இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்

சென்னை பாரதியார் சங்கம் இலங்கை அரசுடன் சேர்ந்து கொழும்புவில் பாரதி விழாவை நடத்துகிறது. இங்கிருந்து பாரதி அபிமானிகள் கலந்து கொள்கிறார்கள். மகாகவி பாரதி பெயரில் இப்படி ஒரு மோசடி நடப்பது நியாயம்தானா?

-ஜேம்ஸ்.

நியாயம்தான்.

பாரதியின் பெயரால் இதை செய்யலாமா என்று கேட்கிற உங்கள் கேள்வியில்தான் நியாயம் இல்லை.

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்..’ என்று பாடிய பாரதியை சிங்கள அரசு கொண்டாடுவதில் என்ன தவறு?

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்ற சுப்பிரமணியின் வரிகளை சுருக்கி முழக்கமாக கொண்டுதான், இந்த விழா இலங்கையில் நடக்கிறது. இலங்கையும் உலகில்தானே இருக்கிறது. அதான் தமிழ் அறிஞர்கள் பெயரில் பார்ப்பன சங்கம் பாரதியின் கருத்துக்களை பரப்ப கிளம்பி விட்டார்கள்.

பிரச்சினை, தமிழர்களை கொன்ற இலங்கை அரசுடன் இணைந்து, தமிழ் வளரச்சி என்ற பெயரில் இன்ப சுற்றுலா செல்கிறார்கள் என்பதுதான்.

தமிழனைக் கொன்று தமிழை வளர்க்கிற இந்த மோசடியை கண்டிப்பதுதான் மையமாக இருக்க வேண்டும். அதை விடுத்து, ‘பாரதி பெயரில் செய்யலாமா…?’ என்று வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற இலக்கிய கவலை எல்லாம் எதற்கு?

அப்போ பாரதிராஜா பெயரில் செய்யலாமா?

சில மாதங்களுக்கு முன், இலங்கைக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்ற பாடகர் மனோ, எதிர்ப்பின் காரணமாக கொழும்பு விமான நிலையத்திலிருந்து, திரும்பி வந்துவிட்டார்.

பாடகர் மனோவை திரும்பி வரவைத்தவர்களால், பாரதி (பார்ப்பன) சங்கத்தை சேர்ந்த ‘தமிழர்களை’ போகாமல் தடுக்க முடியுமா?

ஆந்திராவை சேர்ந்த மனோ, தமிழர்களின் எதிர்ப்புக்கு மதிப்புக் கொடுத்து, மன்னிப்பும் கேட்டு கொழும்பில் இருந்து திரும்பி வந்துவிட்டார்.

தெலுங்கு அல்லது உருதை தாய் மொழியாக கொண்ட மனோவுக்கு இருந்த பொறுப்பு, தமிழ் அபிமானிகளுக்கு இல்லை என்பது கேவலமானது.

‘இதை மகாகவி பாரதி பெயரில் செய்யலாமா?’ என்கிற எதிர்ப்பு கோமாளித்தனமானது.

பாரதி பெயரில் செய்தாலும், பாரதிராஜா பெயரில் செய்தாலும் அல்லது ராஜபக்சே பெயரிலேயே செய்தாலும்கூட,

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

14 thoughts on “இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்

 1. singala thevuku paalam amaika kodathaa???bharathi padiyathil enna thavaru?? sethu samuthra thittam venamnu solringala?? unga pirachanai bharathi paer ean varudhu na ean alaringaaa…………

 2. வெட்க்கேடு..வெட்க்கேடு… தமிழ்ர்களையும்.. அவர்களது குழந்தைகளையும் கொன்றுவிட்டு தமிழுக்கு விழா எடுக்கிறது கொலைக்கார கூட்டம். அதற்கு ஜால்ரா போடும் தமிழ்நாட்டு பன்னாடை தமிழர்கும்பல்.

 3. வெட்க்ககேடு..வெட்க்ககேடு… தமிழ்ர்களையும்.. அவர்களது குழந்தைகளையும் கொன்றுவிட்டு தமிழுக்கு விழா எடுக்கிறது கொலைக்கார கூட்டம். அதற்கு ஜால்ரா போடும் தமிழ்நாட்டு பன்னாடை தமிழர்கும்பல்.

 4. First I am not a brahmin.

  But I can only pity you.

  Dont you have anything else but to bring up Brahmins for every thing?.

  Your Ulaga mahaa discovery about Bharathy and his kasi- Kanchipuram connection has aboslutely no takers even though you talk about it to someone even when they are sleeping or (pretend ot sleep on seeing you).

  Stop bringing up brahminism every time and focus on real issues.

 5. எனக்கென்னமோ தமிழர்களைவிட தெலுங்கர்கள்தான் தமிழுக்கும்,தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.தமிழால் பிழைப்பு நடத்தும்,தமிழக மேடைகளில் தொண்டை கிழிய தமிழ்ச் சேவகம் செய்யும் செந்தமிழர்கள் பலர் அடிக்கடி இலங்கை சென்று தமிழை வளர்க்கிறார்கள்.அவர்களை வைத்துத்தான் பாரதி சங்கமோ அல்லது ஏதோ ஒரு தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் இலங்கையில் தமிழ் வளர்க்கும் பணிகள் இன்றல்ல நேற்றல்ல ஈழத்தில் போர் நடக்கும் காலத்தில் கூட விழாக்களை நடத்தினார்கள்.
  ஆமாம்…இவர்கள் எல்லாம் நாம் தமிழர்களில் அடங்குவார்கள்தானே?ஆனா,மனோ நாம் தமிழர் அல்ல,திராவிடராக இருக்கலாம்.

 6. Super Sambukan….But seeman want to be a Full time Politician,What can we do…

 7. மாவீரன் மறைந்து விட்டதால், உலக மனிதர்கள் இனி குண்டி கழுவினாலும் அது பார்ப்பன சதிதான்.

 8. உட்காருமிடமெல்லாம் நீங்களாக இருக்கும்போது.. வேறு யாரை சொல்வது…

 9. தனி ஈழம் என்பது யாருடைய கனவு ? நீங்கள் பெரிதும் புகழ் பாடும் பிரபாகரன் அவர்கள், தனக்கு இணையாகவோ, தனியாகவோ, தமிழர் தலைவர்கள் யாரும் உருவாகவிடாமல் ஏத்தனை அரசியல் கொலைகளை செய்தார் என்பதை நீங்களே மறுக்க மாட்டீர்கள். கிழக்கு திமோர், கிழக்கு சூடான் போன்ற மிஷனரி குள்ள நரிகள் உண்டாக்க துடிக்கும் இன்னும் ஒரு நாடு தான் தனி தமிழ் ஈழம். நான் குறிப்பிட்ட இந்த இரண்டு உதாரணங்கள், இஸ்லாமிய நாடுகளை, சர்ச் துண்டாடிய நாடுகள். தமிழ் ஈழம் என்ற நாட்டில் ஆங்கிலம் தான் தாய் மொழியாக இருக்க கூடும். ரோமன் கத்தோலிக் தான் மதமாக இருக்க முடியும். இஸ்லாமிய நாடுகளை துண்டாடிய மிஷனரி குள்ளநரிகள் இப்போது பிரிக்க துடிக்கும் பௌத்த நாடு இலங்கை. சீமான் என்கிற சைமன் தான் நீங்கள் சொல்லும் மிஷ-நரி தமிழ் தலைவர். இதை பார்ப்பனர்களும் ஆதரிக்க வேண்டுமாம், இதனால் மிஷ-நரிகளுக்கு துணை போக வேண்டுமாம். வாயை பொத்தினால் கொஞ்சம் நல்ல இருக்கும்.

 10. இங்கே இந்தியாவில் பிரசாரம் செய்யும் போது, பார்ப்பனியத்தில் இருந்து மாறி அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தை தழுவியதாக பேசி பௌத்தத்தை உயர்த்துகிறீர்கள். நாவில் ஈரம் காயும் முன்னரே, பௌத்த இலங்கையை கத்தோலிக்கம் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு துணை நிற்கிறீர்கள். கொஞ்சமாவது ஞாயம் வேண்டாமா.

Leave a Reply

%d bloggers like this: