எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் கணிசமான பேர் திமுக காரர்கள்தான்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, நன்கொடை தருவது என்பதை திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது.
தலைமையை மீறிய இந்த அரசியல் உணர்வு மரியாதைக்குரியதாக இருக்கிறது.
ஈழப் பிரச்சினையின் காரணமாகவே பல தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறியும் இருக்கிறார்கள். (வைகோ மற்றும் அவரை ஆதரித்தவர்கள்)
இதற்கு நேர் எதிராக, அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் தீவிரமான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிறைய பண உதவி செய்தவர் என்று அவரை பற்றிய புகழுரை இன்றும் பேசப்படுகிறது.
அதற்கு நேர் மாறாக, ஒரே ஒரு அதிமுக காரரைக்கூட விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவோ, ஈழ விடுதலை ஆதரவாளராகவோ பார்க்க முடியவில்லை.
குறிப்பாக, ஈழப் பிரச்சினையை தன் கட்சிக்குள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் தன் தொண்டர்களிடம் அறிமுகம் கூட செய்யவில்லை.
அதற்கு அடையாளமாகத்தான் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தனி ஈழத்திற்கும், புலிகளுக்கும் எதிரான ஒருவர் அந்தக் கட்சிக்கு தலைவராகவும் வர முடிந்தது.
ஜெயலலிதா பகிரங்கமாக, புலிகளுக்கு எதிராகவும், தனி ஈழத்திற்கு எதிராகவும் கருத்து சொன்னபோது, விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான எம்.ஜி.ஆர் மீது, பக்தி கொண்ட தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல,
“அய்யோ.. விடுதலைப் புலிகளா, அவுங்க மோசமான ஆளுங்கப்பா… ராஜிவ் காந்தியையே கொன்னுட்டானுங்கப்பா..” என்றும்,
“அட, இலங்கைக்குபோய் அவுங்க நாட்ல இருந்துகிட்டு.. தமிழ் ஆளுங்க ஏம்பா தனிநாடு கேக்குறாங்க? அதனாலதாம்ப அவன் இவனுங்கள சுடுறான்..” என்றும் பொறுப்பற்று பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு தீவிரமான ரகசியமாக ஆதரவு தெரிவித்த எம்.ஜி.ஆர்., தன் கட்சிக்குள் தொண்டர்களிடம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாககூட அல்ல, ஈழ மக்களுக்கு ஆதரவாகக்கூட அரசியல் உணர்வை ஊட்டாமல் போனது ஏன்?
எம்.ஜி.ஆர் தன் தொண்டர்களை அரசியல் படுத்தியிருந்தால் அது புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததைவிட மிகப் பெரிய உதவியாக ஈழ மக்களுக்கு இருந்திருக்கும்.
குறிப்பாக, லட்சக் கணக்கான தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட காலங்களில், தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக போராடுகிற அரசியல் உணர்வு இருந்திருந்தால், அந்த மக்களை நாம் காப்பாற்றி இருக்கலாம்.
*
மே 30 – 2012 அன்று எழுதியது.
தொடர்புடையவை:
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்
தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத்தமிழர்களும்
மிகச்சிறப்பான வரலாற்று பூர்வமான கண்ணோட்டம்.
அருமையான கருத்து.பிரபாகரனை எம்.ஜி.ஆர் ஆதரிக்க முக்கியக் காரணம் அவரும் தன்னைப்போல ஒரு ஹீரோவாக உருவாகிறார் என்பதால்தான்.ஹீரோயிசம் என்ற சினிமாத்தனம்தான் இதன் மூலம்.மற்றபடி எம்.ஜி.ஆருக்கு ஈழப்பிரச்சினை பற்றிய முழுமையான புரிதல் இருந்தது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.இந்திரா காந்தியும்,ராஜீவ் காந்தியும் ஈழத்தமிழர் பிரச்சினையில் சார்பு நிலை எடுத்ததால்தான் எம்.ஜி.ஆர்.பகிரங்கமாக புலிகளை ஆதரித்தார்.ஒருவேளை எதிர்த்திருந்தால் இந்த அளவுக்கு ஆதரித்திருக்கமாட்டார்.எம்.ஜி.ஆர்.மத்திய அரசை எதிர்க்காமல் இருப்பது என்ற கொள்கையைக் கடைபிடித்தவர்.
புலிகளின் ஆயுதங்களைப் பறியுங்கள் என்று ராஜீவ் காந்தி உத்தரவிட்டபோது பிரபாகரனிடம் இருந்த ஆயுதங்களைப் பறித்தவர்தான் எம்.ஜி.ஆர்.என்பதை மறக்கமுடியாது.
இந்நிலையில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருக்க,பின்னர் தி.க.தலைவர் கி.வீரமணியும்,நெடுமாறனும் எம்.ஜி.ஆரிடம் பேசிய பிறகே ஆயுதங்கள் திருப்பி அளிக்கப்பட்டன.பிரபாகரனுக்கு பழச்சாறு கொடுத்து கி.வீரமணி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.(காவல்துறை தலைவராக இருந்த மோகன் தாஸ் எழுதிய எம்.ஜி.ஆர்.பற்றிய நூலில் இதற்கு ஆதாரம் உள்ளது).தங்களது இந்த சிந்தனை இன்றைய திடீர் ஈழ ஆதரவுப் புலி(?)களுக்குப் புரிந்தால் சரி.குறிப்பாக நாம் தமிழர் கோஷ்டிக்குப் புரியவேண்டும்.அந்தக் கோஷ்டிதான் ஈழப்பிரச்சினையில் எம்.ஜி.ஆரை அளவுக்கு அதிகமாக தூக்கிப் பிடிக்கிறது.ஈழ ஆதரவு மட்டுமல்ல,தமிழ்,தமிழர்,இனமானம்,இடஒதுக்கீடு,மாநில உரிமை போன்ற கொள்கைகளில் இன்றளவும் தி.க.,தி.மு.க.தொண்டர்களுக்கு உள்ள ஆர்வமும் செயல்பாடும் புரிதலும் போராடுவதும் உதவுவதும் அதிகம் என்பதை புதிய தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்ளவும்
எம்ஜிஆர் புலிகள் ஆதரவு விஷயத்தில் கத்துக் குட்டியாகத்தான் நடந்து கொண்டார். மேலும் அவர் மத்திய அரசுடன் மோதிக்கொள்வதில்லை என்ற கொள்கையுடன் இருந்ததால் அவரால் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. அவர் புலிகளுக்கு பொருளுதவி கொடுத்ததைவிட அரசியல் ரீதியான தீர்வுக்கு வழிசெய்யக் கோரி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம்.
Yes MGR always go with Central Government and its activity….Even while Indhra supported MGR to seperate from DMK and start New Party….because Indhra Gandhi dont want DMK OR State party with that much Athiest,and against India,Hindi and Hindu.
At that time Cerntral ie..Indhra Support LTTE so MGR support LTTE.And apart the important is FOR TESO Kalingar was Leader and not the CM. MGR Who woned continuously or fund LTTE.That is he try tio attain the Banner TAMILINA THALIVAR from Kalingar but he unable and Failure.
But Seeman,Nedyumaran,Pulamipithan,Tamilaruvi Manian ,Vaiko(HE ALWAYS SUPPORT BJP THAN JAYA ) want to put Kalingar & DRAVIDAISM down so speak about MGR
எம்.ஜி.ஆரும் மலையாளி, பிரபாகரனும் மலையாளி. எனவே எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு ஆதரவளித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பெண் பித்தன் எம்.ஜி.ஆர் நல்லவன் போல சினிமாவில் நடித்து தமிழர்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தார். அதிகாரவெறி பிடித்த பிரபாகரன் இலங்கை தமிழர்களை காவு கொடுத்து சர்வாதிகார ஆட்சி நடத்தினார். கடைசியில் மலையாளிகளுக்குரிய நயவஞ்சகத்துடன் தானும் தன் குடும்பமும் மட்டும் தப்பிக்க வெள்ளைக் கொடி ஏந்தினார், அழிக்கப்பட்டார். இன்னமும் தமிழர்களை ஏமாற்றிய இந்த இரண்டு மலையாளிகளுக்கும் கொடிபிடிக்கும் கூமுட்டைகள் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எம்.ஜி.ஆரின் வைப்பாட்டியான பாப்பாத்தியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றியவர்களுக்கு யார் எதிரி யார் நண்பன் என்று எங்கே தெரியப்போகிறது.
மிகச் சரியான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கூடிய பதிவு. தமிழின உணர்வாளர்களும், எம்.ஜி.ஆரை ஈழ விடுதலையுடன் இணைத்து தீவிரமாக ஆதரிக்கின்ற நபர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. நன்றி தோழர்.
//Anil (12:44:40) : உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.//
மதிமாறன் அண்ணே பயப்படாமல் கருத்தை ரிலீஸ் செய்யுங்கள். எதிர்கருத்து சொல்பவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கொடுத்து கொலை செய்யும் பிரபாகரன் இப்போது இல்லை.
///திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது.//////
அதே திமுக தொண்டன் சோனியாவை தியாகத் திருவிளக்கு என்று தலைவர் சொல்கிற போது மௌனமாக இருக்கிறார்கள்
நோய்வாய் பட்ட தாய் மருத்துவத்துக்கு வரும் போது தலைவர் எனக்குத் தெரியாது என்ற போது மௌனமாக இருக்கிறார்கள்
போர்நிறுத்த 9 to 1 உண்ணாவிரதம்.. போர் முடிந்தது.. மழைவிட்டாலும் துவான்ம் என்கிற போது மௌனமாக இருக்கிறார்கள்
இப்படி பல முறை மௌனமாக இருக்கிறார்கள்
///எம்.ஜி.ஆரும் மலையாளி, பிரபாகரனும் மலையாளி. எனவே எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு ஆதரவளித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை///
அனில் சொல்லும் இந்த உண்மை அன்றைக்கே இவர்கள் இருவருக்கும் தெரிந்துவிட்டதோ?நமக்குத் தெரிய இத்தனை காலம் ஆகிவிட்டதே! .கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரபாகரனின் அத்தை (தற்போது கேரளாவில் இருக்கிறார்)இந்த உண்மையை சி.என்.என்.டி.வி.நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.நமக்கு ஒன்றும் இவர்கள் மலையாளிகளாய் இருப்பதில் ஆட்சேபனை இல்லை.எப்படியோ இருவரும் திராவிடர்கள்தான்.ஆனால்,இந்த மலையாள திராவிடர்களை ஏற்கும் தமிழ்தேசியக் கூட்டம் காலமெல்லாம் தமிழனுக்காகவே உழைத்த பெரியாரைக் கன்னடன் என்று சொல்கிறது.இங்கேதான் இவர்கள் யாருடன் கை குலுக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவேண்டியவர்களாக இருக்கிறோம்.
//அதற்கு நேர் மாறாக, ஒரே ஒரு அதிமுக காரரைக்கூட விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவோ, ஈழ விடுதலை ஆதரவாளராகவோ பார்க்க முடியவில்லை.//
சோலை கடைசியாக திமுகவுக்கு வரும் முன் அதிமுகவில் இருந்தவர் தானே, பாவை ரவிச்சந்திரன், எழுத்தாளர், தினமணியில் ஈழம் பற்றி தொடர் எழுதியவர், 2006ல் செய்யாறு தொகுதியில் அதிமுகவில் எழுத்தாளர் கோட்டாவில் போட்டியிட்டவர், தீவிர ஈழ ஆதரவாளர், இப்போது அந்த கட்சியில் இல்லையென்றாலும் அவர் எப்போதுமே ஈழ ஆதரவாளர் தீவிர ஈழ ஆதரவு அதிமுக தலைவர் புலவர் புலமைப்பித்தன், இவர் தான் ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதி தருவதாக சொல்லப்படுபவர்…
புலவர் காமராசன் எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் எழுதியவர் அதிமுகவில் கழக பொறுப்பு வகித்தவர், அவரும் தீவிர் ஈழ ஆதரவாளர், பல பத்திரிக்கைகளில் பேட்டியும் கட்டுரைகளும் பிரபாகரன் மற்றும் ஈழத்தை ஆதரித்து எழுதியுள்ளார்
அதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது வேண்டுமானால் சினிமா கவர்ச்சி இருந்திருக்கலாம் இப்போது அப்படி சொல்ல ஜெயலலிதா ஒன்றும் தமன்னா அல்லவே
அதிமுக தொண்டர்கள் என்றாலே சினிமா கவர்ச்சி, பார்ப்பன ஆதரவாளர்கள், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் என்றெல்லாம் பரப்புரைக்கப்பட்டுள்ளது, இது எப்படி திமுக தொண்டர்கள் எல்லோருமே முற்போக்கானவர்கள், இடஒதுக்கீட்டு திமுக தான் அதிகமாக செய்துள்ளது என்பது போன்ற பொய்யான செய்தியோ அது போல பரப்பப்பட்ட மாயய். அதிமுகவின் பார்ப்பன தொண்டர்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், பார்ப்பன தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அப்படித்தான் என்பது வேறு கதை.
அதிமுக தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் எந்த வேறு பாடும் இல்லை.
மதிமாறனின் இந்த கூற்றை ஏற்க மாட்டேன், எத்தனையோ ஈழ ஆதரவாளர்கள், இடஒதுக்கீடு ஆதரவாளார்கள், திராவிட ஆதரவாளர்களை என்னால் அதிமுகவில் காட்ட முடியும். எப்படி என்னதான் தன் சொந்த ஆதரவு கருத்துகளை கட்டக்கடைசியாக கருணாநிதியின் கட்டளைக்காக திமுகவினர் அமுக்கிக்கொள்கிறார்களோ அதே போலத்தான் அதிமுகவினரும் கட்டக்கடைசியாக அதிமுக தலைமையின் ஜதிக்கு ஏற்ப ஆடுகிறார்கள். அவ்வளவே…
தலைமையின் மனசறிந்து நடப்பதில் திமுக-அதிமுகவினருக்குள் எந்த வேறுபாடும் இல்லை… ஜெயலலிதாவை தன் சுய திமிரை விடுத்து விஜயகாந்த்துடன் கூட்டணி சேர வைக்க அதிமுக தொண்டர்களால் இயலும், ஆனால் தொண்டர்கள் நெருக்குதலால் கூட்டணி வைக்கை கருணாநிதியை செய்யவைக்க திமுக தொண்டர்களால் இயலாது.
மதிமாறன் சொன்ன திமுக தொண்டர்களுக்கான சோ கால்ட் விடுதலைப்புலி ஆதரவு இது தானோ 🙂
Cartoonist Bala’s post in face book
மலேசியத் தமிழச்சி என்ற பெண் விடுதலைப்புலிகள் மீதான பற்று காரணமாக தனது பின்னங்கழுத்தில் புலிகளின் சின்னத்தை பச்சைக்குத்தியிருக்கிறார்.
(அந்த பெண்ணின் உணர்வை குற்றம் சொல்ல முடியாது.. அந்த சின்னத்தை பயன்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட.. )
புலிகளின் ஆதரவாளர்கள் என்று தெரிந்தாலே பிரச்னைக்குள்ளாக வேண்டிவரும் சூழலில் ஒரு பெண் அவர்களின் சின்னத்தை பச்சைக்குத்திக்கொள்வது என்பதே பெரும் துணிச்சலானது.
ஆட்சி மாறியதும் கட்சி கரை வேட்டியை மாற்றிக்கட்டும் தொடைநடுங்கி ஜால்ராக்களுக்கு அந்த அருமை தெரியாது என்பதால்
இதை கொச்சைப்படுத்தும் விதமாக இணையதள திமுக பொறுக்கிகளின் முன்னோடி பொறுக்கியான `டான் அசோக்’ என்பவன் அந்த பெண்ணின் படத்தையும், நயன்தாராவையும் இணைத்து தங்களின் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறான்.
இந்த பொறுக்கிகள் குழுவின் சில பொறுக்கிகள் தான் சில நாட்களுக்கு முன் நீயா நானாவில் எல்லோரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று பேசியது.. அதோடு அந்த பெண்ணுக்கு தனிப்பட்ட செய்தியாக செக்ஸ் அழைப்பு செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்கிறார்கள்.
இப்படி கேவலமா அரசியல் செஞ்சீங்கன்னா எப்படிடா பெண்கள் அரசியலுக்கு வருவாங்க..
இந்த திருடர்கள் முன்னேற்றக்கழக பொறுக்கிகள் நேரடியாக தங்கள் கட்சி அடையாளத்தோடு வரமாட்டார்கள். திராவிடத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு பொதுமுகமூடியில் வருவார்கள். அதை நம்புவதற்கும் அப்பாவி திராவிட இயக்க பற்றாளர்களும் இருக்கிறார்கள் என்பது தான் காமெடி 🙁
முற்றிலும் உண்மை………..! அருமையான பதிவு..!
எம்.ஜி.ஆர்,அதிமுக பற்றிய கருத்தும் நிஜம்………..!
பாராட்டுக்கள்!
This is to Purusothaman Ponusamy………
1) Even now we can sell ANNAS’ THEE PARAVATUM in Arivalayam but you cant enter into ADMK Office or ADMK Meeting.First no one buy next is not allowed to sell this type of books.
2)Even now Vaiko or Jaya not against the Dravida Protest they simply Mum and Deff.
3)Before statrting the meeting all ADMK Stages are filled with Dancers Resembles Jaya or MGR.But you want us to beleive ADMK followers are Rationalist.
One more i would like to tell you from Historical……………..
Once Anna and Rajaji after finished their meeting in Modakuruchy-Attur Salem Dt they returned to Chennai.When they crossed Attur Anna feels angry and Rajaji get down the car to buy some snacks at the early morning.At the time people saw DMK Flag over a car…suddenly people crowded the car (Anna)….At the moment one person asked to Anna ARE YOU IN MGR PARTY…..YES This is the fate for Tamilnadu.
ஜெயலலிதாவை தன் சுய திமிரை விடுத்து விஜயகாந்த்துடன் கூட்டணி சேர வைக்க அதிமுக தொண்டர்களால் இயலும், ஆனால் தொண்டர்கள் நெருக்குதலால் கூட்டணி வைக்கை கருணாநிதியை செய்யவைக்க திமுக தொண்டர்களால் இயலாது.
I accept the DMK Part 100%.But we shouldn’t forget about how many times O.P,Sengs and others reach Vijaya Kanth and approach Tha.Pandiayan to act as Intermediate.And cho.ramasamy sorry ramaswamy guide jaya to join MDMK……
ie..Jaya very much need to join MDMK as part of coilation at 2011 election.
மிக சரியான பதிவு. எம்.ஜி.ஆர் பற்றியது உண்மை.
To Anil
Hi Anil i felt bad about your Reply.You said Jaya as Papathi it means you have Know about Erode Pathai(Periyarism).But on the same time you said Prabhakaran as Malayali……. There should not be a Single Person Workship i accept but at the same time you not to seem Prabhakaran as that much crusial man.Even i sure MATHIMARAM will not accept your Concept…….
@Raja,
Let me know what is wrong in my comment.
Yes Anil
You said Prabhakaran as Malayali… for the last 2 decay i think this is the first time i here about this.Prabhakaran fought for tamil Ieelam with the historical & Geographical knowledge of who ruled Srilanka and how tamilians came there………And he realise he as a Tamilan and with that Courage he fought.
Ok any way there may some fault decision by prabhakaran but it is not correct due Malayali he act as that.Contact #9789461668
@Raja,
Prabakaran did everything to attain power. Read his (real) life history and his cold blodded murders. He killed whoever opposed him. He eliminated fellow Tamil groups. He killed even the peace lovers. He is the sole reason for the agony of Sri Lankan Tamils. Once he joined with Premadasa. Yes, he is a malayalee. He has all the vices a typical malayalee has: selfishness, arrogance, back-stabbing, changin colours, and cunningness. As usual we allow ourselves to be cheated by non-Tamilians: MGR, Prabakaran, Jeyalalitha, etc.
அனில் என்ற பெயரில் வந்து வாந்தி எடுப்பவருக்கு,
பிரபாகரன் மலையாளி என்பது இப்போதுதான் சொல்கின்றார்கள். இது 20 வருடத்துக்கு முன் mgr க்கு எப்படி தெரிந்தது ? பிரபாகரனுக்கு கூட தெரிந்திருக்காது தான் மலையாளி என்று.
பிரபாகரன் மலையாளி என்று எப்படி உறுதியா கூறுகின்றார்கள் என்று தெரியவில்லை ?
“சம்பூகன் says:
5:22 பிப இல் மே30, 2012
அருமையான கருத்து.பிரபாகரனை எம்.ஜி.ஆர் ஆதரிக்க முக்கியக் காரணம் அவரும் தன்னைப்போல ஒரு ஹீரோவாக உருவாகிறார் என்பதால்தான்.ஹீரோயிசம் என்ற சினிமாத்தனம்தான் இந்திரா காந்தியும்,ராஜீவ் காந்தியும் ஈழத்தமிழர் பிரச்சினையில் சார்பு நிலை எடுத்ததால்தான் எம்.ஜி.ஆர்.பகிரங்கமாக புலிகளை ஆதரித்தார்.”
MGR ஈழப்பிரச்சினை தொடர்பாக சார்பு நிலை எடுக்க காரணம் மத்திய அரசின் கொள்கை காரணமாக இருக்கலாம். ஆனால் புலிகளை ஆதரிக்க அது காரணம் அல்ல. ஏனென்றால் அந்த காலப்பகுதியில் புலிகளை விட பலம் வாய்ந்த அதே வேளை கூடிய ஆயுத ஆள் படையணி கொண்ட பல போராட்ட குழுக்கள் இருந்தன.
“1984 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.”
கருணாநிதியின் இந்த அழைப்பை ஏற்று ஏனைய இயக்க தலைவர்கள் போனார்கள். பிரபாகரன் உள்நோக்க சந்திப்பு என்று போகவில்லை. அதே வேளை MGR இன் சந்திப்புக்கு தான் போகாமல் தனது பிரதிநிதியை அனுப்பினார்.
கருணாநிதியின் சந்திப்புக்கு போகாதமைதான் MGR க்கு பிரபாகரன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மத்திய அரசு புலிகள் இயக்கம் மீது எதிர்ப்பு உணர்வே கொண்டிருந்தனர். புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய இயக்கங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. MGR இன் வற்புறுத்தலின் பின்பே புலிகள் இயக்கத்துக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
எம் ஜி ஆர் புலிகளுக்கு செய்த உதவியை மறந்து அவரை இவ்வளவு கேவலமாக விமர்சிப்பது நன்றி மறந்த செயல். அ தி மு க என்றைக்குமே மக்கள் நாடி பிடித்து இயங்கும் ஒரு இயக்கம். 83 ம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு துயரம் வந்துற்றபோது இங்கு அ தி மு க தான் ஆட்சியில் இருந்தது. மக்கள் ஆங்காங்கே பொங்கி எழுந்தார்கள். அந்த தீயை அணையாமல் காத்ததும் எம் ஜி ஆர் தான். பல கோடிகளை புலிகளுக்கு வாரி வழங்கினார். அப்போது மத்தியில் இருந்த இந்திராவும் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் எனபது உண்மைதான். ராஜிவ்காந்தி -பிரபாகரன் ஒப்பந்தத்தை பிரபாகரன் போலவே அப்போது எம் ஜி ஆரும் ஏற்கவில்லை. எம் ஜி ஆரின் சுகவீனத்தை பயன்படுத்தி அவரை கட்டாயப்படுத்தி ஏற்க வைத்தார்கள்.
ராஜிவ்காந்தியின் கொலைக்குப் பிறகு இங்கு நிலைமையே தலை கீழாக மாறிவிட்டது. மக்களே புலிகளை வெறுக்க ஆரம்பித்தார்கள். அதையேதான் ஜெயலலிதாவும் பிரதிபலித்தார். மக்களின் கருத்தோடு முரனுவதே எப்போதும் கருணாநிதியின் வேலை. அந்த நேரத்தில் ஜெ வை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் புலிகளை அவர் ஆதரித்தார். அதுதான் உண்மை. ஈழ இறுதிப்போரில் அவரது நிலை என்ன…?எனபது உலகுக்கே தெரியும்.
யார் தங்களுக்கு உதவி செய்கிறார்களோ அவர்களைக் கொண்டாடுவதுதான் மனித இயல்பு. அந்த வகையில் எம் ஜி ஆரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாட வேண்டும் என்று இங்கு பதிவிட்ட ஈழத் தமிழ் நண்பர்கள் விரும்புகிறார்கள்…?என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.