சின்மயி விவகாரமும் ஞாநி யின் பஞ்சாயத்தும்

றிவன் தமிழ் என்பவர், தனது facebook ல் சின்மயி விவகாரம் குறித்து, ஞாநியின் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தார்.. அதில் இருந்து சிலவரிகளும் எனது கருத்தும்.

////பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல், தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். ///
-ஞாநி

 என்னுடைய கருத்து..

இப்படி தங்களுக்குள்ளேயே ஆச்சாரம் பார்த்த பார்ப்பனர்கள், அதை கைவிட்டு, வெளிநாடுகளில் சரமாரியாக குடியேறுகிறார்கள். அவ்வளவு ஏன், பெண்களுக்கான சவரக்கடை (புயுட்டி பார்லர்) பார்ப்பன பெண்களே அதிகமாக வைத்திருக்கிறார்கள்… அந்த அள அளவுக்கு முன்னேறிவிட்டார்கள்….

தங்கள் வாழ்க்கையின் பொருளாதார உயர்வுக்கு தங்களுக்குள்ளான ஆச்சாரங்களை கைவி்ட்ட பார்ப்பனர்கள், அடுத்த ஜாதிக்காரர்களை இழிவாக குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் மீனவ மக்களை இழிவாக பார்ப்பதை, நடத்துவதை மட்டும் கைவிடாமல் இருக்கிறார்களே ஏன்? என்ற கேள்வியை எழுப்பி ஞாநி விடை காணவேண்டும்.

அந்த விடையில்தான் மறைந்திருக்கிறது சின்மயியின் அரசியலும்.

ஒட்டுமொத்த பார்ப்பனர்களின், பார்ப்பனியத்தின் குணாம்சம் குறித்து விவாதிக்கமல் மறைந்து கொள்கிற ஞாநியின் அரசியல்.

தொடர்புடையது:

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

யாரையும் விட மாட்டீர்களா?

6 thoughts on “சின்மயி விவகாரமும் ஞாநி யின் பஞ்சாயத்தும்

  1. There is no evidence for chinmayi talking about fishermen,please read the twitter transcipt carefully.

Leave a Reply

%d bloggers like this: