வடிவேலு பாணி தமிழ்த் தேசியமும்; புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தியாகமும்

நம்புங்கள் காவல் துறை மக்களின் நண்பன்

‘சமச்சீர் கல்வி எதிர்ப்பு, தமிழ்ப்புத்தாண்டு மாற்றம், அரசு சார்பாக பார்ப்பன முறைப்படி சமஸ்கிருத மந்திரம் ஓதி திருமணங்கள் நடத்தி வைப்பது’ என்பது போன்ற அதிமுக அரசின் தமிழ் விரோத, பார்ப்பன ஆதரவு போக்கை கண்டித்து போராடாமல்,

இலங்கை தமிழர்களுக்கான போராட்டம், அணு உலை எதிர்ப்பு போன்ற மிக முக்கியமான போராட்டங்களையும்கூட, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு போராட்டமாக மாற்றி நீர்த்து போக செய்தும்,

தமிழக அரசை எதிர்த்து நேரடியாக போராட தயங்கி தந்திரமாக, வேறு வேறு பிரச்சினைகளை எடுத்து தீவிரமாக தமிழர்களை குழப்பி வருகிற, அரசு சார்பு பெற்ற இயக்கங்கள், அமைப்புகள்; வின்னர் பட வடிவேலு பாணியில் வீரமாக ‘போராடி’ வரும் சூழலில்,

ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொடர்ந்து சமரசமின்றி போராடி வருகிற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்களுக்கு மீண்டும் நமது நன்றியையும், வணக்கத்தையும் தெரவித்துக் கொள்வோம்.

தொடர்புடையவை:

நன்றியும் வணக்கமும்

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை-`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

‘தமிழுக்கு நீச மொழி என்று பெயர்..’ வாழ்க தமிழ்த் தேசியம்.. நல்லா வருவீங்க பாஸ்..

‘தமிழ் நீச மொழி, கோயில் கருவரையில் அர்ச்சனை மொழியாக இருக்க தமிழுக்கு தகுதியில்லை’ என்று தகறாறு செய்தது, செய்வது;

தெலுங்கனா, கன்னடனா, மலையாளியா, இந்திக்காரனா, வெள்ளைக்காரனா, ஆப்பிரிக்க கருப்பின மக்களா, சோமாலியாவில் பட்டினியால் சாகுகிறார்களே அவர்களா?

இல்லை,

தமிழ்த்தேசியம் கொண்டாடுகிறதே, ‘பார்ப்பனர் என்றால் அறிவாளி; அந்தணர் என்றால் உயர்ந்தவர்’ என்று, அந்த அறிவாளியான, உயர்ந்த பச்சைத் தமிழர்களா?

யார் தமிழை இழிவாக நடத்துவது?

தொடர்புடையவை:

தமிழ்த்தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

‘துரோகி பெரியார்; பிராமணர்கள் உயர்ந்தோர்’ – பேஷ்.. நன்னாருக்கு.. கை, கால் அலம்பிண்டு சாப்ட வாங்கோ

பெரியாரை பார்ப்பனர்கள் எதிர்ப்பதற்கும், விமர்சிப்பதற்கும் காரணம் உண்டு. ஆனால், அவரால் பயனடைந்த பார்ப்பனரல்லாதவர்களும் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்களே ஏன்?

– திராவிடன்

பெரியார் எதிர்ப்பு என்பது பார்ப்பன ஆதரவின் தொடர்ச்சி.

தமிழ் நாட்டை பொறுத்தவரை, பார்ப்பனர்கள் மூலம் கிடைக்கிற லாபத்திற்கு, அங்கிகாரத்திற்கு, ‘தோழமை’ க்கு பார்ப்பனியத்தை, பார்ப்பன மேன்மையை ஒருவர் ஒத்துக்கொண்டால் மட்டும் போதாது; அவர் கண்டிப்பாக பெரியார் எதிர்ப்பாளர் அல்லது திராவிட எதிர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்.

‘பார்ப்பனர் என்றால் அறிவாளி; அந்தணர் என்றால் உயர்ந்தவர்’ என்று உளவு துறை பாணியில், படு பச்சையாக பார்ப்பன ஆதரவுகூட இல்லாமல் இருக்கலாம்; ஆனால் கண்டிப்பாக பெரியார், திராவிட எதிர்ப்பு என்பது மிக முக்கியம்.

இது அந்த காலத்து ப. ஜீவானந்தம் தொடக்கம், அதுவே இன்றைய சில அறிவாளிகளின் வழக்கம்; அதற்கு மகாகவி பாரதியே இவர்களுக்கு பார்ப்பன நட்பின் பாலம்.

பெரியார் எதிர்ப்பும் பாரதி ஆதரவும் பார்ப்பன உறவின் முற்போக்கு வடிவம்.

இன்று கூட பார்ப்பன பத்திரிகைகளில் வேலை செய்கிற பெரியார் ஆர்வலர்களில் பலர் பாரதி, காந்தி, தமிழ் உணர்வு, ஈழ ஆதரவு, திமுக எதிர்ப்பு என்ற பெயரில் திராவிட எதிர்ப்பு என்றுதான் புழங்குகிறார்கள்.

முற்போக்காளர்கள், பார்ப்பன பத்திரிகைகளில் எழுதுகிற எழுத்தாளர்கள் பெரியார் எதிர்ப்பு, அம்பேத்கர் புறக்கணிப்பு அல்லது பெரியார், அம்பேத்கர் புறக்கணிப்பு என்கிற இந்த ‘டெக்னிக்’ கைதான் கையாளுகிறார்கள்.

இவர்களும் காந்தி, பாரதி ஆதரவு நிலையிலிந்து அங்கெங்கே தமிழ் உணர்வு, ஈழம் என்று தூவி, பார்ப்பன சார்பு கொண்ட தீவிர திராவிட எதிர்ப்பைதான் பிரச்சாரம் செய்கிறார்கள்.

தோழர் திராவிடன், நீங்கள் என்னிடம் கேட்ட இதே கேள்வியை பெரியாரிடமும் கேட்டார்கள் அதற்கு அவர் தந்த பதில்,

“பார்ப்பனரல்லாதவர்கள் என் மேல் கொண்ட கோபத்தினால்தான் என்னை விமர்சிக்கிறார்கள் என்பதல்ல, என்னை திட்டுவதின் மூலம் பார்ப்பானிடம் பொறுக்கி திங்கலாம் என்பதினால்தான்..” என்றார் பெரியார்.

பெரியார் எதிர்ப்பாளர்கள் யார்?

பார்ப்பன ஆதிக்கம் குறித்து அவர்களின் கருத்து என்ன?

இப்போது அரசியல் ரீதியாக யாரோடு சேர்ந்து புழங்குகிறார்கள்.. என்பதை எல்லாம் ஒப்பிட்டு பாருங்கள்;

பெரியார் ஒரு மாபெரும் சிந்தனையாளர் மட்டுமல்ல, தீர்க்கதரிசியாகவும் தெரிவார்.

**

‘துரோகி பெரியார்; பிராமணர்கள் உயர்ந்தோர்’ – பேஷ்.. பேஷ்.. தலைப்பு ரொம்ப நன்னாருக்கு.. கை, கால் அலம்பிண்டு சாப்ட வாங்கோ.. அப்படியே வாசல்லேயே… நில்லுங்கோ..தோ.. சாதத்தோடு வந்துடுறேன்..

தட்டு வைச்சிருக்கேளா..கையிலியே ஏந்திக்கிறேளா..

தொடர்புடையவை:

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

தமிழ்த்தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?
 
ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்
 
பெரியாரின் ஊழல்
 
பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்
 
பெரியார்; தலித் விரோதியா?
 
 
தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்
 
‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்கபோல’
 
என்ன செய்து கிழித்தார் பெரியார்?
 
காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்
 
பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?
 

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

(6-6-2012 அன்று எழுதியது)

கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம்.

சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது.

இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது.

‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார்.

வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார்.

மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார்.

‘தருகிறேன்’ என்று மகாபலி மன்னன் கூற, உடனே அப்பு கமலாக இருந்த திருமால், தசாவதார கமலாக விஸ்வரூபம் எடுத்து தனது ஒரு அடியால் பூமியையும் இன்னொரு அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடிக்கு காலை உயர்த்தி மகாபலி மன்னன் தலைமீது வைத்ததாகப் புராண கதை இருக்கிறது.

அதுபோல், இந்த முறை ‘விஸ்வரூப’த்தில் கமல், இஸ்லாமியர்கள் தலையில் காலை வைத்திருப்பார் என்றுதான் அந்த விளம்பரம் உணர்த்துகிறது.

அரபி எழுத்து வடிவம், இஸ்லாமியர்களை குறிக்கிறது. விஸ்வரூபம் என்பது இந்து அடையாளமாக இருக்கிறது.

‘இது என்ன நியாயம்? படம் வருவதற்கு முன்னே இப்படியெல்லாம் எழுதுவது மோசடியல்லவா?’  என்று கமல் ஆர்வலர்கள் கொதிக்கக் கூடும்.

கமலின் முந்தைய படங்களில் உள்ள அரசியலே, இந்த படத்தின் முன்னோட்ட விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு படத்தின் கதையை யூகித்து, பாராட்டி முன்னோட்டமாக எழுதும்போது, அதே முறையில் அதை விமர்சித்து எழுதினால் தப்பா?

உன்னை போல் ஒருவன் படத்தில், தமிழகத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிய கமல், இந்த முறை சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளிடமி ருந்து அமெரிக்காவை காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன்.

தலையில் முக்காடிட்ட கமல், பின்னணியில் அமெரிக்க நகரம், அரபி எழுத்தில் விஸ்வரூபம்… நடுநிலை நாடகத்திற்கு சமாதானப்புறா (சமாதானத்தை வறுத்து தின்பவனே அமெரிக்காகாரன்தான்)

இந்த விஸ்வரூபம் அமெரிக்காவை பாதுகாக்குமா..?

நல்லவனைப்போல் நடித்து கழுத்தறுப்பதில் கில்லாடியான திருமால், அன்று வாமன அவதாரத்தில் இரண்டே அடியில் இன்றைய அமெரிக்காகாரனைப்போல் உலகத்தை பிடித்தான்.

தனது ‘ஜனநாயகம்’ என்கிற அவதாரம் கொண்டு உலகையே வளைக்க துடிக்கிறது இன்றைய வாழும் திருமாலான, அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய சர்வாதிகாரம்.

அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய, கிறித்துவ அமெரிக்காவை, சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து, இந்தியாவை சேர்ந்த  ஒரு வைணவ இந்து காப்பாற்றுகிறார் என்பது கூட கதையாக இருக்குமோ என்கிற எண்ணத்தை ‘விஸ்வரூப’ விளம்பரம் ஏற்படுத்துகிறது.

அந்த வைணவ இந்து, தசாவதாரம் படத்தில் வந்த, சோழர்காலத்து ரங்கராஜ நம்பி  என்கிற நேரடியான அய்யங்கார் அம்பியாகவும் இருக்கலாம்; அல்லது அதே படத்தில், அமெரிக்காவில் இருந்து வந்த விஞ்ஞானி பார்ப்பனரல்லாத வைணவர் கோவிந்த் நாயக்கராகவும் (நாயுடு) இருக்கலாம்.

பார்க்கலாம். நாயகன் அய்யங்காரா? இல்லை அய்யங்கார்களுக்கு அடியாளாக நடக்கிற நாயுடுவா? என்று.

ஆனால், தீவிரவாதி கண்டிப்பாக முஸ்லிமாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. ஒரு வேளை, முழுக்கதையும் தீவிரவாதியை அல்லது கெட்டவனை மய்யமிட்டு இருந்தால், சிகப்பு ரோஜாக்கள் கமல் போல், அந்த பாத்திரத்தில் கமல்ஹாசனே நடிக்கலாம்.

இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், இந்திய இந்து தீவிரவாதம். சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பொறுப்பு, அமெரிக்க அரசின் தீவிரவாதம்.

இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து, உன்னை போல் ஒருவன் என்று படம் எடுத்தபோது, இந்திய இந்து தீவிரவாதம் பற்றி வாய் திறக்கவில்லை ரங்கராஜ நம்பி.

அதனால் ‘மகா நடிகன்’ என்று மனதார பாராட்டப்பட்டார்.

சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், அமெரிக்க பயங்கரவாதம் என்பதை மறைத்து விஸ்வரூபம் எடுத்தால்,

‘உலகநாயகன்’ என்று உரத்து அமெரி்க்காவிற்கு கேட்கும்படி அழைக்கப்படுவார்.

அவரின் ஆஸ்கர் கனவும் நிஜமாகலாம்.

சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க சார்பு படமாக விஸ்வரூபம் இருந்தால், அதனால் உடனடியான நன்மை என்னவென்று கேட்கிறீர்களா?

கமல்ஹாசனுக்கு இனி அமெரிக்காவிற்கு விசா உடனே கிடைக்கும்.

இந்திய இஸ்லாமியார் என்பதற்காகவே அப்துல்கலாம், ஷாருக்கான் போன்ற பெரிய தில்லாலங்கடிகளையே பேண்டை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா, இனி கமல்ஹாசனை விருந்தினராக உபசரிக்கும்.

அதை நம்மஊர் அறிஞர்கள் ‘உலக நாயகனை ஹாலிவுட் அழைக்கிறது, இனி ஹாலிவுட் படங்களின் தரத்தை நம்மவர் உயர்த்துவார்’ என்று மொழி மாற்றம் செய்வார்கள்.

‘ஹாசன்’ என்பது இஸ்லாமிய பெயர் என்பதால், கமல்ஹாசனை தன் நாட்டினுள் அனுமதிக்க ஆட்டம் காட்டிய அமெரிக்கா,

‘ஹாசன்’ என்பது இஸ்லாமிய பெயர் அல்ல, அது நம் அடிமையின் பெயர் என்று  புரிந்து கொள்ளும்.

*

6-6-2012 படத்தின் முதல் விளம்பரம் தினத்தந்தியியில் வந்தே அன்றே, படம் வெளியாகவதற்கு பல மாதங்களுக்கு முன்பே எழுதியது

தொடர்புடையவை:

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

விஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா?

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?

இங்கிலாந்து ராணி எலிசபெத் முடி சூட்டிய 60-வது ஆண்டு நிறைவு வைர விழா லண்டனில் நடக்கிறது. அதில் பங்கேற்க சென்ற மகிந்த ராஜபக்சேவிற்கு இங்கிலாந்தில் வாழும் ஈழ தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜபக்சே தங்கியருக்கும் ஓட்டலை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தி ‘ஈழ தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவே திரும்பி போ’ என்ற கண்டன கோஷங்கள் எழுப்பி ராஜபக்சேவை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இங்கிலாந்து வாழ் ஈழ மக்களின் இந்த வீரம் நிறைந்த போரட்டத்திற்கு நம் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

அதிகாரமும், செல்வாக்கும் நிறைந்த ராஜபக்சேவையே தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள் இங்கிலாந்து வாழ் ஈழத் தமிழர்கள்.

ஆனால், நம்மால் இலங்கையில் ராஜபக்சே நடத்தும் பாரதி விழாவில், கலந்து கொள்ளமால் இருக்க இங்கிருக்கும் பாரதி பக்தர்களை தடுக்க முடியுமா?

தொடர்புடையவை:

‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்

இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்

சென்னை பாரதியார் சங்கம் இலங்கை அரசுடன் சேர்ந்து கொழும்புவில் பாரதி விழாவை நடத்துகிறது. இங்கிருந்து பாரதி அபிமானிகள் கலந்து கொள்கிறார்கள். மகாகவி பாரதி பெயரில் இப்படி ஒரு மோசடி நடப்பது நியாயம்தானா?

-ஜேம்ஸ்.

நியாயம்தான்.

பாரதியின் பெயரால் இதை செய்யலாமா என்று கேட்கிற உங்கள் கேள்வியில்தான் நியாயம் இல்லை.

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்..’ என்று பாடிய பாரதியை சிங்கள அரசு கொண்டாடுவதில் என்ன தவறு?

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்ற சுப்பிரமணியின் வரிகளை சுருக்கி முழக்கமாக கொண்டுதான், இந்த விழா இலங்கையில் நடக்கிறது. இலங்கையும் உலகில்தானே இருக்கிறது. அதான் தமிழ் அறிஞர்கள் பெயரில் பார்ப்பன சங்கம் பாரதியின் கருத்துக்களை பரப்ப கிளம்பி விட்டார்கள்.

பிரச்சினை, தமிழர்களை கொன்ற இலங்கை அரசுடன் இணைந்து, தமிழ் வளரச்சி என்ற பெயரில் இன்ப சுற்றுலா செல்கிறார்கள் என்பதுதான்.

தமிழனைக் கொன்று தமிழை வளர்க்கிற இந்த மோசடியை கண்டிப்பதுதான் மையமாக இருக்க வேண்டும். அதை விடுத்து, ‘பாரதி பெயரில் செய்யலாமா…?’ என்று வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற இலக்கிய கவலை எல்லாம் எதற்கு?

அப்போ பாரதிராஜா பெயரில் செய்யலாமா?

சில மாதங்களுக்கு முன், இலங்கைக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்ற பாடகர் மனோ, எதிர்ப்பின் காரணமாக கொழும்பு விமான நிலையத்திலிருந்து, திரும்பி வந்துவிட்டார்.

பாடகர் மனோவை திரும்பி வரவைத்தவர்களால், பாரதி (பார்ப்பன) சங்கத்தை சேர்ந்த ‘தமிழர்களை’ போகாமல் தடுக்க முடியுமா?

ஆந்திராவை சேர்ந்த மனோ, தமிழர்களின் எதிர்ப்புக்கு மதிப்புக் கொடுத்து, மன்னிப்பும் கேட்டு கொழும்பில் இருந்து திரும்பி வந்துவிட்டார்.

தெலுங்கு அல்லது உருதை தாய் மொழியாக கொண்ட மனோவுக்கு இருந்த பொறுப்பு, தமிழ் அபிமானிகளுக்கு இல்லை என்பது கேவலமானது.

‘இதை மகாகவி பாரதி பெயரில் செய்யலாமா?’ என்கிற எதிர்ப்பு கோமாளித்தனமானது.

பாரதி பெயரில் செய்தாலும், பாரதிராஜா பெயரில் செய்தாலும் அல்லது ராஜபக்சே பெயரிலேயே செய்தாலும்கூட,

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு நன்றி (வழக்கு எண்.. விமர்சனம் அல்ல)

ஞ்சையிலிருந்து தோழர் எழிலரசன் மே 29 ஆம் தேதி இரவு தொலைபேசியில் அழைத்திருந்தார்

“ஜூனியர் விகடன் பிரபலங்களின் கருத்துக்களை பதிவு செய்து தொலைபேசி வழியாக ஒலிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துகிறது. நேற்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் ‘நட்பு’ என்ற தலைப்பில் உங்கள் பெயரை குறிப்பிட்டு, வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்தில் காரல் மார்க்ஸ் – எங்கல்ஸ் நட்பு பற்றி நீங்கள் எழுதியிருந்ததை முழுவதுமாக படித்துக் காண்பித்தார்.” என்று குறிப்பிட்டார்.

நான் அந்த ஒலிபரப்பை கேட்க வில்லை.

பத்திரிகையில், மேடையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்; எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பேச்சாளர்கள், பிரமுகர்கள், பிரபலமானவர்கள், கொள்கையாளர்கள் என்று பலதரப்பினரும்…

என் புத்தகங்களில் மற்றும் இணைய தளத்தில் உள்ள என் எழுத்துகளை, கருத்தரங்குகளில் நான் பேசிய, தனி உரையாடலில் என்னுடன் பேசியபோது நான் சொன்ன கருத்துகளை; தன் கருத்துகளாக பயன்படுத்தி, மறந்தும் என் பெயர் சொல்லாமல், தன் சமூக கடமையை ‘சிறப்பாக’ செய்து வருகிறார்கள்.

அதைவிடக் கொடுமை, நான் அவர்களிடம் சொன்ன என் கருத்துகளையே. கொஞ்ச நாள் கழித்து அவர்களின் கருத்துகளை போலவே என்னிடமே வந்து, சொன்னவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி அறிவாளிகளால் சூறையாடப்படுகிறது என் அறிவு.

நில அபகரிப்பைவிடவும் இப்படி சிந்தனை அபகரிப்புகள் படுமோசமானவை. நேரடியான பொருளாதார மதிப்பு இல்லாததால், இவைகள் குற்றமாக கருதப்படாத மனநிலையை ‘சிந்தனை அபகரிப்பாளர்கள்’ மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

அறிவாளிகளின் அறிவு நாணயம் இந்த லட்சணத்தில் இருக்கும்போது, இயக்குநர் பாலாஜி சக்திவேல் என் பெயர் குறிப்பிட்டு, என் எழுத்தை மேற்கோள் காட்டிய அவர் அறிவு நாணயத்திற்கு என்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தனைக்கும் அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். பிரபலமானவர்.

‘………..என்று ஒரு எழுத்தாளர் சொல்லியிருக்கிறார் என்று கூட அவர் சொல்லியிருக்கலாம்.

மாறாக, எதை மேற்கோள் காட்டுகிறோமோ, அதை எழுதியவரின் பெயரையும் சொல்வதுதான் முறையானது. நாணயமானது என்ற அவரின் அந்த செயல், எனக்கு மகிழ்ச்சியளித்தது.

பிரபலமாகதவர்களின் சிந்தனைகளை தன்  சிந்தனைகளாக அறிவித்துக் கொள்வதும், பிரபலமானவர்களின், புகழ் பெற்றவர்களின் எழுத்துக்களை எழுதியவரின் பெயரோடு சொல்லி மேற்கோள் காட்டுவதும் ‘அறிவாளிகளுக்கான அழகாக’ இருக்கிறது.

பிரபலமானவர்களின் மேற்கோள் எல்லோருக்கும் தெரந்திருக்கும் என்பதும், அப்படி மேற்கோள் காட்டுவதன் மூலம் பிரபலமானவர்களோடு நெருக்கமாக பழகலாம் என்பதும் ஒரு காரணம்.

‘களவாடப்படுகிற என் கருத்துகள்’என்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற என் உணர்வுக்கு, இயக்குநர் பாலாஜி சக்திவேலின் செயல் கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.

மீண்டும் அதன் பொருட்டு தோழர் பாலாஜி சக்திவேலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புடையது:

கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?