பெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள்

பெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே? உண்மையா?

க.சுரேசு, கயத்தாறு.

பொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.

திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.

பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.

1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.

மறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்” என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.

புலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான். அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுபட்டார். அந்த அக்கறையின் பொருட்டே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.

‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.

அதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே. திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி. (கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)

ஆக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே. (பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.) சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.

*

மே 2007 ஆம் ஆண்டு எழுதியது.

வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக  ஜூலை

2007 ஆம் ஆண்டு எழுதியது.

தொடர்புடையவை:

‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை?’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

*

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

டாஸ்மாக் தமிழனும் நீதி தவறாத அரசும்

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்ற ஒரு பழமொழி தமிழில் இருக்கின்றது. இதற்கு பொருத்தமாக நிகழ்காலத்தில் உள்ள ஒரு அரசியல் பிரச்சினையோடு தொடர்புபடுத்தி சொல்வதானால் எதை சொல்லலாம்?

நீ. கதிர்வேலு.

இந்தப் பழமொழியை மாத்திப்போட்டு, அதாவது, ‘தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுவது’ என்று வைத்துக் கொள்வோம்.

டூ விலர் பார்க்கிங் வசதியுடன் அரசே, டாஸ்மாக் பாரில் தமிழனுக்கு ‘சரக்கை’ ஊத்திவிட்டு, பிறகு ‘குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருகிறான்’ என்று அரசின் ஆட்களான போலிசை வைத்து நடு ரோட்டிலேயே மடக்கி பிடித்து கைது செய்வது.

ஆகஸ்ட்21, 2012

தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…

 

ஈழத் தமிழர்களோ, தமிழ்நாட்டு தமிழர்களோ புலம் பெயர்ந்த நாடுகளுக்குச் சென்ற பிறகும் கூட ஜாதி சங்கங்களாக, ஜாதி உணர்வாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

பிள்ளைமார், தேவர், நாயுடு, வன்னியர், கவுண்டர், முதலியார், செட்டியார், உடையார், முத்தரையர், நாடார் இன்னும் பிற தீவிர ஜாதி உணர்வாளர்கள், அதாவது தன் ஜாதி அடையாளத்தை பகிரங்கமாக வெளிபடுத்திக் கொண்டும், ஜாதி சங்கங்களில் பொறுப்புக்களில் இருப்பவர்களும், தன் ஜாதிதான் இந்த உலகத்தில் சிறந்தது என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் பிரச்சாரம் செய்பவர்களும் கூட;

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் குறிப்பாக பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகளில் முதன்மையான ஜாதியான ‘தமிழுணர்வு’ சைவ பிள்ளைமார்கள் அதிகம்.

அதிலும் யாழ்பாணத்து சைவ பிள்ளைமார்கள் திருநெல்வேலி (தமிழ்நாடு) சைவ பிள்ளைமார்களைவிட தங்களை உயர்வானவர்களாக கருதுபவர்கள். அவர்களின் மதிப்பிற்குரிய தலைவராகவும் பிரபாகரன் இருக்கிறார்.

ஒரு வேளை பிரபாகரன் சக்கிலியராகவோ, பறையராகவோ, பள்ளராகவோ, அவ்வளவு ஏன் இஸ்லமியராகவோ இருந்திருந்தால் அவரை ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராக ஒத்துக் கொண்டிருப்பார்களா?

தமிழகத்தில்கூட பிரபாகரனை தீவிரமாக ஆதரிக்கிற ‘முற்போக்காளர்கள்’ முற்றிலுமாக அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள்.

திராவிட இயக்கங்களை பெரியாரை விமர்சிக்கும்போதும், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, தந்திரமாக ‘செட்டு சேர்க்கும்’ பாணியில் அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும் குறிப்பிடுகிறார்கள்.

மற்ற நேரங்களில் பொதுவான தமிழர் தலைவர்களாக காமராஜ், முத்துராமலிங்கம் போன்ற இந்திய தேசியத்தை வலியுறுத்தியவர்களை விமர்சனம் அற்று ஆதரிப்பது போல் கூட அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும்  ஆதரிப்பதில்லை.

ஆதிக்க ஜாதிக்காரர்கள் குறிப்பாக, மீன் உணவு சாப்பிடுவதின் மூலமாககூட மீனவர்களோடு மறைமுகமாக கூட தொடர்பற்ற ‘சைவ’ பிள்ளைமார்கள்,

தன்னுடைய மீனவ சமுதாயத்தை எப்படி இழிவாக பார்க்கிறார்கள், என்கிற கண்ணோட்டம் பிரபாகரனுக்கு இருந்திருந்தால், அவரை தமிழீழ தலைவராக ஆதிக்க ஜாதிக்காரரகள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா?

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத்தமிழர்களும்

அன்னா அசரே…. ஏற்கனவே சொன்னதுதான்..

அன்னா அசாரே

அன்னா அசாரே, மோடி எல்லாம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள்?

-க. மதிவாணன், திருநெல்வேலி.

வறுமைக்கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் சாகும் நாட்டில், உண்ணாவிரதத்தை ஒரு   போராட்டமாக கடைப்பிடிப்பது எவ்வளவு மோசடியானது.

சோத்துக்கு வழியில்லாமல் சுருண்டு சாகுற சோமாலியா மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தினமும் தின்று கொழிக்கிற ஒருவன், ‘உண்ணாவிரத போராட்டம்’ என்று அறிவித்தால் அவனை எவ்வளவு கேவலமாக பார்ப்பார்கள். அதுபோல்தான் இந்தியாவிலும் உண்ணாவிரதத்தை பார்க்க வேண்டும்.

ஆனாலும், காந்தியால் பிரபலபடுத்தப்பட்ட இந்த அநாகரீகம், உண்ணாவிரதத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களையும், வேறு வழியில்லாமல் உண்ணாவிரத முறைக்கு தள்ளியிருக்கிறது.

அப்படித்தான், தான் கொண்ட கொள்கைக்காக, திலீபன் உண்ணாமல் தன் உயிரை  தியாகம் செய்தார்.

சமீபத்தில் மூவரின் தூக்கிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள், உண்ணாமல் சுருண்டு கிடந்தார்கள்.

அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மீனவர்கள், மயக்கமாகி கிடந்தார்கள்.

ஆனாலும், அந்தக் காலத்து காந்தியிலிருந்து, இந்தக் காலத்து அன்னா அசாரே, மோடி வரை, ஒரு வேளைக்கு இரண்டு FULL MEALS சாப்பிட்டா மாதிரி, உற்சாகமா உண்ணாவிரதம் இருக்கிறார்களே எப்படி? சைடுல எதாவது சப்ளை ஆவுதோ என்ன கர்மமோ?

அன்னா அசாரே மாதிரி காந்தியவாதிகள், ‘ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தாலும் உற்சாகமாக இருப்பது எப்படி?’ ‘காந்தி பாணி உண்ணாவிரதம் – வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’

இது போன்ற புத்தகங்களையும், உண்ணாவிரத ட்ரைனிங் சென்டர்களையும் ஆரம்பித்தால், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நம்மளும் போய் கத்துக்கணுங்க.

ஏன்னா எதிர்காலத்துல உண்ணாவிரதம் முக்கியமான உபசரிப்பாகவும், பொழுது போக்கு அம்சமாகவும் மாறிடும்.

“ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து கண்டிப்பா ஒரு வேளை உண்ணாவிரதம் இருக்கனும். மறந்துடாதீ்ங்க, நிச்சயம் வரணும்”

“என்னங்க இந்த லீவுக்கு நீங்க பசங்கல கூட்டிக்கிட்டு சுற்றுலா போறிங்களா? இல்ல உண்ணாவிரதம் இருக்கப் போறிங்களா?”

தொடர்புடையவை:

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

*

காந்தி நண்பரா? துரோகியா? புத்தகத்திலிருந்து…

புத்தக வெளியீடு

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384