உள்ளே-வெளியே ‘பிராமின்ஸ் ஒன்லி’ வாடகை விருந்தாளி

‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்று அர்த்தம் சொல்லுகிறார்கள்.

ஆனால் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறவர்கள்  ‘ஒழக்கம்’ என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. புரிந்து கொள்பவர்களும் அப்படி மட்டும் அதை புரிந்து கொள்வதுமில்லை.

“எங்க பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். நாங்க ஆச்சாரம் எல்லாம் பாக்கிறதில்ல.” என்று ஒரு பெண் சொன்னால்,
“எங்க பாட்டிதான் ரொம்ப ஒழுக்கம். நாங்க ஒழுக்கம் பாக்கறதில்ல” என்று அதை மிக நேரடியாக யாரும் அர்ததப்படுத்திக் கொள்ளமுடியாது.

அப்படி எனில் ‘ஆச்சாரம்’ என்பது சுத்தமா?

ஒரு நாளைக்கு நாற்பது வேளை குளித்தாலும், அசைவ உணவை உண்ணாதவராக இருந்தாலும், மிகத் தீவிரமான பக்திமானாக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்டவரை ‘ஆச்சாரமானவராக’, ‘பிராமணராக’  சமூகம் கருதாது.

குளிக்காமல் இருந்தாலும், குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்தாலும், விபச்சாரிகளோட பொழுதெல்லாம் இருந்தாலும், கொலை செய்தாலும் சுருங்கச் சொன்னால், ஜெயேந்திரனைப் போல் வாழ்ந்தாலும் –

ஒரு பார்ப்பனரை சமூகம் ஆச்சார கேடானவராக கருதி அவர் மீது தீண்டாமையை பிரயோகிக்காது.

‘ஆச்சார உயர்வு’, ‘பார்ப்பன மேன்மை’ என்பதும், ‘தீண்டாமை’ யும் வளர்ப்பில் இல்லை. பிறப்பில் இருக்கிறது என்பதுதான் இந்து மதம். பார்ப்பனியம்.

பிறப்பால் தாழ்த்தப்பட்டவராக இருந்த காரணத்தால்தான் மற்ற நாயன்மார்களை விடவும், ஒழக்கமாக, நேர்மையாக, சிறந்த பக்திமானக இருந்த நந்தனாருக்குமட்டும், ‘பார்ப்பன அடியாள், களவானி பயல் சிவன்’ காட்சி தரவில்லை.

இந்த ஆச்சாரம் என்பது தன் ‘மேன்மை’யை உயர்த்திக் சொல்வதற்காக மட்டும் உருவானதில்லை. அடுத்தவர்களை தாழ்த்திச் சொல்வதற்காகவே உருவானது.
ஒரே வரியில் எளிதில் விளக்க வேண்டும் என்றால்,
‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.

‘பிராமின்ஸ் ஒன்லி’

குடுமி வைப்பதுதான் ஆச்சாரம். கிராப் வைத்துக் கொண்டார்கள். மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சாரம். மீசை வைத்துக் கொண்டார்கள். காபி, டீ குடிப்பது ஆச்சாரமில்லை. மாறாக, காபியே இன்று ஆச்சாரமாக அவதாரம் எடுத்துருக்கிறது.

மாதவிலக்கு சமயங்களில் வீட்டின் புழக்கடையில் இருந்து வீட்டிற்குள் வருவதே ஆச்சாரக் கேடு. இன்று வேலைக்கே வருகிறார்கள். மடிசார் கட்டாமல் இருப்பதே ஆச்சாரக் கேடு. இன்று ஜீன்ஸ் பேண்டில் வருகிறார்கள். பெண்கள் சினிமா பார்ப்பதே ஆச்சாரக் கேடு.

ஆனால் அந்தக் காலத்து வசுந்தர அவுங்க பொண்ணு வைஜெயத்தி மாலா, பிறகு ருக்மணி அவுங்க பொண்ணு லட்சுமி, அவுங்க பொண்ணு ஐஸ்வர்யா, சந்தியா அவுங்க பொண்ணு ஜெயலலிதா இதற்கும் நடுவுல சவுகார் ஜானகி அவுங்க பேத்தி வைஷ்ணவி, சச்சு, வெண்ணிராடை நிர்மலா, ஹேமாமாலினி, ஸ்ரீவித்யா,  சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், சுகன்யா, திரிஷா, மல்லிகா ஷெராவத், சொர்ணமால்யா, பிரியா மணி, வசுந்தரா… என்று ‘ஆச்சார’ மாக நிறையப் பேர் இருக்கிறார்கள்.

(வேலைக்குப்போவதையும் நடிக்க வந்ததையும் தவறு என்று சொல்லவில்லை. மற்ற ஜாதிக்காரர்களால் ஏற்படும் `ஆச்சாரக்கேட்டிற்காக` அவர்களை அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள், இவைகளை கண்டிப்பதில்லை.)

முட்டைகூட இன்று ஆச்சாரமான உணவாக மாறியிருக்கிறது.

விதவைகளை சங்கராச்சாரியார்கள் பார்ப்பதே ஆச்சாரக் கேடாக இருந்தது.ஜெயேந்திரனை போன்ற சங்கராச்சாரி விதவைகளுக்கு  மறுவாழ்வு கொடுக்கிற அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.

பார்ப்பனர் கடல்கடந்து வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது. ‘பொண்டாட்டியையே ஒருத்தன் தூக்கிகிட்டு போய்ட்டாக்கூட  பாலங்கட்டி போய்தான் திரும்ப கூட்டிட்டு வரணும்’ என்று ராமாயண கதையிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய நிலை – காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி என்று வாழ்கிறார்கள்.
அப்படியானால் முற்றிலுமாக ஆச்சாரத்தை கைவிட்டுவிட்டார்களா?

தன் ஜாதிக்குள் தன் உறவுக்குள் ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டார்கள் அல்லது  கைவிடுவது எங்கு லாபமோ, அங்கு விட்டிருக்கிறார்கள்.
ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதினால் எங்கு நஷ்டமில்லையோ, அங்கே ஆச்சாரத்தைக் கடைப்பிடித்து அடுத்த ஜாதிக்காரர்களை, மதக்காரர்களை அவமானப்படுத்தி தன்னை மேன்மைப் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த நாகரீகமானவர்கள்தான் இன்னமும்  ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
நகர்புறங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற பிற்படுத்தப்பட்ட ஜாதிவெறியர்களும் இருக்கிறார்கள்.

அவர்களின் இந்தக் கேவலமான ஜாதி வெறியின் அவமானம் ஓர் அளவுக்கு அவர்களுக்கு உறைத்திருப்பதினால்தான் அந்த உணர்வை பகிரங்கப்படுத்திக்கொள்ளாமல் சுற்றி வளைத்து விசாரித்து தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் வீடு தர மறுக்கிறார்கள்.

ஆனால் இது போன்று  எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல், ‘எங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான்’ என்று பகிரங்கமாக போர்டு வைத்திருக்கிற ஒரே ஜாதி, இந்த ‘ஆச்சார’ ஜாதிதான்.

அதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் “நாங்கள் ரொம்ப ஆச்சாரமானங்க. சைவம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் யாராவது அருகில் குடி வந்தால், அது எங்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்”

நியாயந்தான். அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்?
‘வெஜிடேரியன் ஒன்லி’
அப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு?

இப்போ புரியுது இல்ல, ஆச்சாரத்திற்கான அர்த்தம்.

வாடகை விருந்தாளி

ப்படி ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு வைத்து, ஆச்சாரத்தைக் காப்பற்றுகிற இவர்கள்தான், இன்னொருபுரம் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடுகிற பார்ப்பனரல்லாதவர்களுக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து, அவர்களுக்கு ‘சைவ சாதத்தை’ சமைத்துப் போடுகிறார்கள்.

‘பேயிங் கெஸ்ட்’  ‘வாடகை விருந்தாளி’  என்று விருந்தை வியாபாரமாக்கியப் பெருமை தமிழகத்தில் இந்த ‘ஆச்சாரமானவர்களை’ யே சேரும்.

ஆம், சொந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , இஸ்லாமிய சிறுபான்மை மக்களை  அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள் – சுற்றுலா பயணிகளாகவும், இந்திய கலாச்சாரம் என்றால் அது கர்நாடக சங்கீதம் என்று தவறாக தெரிந்து கொண்டு, இங்கே இசை கற்றுக் கொள்ள வருகிற அமெரிக்க, ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ வெள்ளைக்காரர்களுக்கு, தங்கள் வீட்டிலேயே வாடகை விருந்தாளிகளாக தங்க வைத்து, அவர்களுக்கு ‘சாதம்’ செய்து ‘பரிமாறி’ இசையை கற்றுத்தந்து, திருமண வயதில் பெண்ணிருந்தால் திருமணமும் செய்து அனுப்புகிறார்கள்.

சென்னை பெசன்ட்நகரில் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த  ராமனாதன் என்கிற கர்நாடாக இசை தெரிந்தவரிடம்,  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘பென்னட்’ என்பவர் வீணை கற்றுக் கொள்ள வந்தார்.

அவருக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து, ‘சாதமும்’ போட்டு தனது மகள் கீதாவையும் திருமணம் முடித்து வைத்தார்.
அந்தப் பெண்தான் பின்னாட்களில் ‘கீதா பென்னட்’ என்ற பெயரில் கலிபோர்னியாவில் இருந்து தமிழ் பத்திரிகைளில் கதை எழுதிக் கொண்டிருந்தார்.

ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த லதா என்ற பெண், ஒரு பத்திரிகைப் பேட்டியில்,

“எங்க குடும்பம் ரொம்ப ஆச்சாராமான குடும்பம். சினிமா பார்க்கவே எங்க அப்பா, அம்மா எங்களை அனுமதிக்க மாட்டார்கள்.” என்று சொல்லியிருந்தார்.

இப்படி சொன்னவர் யாரை திருமணம் முடித்துக் கொண்டார் தெரியுமா? சிகிரெட், குடி பழக்கமும் நிரம்பிய, காதல் தோல்வியடைந்து பைத்தியம் பிடித்த நிலையில் பொது இடங்களில் சண்டை போட்டதாக சொல்லப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாதவரை. ஒரு நடிகரை.

அந்தத் திருமணம் காதல் திருமணம் அல்ல. ஆச்சாராமான பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்த திருமணம்.
அந்த மாப்பிளையின் பெயர் நடிகர் ரஜினிகாந்த்.

இப்போது புரிகிறதா ஆச்சாரத்தை கைவிடுவதற்கான காரணம்.

**

வீட்டுக்கு வந்து முடிவெட்டும், முகம் மழிக்கும் பழக்கம் இந்திய நகரங்களில் வெள்ளைக்காரகளின் வருகைக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து,  முடிதிறுத்தும் நிலையமாக மேன்மையடந்தது. ‘ஆச்சாரமானவர்கள்’ முடிவெட்டும் கடைக்கு போவது ஆச்சாரக் கேடாக கருதப்பட்டது.

வெறுவழியில்லாததால், முடிவெட்டிய பின்  வீட்டுக்கு பின் பக்கமாக  சுற்றி வந்து தலையில் தண்ணி தெளித்து, சில பரிகாங்களை செய்து  அந்த ‘தீட்டை’கழித்துவிடுவார்கள். முடிவெட்டும் தோழரை ‘அம்பட்டன்’ என்று அவமரியாதையும் செய்வார்கள். இப்படி மற்றவரை அவமானப்படுத்தி ஆச்சாரத்தைக் காப்பாறினார்கள்.

இப்போது ஆச்சாரத்திற்கான அர்த்தம் இன்னும் தெளிவாக புரிந்து இருக்கும்.

ஆண் முடிவெட்டும் கடைக்குப் போவேதே ஆச்சாரக் கேடு என்றால்,  பெண்போவது?
இன்றைக்கு ஆச்சாரமான குடும்பத்துப் பெண்கள்தான், அழகுபடுத்திக்கொள்ள அதிகமாக பார்பர் ஷாப்புக்கு போகிறார்கள்பார்பர்ஷாப்புக்கு போவதே ஆச்சாரக் கேடு என்றால், ‘பார்பர் ஷாப்‘ வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆச்சாரக் கேடு?

ஆம்இன்று பெண்களுக்கான பார்பர்ஷாப்‘ வைத்திருப்பதில் 90 சதவீதம் ஆச்சாரமான குடும்பத்துப் பெண்களே.
அதற்கு அவர்கள் வைத்திருக்கிற பெயர், ‘பியூட்டி பார்லர்.’

நம் தோழர்களை அம்பட்டன்‘ என்று இழிவு செய்த செய்கிற அவர்கள்,அதே வேலையை செய்கிற அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொண்ட பெயர் என்ன தெரியுமா?
பியூட்டிசியன்
எப்படி இருக்கிறது நியாயம்?

ஆச்சாரத்தை கை விடுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக புரிகிறது இருக்கும்.

இந்த ஆச்சாரமானவர்களின் உள்ளேவெளியே’ விளையாட்டை புரிந்து கொள்ளும்போதுஇந்த மனோபாவத்தை ஒரே வரியில் விளக்கிய தந்தை பெரியாரின் அந்த மேற்கோள் பிரம்மாண்டமாய் நம் நினைவில் நிற்கிறது. (வார்த்தைகள் என்னுடையது) “பார்ப்பனர்கள் சுத்த சைவம்தான். ஆனால் ஒரு ஊர்ல நண்டு மட்டும்தான் சாப்பிடக் கிடைக்கும் என்றால், நடுவுல இருக்கிறது மட்டும் எனக்கு கொடுங்கன்னு கேப்பாங்க”
   நண்டில் உண்பதற்கான பகுதியே நடுபாகம்தான்.

*

திராவிடர் கழகத்தின் மாதமிருமுறை இதழான ‘உண்மை’ யில் 2008 ஜனவரி பொங்கல் சிறப்பதழில் எழுதியது.

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !


18 thoughts on “உள்ளே-வெளியே ‘பிராமின்ஸ் ஒன்லி’ வாடகை விருந்தாளி

  1. // அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்?
    ‘வெஜிடேரியன் ஒன்லி’
    அப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு? //

    நியாயமான கேள்வி.

    சைவம் என்று சொல்லிக்கொண்டு யாராவது நாத்திக பிராமணத்துவேஷிகள் குடிவந்து அவர்களின் பழக்கவழக்கங்களை தினமும் கிண்டலடித்து டார்ச்ச்ர் பண்ணிக்கொண்டு இருந்துவிடக் கூடாதே என்ற உஷார்தான்…

  2. அருமையான பதிவு தோழர்

  3. what a post… sema….

    great thozhar… eliyavarkaLum puriyum vannam ungal eluthukkal ullana.

    thanks

  4. ஒரு தனி மனிதனின் விருப்பம் என்று ஏன் உஙகளால் இதை ஜீரணிக்க முடியவில்லை?

    நடிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். நடிக்க வந்து ஒருவரும் ‘நான் பிரஹ்மின் – அதனால் எனக்கு தனிபபடட கௌரவம் வேணடும்’ என்றுசொல்லவில்லயே!

    வீட்டுக்காரரின் இஷ்டப்படி அவர் வீட்டை வாடகைக்கு விடுவதில் என்ன தவறு?

    ஒருதனி மனிதனின் விருப்பபடி ஒரு விருநதாளியை வைத்துக் கொள்வதில் எனன பாதகம்? அப்படியும் அவர் தன் இஷ்டப்படிதானே சமையல் செய்து போடுகிறார்?

  5. Very good piece of work. Recently I saw an ad of a builder claiming to provide “Vegitarian block” for those who seek. When I wondered abt tis, one of my frnds shwed me another builders ad with a heading “…. Nagar (Agraharam)” situated near perungalathur. Here the link for such a news in TOI (http://articles.timesofindia.indiatimes.com/2012-04-11/chennai/31324160_1_indian-vegetarian-congress-complexes-apartment).

    But the reality is none to alk abt tis. Those who r coming fwd s also targtd. There mindset s explicit. “There is a preference among people who are vegetarian to have their own societies and live together,” says Jain, one of the builders.

  6. பிராமணர் என்றால் ஒரு குறிப்பிட்ட குலத்தொழிலை செய்வதற்காக, அதற்கு தேவைப்பட்ட பழக்க வழக்கங்களை கடைபிடித்து வழி வழியாக பொது நன்மைக்காகவே வேதம் உரைத்து வந்தனர். அந்த குலத்தினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன், தம்மை வருத்திக்கொண்டு, உலக நன்மையை கருதி வேதங்களை பல லட்ச வருடங்களாக கற்று, ஓதி, இன்று வரை நமக்கு எடுத்து வந்து சேர்த்து இருக்கின்றனர். இன்று புத்தகங்கள் வந்து விட்டன, ஆனால் எழுத்து வடிவம் வருவதற்கு முன்னரே வேதங்கள் மனிதனுக்கு கிடைத்து விட்டன. அந்த சந்ததியில் வந்தவர்களுக்கு வேதங்கள் மூலம் பெற்ற அறிவினால், இந்த காலத்து படிப்பு எளிதாக அமைந்து விட்டது.
    பிறப்பால் இன்று தம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்பவர்கள், தங்கள் குலத்தொழிலை செய்யாதவர்கள். அவர்கள் அந்த குலத்தை காக்க முயலவில்லை.
    உங்கள் குற்றசாட்டுகள் எல்லாம் தங்கள் குல வழியை விடுத்து, பெயர் அளவில் அந்த குலத்தின் பெயரை கெடுத்து வருபவர்களின் மீதானவையே. அணைத்து உயிர்களின் உள்ளே உறையும் ஆத்மாவே அந்த கடவுள் என்று வேதங்கள் உரைக்கும் போது, அழியும் தன்மை உடைய உடல் காரணமாக வந்த வேறுபாடுகளால் உயர்வு தாழ்வு பொய்யானதே.

  7. ஜாதி ஒழிப்பை முதல் முதலில் ஆரம்பித்து, தங்கள் குல தொழிலை விடுத்து, வெள்ளைகாரனாகவே மாற முயற்சித்தவர்கள் இந்த பெயர் அளவு ப்ராம்மனர்களே. மற்ற குலத்தினர் இவர்களிடம் இருந்து பெற்ற உந்தலால், தாங்களும் தத்தம், குல தொழில்களை விடுத்து இன்று ஜாதி வெறும் பெயர் அளவுக்காகவே இருந்து வருவதற்கு, இவர்களே காரணம் ஆயினர்.

  8. ஜாதிகளை ஒழிப்பதில் திராவிடர் கழகங்கள் செய்ததை விட இந்த பெயர் அளவு பிராம்மணர் செய்ததே மிக பெரிய சேவை. இவர்களாலேயே ஜாதிகள் இன்று பொய்த்து போயின.

  9. இவர்கள் வேதங்களை விடுத்ததினால், நீங்கள் எழுதி வைத்துள்ள இந்த சிறிய கேவலங்களை விட மிக பெரிய கேவலங்களுக்கு ஆளாக போகின்றனர். பொது நலம் விடுத்து, தன்னலம் தழுவிய காரணத்தினால் அந்த குலத்தின் பெயரே அழிந்து கொண்டு வருகின்றது. இன்று கிறிஸ்தவம் தழைத்து வருவது, பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் செய்யும் தன்னலம் அற்ற சேவையினாலேயே. ஹிந்து மதத்தை அழித்ததில், பிரம்மனர்களுக்கே பெரும் பங்கு உள்ளது.

  10. மதிமாறன் அவர்களே ! என் கருத்துகளை நீங்கள் பரிசீலிப்பது இல்லை. அவற்றை பிரசுரிப்பதும் இல்லை. இது உங்கள் இடம், உங்கள் விருப்பம். ஹிந்துஇசத்தை ஒழித்த பெருமை உங்களையே சேரட்டும்.

  11. ‘உண்மை’யில் இப்படி எழுதினாத்தான் காசு. பார்ப்பன ஆச்சாரம் அளவுக்கு திராவிட பகுத்தறிவும் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கு. பார்ப்பான் சாதிவெறியோடு ‘பிராமின்ஸ் ஒன்லி’ என போடுறான். தாழ்த்தப்பட்டோரை சுத்தி வளைத்து தாழ்த்தப்பட்டவரா என்று விசாரிப்பவன் கண்டிப்பா திராவிட கழக வாக்காளராகத்தான் இருப்பான். சும்மா பேருக்கு பதவி கொடுக்கிற மாதிரி.

    அந்த நண்டையே மொத்தமா அமுக்குவான் திராவிடன்.

  12. மிகச் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. சாதிய ஒழிப்பு, பார்ப்பனிய ஒழிப்பு போன்றவைகளுக்கு தங்களுடைய எழுத்துக்கள் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படும் என்பது யதார்த்தமான உண்மை. நன்றி தோழர்.

  13. சாதரண இந்துக்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் கிறிஸ்தவர்களைப்பற்றியும் எழுதுங்களேன்.

  14. சாதரண இந்துக்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் கிறிஸ்தவர்களைப்பற்றியும் எழுதுங்களேன்.//
    விவரம் இல்லாதவரா இருக்கீங்க அவர் அதை எழுத மாட்டார். பார்பானா பாத்து தான் எழுதுவார் அப்ப தான் சுவாரசியம் இருக்கும்

Leave a Reply

%d bloggers like this: