பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பெரியார் என்ன கடவுளா விமர்சிக்கக் கூடாதா?

கனல்

அப்படின்னு எந்த கூமுட்ட சொன்னான்?

இது அடிப்படை அறிவற்ற கேள்வி.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இதை கேட்பது கேவலம்.

அதையும் பெரியாரோடு தொடர்பு படுத்திக் கேட்டபது மகா கேவலம்.

உலகிலேயே கடவுளை கடுமையாக விமர்சித்த ஊர் தமிழ்நாடுதான். அதை செய்தவர் பெரியார்.

அப்படியிருக்கையில் பெரியாரை கடவுளோடு ஒப்பிட்டு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக கேட்பது, கேனத்தனமான கேள்வி என்று யாரவது சொன்னால் கடுமையான வார்த்தையல்ல.

தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடைய கொள்கைகளுக்காக மிக மோசமாக விமரிக்கப்பட்டவரும், எதிரிகளால் செருப்பால் தாக்கப்பட்டதும் அப்படி தாக்குதலுக்கு உள்ளானபோதும்கூட அதை விமர்சன கண்ணோட்டத்தோடு அனுகிய ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே.

‘பெரியார் என்ன கடவுளா விமர்சிக்க கூடாதா?‘ என்கிற தமிழ்த் தேசியவாதிகள்தான் பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக கட்டமைக்கிறார்கள்.

‘பெரியார் மட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்; பிரபாகரன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?‘ என்று கேட்கிற தைரியம், பெரியார் இயக்கங்களுக்கே இல்லை என்பதால்தான், கண்ட கழிசடைகள் எல்லாம் பெரியாரை அவதூறு செய்கிறது.

பெரியாரை ஆதரிப்பதற்கு யாராவது வெளிநாட்டிலிருந்து பணமாகவோ, பொருளாகவோ அல்லது பதிப்பகம், சினிமா, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் பங்குதாரராகவோ சேர்த்துக் கொண்டால், பெரியாரை கேவலமாக விமர்சிப்பவர்களே, அவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பார்ப்பார்களோ!

பணத்துக்கு என்ன பண்றது?

தொடர்புடையது:

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்

சிலரும் சில அமைப்புகளும் அணு உலை எதிர்ப்பு, சுற்றுச் சூழல் பிரச்சினையை மட்டும் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ இலங்கை பிரச்சினையைத் தவிர வேறு எதை குறித்தும் பேச மறுக்கிறார்கள் பெரியார், அம்பேத்கர் போன்ற ஒப்பற்ற தலைவர்களைகூட விமர்ச்சிக்கிறார்களே ஏன்?

-நீ. கதிர்வேலு

‘ஜாதி கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, கொலை, கொள்ளை, மோசடி இவை எல்லாத்தையும் விட உலகத்திலேயே மிக கொடுமையானது, கேவலமானது மிகப் பெரிய தப்பு; அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசை படறதாங்க… அந்த தப்ப செய்றவனை மன்னிக்கவே கூடாது’

என்று ஒருவன் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான் என்றால், அவனுக்கு ரொம்ப அழகான பொண்டாட்டி இருக்கான்னு அர்த்தம்.

அவனுடைய இந்த நல்லொழுக்க போதனை தன் சொந்த ‘பாதுகாப்பி’ லிருந்தே எழுகிறது…

அதுபோல், ‘உலகத்திலேயே மிக கொடுமையானது குழந்தை தொழிலாளர் முறைதாங்க..’என்பவர் அதற்காக நிதி பெறுபவராக இருப்பார். ‘அத விட சுற்றுச் சூழல் சீர்கேடுதாங்க மிகக் கொடுமையானது’ என்பவரோ டாலர்களின் கவனிப்பில் சேவை செய்பவராக இருப்பார். இயற்கை வேளாண்மையை மட்டுமே ஒருவர் பொழுதன்னைக்கும் பேசுறாரு என்றால், அவருக்கு பொழப்பே அதனால்தான்.

இதுபோலவே இலங்கை பிரச்சினையை ஒன்றை தவிர வேறு எதையும் பேசாதவர்கள்; ஜாதி எதிர்ப்பு உட்பட பல பிரச்சினைகளையும் பேசுபவர்களை இழிவாக விமர்சிப்பவர்கள்; வெளிநாடு வாழ் மிக குறிப்பாக அமெரிக்கா, கனடா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகளில் வாழும் தமிழர்களின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றவர்களாகவும் பெறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி வெளிநாட்டில் இருந்து ‘உதவி’ செய்கிறவர்களுக்கு பெரியாரை பிடிக்கவில்லை என்றால், பெரியாரை தமிழன விரோதி என்று சொல்லவும் தயங்க மாட்டார்கள்.

இதுபோன்ற அணுகுமுறையால் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சில அமைப்புகள்;

பிரபலமானார்கள், தலைவரானார்கள், தலைவர்கள் பொங்கி எழுந்தார்கள், காற்றில் கத்தி சுத்தினார்கள்;

ஈழ மக்களோ படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வளவு தமிழர்களை பலிகொடுத்த பிறகும் கூட பக்கம் பக்கமாக வசனம் பேசுகிற பந்தா அரசியல் ஓய்த பாடில்லை.

விடுதலைப் புலிகள் மீதும் ஈழ மக்கள் மீதும் இலங்கை அரசு கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கு முன், தமிழனின் வீரம் பற்றி சவடாலாக பேசியவர்கள், ஈழ மக்களின் படுகொலைக்கு பின் தங்கள் பேச்சை ஒப்பாரியாக்கி புலம்புகிறார்கள்.

தமிழக தமிழர்களிடம் அப்போதும் இவர்கள் அரசியல் பேசவில்லை இப்போதும் அரசியல் பேசுவதில்லை. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழக தமிழர்களிடம் அரசியல் அணுகுமுறையை கையாண்டிருந்தால் தமிழக தமிழர்கள் ஈழத் தமி்ழர்களின் படுகொலைகளை தடுத்து நிறுத்துகிற அளவிற்கு வீதிகளில் போராடி இருப்பார்கள்.

வெறும் உணர்வு ரீதியான சவடால் பேச்சுகளின் காரணமாக, இவர்கள் பேசிய பிரச்சினைகள் பின்னுக்குப் போய், பேசியவர்கள்தான் பிரபலமானர்கள்.

ஆக, மேற்சொன்ன எல்லா பிரச்சினைகளும் மிக முக்கியமானதுதான், ஆனால் தனி தனியான பிரச்சினைகள் அல்ல, ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

ஒட்டுமொத்த சமூக மாற்ற அரசியல் கண்ணோட்டத்தோடு, மக்களை அரசியல் படுத்தி; இந்த பிரச்சினைகளை அணுகினால்தான்; இவைகளில் மாற்றம் ஏற்படுத்த முடியும். அப்படித்தான் இதுவரை நடந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டமும், குலக்கல்வி எதிர்ப்பு போராட்டமும் அப்படி நிகழ்த்தப்பட்டவையே.

மாறாக தனி தனி பிரச்சனையாக தொடர்பற்று பார்த்தால், அப்படிப் பார்ப்பவர்கள் வசதியாவார்கள், பிரபலமாவார்கள். எடுத்துக் கொண்ட பிரச்சினை முன்பைவிட தீவிரமாக விஸ்வரூபம் கொண்டு நிற்கும். போராட்டம் மட்டுமல்ல, மக்களும் தோற்றுப் போவார்கள்.

தொடர்புடையவை:

‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்

ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

 

பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்

தலைவருடன் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி

எவ்வளவோ நாகரீகம் வந்துவிட்டது. ஆனால் இன்னும் அரசியல்கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டுபோட்டுக்கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக்கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா?

எஸ்.என்.சிவசைலம், சேலம்.

தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத்திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் ‘உயர் ஜாதி’க்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாக போராடியது.

ஒடுக்கப்பட்ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த – நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.

இன்று கூட தோளில் துண்டு போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே.

தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் – அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டுப் போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள்.

அரசியல்வாதிகள் தோளில் துண்டுப் போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?

தோளில் துண்டுப் போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரீகம்.

*

2007 ஆம் ஆண்டு எழுதியது..

வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக  ஜூலை

2007 ஆம் ஆண்டு எழுதியது.

தொடர்புடையவை:

‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை?’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

*

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

விஸ்வரூபம் திரைப்படத்தின் முதல் டிரைலரைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய விமர்சனம் உண்மைதான் என்ற எண்ணத்தை, அதற்கடுத்து வந்த டிரைலர்களும் கமலஹாசன் பேட்டியும் ஏற்படுத்தியது.

உங்களுக்கு படத்தின் கதையை யாராவது முன்பே சொல்லிவிட்டார்களா? எப்படி எழுதினீர்கள்?

-சையது அலி.

கவுண்டமணி அடிக்கடி பேசுற வசனம், “மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா ”.

அதுபோல் ஒரு படத்தோட டிரைலரை பார்த்த அந்தப் படத்தின் கதைய சொல்றது பெரிய விசயமா?

ஆனாலும் விஸ்வரூபம் படத்தின் முதல் டிரைலரை வழக்கு எண் 18/9 படத்தை பார்த்த  திரையரங்கில்தான் பார்த்தேன்.

முக்காடிட்ட கமல், அரபி வடிவத்தில் விஸ்வரூம், பின்னணியில் அமெரிக்கா, இதைத் தவிர வேறு ஒன்று இல்லை.

அதற்கு முன்பே, தினத்தந்தியில் வந்த விஸ்வரூபம் முதல் விளம்பரத்தை பார்த்தபோதே அந்தக் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது.

காரணம், கமல்ஹாசனின் முந்தைய படமான ‘உன்னைப் போல் ஒருவன்’.

தொடர்புடையது:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

விஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா?

எல்லோருக்கும் நல்லவனாக இருக்க கடவுளால் கூட முடியாது..

ஏழைபணக்கரான், உயர்ந்த ஜாதிதாழ்ந்த ஜாதி எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியாதா?

டி. அப்துல்ரசாக், திருவள்ளூர்.

பணக்காரர்களால்தான் ஏழைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி ஆனதே உயர் ஜாதிக்காரர்களால்தான்.

பணக்காரர்களின் செல்வத்தை எடுத்துதான் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவத்தை ஒழித்தால்தான், தாழ்ந்த ஜாதி தன்மை ஒழியும். ஜாதியும் ஒழியும்.

யாருக்கும் இழப்பு ஏற்படாமல் எல்லோருக்கும் நன்மை செய்ய, கடவுளால் கூட முடியாது.

கடவுள் புலிக்கு நன்மை செய்தால் மானை கொன்றுதான் ஆக வேண்டும்; மானுக்கு நன்மை செய்தால் புலியை பட்டினி போட்டு சாகடித்துதான் தீர வேண்டும்.

*

2007 ஆம் ஆண்டு எழுதியது..

வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக  ஜூலை

2007 ஆம் ஆண்டு எழுதியது.

தொடர்புடையது:

பணமா? பாசமா?

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..

உலக மகா நடிகருடன் ரஜினியும் கமலும்
off the record

கமல் எவ்வளவோ சிரமப்பட்டு நடிக்கிறார். ஆனால் எந்த சிரமமும் படாமல் கமல் படங்களை விட ரஜினியின் படங்களை மக்கள் விரும்புகிறார்கள்?

டி.ரமேஷ்சென்னை.

அதற்குக் காரணம் இருக்கிறது. கமல் தனது படங்களில் தன்னுடைய ‘ஆண்மை’யை பார்வையாளர்களுக்கு “நிரூபிப்பது”போல் காட்சிகளை வைப்பதுதான். ஜட்டி போடுவது, ஜட்டியை கழட்டுவது போன்றவகளை வலிந்து காட்சியாக்குவது.

சிட்டுக்குருவி லேகியத்திற்கான விளம்பரப்படம் மாதிரியான அவரின் உடலுறவு காட்சிகள்தான், குழந்தைகள் உட்பட குடுபம்பத்தோடு அவரின் படங்களை பார்ப்பதற்கு நடுத்தரவர்க்கத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது.

நடுத்தரவர்க்கதில் குடும்பத்தோடு சினிமாவிற்கு போவதை தீர்மானிப்பவன் ஆண். அவன் இப்படிப்பட்ட காட்சிகளை தன் மனைவி பார்ப்பதைக்கூட விரும்பமாட்டான்.

கதாசிரியர் ஆர்.கே.நாரயணனிடம் “நீங்கள் ஏன் உங்கள் கதைகளில் செக்ஸ் எழுதுவதில்லை” என்று கேட்டபோது-அவர் சொன்னார், “என் கதாநாயகனும், நாயகியும் தனியறையில் இருக்கும்போது நான் அந்த அறையை விட்டு வெளியே வந்து விடுவேன்.” இந்த நாகரீகம் கேமராவுக்கும் பொருந்தும்.

திரைப்படத்தில்,  யாரும் தொட அஞ்சுகிற காந்தி கொலை வழக்கை, மிகச் சிறந்த தொழில் நுட்பத்தோடு, துணிச்சலோடு ‘காந்தியை கொன்றது பார்ப்பனிய இந்து அமைப்புதான். பிரிவினையின் போது காந்தி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதுதான் அந்தக் கொலைக்குக் காரணம்’ என்ற உண்மையை சொன்ன படம்‘ஹேராம்’.

கமல்ஹாசனின் இயக்கத்தில் வந்த முதல் படம் அது. இந்தியாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என்று‘ஹேராமை’ உறுதியாகச் சொல்லலாம். ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தற்கான காரணங்களில் ஒரு முக்கிய காரணம், கதைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத உடலுறவு காட்சிகள்தான். சாகேத்ராமன் தனது இரு மனைவிகளிடமும் எப்படி விதவிதமாக உறவு கொள்கிறார் என்பது பார்வையாளர்களுக்கு தேவையற்ற ஒன்று.

கலவரம் நடந்து கொண்டிருக்கிற கல்கத்தா வீதிகளில் தப்பி, வீட்டில் தனியாக இருக்கிற தன் மனைவியை  பல மாதங்களுக்குப் பிறகு பார்க்க வருகிற சாகேத்ராமன், கலவரத்தில் இருந்து வீட்டின் கதவுக்கு வந்த  அடுத்த வினாடியே ரொமாண்டிக்கில் ஈடுபடுவது ஒரு மனநோயாகவே இருக்கிறது.

நகரம் முழுக்க கலவரம் பரவி கிடக்கும் போது, கணவனின் மனது வீட்டில் தனியாக இருக்கிற மனைவியின் பாதுகாப்பு குறித்துதான் யோசிக்குமே தவிர, உடலுறவு குறித்தல்ல.

சிறந்த நடிகரும், மோசமான இயக்குரும்,கமல்ஹாசனின் ரசிகருமான நடிகர் நாசர், இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியின் போது தனது நண்பர்களிடம் இப்படி சொல்லிக் கொண்டு வந்தார், “செக்ஸ் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாங்க. யாதார்த்தமா அதை காண்பிக்கிறதுல என்ன தப்பு?”

மலம் கழிப்பதுக் கூட எல்லோரும் செய்யிறதுதான். அதையும் யதார்த்தமா காட்லாமே? கமல்ஹாசன் கக்குஸ் போறத தத்ரூபமான காட்சியா வைச்சா, அதுக்கப்புறம் அவருடைய காதாநாயக அந்தஸ்து எவ்வளவுமுக்குனாலும் திரும்பி வராது.

ரஜினி தன் படத்துல ஸ்டைலா சிகெரட்டை போடுவாரு. ஆனா, ஸ்டைலா ஜட்டி போட மாட்டாரு. அதனால்தான் அவரு படம் பைத்தியக்காரத்தனமா இருந்தாக்கூட குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு அனைவரும் விரும்பி பாக்கிறாங்க.

*

2007 ஆம் ஆண்டு எழுதியது..

வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு எழுதியது.

தொடர்புடையது:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

 

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384