ’ படத்தில் இருந்தது.

‘சென்னையில் குறிப்பாக மீனவ மக்களோடு வளர்ந்தவன். சென்னையைக் குறித்துச் சிறப்பான படம் எடுப்பது தனது லட்சியம்’ என்றும் என்னிடம் தெலைபேசியில் பேராண்மை படம் விமர்சனம் தொடர்பாகப் பேசும்போது இயக்குநர் எஸ் பி ஜனநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.

ரேடியோவில் ஒலிபரப்பான பேட்டி என்று நினைக்கிறேன், ஒருமுறை எழுத்தாளர் சிவசங்கரி “ச்சீ என்ன தமிழ் இதெல்லாம்..? கஸ்மாலம், நாஸ்ட்டா, கயித, குந்து’ என்று அலுத்துக்கொண்டார்.

இப்படிச் சிவசங்கரி மட்டுமல்ல; தாடி வைச்சிக்கிட்டுத் தன்னை எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்கிற திருப்பூர் கண்ணனோ, கோபாலனோ பெயர் நினைவில்லை அவர் உட்பட ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

‘ஸ்நானம், ஜலம், பேஷா, நன்னா, நேக்கு, நோக்கு, உக்காத்தி வைச்சி’ இதெல்லாம் உங்களுக்குத் தமிழா தெரியும்போது, ‘கஸ்மாலம், நாஸ்ட்டா, பேமானி, கயித, குந்து’ இதெல்லாம்தான் எங்களுக்குச் சிறப்பான தமிழ், இதுதான் எங்களின் செம்மொழி தமிழ்.

சமஸ்கிருதம் கலந்து பேசினால், உயர்வான தமிழ், மணிபிரவாள நடை.

உருது கலந்து பேசினால் மட்டமான தமிழ், இழிவான நடையா?

இது வெறுமனே மொழி பிரச்சினையல்ல. ஆயிரம் ஆண்டுகால அரசியலே இதுதான்.

*

தங்கம் மார்ச் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

27 thoughts on “சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

 1. சரி… நீங்க கஸ்மாலத்த நேரா நிமித்துங்க… கம்யூனிஸ்ட் காரன் ஏதுக்கெடுத்தாலும் அமெரிக்கானனு சொல்ற மாதிரிதான் நீங்க சொல்றது இருக்கு… அப்படி சொல்லி கம்யூனிசம் காணாம போசசு.. அது மாதிரி…

 2. அவாள் பாசை பேசினால்தான் அவாளுக்கு இனிக்கும் .அவாளுக்கு கோயிலில் கூட தமிழன் காசு இனிக்கும் .ஆனால் தமிழ் மொழி கசுக்கும்

 3. I totally agree what you said in this article. Since i come from Thiruvannamali district i realize everything in practically.,This is the truth.

 4. தமிழரினத்தை சூழ்ந்திருக்கும் பாசிச பார்ப்பனீயத்தை வேரறுத்து விரட்டி ஒழிப்பதுதான் இதற்கு விடிவு. பண்டைய காலங்களில் தமிழினத்தினரிடையே பாசிச பார்ப்பனீய தலிபான்களால் நடத்தேற்றிய இனவழிப்பு, கொலை, கொள்ளை, தீ வைப்பு, கற்பழிப்பு, சூழ்ச்சி, கயமைத்தனம், குடிகெடுத்தல், தமிழர்களின் பெருமை மற்றும் நலன் கூறும் அனைத்து வித வழிபாட்டு தளங்களின் அழிப்பு, பொது நலச்சேவைத் தளங்கள் அழிப்பு, சிலைகள் அழிப்பு, வாழ்வாதாரங்கள் லஅழிப்பு போன்ற மனிதாபமற்ற ஈனச் செயல்களுக்கு பொறுப்பான பார்ப்பன ரவுடி கும்பல்கள் ஒழிந்தால்தான் தமிழனுக்கு நல்ல காலம்.

 5. //சென்னை தமிழை இப்படி கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தியதற்கான முழு காரணமும் சென்னை வாழ் பார்ப்பனர்களே.//

  //அதில் சோ போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜாம்பஜார் ஜக்கு போன்ற வேடங்களில் அவர் பேசிய மொழி இந்த உலகத்தி்ல் எங்கேயும் யாராலும் பேசப்படாத மொழி.
  //

  தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு பெரிய மருவும் வரி குதிரை பனியனும் போட்டுவிட்டவர்களும் இவர்களாக தான் இருக்க வேண்டும்.

  மனோரமா சந்திரபாபு போன்றவர்களும் சென்னை தமிழை அப்படியே பேசியவர்களா ? இல்லை இவர்களும் பார்ப்பன அபிமானகளா ?

  //சென்னையின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்ட . வன்னிய, மீனவ மக்களை //

  எப்பொழுதிலிருந்து இவர்கள் சென்னையின் பூர்வீக குடிகளானார்கள் ? வட ஆற்காடு மொழியை எப்படி இந்த பூர்வீக குடிகள் கற்றுக் கொண்டார்கள் ?

 6. idhu oru suththa somberiyin idukai ..parppanargalal eppavum engeyum yarukkum keduthalillai.you are just jelous of them. As they have taken up a life of devotion to god and goddwill towards mankind, they have to eat veg and live accordingly chanting mantras. .Eezhap porinpothu thamilmakkalai kondru kuvippathai vedikkai parththa ( so called ) tamizhinath thalavanin thondanakiya neengalellam unmayil somberiythan . Had the Brahmins taken up the role of warriors thamizhezham inneram amainthirukkum. Thamizhil thaththa veru yarumillai , U.ve. saminathaiyyar mattume.

 7. பார்ப்பனர்களின் மொழி, வரலாறு, பணபாடு என்று எதுவுமே சரியில்லாமல், கேவலமாக இருக்கும் போது அவர்கள் தமிழை பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் வக்கற்றவர்கள். இதை சினிமாகாரர்கள் சொல்லுகிறார்களோ? இல்லையோ? நாம் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நன்றி தோழர்.

 8. பார்ப்பனத் தமிழ் அசிங்கமாம்… சென்னை தமிழ் சூப்பராம்… நல்லா இருக்கய்யா கூமுட்டைகளின் கணிப்பு.

 9. தமிழா..எது இழிவானது அல்லது உயர்வானது ???

  சம உரிமை கேட்பதா/ பெற முடியாததா??? அல்லது கொடுக்காததா???

  //வைசூரி அய்யர் (16:24:03) :http://mathimaran.wordpress.com
  தாராளமா பூசை பண்ணுங்கோ.
  ஒரு வாரம் பூசை பண்ணிட்டு சாமி என்னை குட்டுது, கிள்ளுதுன்னு சாக்கு போக்கு சொல்லிட்டு வேறவேலைக்கு ஒடிடப் படாது..// –

  ஹி … ஹி .. ஹி …சம உரிமை கேட்கும் எங்களுக்கு குட்டா???

  “பரம்பொருளை வழக்காடு மன்றத்தில் காணும் பெரியவாள்,

  பேரின்பத்தை தொலைக் கேமராவில் தேடும் தேவநாதன்,

  தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே ,
  அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள்” –

  இவர்களுக்கு ஆதிபராசக்தி என்ன கொடுப்பார் ??? .

  பெற்றவளுக்கு பிள்ளை தீட்டா ??? அல்லது
  உருவாக்கியவனுக்கு உண்டாக்கியன் தீட்டா???

  Pl c relevant link:
  //கல்வெட்டுFebruary 12, 2011 at 1:19 am –
  http://www.vinavu.com/2011/02/10/hrpc-thiruvannamalai/#tab-comments

  சாக்கடைக்குள் இருக்கும் புழுவும் பூரானும் சாக்கடையைச் சுத்தம் செய்யாது. ஏன் என்றால் அது நமக்குத்தான் சாக்கடையே தவிர புழுவிற்கும் பூரானுக்கும் அல்ல. அது அவர்களின் வீடு.

  மதத்திற்கும் சாமிக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்கலால் சிந்திக்க முடிந்தால் ஏன் இன்னும் மதத்தில் இருக்கிறார்கள்? மதத்தில் இல்லாதவந்தான் அவனுக்கு வழியும் புத்தியும் சொல்லவேண்டியுள்ளது.

  எனவே, சாக்கடைக்குள் இருப்பவன் அதைச் சுத்தம் செய்வான் என்று வெட்டியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இருக்கலாம்.

  1. சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை தடுக்கமும் போராட்டத்தை , உடன் கட்டை ஏறும் பெண்தான் முன்னெடுக்கவேண்டும் என்று “ராஜா ராம் மோகன்ராய்” இருக்கவில்லை.

  2. தீண்டாமை என்பது பாதிக்கப்பட்டவனின் பிரச்சனை நமக்கு என்ன என்று மிட்டா மிராசு பணக்காட்ர காங்கிரஸ் ஸ்தாபன உறுப்பினர் பெரியார் சும்மா இருக்கவில்லை.

  3. கறுப்பின அடிமைகள் திட்டத்தை ஒழிக்க கறுப்பின பிரசிடென்ட் வரட்டும் என்று அமெரிக்க பிரசிடென்ட் லிங்கன் இருக்கவில்லை.

  விபச்சாரத்தை ஒழிக்க புரோக்கர்கள்தான் போராடவேண்டும் என்று காத்திருக்க முடியாது. ஆம் பல்லே இல்லாதவர்களால்தான் பல பக்கோடா பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

  இதுவும் புரியல என்றால் – இதுக்கு மேல பேசறதில அர்த்தமே இல்ல.//

 10. பார்ப்பனர்கள் இன்றுவரையும் தமிழ் மொழிக்கும், தமிழர் கலைகளுக்கும் எதிரானவர்களே! பார்ப்பனர்களின் பார்வையில் கடவுள் மறுப்பாளர்கள் என்றோ, கடவுளை நம்புபவர்கள் என்றோ எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை! அவன் தமிழனா இல்லையா? தமிழன்னா எதிரிதான்… இந்திய அரசு நினைப்பது போல! தன்னுடைய கற்பனையில் உருவாக்கிய கடவுளை நம்பும் ஒருவன் என்று கூட எண்ணுவதில்லை பார்ப்பனன்! தமிழன்னாலே எதிரிதான்&னு ஒரே போடுதான்! இதன் சமீபத்திய நிகழ்வு விருத்தாச்சலம் கோயில் நிகழ்வில் கடவுள் மறுப்பாளர்களான மனித உரிமை பாதுகாப்பு இயக்கத் தோழர்களின் தலையீட்டின் பேரில்தான் தமிழனின் இசை மீண்டும் ஒலிக்கப் பட்டது! ஆக, பார்ப்பான் தன்னுடைய இருப்பு கேள்விக்குள்ளானால் கடவுளை தூக்கி சாக்கடையில் வீசவும் தயங்காதவன்! தன்னலமற்ற தந்தை சொன்னது போல ‘நம்மாளுக்கு கிறுக்கு பிடிச்சா வீட்டுல உள்ளத தூக்கி வெளியிலெ எறிவான்! பார்ப்பானுக்கு கிறுக்கு பிடிச்சா வெளியில கெடக்குறதத் தூக்கி உள்ள எறிவான்!‘
  நுறு விழுக்காடு உண்மையல்லவா இது! பார்ப்பானின் உழைப்பு எத்தகையது? உழைக்கிறானா பார்ப்பான்? இருக்கையை உட்கார்ந்தே கிழிப்பது ஒன்றே பார்ப்பானின் உழைப்பு! இதுதான் பார்ப்பானின் அதிகப் பட்ச உழைப்பு! இந்த கிழி கிழிப்பதைத்தான், பார்ப்பானும் வேலை செஞ்சுதானைய்யா சாப்புடுறான்? ன்னு சில கேனங்க பேசிட்டும், பதிலுரையும் இடும்!
  நிறைய பார்ப்பனர்கள் இன்றைய உயர்ந்த நிலையில் வருவதற்கு முதன்மை காரணம் என்ன தெரியுமா நண்பர்களே? கூட்டிக் கொடுத்துதான்! இதுதான் உண்மை! உண்மை கசப்பாகத்தானே இருக்கும்! பிரிட்டீஷ் லேலென்ட் எப்படி அசோக் லேலென்டாகி சகானி அய்யரிடம் வந்ததோ, உலூக்காஸ் எப்படி டிவிஎஸ் உலூக்காசு ஆகி அய்யங்காரிடம் வந்ததோ, சிம்சன், அடிசன் இந்த பகாசுர நிறுவனங்களெல்லாம் சொற்ப விலைக்கு பார்ப்பனர்களின் கைக்கு மாறியதன் கமுக்கமான காரணம்தான் அவர்கள் வீட்டுப் பெண்கள்! இப்படிப்பட்ட கடைந்தெடுத்த அயோக்கியர்கள் தான் பார்ப்பனர்கள்! காம வெறி பிடித்த இந்தப் பார்ப்பனர்களின் காம வெறிக்கு எடுத்துக்காட்டு, இவர்கள் உருவாக்கிய இலிங்க புராணம் போன்ற கழிசடை புராணங்களே! இவர்களின் காமவெறியின் வாழும் எடுத்துக்காட்டு; காஞ்சி வாய்நாறி சங்கராச்சாரி செயேந்திரன், கருவறையை காம அறையாக மாற்றிய தேவநாதன் போன்றோர்! நல்வாய்ப்பாக இவன் வழிபாடு நடத்தியது ஆண் சாமியானதால் அது தப்பித்தது! இதுவே பெண் கடவுளாக இருந்திருந்தால், அந்தக் கடவுளையே பலமுறை, கருக்கலைப்புக்காக மருத்துவமனைக்கு அனுப்பியிருப்பான், இந்த காமவெறி பார்ப்பான்!
  காசிமேடுமன்னாரு.

 11. முட்டாள்தனமான,ஒருசார்பான பதிவு உண்மையிலேயே உமக்கு தமிழின்மீது பற்று இருந்தால்..நீர் முஸ்லீம்கள் பேசும் தமிழையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்…..உதாரணம்….அவுஹ.(அவர்கள்), லாத்தா(அக்கா),உம்மா (அம்மா), வாப்பா (அப்பா) அதைவிட்டு யாரிடமோ வங்கிய காசுக்கு குறைக்கும்…..எழுதக்கூடாது..தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி பேசும் உமக்கு தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறிய ஈ.வே.ரா தலைவர் பதிவுகள் எல்லோரையும் சரிசமமாகப் பார்க்கவேண்டும்

 12. பார்ப்பனத் தமிழ் அசிங்கமாம்… சென்னை தமிழ் சூப்பராம்… நல்லா இருக்கய்யா கூமுட்டைகளின் கணிப்பு.////

  Kandippa avanga tamil aachingam. Yengal tamil( chennai ) superrrrr.

 13. சென்னையிருந்த எல்லா எளிய இஸ்லாமியர்களும், தலித்துகளும் சென்னைத்தமிழைப் பேசிக்கொண்டிருந்ததைப் போலும் பார்ப்பனர்கள் மட்டும்தான் சென்னைத்தமிழை கிண்டல் செய்வது போலும் ஒரு பதிவு.!! பார்ப்பனர்களைத் திட்ட ரூம் போட்டு யோசித்து விதவிதமாக வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது ஆக்கபூர்வமான வேலைதானா?

 14. தமிழ் இயக்குனர்கள் கட்டாயம் இப்பதிவை படித்து உண்மைய உணரவேண்டும்…..

 15. அடி முட்டாள்தனமாக பேசுவதை விட்டுவிட்டு உருப்படியாக முன்னேற வழி தேடவேண்டிய நேரமிது .உண்மை தமிழன் பண்பாடு மிக்கவன் .எனவே உலகிற்கு அடையாளம் நன்கு தெரியும் .யாதும் ஊரே யாவரும் கேளிர் .திரைகடல் ஓடியும் த்ரவியம் தேடு .இனிய உளவாக இன்னா கூறுதல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று ,தமிழன் இப்படித்த்தான் இருந்தான்

 16. ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.(பங்குனியில் வருஷப் பிறப்பு கொண்டாடும் தமிழர்களைக் குறிப்பிடவில்லை).

  தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.

  கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு.

  காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

  ஹி..ஹி..ஹி.. தமிழாவது கத்திரிக்காவாவது ? ராஜா காது! கழுதை காது!!- ரொம்ப நல்லாயிருக்கு இல்லே???

 17. ஹி..ஹி..ஹி..அம்மா, அப்பா என்று சொன்னால் என்ன?மம்மி, டாடின்னு , சொன்னால் என்ன?- எஸ்.வீ.சேகர்- மாஜி எம்.எல்.ஏ -புதிய தலைமுறை தொலைக்கட்சிக்கு அளித்த பேட்டியில்.

  // Why Tamil is a Classical Language:

  University of California, Berkeley, holds a ‘Tamil’ Conference annually. Its Chair in Tamil Studies, Prof. George L. Hart, writes, “To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own and not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.”//

  ராஜா காது தெரியாமல் அணிந்துள்ள தொப்பி ரொம்ப அழகாயிருக்கு இல்லே??? (ஹி..ஹி.ஹி தமிழாவது கத்திரிக்காயாவது. கழுதை காது மேல மக்களுக்கு தொப்பியுடன் கலந்த மோகத்தை வர வச்சிட்டோம் பார்த்தேளா???)

  ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் .. பல்லு இல்லாத கிழவர்களுக்கு முறுக்கு சாப்பிடுகிறவர்களை கண்டால் பொறுக்காது தானே ???

 18. //Thiyagarajan Soupramaniyapillai// ஃப்ரெஞ்ச் பென்ஷன் வாங்கினு என்னமா குரைக்குது பாத்தியா !

 19. Chennai tamiz criticised by people from south TN and West TN. Chennai thamiz popularized in Cinema by Chendrababu , Thengai Seenivasan , Manorama. None of these people are brahmins. This is shear non-sense article. “Pagutharivu” illadha verum veruppai mattume sollum pasisa vadham. Madurai , nellai, kovai makkal dhan north tamiz mozhiyai kindal seigirargal !! Avangala poi kelungaya!!.. Unakku vaythu valinakuda parapandhan karanamnnu solluviya!! Chennai tamizhil pesum brahmanargal evlo peru irukkangannu unakku theriuma? Innum ethana nallaikku indha reela ottindu iruppe??

 20. அன்பைத்தாய் தந்தைக்கும், ஆசையைத்தா ரத்திடத்தும்;
  பண்பைசேய் நண்பற்கும்; பாடுபடும் உன்னை…
  அயலாள்நாம் என்றுரைக்கும் ஆணவ மாய்ப்புக்கும்;
  உயிரைமுன்னம் உன்தமிழுக் கும்தா!

  தன்பிறை யைஈசன் முத்தமிட்டுத் தந்தாலும்;
  தங்கம் பிளாட்டினங்கள் நாடளவு ஈந்தாலும்;
  வன்னரசு ஒன்றுசிறை வைத்தாலும் உன்சிரசும்…
  தண்தமிழைத் தான்வணங் கும்!

  ஒட்டுவானோ? உன்னுள் ஒன்றிசாதி பேதங்களை…
  விட்டானோ? பாசம் வெளிப்பட தொட்டானோ?
  தப்பிதமாய் நூலணியும் சாதி மதப்பதரை…
  செப்பாதே நல்லவன் என்று!

  தமிழைச் சிதைத்து தரம்கெட்டுத் தாழ்த்தும்
  உமிழ்நீரை தூஎன்று உமிழ்!

Leave a Reply

%d bloggers like this: