காங்கிரஸ் 3 ரூபா 50 பைசா..

வர வர காங்கிரசில் ஊழல் அதிகமாகி கொண்டே இருக்கிறதே…?

-நற்குணம், செங்கல்பட்டு.

வர வர என்றால், இதுக்கு முன்னாடி அது என்ன புரட்சிகர கட்சியா இருந்ததா?

வெள்ளக்காரனுக்கு எதிரா, கடன உடன வாங்கி வ.உ.சி கப்பல் விட்டா, அவர ஜெயிலுக்கு அனுப்பிட்டு, கப்பல வெள்ளக்காரன்கிட்டயே வித்து தின்னவங்கதானே காங்கிரஸ்காரங்க.

மூதறிஞர் ராஜாஜி ஆட்சியில் மிக சிறப்பாக ஒன்னு நடந்தது என்றால், அது ஊழலாகத்தான் இருக்கும்.

போட்டிருக்கிற உடையைவிட ஒரு மூணு ரூபா முப்பது பைசா அதிகமாக கொடுத்தா போதும், அம்மணமா நிப்பாய்ங்க காங்கிரஸ்காரங்க?

அப்ப பிஜேபி யோக்கியமான்னு கேப்பீங்க?

அவுங்களுக்கு இரண்டு ரூபா அம்பது பைசா கொடுத்தா போதும்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

ராஜாஜி – காமராஜ் யார் தமிழர் தலைவர்?

காந்தி ‘ஜி’, நேரு ‘ஜி’, 2 ‘ஜி’

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை

தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி

ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது

கனடா: இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த் தேசிய விமர்சனமும்

கனடாவில் நடைபெறும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ஏன் தமிழ்த் தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?

ஸ்ரீதர்.

தமிழ்த் தேசியவாதிகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற சினமாக்காரர்கள்தான் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இளையராஜா போன்ற உலக பிரபலங்கள், உலகத் தமிழர்களின் அழைப்பை ஏற்று சென்றால், அதன்பிறகு திரைப்படத்தில் வாய்ப்புகள் இல்லாத சினிமாக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வராது.

‘இப்படிவெளிநாடு வாழ் தமிழர்கள் இளையராஜா போன்ற ஆளுமைகளை அழைத்தால் அதன் பிறகு நம்மை அழைக்க மாட்டார்கள்’ என்ற கவலையே இதில் பிரதான பாத்திரம் வகிக்கிறது.

தனது ‘ஆதிபகவன்’ ஆடியோ வெளியீட்டை கனடா தமிழர்களிடையே நடத்திவிட்டு வந்த வாயோடு, ‘இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நடப்பதால், ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா? தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா’ என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் கேட்கிறார் இயக்குநர் அமீர். (ஆதிபகவன் தயாரிப்பாளர், அதிமுக ஆதரவு தமிழ்த் தேசியவாதிகள் கடுமையாக எதிர்க்கிற திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா. அன்பழகன்.)

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இந்த முறை எப்படியாவது மாவீரர் நாளுக்கு கனடாவுக்கு நம்மள கூப்பிடுவாங்க… எவ்வளவு வேலை(?) இருந்தாலும், கனடா போயிட்டு வந்துடலாம் என்று இருந்தார்போல…

எந்த இந்திய ராணுவம் ஈழத் தமிழர்களை அமைதிப்படை என்கிற பெயரில் கொன்று குவித்ததோ,

அந்த இந்திய ராணுவத்திற்கும், இந்திய தேசியத்திற்கும் ஆதரவாக அதன் துரோகத்தை தியாகமாக பிரச்சாரம் செய்தும்,

இந்திய முஸ்லிம்களை இந்தியாவிற்கு துரோகம் செய்பவர்களாகவும், பாகிஸ்தானுக்கு காட்டிக் கொடுப்பவர்களாகவும் திரைப்படங்கள் எடுத்த இந்த ஆர்.கே. செல்வமணி போன்றவர்கள் பேசுகிற தமிழ்த் தேசியம் எவன ஏமாத்தி சாப்டன்னு தெரியலை?

எம்.ஜி.ஆர். போன்றவர்கள், தங்களை வள்ளல்களாக சித்தரித்துக் கொள்வதற்கு, தானம், தர்மம் என்ற புனைப்பெயர்களில் ‘செலவு செய்து பிரச்சாரம்’ செய்து கொண்டிருந்தபோது,

நடிகவேள் எம்.ஆர். ராதா சொன்னார்:

‘உண்மையிலயே நீங்க யோக்கியனா இருந்தா, சம்பதிக்கிற பணத்திற்கு ஒழுங்க கணக்கு காட்டி வருமான வரிய கட்டுங்கடா.. அது மக்கள் பணம்.. அத தின்னுட்டு என்னடா தானம், தரமம் என்று மக்கள ஏமாத்துறீ்ங்க..’ என்றார்.

தன்னோட கேவலமான, மட்டமான தமிழர் வீரோத திரைப்படங்கள் மூலமாக தமிழர்களை ஏமாற்றி, சூறையாடி படம் எடுத்து தின்னுபுட்டு, சினிமாவுக்கு வெளிய வந்து தமிழ் உணர்வு பேசுவது என்ன நியாயம்?

உங்க படங்களில் தமிழ்த் தேசிய கருத்துக்களை பேசிவிட்டு, வெளியில் வந்து தமிழர் விரோத கருத்துகளைக்கூட பேசுங்க…, உங்க பேச்சு குறைவான எண்ணிக்கையில்தான் மக்களை சென்று சேரும். சினிமா அதிகம் பேரை சென்றடையும்.

ஆனால், இத தலைகீழாக செய்கிறவர்கள் தங்களை தமிழ்த் தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்வது, இந்திய, இலங்கை அரசுகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் பிணங்களின் மீது செல்வாக்குத் தேடுகிற மோசடி.

போக்குவரத்து விபத்துகளில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுகிறவனைப்போல் நடித்து, அவர்களின் பொருட்களை அபகரிக்கிறவனின் செய்கையைவிட மோசமானது.

ஒரு படத்துல கவுண்டமணி,

‘இந்த தொழில் அதிபர் தொல்ல தாங்கலடா… குண்டூசி விக்கிறவன்.. புண்ணாக்கு விக்கறவன் எல்லாம் தன்ன தொழில் அதிபர்ன்னு.. சொல்லிக்கிறான்..’ என்பார்.

‘புண்ணாக்கு விக்கிறவங்க தொழில் அதிபர் என்று சொல்லிக் கொள்ளக்கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்பவதாக இந்த வசனம் இருக்கிறது.

இதை இப்படி மாற்றி…

‘இந்த தமிழ்த் தேசியவாதிகள் தொல்லை தாங்க முடியலடா.. சினிமாவுல வாய்பில்லாதவன், வெளிநாட்டு தமிழரை தயாரிப்பாளரா மடக்கலாமா என்று முயற்சி பண்றவன்,

சினிமாவுல இக்கும்போது தமிழர்களுக்கு எதிரான குத்தாட்டம் போட்டு சினிமா எடுத்திட்டு; இப்ப நடக்க முடியாம இருக்கிறவன்,

ஜாதி வெறியோட படம் எடுத்தவன்,  காங்கிரசிலிருந்து வெளியவந்தும் இன்னும் காங்கிரஸ் காரனாகவே இருக்கிறவன்..

இவுங்கெல்லாம்கூட தன்னை தமிழ்த் தேசியவாதின்னு….’

என்று இப்பொழுது கவுண்டமணி பேசினால் பொருத்தமாக இருக்கும்.

தொடர்புடையவை:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்

ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?

இஸ்லாம் எதிர்ப்பு படமும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பும்

மோடியின் தாக்குதலால் தன் குடும்பத்தை இழந்த இஸ்லாமியார்

இஸ்லாம் மதத்தை கேவலமாக சித்தரித்த திரைப்படத்தை கண்டித்து, அமெரிக்க தூதரகத்திற்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டம் சரியானதுதானா?

-மகேஸ்வரன், தூத்துக்குடி.

கிறித்துவ மத கண்ணோட்டம் உள்ள ஒருவர், இன்னொரு மதத்தை விமர்சிப்பது மிக தவறானது. இதுபோன்ற மத வெறி சம்பவங்களே மத கலவரங்களுக்கு காரணமாக அமைகிறது.

இதில் முஸ்லிம்களின் எதிர்வினை மிக வேகமானதாக, ஆக்ரோஷமானதாக இருந்தது.

இஸ்லாம் மதத்தின் மீது அவதூறு மற்றும் விமர்சனம் வரும்போது, பொங்கி எழுகிற இஸ்லாமியர்கள்,

இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும்போது இப்படி பொங்கி எழுவதில்லை.

குறிப்பாக, குஜராத்தில் மோடியும். ஈராக்கில் அமெரிக்காவும், இஸ்லாமியர்களை கொன்று குவித்தபோது இந்த கோபம் இஸ்லாமியர்களுக்கு வரவில்லை. மாறாக அச்ச உணர்வே அவர்களிடம் மேலோங்கி நின்றது.

இதுதான் முற்போக்காளர்களுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

பகுத்தறிவாளர்கள், கம்யுனிஸ்டுகள் இஸ்லாம் மதத்தை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்களை ஆதரிக்கிறோம்.

அதனால்தான் பெரியார் கடவுளை மற, மனிதனை நினை என்றார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 அக்டோபர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

தீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவி

செல்போனில் பெண்கள்….

சாலைகளில் அலுவலகங்களில் இதுபோன்ற பொது இடங்களில் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதில் பெண்களே அதிகமாக இருக்கிறார்களே ஏன்?

-க. முத்து, சென்னை.

மிகப் பெரும்பாலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு செல்போன்,

வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது போட்டுக் கொண்டு போவதும், வீட்டுக்குள் வரும்போது வாசலிலேயே கழட்டி விடுவதுமாக இருக்கிற காலணியை போல்தான் பயன்படுகிறது.

வெளியில் செல்லுமபோது, செல்போனை சுவிட்ச் ஆன் செய்து கொள்வதும், வீட்டுக்குள் வந்த பிறகு சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு நேருகிறது.

வீட்டுக்குள் அதிக நேரம் செல்போனில் பேசுவதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதே அதற்குக் காரணம்.

அலுகவலகம் சார்ந்தோ, நண்பர்களிடமிருந்தோ அடிக்கடி போன் வந்தாலோ, பேசினாலோ – கணவனோ, தந்தையோ, சகோதரனோ அவர்களை சந்தேகிப்பார்கள். கண்டிப்பார்கள் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

அதனால்தான் பெண்கள் அதிகமாக பொது இடங்களில் செல்போனில் பேசுகிறார்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 அக்டோபர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

ஈவ்டீசிங்

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் முதலாளி

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

ஜொள்ளு காழ்ப்புணர்ச்சி-தகுதி திறமை

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்..?; ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

Shhh-Silence
‘திராவிட இயக்கம் தமிழகத்தைக் கெடுத்துவிட்டது’ என்று தொடர்ந்து சொல்லி வருகிற தமிழருவி மணியன், மணியரசன், நெடுமாறன் போன்றோர் இணைந்த கைகளோடு வைகோ வை ஆதரிக்கிறார்கள், அவர் நூல் வெளியிட்டு விழாவில் வைகோ கட்சிக்காரர்களே வெட்கப்படும் அளவிற்கு அவரைப் புகழ்ந்து…!

வைகோ வை இவர்கள் திராவிட இயக்கத் தலைவராகப் பார்க்கிறார்களா? இல்லை ‘திராவிட இயகத்தில் இருக்கிற கருணாநிதி எதிர்ப்பாளர்’ என்கிற அளவில் புழங்குகிறார்களா? புரியவில்லை.

சரி இதுஒருபுறம் இருக்கட்டும்.

சமீபத்தில், பாரதிராஜாவின் திராவிட இயக்க எதிர்ப்பு பேச்சுக்கு சீறிய வைகோ;

தமிழருவி மணியன், மணியரசன், நெடுமாறன் இவர்களின் மிக மோசமான முழுநேர திராவிட இயக்க எதிர்ப்பு குறித்து ஏன் மவுனம் காக்கிறார்?

குறிப்பாகக் காங்கிரஸ் மனோபாவம் கொண்ட, தமிழருவி மணியன் போன்ற தீவிர திராவிட இயக்க எதிர்ப்பாளர்களைத் தன்னுடைய தோழமையாக வைகோ கருதுவது ஏன்?

திராவிட இயக்க எதிர்ப்பை ‘கருணாநிதி வெறுப்பாக’ மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதாலா?

அல்லது

தன்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று மிகுந்த தைரியத்தோடு, “2016 இல் வைகோ தமிழக முதல்வர் ஆவார்” என்று சொன்ன தமிழருவி மணியனின் துணிச்சலா?

நெடுமாறன், தமிழருவி மணியன், மணியரசன் போன்ற திராவிட இயக்க எதிர்ப்பாரளர்களின் கேள்விகளுக்கு அல்லது அவதூறுகளுக்குத் திராவிட இயக்கத் தலைவர் என்கிற முறையில் வைகோவின் பதில் என்ன? அல்லது கண்டனம் எங்கே?

திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான மணியரசன், நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றவர்கள் வைகோவை புகழ்வதும், வைகோ இவர்களைப் புகழ்வதற்குமான மர்மம் என்ன?

பெரியாரையே கடுமையாக எதிர்க்கிற மணியரசன்; வைகோவை மாபெரும் தலைவராகப் பார்ப்பதின் ரகசியம் என்ன?

பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என்பது பெயரளிவில் கூட வைகோவிடம் இல்லை என்பதினாலா?

பெரியாரின் தாக்கம் துளிகூட இல்லாத அல்லது வாய் தவறிகூட இந்து மதம் குறித்தோ, பார்ப்பனர்கள் குறித்தோ தவறாக எதுவும் பேசிவிடக்கூடாது என்று ஒரு கம்பீரமான கட்டுபாடோடு, உறுதியான உள்ளத்தோடு வாழ்கிற வைகோவின் வீரமா?

வைகோவிடம் இருக்கிற எந்த அம்சம், இந்தத் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களை இப்படிக் கவர்ந்திருக்கிறது?

‘திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் – திராவிட இயக்க தலைவர் வைகோ’ இவர்களின் உயிருக்கு உயிரான ‘கொள்கை’ ரீதியான நட்பை,

தமிழகத் தமிழர்கள் அங்கிகரிக்கீறார்களா?

இல்லை வெளிநாட்டுத் தமிழர்கள் தீர்மானிக்கிறார்களா?

என்னவா இருக்கும்…?

ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

என்னமோ நடக்குது..

மர்மமா.. இருக்குது..
*
அக்டோபர்16, 2012

தொடர்புடையவை:

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர்

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

‘லட்சியங்களை’ சந்தர்ப்பவாதத்தின் வழியாக அடையமுடியும்!

திராவிட இயக்க எதிர்ப்பாளர்களை நீங்கள் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

-மணிகண்டன்

அரசியல் பார்வையும் வரலாற்று கண்ணோட்டமும் இல்லாமல், பெரியாரையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கம் என்று அடையாளப்படுத்தி, ‘திராவிட இயக்கம் தமிழர்களுக்கு, தமிழ் தேசியத்திற்கு எதிரானது’ ‘திராவிட இயக்கம் தலித்துகளுக்கு துரோகம் செய்துவிட்டது’ என்று பஞ்ச் டயலாக் பேசுகிறவர்கள்,

இன்னொருபுறத்தில் திராவிட இயகத்தின் பெயராலேயே தலித் மக்களுக்கு தீங்கும், தமிழ்த்தேசியத்திற்கு துரோகமும் செய்த கைதேர்ந்த சந்தர்ப்பவாதிகளான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர், வைகோ போன்றவர்களை,

‘நீங்கள் இல்லை என்றால், இந்த தமிழ் சமூகத்திற்கு நாதியில்லை, தமிழர்கள் அனாதையாகி இருப்பார்கள்’ ‘ஈழ மக்களின் விடி வெள்ளி’ ‘தலித் மக்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள்’ என்றெல்லாம் கூசாமல் பேசுகிறார்கள்.

ஓட்டு அரசியலில் பங்கெடுத்த திராவிட இயக்கத் தலைவர்களின்  சாயம் முழுவதுமாக வெளுப்பதற்கு 30 ஆண்டுகள் ஆயிற்று.

அதற்கு பின் வந்தவர்களோ, கட்சி ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் தங்கள் முக்காடுகளை முழுவதுவமாக களைந்தார்கள்.

இப்போதோ தன்னை முற்றிலுமாக அம்பலப்படுத்திக் கொண்ட பிறகுதான் இயக்கம், கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

பல திராவிட இயக்க எதிர்ப்பு பேச்சாளர்கள் வாயை திறக்கும்போதே சந்தர்ப்பாவதத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள்.

திராவிட இயக்க சந்தர்ப்பவாதிகளைவிட, கைதேர்ந்த பிழைப்புவாதிகளாக இருக்கிறார்கள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.

திராவிட இயக்க சந்தர்ப்பவாதிகள், ஆட்சிக்கு வந்தபிறகே அதிகம் வெளுத்தார்கள். இவர்களோ  ஆசைபடும்போதே….

தொடர்புடையவை:

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

வாய்ப்பிருந்தால் பாருங்கள்…

இன்று (5-10-2012) பகல் 12.30 மணியளவில் captainnews தொலைக்காட்சியில், சிந்தனைக் களம் என்ற பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெறுகிறது.

வாய்ப்பிருக்கும் தோழர்கள் பார்த்து கருத்து சொல்லவும்.

தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் http://captainnews.net/ இணையத்திலும் பகல் 12.30 மணிக்கு பார்க்கலாம்.

தொடர்புடையவை:

பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

ஈழப்பிரச்சினை, தேர்தல், எதுவரை அரசியல்வாதிகள்? : வே.மதிமாறன் நேர்காணல்

மாவீரன் முத்துகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட வே.மதிமாறன் வழங்கிய செவ்வி

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

வே.மதிமாறன் நேர்காணல்