Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

ஜீரோவான ஹீரோ

ருவழியாய், HERO வின் ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்; ஷிவ்ராம் குமார்-சௌம்யா குமார்-Splendor குமாராக மாறியிருக்கிறார்கள்.

மகிழ்ச்சி.

உடனடியான இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

8-11-2012 காலையில் செய்திதாளில் இதை பார்த்தபோதே கடும் கோபம், வேறு செய்திகள் எதையும் வாசிக்கவில்லை. தினகரன் நாளிதழில் முதல் பக்கத்திலேயே முழு பக்கமாக வந்திருந்தது. தினத்தந்தியில் அரை பக்கம்.

உடனே இதை கண்டித்து இப்போதே எழுத வேண்டும், என்று தோன்றியது. எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு முதல் வேலையாக இதற்கான  எதிர்ப்பை எழுதி, என் இணைய பக்கத்திலும், facebook லும் tweeter லும் வெளியிட்டு, email களில் தோழர்களுக்கு அனுப்பிட்டுதான் கிளம்பினேன்.

பிறகு சில மணிநேரம் கழித்து பார்த்தபோது, இணையத்தில் எதிர்ப்புகள் குவிந்திருந்தது.

Splendor அய்யருக்கு எதிராக தொடர்ந்து எழுதி, அமைப்பு ரீதியான தோழர்களிடம் பேசி, HERO நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், என்று நினைத்திருந்தேன்…
அதற்குள் அவர்களாகவே மாற்றிவிட்டார்கள். தனது வர்த்தகம் பாதிக்குமோ என்கிற பயமே காரணம்.

இதற்கான எதிர்ப்பு, எந்த வெகு ஜன ஊடகங்களிலும் வராமல், இன்னும் சொல்லப்போனால் பெரிய பத்திரிகைகளில் வந்த அந்த விளம்பரத்தை, இணையத்தில் இருக்கிற தோழர்களோடு இணைந்து 12 மணி நேரத்தில் அதை மாற்றியிருக்கிறோம்.

Splendor அய்யர் என்று மட்டுமல்ல; Splendor பிள்ளை, Splendor முதலியார் என்று வெளியாகி இருந்தாலும் இந்த எதிர்ப்பை இதே வேகத்தோடே செய்திருப்போம்.

Splendor சக்கிலியர், Splendor பறையர் Splendor பள்ளர் என்று விளம்பரபடுத்த அந்த நிறுவனம் தயாரா?

அப்படி செய்தால், தன் பொருள் விற்காது; பார்ப்பனர்களும், பிள்ளை, தேவர், செட்டியார், முதலி  உட்பட எல்லா ஜாதிக்காரனும் அந்த வண்டியின் மீதும் தீண்டாமையை கடைப்பிடிப்பான்.

ஜாதி உணர்வாளர்களுக்கு பயந்து அல்லது ஜாதி உணர்வாளராகவே ஆதிக்க ஜாதி அடையாளத்தோடு, Splendor அய்யர் என்று பெயர் வைத்தால், நாம் மட்டும் அதை எப்படி அனுமதிக்க முடியும்?

ஆதிக்க ஜாதி அடையாளத்தோடு, (நாயர்-சவுகான்) HERO நிறுவனம் இதுபோல் இந்தியா முழுக்க விளம்பரம் செய்திருக்கிறார்கள். பெரியார் மண்ணில்தான் அதற்கு முடிவு காணப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு சிலமணிகளில்.

மிக எளிய, உறுதியான மனிதர்களால்.

தொடர்புடையவை:

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

26 thoughts on “Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

 1. Sir,

  It is heartening to know that the mischievous/dirty ad. has been changed. Salute to your earnest efforts.

  Rgds
  Gopalakrishnan.S
  Tirupur.

 2. எங்கிருந்தாலும் பெரியார் தொண்டர்கள் தம் போராட்டத்தினைத் தொடரவேண்டும்.அதற்கு இந்த ஒரே நாள் எதிர்வினையே நல்ல எடுத்துக்காட்டு.சமத்துவத்துக்கு எதிரானவற்றை அடுத்துக் காட்டுவதும் அதன் வழி தம்மால் இயன்ற முறையில் போராடுவதும்தான் பெரியார் தொண்டர்களுக்கு இலக்கணம்.தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறுவதுபோல பிரச்சாரம்-போராட்டம் இரண்டும் பெரியார் தொண்டர்களுக்கு இரு கண்களாக அமையட்டும்.

 3. வாழ்த்துக்கள் தோழர். எண்ணிக்கையை விட எண்ண வலிமையே ஏற்றம் தரும் என்பதை மெய்ப்பித்தீர்கள். தங்களின் பணி ஓர் வரலாற்றுப்பதிவு. சமூக சமத்துவம் காப்போம்!

 4. இரு சக்கர வாகன விளம்பரத்தில் சாதி நஞ்சு !

  நேற்று வந்த ஆங்கில நாளிதழ் ( THE TIMES OF INDIA ) பார்த்தேன் .முதல் பக்கத்தில் இரு சக்கர வாகனம்
  ( HERO SPLENDOR ) விளம்பரம் அதில் தமிழில் ” தந்திடுமே ஒரு குடும்பத்தின் உணர்வை “என்று இருந்தது. ஆங்கில தினசரியில் தமிழில் வாசகமா? என்று மகிழ்வோடு பார்த்தேன் .உள்ள சாதி நஞ்சு கலந்து இருந்தனர் .ஏற்கனவே மனிதன் சாதியின் பெயரால் தென் மாவட்டங்களில் செத்துக் கொண்டு இருக்கின்றனர் .இரு சக்கர வாகனத்திற்கும் புதிதாக சாதி கற்பிக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் .
  இரு சக்கர வாகனத்தில் தந்தையும் மகளும் செல்ல ஆயத்தமாகும் புகைப்படத்தில் இருந்த ஆங்கில வாசகம்

  இரு சக்கர வாகனம் SPLENDOR IYER

  தந்தை SHIVRAM IYER

  மகள் SOWMYA IYER

  முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் எல்லோரும் வாங்கும் வாகனத்திற்கு சாதி பெயர் சூட்டிய அவலத்தை இனி தொடர வேண்டாம் . இதுபோன்ற விளம்பரத்தை பிரசுரம் செய்ய வேண்டாம். வருங்காலங்களில் விளம்பரத்தில் இதுபோன்ற சாதி நஞ்சு கலக்க வேண்டாம் .

 5. ஒரு காலத்தில் தந்தை பெரியாரின் தளபதிகளாக இருந்தவர்கள் இன்று பார்ப்பன அடிமைகளாக மாறியதைக் கண்ணுற்ற பார்ப்பன பண்டாரங்களின் துளிர் விட்ட செயல்தான் இப்படி படு அசிங்கமான, மனித நாகரிகமற்ற இந்த விளம்பரத்தைச் செய்யத் தூண்டியுள்ளது! ஆனால், வந்தேறிப் பார்ப்பனர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள், இப்படி பெரியார் தொண்டர்கள் இன்னும் அதே வீரியத்தோடு பார்ப்பனத் திமிருக்கு எதிராக களமாடுவார்கள் என்று!
  மூஞ்சியில் காறி உமிழப்பட்டு அசிங்கப்பட்டுப் போன ஏமாற்றுப் பார்ப்பனர்கள் இப்போது தமிழர் மண்ணில் பம்மியிருக்கிறார்கள்! அதிகாரத்தை தன் காலடியில் வைத்திருக்கும் பார்ப்பன ஏமாற்றுப் பேர்வளிகளிடம் பெரியார் தொண்டர்கள் இனி கொஞ்சம் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்!
  உயிர்த் துடிப்போடு மனம் கொதித்த நிலையில் பார்ப்பான் செய்த இந்த கொடுமையை தன்னால் முடிந்தவரை எதிர்த்துக் களம் கண்டு, உடனே பெரியார் தொண்டர்களிடமும், முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்களிடமும் செய்தியைக் கொண்டு சேர்த்து, எதிர்ப்பை ஒருங்கிணைத்து பார்ப்பானை வீழ்த்திய நண்பர் மதிமாறனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்! மனமுவந்து உங்களைப் பாராட்டுகிறேன் உண்மையான பெரியார் தொண்டர்கள் சார்பாக!
  காசிமேடுமன்னாரு.

 6. சாதி உணர்வை தூண்டும் விளம்பரத்தை ஒரே நாளில் மாற்றம் செய்ய முடியும் என்றால் ஆதிக்க சாதிகெதிராக பல போராட்டங்களை உங்களை போன்றவர்களால் முன் நின்று நடத்த இயலும்.பெரியார் பிறந்த மண்ணில் இப்பொழுது உங்களை போன்றவர்களுக்கு வேலை அதிகமாக உள்ளது. ஆதிக்க சாதிக்கு எதிராக பல தளங்களில் நின்று போராடவும். வாழ்த்துக்கள் .

 7. “Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா?”

  இது கேள்வி. இதற்கு பதில்: ஆம் தயார் எனபதே.

  விளம்பரம் என்றாலேயே பலனுக்காக. ஸ்பெலெண்டர் பறையர் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை ஜோராக இருப்பின் ஏன் தயாராக இருக்கமாட்டார் ? வியாபாரம் என்றால் ஆள், இடம் பார்த்துச் செய்யும் சமூக சேவையா? இல்லை மதிமாறன். வெறும் இலாபநோக்குத்தான்.

  எச்சாதியின் பெயரையும் போட்டுக்கொள்ளலாம். நான் ஏற்கனவே இக்பால் செல்வனின் பதிவில் போட்ட பின்னூட்டத்தைப் படிக்கவும்.

  ஒரு விளம்பரத்தில் ஐயர் குடும்பம் மட்டும்தான் போடப்படுகிறது. விளம்பரம் வரைந்தோர் அப்படி ஐயர் குடும்பமென்றால் மேல்மட்ட வர்க்கத்தை ஈர்க்குமென நினைத்திருக்கலாம். அதே விளம்பரத்தில் ஐயர் குடும்பத்தை ஒரு வாகனத்துக்கும், இன்னொரு வாகனத்தை – அதாவது மலிவான ஒன்றை- பறையரோடு சேர்த்துச் சொன்னால், அங்கு ரேசிசம் வருகிறது.

  கமல ஹாசனின், தசாவாதரம் படத்தில் பன்றி அவதாரத்தைக் குறிப்பிட ஒரு தலித்தைக் காட்டியதாக எதிர்ப்பு சொன்னார்கள். அதே படத்தில் ஒரே ஒரு அவதாரமென்றால் பிரச்சினையேயில்லை. எந்த சாதியையும் போட்டுக்கொள்ளலாம்.

  ஆக, ஒரு செயல் அதன் ஒப்பீட்டிலேயே தன் குணத்தைப் பெறுகிறது. ஹீரோ வின் விளம்பரம் எந்த ஒப்பீட்டையும் பண்ணவில்லை. எவரும் இழிவுபடுத்தப்படவில்லை. எவரும் மேம்படுத்தப்படவில்லை. பூதமே அங்கில்லை. பூதம் பூதம் என்று கத்தினால் வெறும் வேலையத்த வேலை.

 8. சொல்லவேண்டியது வாழ்த்தா நன்றியா என தெரியவில்லை…நல்லது நடந்தது…இது பெரியாரினாலேயே சாதியமாயிற்று.

 9. ///Splendor அய்யர் என்று மட்டுமல்ல; Splendor பிள்ளை, Splendor முதலியார் என்று வெளியாகி இருந்தாலும் இந்த எதிர்ப்பை இதே வேகத்தோடே செய்திருப்போம்.////

  நாயுடு ஹால், கோனார் தமிழ் உரை செட்டிநாட்ரசர் உணவகம், செட்டி நாடு சிமிண்ட் போன்ற வற்றை நீர் எதிர்த்தாகத் தெரியவில்லை.. ஓகோ அது இங்க மட்டும்தானா…

 10. parayannu sonna taan kovikureergale! paarpanan, thevan, vaniyan nu sonna yaarum kovipathillai.. parap puthi paathi puthinu sonnathu sariya eruku

 11. எனக்கு ஸ்ப்ளெண்டர் அய்யர் வேணும்…அதுமேல நான் ஏறணும். சும்மா கொழுகொழுன்னு மொழுமொழுன்னு இருக்குமா?

 12. Mathimaaran,

  Are you writing FOR dalits or AGAINST brahmins?

  If FOR dalits, there are much more grievous and atrocious crimes committed against them. If you do not know, right now there are two going on – one at Dharmapuri by vanniars and another in Paramakudi by thevars.

  If AGAINST brahmins, I dont care about your writing.

  In my opinion, attack against brahmins and parpanar are simply a calculated campaign to hide the crimes of caste hindus against the poor dalits.

  Suresh

 13. Mr suresh…. SO FAR you do not know the trick ah…
  Now only you caught mathimaran’s point

 14. உள்ளர்த்தம் உயர்ந்த ஜாதி, உயர்ந்த வண்டி என்பதுதானெயொழிய வேறொன்றுமில்லை.இந்தியாவில் நாம் வாழ்ந்தாலும் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம் என்பதனையும் இங்குதான் ஜாதி ஒழிப்பு மாநாடு என்ற ஒன்று நடந்த்தனையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.ஜாதி மட்டுமல்லாது இது இன ரீதியான உயர்வர்க்கச் சிந்தனையாகப் பார்க்க வேண்டியுள்ளது. ஆரியர் உயர்ந்தோர் என்பதனை உறுதி செய்ய உற்பத்தி செய்யப்பட்ட விளம்பரமென்பதனால் இது உறுதியாக எதிர்க்கப்பட வேண்டியதுதான். பெரியார் செய்த தொண்டு தொடர வேண்டியுள்ளது. பெண்களே தங்கள் பெயருக்குப் பின்னால் அய்யர் என்று போட்டுக்கொள்வது தாங்கள் உயர்ந்த ஜாதியினர் என்பதன் இறுமாப்புதான். ஒன்றாம் வகுப்பில் ஜாதி கேட்கப்படுவதால் தான் ஜாதி ஒழியவில்லை என்று இந்த ஆரியர்களும் அவர்தம் அடிவருடிகளும் கூக்குரலிடுவதும் அதனை நமது சில அரைவேக்காடுகள் ஆதரிப்பதும் கொடுமையிலும் கொடுமை.

 15. விளம்பரங்கள் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு போட்டிருக்கான். இதுக்கு போயி….முதல்ல பெரியார் நூல்களை அரசுடமை ஆக்குங்கள்.

Leave a Reply

%d bloggers like this: