கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?
(6-6-2012 அன்று எழுதியது)
கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம்.
சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது.
இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது.
‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார்.
வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார்.
மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார்.
‘தருகிறேன்’ என்று மகாபலி மன்னன் கூற, உடனே அப்பு கமலாக இருந்த திருமால், தசாவதார கமலாக விஸ்வரூபம் எடுத்து தனது ஒரு அடியால் பூமியையும் இன்னொரு அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடிக்கு காலை உயர்த்தி மகாபலி மன்னன் தலைமீது வைத்ததாகப் புராண கதை இருக்கிறது.
அதுபோல், இந்த முறை ‘விஸ்வரூப’த்தில் கமல், இஸ்லாமியர்கள் தலையில் காலை வைத்திருப்பார் என்றுதான் அந்த விளம்பரம் உணர்த்துகிறது.
அரபி எழுத்து வடிவம், இஸ்லாமியர்களை குறிக்கிறது. விஸ்வரூபம் என்பது இந்து அடையாளமாக இருக்கிறது.
‘இது என்ன நியாயம்? படம் வருவதற்கு முன்னே இப்படியெல்லாம் எழுதுவது மோசடியல்லவா?’ என்று கமல் ஆர்வலர்கள் கொதிக்கக் கூடும்.
கமலின் முந்தைய படங்களில் உள்ள அரசியலே, இந்த படத்தின் முன்னோட்ட விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு படத்தின் கதையை யூகித்து, பாராட்டி முன்னோட்டமாக எழுதும்போது, அதே முறையில் அதை விமர்சித்து எழுதினால் தப்பா?
உன்னை போல் ஒருவன் படத்தில், தமிழகத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிய கமல், இந்த முறை சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளிடமி ருந்து அமெரிக்காவை காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன்.
தலையில் முக்காடிட்ட கமல், பின்னணியில் அமெரிக்க நகரம், அரபி எழுத்தில் விஸ்வரூபம்… நடுநிலை நாடகத்திற்கு சமாதானப்புறா (சமாதானத்தை வறுத்து தின்பவனே அமெரிக்காகாரன்தான்)
இந்த விஸ்வரூபம் அமெரிக்காவை பாதுகாக்குமா..?
நல்லவனைப்போல் நடித்து கழுத்தறுப்பதில் கில்லாடியான திருமால், அன்று வாமன அவதாரத்தில் இரண்டே அடியில் இன்றைய அமெரிக்காகாரனைப்போல் உலகத்தை பிடித்தான்.
தனது ‘ஜனநாயகம்’ என்கிற அவதாரம் கொண்டு உலகையே வளைக்க துடிக்கிறது இன்றைய வாழும் திருமாலான, அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய சர்வாதிகாரம்.
அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய, கிறித்துவ அமெரிக்காவை, சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து, இந்தியாவை சேர்ந்த ஒரு வைணவ இந்து காப்பாற்றுகிறார் என்பது கூட கதையாக இருக்குமோ என்கிற எண்ணத்தை ‘விஸ்வரூப’ விளம்பரம் ஏற்படுத்துகிறது.
அந்த வைணவ இந்து, தசாவதாரம் படத்தில் வந்த, சோழர்காலத்து ரங்கராஜ நம்பி என்கிற நேரடியான அய்யங்கார் அம்பியாகவும் இருக்கலாம்; அல்லது அதே படத்தில், அமெரிக்காவில் இருந்து வந்த விஞ்ஞானி பார்ப்பனரல்லாத வைணவர் கோவிந்த் நாயக்கராகவும் (நாயுடு) இருக்கலாம்.
பார்க்கலாம். நாயகன் அய்யங்காரா? இல்லை அய்யங்கார்களுக்கு அடியாளாக நடக்கிற நாயுடுவா? என்று.
ஆனால், தீவிரவாதி கண்டிப்பாக முஸ்லிமாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. ஒரு வேளை, முழுக்கதையும் தீவிரவாதியை அல்லது கெட்டவனை மய்யமிட்டு இருந்தால், சிகப்பு ரோஜாக்கள் கமல் போல், அந்த பாத்திரத்தில் கமல்ஹாசனே நடிக்கலாம்.
இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், இந்திய இந்து தீவிரவாதம். சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பொறுப்பு, அமெரிக்க அரசின் தீவிரவாதம்.
இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து, உன்னை போல் ஒருவன் என்று படம் எடுத்தபோது, இந்திய இந்து தீவிரவாதம் பற்றி வாய் திறக்கவில்லை ரங்கராஜ நம்பி.
அதனால் ‘மகா நடிகன்’ என்று மனதார பாராட்டப்பட்டார்.
சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், அமெரிக்க பயங்கரவாதம் என்பதை மறைத்து விஸ்வரூபம் எடுத்தால்,
‘உலகநாயகன்’ என்று உரத்து அமெரி்க்காவிற்கு கேட்கும்படி அழைக்கப்படுவார்.
அவரின் ஆஸ்கர் கனவும் நிஜமாகலாம்.
சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க சார்பு படமாக விஸ்வரூபம் இருந்தால், அதனால் உடனடியான நன்மை என்னவென்று கேட்கிறீர்களா?
கமல்ஹாசனுக்கு இனி அமெரிக்காவிற்கு விசா உடனே கிடைக்கும்.
இந்திய இஸ்லாமியார் என்பதற்காகவே அப்துல்கலாம், ஷாருக்கான் போன்ற பெரிய தில்லாலங்கடிகளையே பேண்டை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா, இனி கமல்ஹாசனை விருந்தினராக உபசரிக்கும்.
அதை நம்மஊர் அறிஞர்கள் ‘உலக நாயகனை ஹாலிவுட் அழைக்கிறது, இனி ஹாலிவுட் படங்களின் தரத்தை நம்மவர் உயர்த்துவார்’ என்று மொழி மாற்றம் செய்வார்கள்.
‘ஹாசன்’ என்பது இஸ்லாமிய பெயர் என்பதால், கமல்ஹாசனை தன் நாட்டினுள் அனுமதிக்க ஆட்டம் காட்டிய அமெரிக்கா,
‘ஹாசன்’ என்பது இஸ்லாமிய பெயர் அல்ல, அது நம் அடிமையின் பெயர் என்று புரிந்து கொள்ளும்.
*
6-6-2012 படத்தின் முதல் விளம்பரம் தினத்தந்தியியில் வந்தே அன்றே, படம் வெளியாகவதற்கு பல மாதங்களுக்கு முன்பே எழுதியது
தொடர்புடையவை:
விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்
விஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா?
மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?
‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
பேராண்மை’- சென்சாரின் சிறப்பு‘
7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல
visiladachan kunjugalukku ellam ethirppu thevaiyaa? oru postarukkae ippadiyaa? bayangaram!!!!!!!!!!!!
உங்கள் கணிப்பு ஓரளவுக்கு சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு. இந்தப் படம் ஆஃபகனைப் பற்றியது என்பது செய்திகளிலிருந்தும் படங்களிலிருந்தும் தெரிகிறது. ஒரு வேளை நேட்டோ அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் நேர்மையான, “மனித நேயமுள்ள” உளவாளியாக அல்லது இராணுவ அதிகாரியாக நடித்திருப்பார் போல, “மிசன் இம்பாஸிபிள்,” ஜேம்ஸ்பான்ட் படங்களின் சாயல் தெரிகிறது, தாலிபானகள் வான்தாக்குதலில் சரிந்து விழும் காட்சிகள் முன்னோட்டத்தில் இட்ம் பெற்றுள்ளன.. ஷாருக்கான் விவகாரத்திற்குப் பின் தனது பெயரை அரபி ஒலியமைப்பில் மாற்றுவதாகக் கூறினார் கமல். இஸ்லாமியோபோபியாவுக்கு எதிரானவராகக் காட்டிக் கொள்ளும் கமல் அவரது படங்களில் அதற்கு எதிரானவராகவும் வைணவப்பாசம், சைவ, இசுலாமிய எதிர்ப்பு ,படத்தின் பெயரில் கதைமாந்தர்களில் சமஸ்கிருதம்தான் தென்படுகிறது.
எதுக்கு சார் இந்த படத்துக்கு இவ்ளோ பெரிய கட்டுரை விளக்கம் எல்லாம். அவர் ஏதோ படம் எடுத்துட்டு போறார் விடுங்க. பிடிச்சா போய் பாருங்க. பிடிக்கலைன்னா போய் வேலையை பாருங்க
இந்தப் படம் ஏதோ சமுதாயத்தையே புரட்டிப் போடப் போவது போல அல்லவா இருக்கிறது உங்கள் முன்னோட்ட விமர்சனம்! நம்மாளுங்க புடிச்சாப் பார்ப்பாங்க. புடிக்கலேன்னா படம் ஊத்திக்கும். அவ்வளவுதான்! சில நேரங்களில் கம்யூனிஸ்ட்களின் இது போன்ற நுண்ணரசியல் நோக்கு கடுப்படிக்கிறது. கமல் பெயரை பயன்படுத்தினால் ப்ளாக் ஹிட்ஸ் உயருமென்று தெரியும். அதை ஏத்துவதற்கென்று இப்படிச் செய்வது ஆபாசமாய் இருக்கிறது
கமலஹாசனுக்கும் பிரச்சினைகளுக்கும் எப்போதுமே முடிவு இல்லை. திரு மதிமாறன் தன்னுடைய பாசிச பிராமணீய எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய அபிமானத்தை கமல் என்கிற ஒரு தமிழ்நாட்டு நடிகர் எடுத்துவரும் பத்தோடு பதினொன்றாக ஆகப்போகும் இன்னும் வெளிவராத படத்திற்காக உரத்து குரல் கொடுக்கிறார். என்ன ஒரு அபத்தமான கட்டுரை.உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமை தவிர மற்ற எல்லாமே கொடியது என்று மீண்டும் தன் எழுத்தால் சான்று பகர்கிறார் இந்த கம்யுநிசவாதி.ஒருவேளை இந்த படத்திற்கு இளையராஜா என்கிற பிராமணிய அடிவருடி இசை அமைத்திருந்தால் இவரின் எழுத்து இப்படி வீரியமாக இருக்குமா என்பது சற்று கேள்விக்குரியதுதான்.உங்கள் கட்டுரையை படித்து மண்டை காய்ந்து போனதுதான் மிச்சம்.வழக்கம் போல இளையராஜா என்ற காலி கூஜாவை புகழ்ந்து எதையாவது எழுதி தள்ளுங்களேன். நலமாக இருக்கும்.
தோழரே,
எதார்த்தமான நேர்மையான கலைப்படைப்புகளைத் தமிழர்கள் ஆதரித்தால்
இது போன்ற மத உணர்ச்சிகளைத் தூண்டும் திணிப்புகளையும் , கலை வியாபாரிகளையும் புறக்கணிக்கலாம். ஆனால் நிலைமை தலை கீழாகத்தானே இருக்கிறது. தங்களுடைய
கணிப்பு சரியென்றுதான் தோன்றுகிறது.
விஸ்வரூபத்தின் கதை உண்மையிலேயே நீங்கள் கணித்தது போல இருக்கும் பட்சத்தில் உங்கள் விமர்சனமும் நியாயமானதே! இருப்பினும் சற்றே பெண்மை கலந்த கமலின் ஸ்டில்ஸ் பார்க்கும் போது அரசியலுக்கு அப்பால் கமலுக்காக படம் பார்க்கும் ஆர்வம் எழும்புவதைத் தடுக்க முடிவதில்லை!
//சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், அமெரிக்க பயங்கரவாதம் //
என்னே கண்ணோட்டம்? ஆய்வு? இதுல நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்லிக்காட்டுறான் ‘அறிவாளி’ என ஆதங்கம் வேறு.
அதிதூய கம்யூனிச கும்மி போதாது அடுத்து இஸ்லாமிய தீவிரவாதம் பேசுறவன் ஏன் இந்து தீவிரவாதம் பேசலனு கேள்வி. இங்க இரண்டையும் பேசாம ஏதோ பாரதியால தான் நாடே அழியுதுனு நூல் வெளியீடு. உபயம் டார்வின்தாசன். அது சரியா விக்கல உடனே போடு உலக துரோகி மகாத்மானு ஒரு நூலை.
அரசியல் எழுத்து எழுதி பிழைக்கும் ஒருவர் சினிமா எடுத்து பிழைக்கும் ஒருவரை கிண்டல் செய்வது முரணாகப் படவில்லையா ?
தோழர் “‘கப்பு” ச்சே உப்பு அவர்களே , முடிந்தால் மதிமாறன் அவர்களின் புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் கொடுங்கள் இல்லையால் அந்த புத்தகத்தின் ஒரு பொய்யை யானும் சொல்லுங்கள் நீங்கள் ”அறிவு ஆழி ” என்பதை naangal ஏற்று கோள்கிறோம்
kaarigan!why you fellow unnecessarily drag Illaiyaraja in this matter?
உலகில் தீவிரவாதத்தை உருவாக்கியதே அமெரிக்காதான். ஆப்கானிஸ்தானில் ஹிஸ்பே இஸ்லாமி எனும் இயக்கத்தைத் தொடக்கி, சோவியத் ரஷ்யா எனும் வல்லரசை துண்டு துண்டாகச் சிதைத்தது. ஹிஸ்பே இஸ்லாமி வளர்ந்து தம் மார்பில் பாய்ந்து விடாதிருப்பதற்காக தாலிபான்களை உருவாக்கி அதற்கு ஆப்பு வைத்தது. தாலிபான்களைக் கொண்டு இஸ்லாம் மதத்திற்கும் இஸ்லாமிய ஆட்சிக்கும் களங்கத்தை சர்வதேச உலகில் உண்டுபண்ணியது. அவர்களுக்கு உதவியாக அல்கைதாவை களமிறக்கியது. உஸாமாவை உலக கதாநாயகனாக்கியது. பின் வில்லனாக்கியது. பின் போட்டுத் தள்ளியது. இவ்வளவும் செய்து விட்டு, உலக சமாதானம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் வீர முழக்கமிடுகிறது. சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான். என்னதான் இருந்தாலும், அமெரிக்காவை அண்டிப் பிழைக்கும் நிலை எல்லா நாடுகளிலும் மாற்றமின்றியே தொடர்கிறது. சினிமாவும் அதற்கு விதிவிலக்காக முடியாது. கமலுக்கு வெற்றிப்படமொன்றைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமுள்ளது. ரஜினிக்கு கொஞ்ச காலம் அரசியல் தேவைப்பட்டது போல், கமலுக்கு இஸ்லாமிய தீவிரவாதம் தேவைப்படுகிறது. பயன்படுத்தி விட்டுப் போகட்டும் என இருக்காது தட்டிக் கேட்பது கடமைதான். மதிமாறனுக்கு வாழ்த்துக்கள்.
சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், அமெரிக்க பயங்கரவாதம் , அமெரிக்க பயங்கரவாதம் அமெரிக்க பயங்கரவாதம் என்பது கதையாக இருக்குமோ என்கிற எண்ணத்தை ‘விஸ்வரூப’ விளம்பரம் ஏற்படுத்துகிறது.
சுத்த பைத்தியக்கார தனம்
நடிப்பை நடிப்பாக பாருங்கள்
உங்கள் யூகம் சரியாகவும் இருக்கலாம்.என்றாலும் படம் வந்தவுடன் பார்த்துவிட்டு எழுதுங்கள்.
ஆனால்,இந்த விளம்பரத்தைப் பார்த்தால் கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான TOM CRUISE நடித்த Mission: Impossible – Ghost Protocol என்ற படத்தின் விளம்பரம் போல உள்ளது.எதுக்கும் இந்தப் படத்தையும் பாத்து வச்சுக்குங்க.விளம்பரத்தை மட்டும் தான் உருவுனாரா இல்ல கதையையே உருவிட்டாரான்னு எழுதலாம்ல…
//இந்த விளம்பரத்தைப் பார்த்தால் கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான TOM CRUISE நடித்த Mission: Impossible – Ghost Protocol என்ற படத்தின் விளம்பரம் போல உள்ளது.//
தலையில் முக்காடு போட்டு நிற்பது ஒரு சாதாரண விஷயம். இதை யார் வேணும்னாலும் பயன்படுத்தலாம். தெய்வத்திருமகள் திருட்டைச் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்ளலாம். போகிற போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிச்சிட்டுப் போறது எவ்ளோ ஈசியா இருக்கு நம்ம இணைய சிட்டிசன்களுக்கு!!!!
தனி ஈழம் என்பது யாருடைய கனவு ? நீங்கள் பெரிதும் புகழ் பாடும் பிரபாகரன் அவர்கள், தனக்கு இணையாகவோ, தனியாகவோ, தமிழர் தலைவர்கள் யாரும் உருவாகவிடாமல் ஏத்தனை அரசியல் கொலைகளை செய்தார் என்பதை நீங்களே மறுக்க மாட்டீர்கள். கிழக்கு திமோர், கிழக்கு சூடான் போன்ற மிஷனரி குள்ள நரிகள் உண்டாக்க துடிக்கும் இன்னும் ஒரு நாடு தான் தனி தமிழ் ஈழம். நான் குறிப்பிட்ட இந்த இரண்டு உதாரணங்கள், இஸ்லாமிய நாடுகளை, சர்ச் துண்டாடிய நாடுகள். தமிழ் ஈழம் என்ற நாட்டில் ஆங்கிலம் தான் தாய் மொழியாக இருக்க கூடும். ரோமன் கத்தோலிக் தான் மதமாக இருக்க முடியும். இஸ்லாமிய நாடுகளை துண்டாடிய மிஷனரி குள்ளநரிகள் இப்போது பிரிக்க துடிக்கும் பௌத்த நாடு இலங்கை. சீமான் என்கிற சைமன் தான் நீங்கள் சொல்லும் மிஷ-நரி தமிழ் தலைவர். இதை பார்ப்பனர்களும் ஆதரிக்க வேண்டுமாம், இதனால் மிஷ-நரிகளுக்கு துணை போக வேண்டுமாம். வாயை பொத்தினால் கொஞ்சம் நல்ல இருக்கும்.
இங்கே இந்தியாவில் பிரசாரம் செய்யும் போது, பார்ப்பனியத்தில் இருந்து மாறி அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தை தழுவியதாக பேசி பௌத்தத்தை உயர்த்துகிறீர்கள். நாவில் ஈரம் காயும் முன்னரே, பௌத்த இலங்கையை கத்தோலிக்கம் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு துணை நிற்கிறீர்கள். கொஞ்சமாவது ஞாயம் வேண்டாமா.
nanba….dhayavu senju UNNAIPOL ORUVAN padam thirumba paarunga….adhula kamal oru muslim ah than nadichirupaar thats for thivira vathathula oru sila islamiyargalum bali aayirukanga-bali koduthirukkanga nu solrathukku…melum DHASAVATHARAM la muslims ellarume theivira vaathi illa nu solrathukaga ve avar KALIFULLA n family character vechurupaar. i.e., islamiyargal ellarum thiviravaathigal illanu kaaturathukku…endha padathulayum avar islam ah thaakiyo ethiragavo pesirukka maattar including HEY RAAM…neinga endha adipadaila ivlo solreinga nu enakku puriyala….n ofcourse naan onnum kamal fan kedaiyadhu….neinga avar padangala sariya purinjukalaiyo nu naan nenaikiren….
தோழர் நீங்கள் குறிப்பிட்டு எழுதியதுபோல்தான் இருக்கும் போல். நீங்கள் இதை எழுதிய மறுநாள் வெளியான விஸ்வரூபத்தின் இரண்டாவது டிரைலர் உங்கள் கூற்றை உறுதியாகக்கி இருக்கிறது.
கமலின் முந்தைய படங்களில் உள்ள அரசியலே, இந்த படத்தின் முன்னோட்ட விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு படத்தின் கதையை யூகித்து, பாராட்டி முன்னோட்டமாக எழுதும்போது, அதே முறையில் அதை விமர்சித்து எழுதினால் தப்பா? mathimaran avargale! nermaiyaga bathil sollungal…dasavatharam padathil appavi islamiyargalai kaithu seithu police visaranai endra peyaril anaivaiyum masuthiyil siraiseiym kathchi edhai solgiradhu??? enna kamalin arsaiyala purinjikitinga??? ungal vimarsanam kamal iyar enbathal neeengal mattamaga vimarsanam seirgal???? manmadhan anbu padathil indu kadavulai kindal seiyum padalai vaikka koodathu endru rss kaaligal kamalai kandikum podhu enga poi olijikitinga??? adhil enna ungal arasiyal?? antha padathai nan thayarithirundaal paadalai cut seidhirika maattaen endru kamal andha kaligaluku ethiraga paesinarae……… kuruthi punal padathil thaanai vida nermaiyana adhigariyaga abbas endra muslim character padathil irukum arsaiyal enna???hinduva vahi endru kooruvathu maaaaaaagaaaaaaaaaaa mattttttamana vimarsanam………
மதிமாறன் நீங்கள் குறிப்பிட்டதைபோலவே இன்று பத்திரிகையாளர் (10-6-2012)கமல் ஹாலிவுட் படத்தை இயக்குவதாக குறிப்பிட்டிக்கிறார்.
மதிமாறன் நீங்கள் குறிப்பிட்டதைபோலவே இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் (10-6-2012)கமல் ஹாலிவுட் படத்தை இயக்குவதாக குறிப்பிட்டிக்கிறார்.
இன்றைய கமல்பேட்டி
திராவிடன் வைகுண்டராமன் – ஓரு சின்ன சாம்பிள்
‘பாரதி கவிதைகளில் ‘இந்தியா’ என்ற பெயரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார் என்று சொல்லுகிறார் மதிமாறன். ஆனால் மதிமாறன் தன் புத்தகத்தில் (பக்.25) பயன்படுத்தியிருக்கும் ‘வாழ்க நீ எம்மான்’ என்ற பாட்டிலேயே பாரதி ‘இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.’
மேலும் படிக்க இணையத்தில் தேடினால் கிடைக்கும். பல மறுப்புரைகள் வந்துள்ளன. ‘மப்பு’ தெளிந்ததும் படிக்கவும்.
மதி உள்ள மாறன் தானே நீங்க. மத பயங்கரவாதம் குறித்து எழுத நினைச்சா நேர்மையும், தெளிவும், புரிதலும் இருந்து எழுதணும். இத்தகைய அரைவேக்காட்டுத்தனமாக எழுதறதுக்கு எழுதாமலே இருந்துடலாம்.
விஸ்வரூபம் முதல் டிரைலரை பார்த்து நீங்கள் எழுதிய விமர்சனம் இரண்டாவது டிரைலரை பார்த்தபோது நீங்கள் சொன்னது போல்தான் இருக்குமோ என்று தோன்றியது.
நேற்று விஜய் டிவியில் வெளியான மூன்றாவது டிரைலரில் நீங்கள் சொன்னதுபோல்தான் இருக்கும் என்று உறுதியாக முடிவாகி இருக்கிறது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=rP3a-cQ19Og
மூன்றாவது டிரைலர்
இஸ்லாமியர்களுக்கு தீவிரவாதம் என்றாலே என்னவென்று தெரியாது. இதுவரை நடந்த எந்தவொரு பயங்கரவாத செயல்களுக்கும் அவர்கள் பொறுப்பல்ல.
kotchae oru pramanan rss al valharkapattavan avanudai manaiveeyai enda muslimkalalum karpalikapadavillai anaal kamal hey raam padathil kotche vin manaivee karpalikapattadal avar bayankaravadiyaka mariyadarku avan seilai niyayam paduthiruppar unmaiel kotche gandhiyai suduvathrku mun than kaiel ismail endru pachai kuthiruppan melum thannudaia aan urupai muslimkal pondru kathna seidiruppan eppadi seia karanam gandhiyai kondra vudan adan pazi muslimkal mel vilavendum endru enninan anaal kamal hey raam padathil iday ellam en maraithar? avaruku kotche vin history theriyada illai than inathai thuimaiyanavarkalaka katta idai seidara ? kotchevaal gandhi kolla patta piraku rss al nadu muluvadum gandhi oru muslim al kolla pattadaka seidhiyai nadu muluvudum parapinaarkal ida mulam india muluvudum indu muslim kalavarathai uruvakkinaarkal inda kalavaram sumar 4 natkal nadandadu idil sumar 25000 muslimkal kollapatanar melum pala muslim penkal karpaliukapattanar inda unmai sambavankalai maraithu thirithu hey raam padathai uruvakidan mulam kamal ondrum kotchevuku enda vakailum salaithavar alla enbadai nirubithullar
dont spread your idioic ideas and rumours to people.mind your business.
Hindu theeviravaadham patri Hey Ram’l kaanbithiruppar, Unnai pol oruvan padathil Gujarathil nadandadhai patri vivarithiruppar… innum enna vendum?
Balajiyin karuthu thaan sariyaanathu
Balajiyin karuthu thaan sari