பால்தாக்ரே மரணமும் கேப்டன் டி.வி ஒப்பாரியும்; யாருமே இல்லாத டீ க்கடையில யாருக்கு டீ ஆத்துனாங்க..
ஒரு வழியாக பால்தாக்ரே மரணம் அடைந்துவிட்டார். மரணத்திற்கு பிறகு எவ்வளவு மோசமானவரையும் புனிதமானவராக சித்திரிக்கிற, இந்திய இந்து மரபு, பால்தாக்ரே மரணத்திலும் பிரதிபலித்தது.
தமிழகத்தில் பால்தாக்ரே மீது, பார்ப்பனர்கள், பிஜேபி போன்ற இந்து அமைப்புகள், தமிழ்த் தேசியவாதிகள் இவர்களைத் தவிர வேறு யாருமிடமும் அவர் குறித்து ஒரு மரியாதைக் கிடையாது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமிழர்களுக்கு அவர் யார் என்றே தெரியாது.
தமிழ்த் தேசியவாதிகள் இனவாத அரசியல் பேசினால், அவர்களை பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கிற பார்ப்பனர்களும், பிஜேபிக்காரர்களும் அவர்களின் ஊடகங்களும்; இனவாத அரசியலை பிறமாநில மக்கள் மேல், வன்முறையாக நிகழ்த்திய பால்தாக்ரேவை தலையில் வைத்துக் கொண்டாடும் ‘உள் அரசியல்’ மிக நுட்பமானது.
அதன் பின்ணனி இதுதான்,
‘மண்ணின் மைந்தர்கள்’ என்கிற கவர்ச்சிகரமான தலைப்பில் மராட்டிய மக்களிடம் பால்தாக்ரே அரசியல் செய்தாலும், அடிப்படையில் அவரின் சிவசேனா கட்சி இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரானது.
அம்பேத்கரின் மண்ணில் தலித் மக்கள் மீதான தாக்குதல்களை ஒரு சாதாரண நிகழ்வாக மாற்றியதுதான் பால்தாக்ரேவின் அரசியலில் முக்கியமான ஒன்று.
ஜாதி மற்றும் இந்து அரசியலின் எழுச்சி வடிவம் பால்தாக்ரே.
அதனால்தான், தேசிய ஒருமைப்பாடு பேசுகிற பார்ப்பனர்களும், பிஜேபி போன்ற இந்து அமைப்புகளும் ‘இனவாத’ பால்தாக்ரேவை ஆதரிக்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் அல்லாத தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத இடைநிலை ஜாதிகளில், எண்ணிக்கையில் அதிகம் உள்ள ஜாதிகளை ஒருங்கிணைத்துதான் அவர் ‘மண்ணின் மைந்தர்கள்’ அரசியலை பேசினார்.
அதே காரணத்திற்காகத்தான், தமிழகத்தில் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் பால்தாக்ரேவை ஆதரிக்கிறார்கள். அவரைப் போலவே இஸ்லாமியர்கள் அல்லாத, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத மிகப் பெருமான்மையாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை ஒருங்கிணைத்து அரசியல் பண்ணும் முயற்சியால்தான்,
பரமக்குடி, தருமபுரி தாக்குதல்கள் சாதாரணமாக தெரிந்து, பால்தாக்ரேவின் மரணம் துயரமானதாக தெரிகிறது. இதே காணத்திற்காகத்தான், பால்தாக்ரேவைப் போல் பார்ப்பனர்களிடம் நற்பெயர் எடுக்கும் நோக்கத்தில், பார்ப்பன ஆதரவும் – பெரியார் எதிர்ப்பும், தங்களை பார்ப்பனர்கள் வழிமொழிய வேண்டும் என்பதற்காகவே முன்மொழியப்படுகிறது.
இனவாத தத்துவத்தின் வாழும் தெய்வமாக இருந்து, இன்று ‘தெய்வமாகவே’ மாறிவிட்ட விட்ட பால்தாக்ரே, (தெய்வம் என்பதை பெரியாரிய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளவும்.) தமிழர்களுக்கு எதிராக, இந்திக்காரர்களுக்கு எதிராக பல வன்முறைகளை நடத்தியிருக்கிறார்.
ஆனால், மராட்டிய மாநிலத்தையே பற்ற வைத்து, ஸ்தம்பிக்க வைத்த வன்முறையை பல ஆண்டுகளுக்கு முன் நடத்தினார். அவர் செய்த அந்த வன்முறையின் சாதனையை, அவர் முறியடிக்காமலே மரணித்துவிட்டார்.
அது, ‘மராட்டிய மண் மராட்டியர்களுக்கே’ என்பதற்கான போராட்டம் அல்ல; மராட்டியத்தில் உள்ள ‘மரத்வாடா பல்கலைகழகத்திற்கு’, மராட்டிய மண்ணின்மைந்தன் உலகம் வியக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைத்ததினால் நடத்திய வன்முறை.
இதுதான் மண்ணின் மைந்தனின் அரசியல். இதுவேதான் ‘மைந்தர்களின்’ அரசியலும்
இஸ்லாமிய எதிர்ப்பும், தலித் விரோதமும் கொண்ட பால்தாக்ரே இறந்தற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் துயரப்பட்டார்கள். தமிழகத்தின் ஊடகங்களும் முதன்மை செய்தியாக அறிவித்தது. கொள்ளி வைக்கும் நேரத்தில், சில தொலைக்காட்சிகள் நேரலை செய்தது. அது அவர்களின் சடங்கு.
ஆனால், எல்லோரையும் தூக்கி சாப்பிடுவதைப் போல, விஜயகாந்தின் கேப்டன் டி.வி மட்டும், அதிகாலையிலேயே ‘அழ’ ஆரம்பித்துவிட்டது.
மும்பையிலிருந்து சென்னைவரை அழுதது.
பால்தாக்ரே இறந்த அன்று இரவு கேப்டன் டி.வி. அவரை மாபெரும் போராளியாக, தியாகியாக சித்தரித்து, அவரைப் பற்றி ஆவணப்படம் ஒளிபரப்பியது.
மறுநாள் மாரில் அடித்துக் கொண்டு அழுவதைப் போல், அவரின் வீர, தீர பெருமைகளை வர்ணித்துக் கொண்டு அவரின் இறுதி சடங்குகளை நேரடியாக கேப்டன் நியுஸ் ஒளிபரப்பியது.
பால்தாக்ரேவின் மரணத்திற்கு கேப்டன் டி.வி. இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் புரியவில்லை.
பால்தாக்ரே பாணியில் அரசியல் பேசுபவர்கள், விஜயகாந்தை தமிழரல்ல என்கிறார்கள். அப்படியிருக்க பால்தாக்ரே மீது கேப்டன் டி.விக்கு பாசம் வர காரணம் என்ன?
அல்லது ‘பால்தாக்ரே மரணத்தை ஒளிபரப்பினால், அதை நிறையபேர் பார்ப்பார்கள், அதனால் நம்ம டி.வி எங்கேயோ போய்விடும்’ என்ற காரணம் இருந்தாலும் கூட, சரி போய் தொலையுதுன்னு…
யாருமே இல்லாத டீ க்கடையில யாருக்கு டீ ஆத்துற என்பதுபோல், பாக்கறதுக்கு ஆளே இல்லாத பால்தாக்ரே நிகழ்ச்சியை, எதுக்கு அவ்வளவு முக்கியத்துவும் கொடுத்து ஒளிபரப்புவானேன்?
கேப்டன் டி.வியின் இந்தச் செயல் ஆர்வக் கோளாறினால் ஏற்பட்ட கோமாளித்தனம் போல் தோன்றினாலும், மிக ஆபத்தானதாக இருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கும், தலித் மக்களுக்கும் எதிராக தான் வாழ்நாள் முழுக்க அரசியல் செய்த பால்தாக்ரேவை தமிழக மக்களிடம் பெருமையோடு அறிமுகப் படுத்தும் மோசமான செயலாகவே இதை பார்க்க முடிகிறது.
விஜயகாந்த் கட்சிக்கு கிடைத்த வாக்குகளில், இஸ்லாமியர்கள். தலித் மக்கள் வாக்குகள் கணிசமானவை.
தனக்கு வாக்களித்த அந்த மக்களுக்கு கேப்டன் டிவி செய்த துரோகமாகவே இது பதிவாகிறது.
தொடர்புடையவை
சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்
‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே
பால்தாக்கரே இறப்பிற்கு
கலைஞர் வீரமணி ஆகியோரின் இரங்கல் செய்தியை படிக்கவில்லையா.. அப்படி இல்லை என்றால் உடனே படிக்கவும் கட்டுரையில் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை…
vaikku vanthpadi pesuvathellam pecha. enna kodumada sami ithu. inavatham pinavathamnu pekittu ippadiya oru savula kola veri thoonduramathiri pesurathu.
அப்போதுதான் (1995) மும்பை எனப்பெயர் மாற்றப்பட்டது பாந்த்ரா என்னுமிடத்தில் ஒரு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மொரார்ஜியின் பெயரை வைப்பதாகப்பேச்சு அடி பட்டது. பாலதாக்கரே மனமுவந்து பெரிய மனது வைத்து அந்தப்பெயர் வேண்டாம் எனது தந்தையாரின் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்றார். மனோகர் ஜோஷி என்ற பிராமண முதல்வர் அதை சிரம் தாழ்த்தி செய்து முடித்தார்
He !s h!ndu!sm terror!st …
******
தம்பி! நீங்க சொல்றத உண்மைன்னு வைச்சிக்கிட்டா பால் தாக்கரே தீவிரவாதி தான். ஆனா உங்க ஊரு நாட்டமைங்க எல்லாம் சேர்ந்து தேவரு சிலைக்கு மாலை போடறோம், சிலைய புடுங்கி ரோட்டுல வைக்கரோம்னு கத்தியையும் சுத்தியையும் தூக்கிட்டு திரிஞ்சி எத்தன பேர கொன்னு குவிச்சீங்க. அதெல்லாம் என்ன புனிதப் போரா… நல்லா யோசிச்சுப் பேசுங்க அப்பு. வர்ட்டா………………
(கேப்டன் டி.வியின் இந்தச் செயல் ஆர்வக் கோளாறினால் ஏற்பட்ட கோமாளித்தனம் போல் தோன்றினாலும், மிக ஆபத்தானதாக இருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கும், தலித் மக்களுக்கும் எதிராக தான் வாழ்நாள் முழுக்க அரசியல் செய்த பால்தாக்ரேவை தமிழக மக்களிடம் பெருமையோடு அறிமுகப் படுத்தும் மோசமான செயலாகவே இதை பார்க்க முடிகிறது.
விஜயகாந்த் கட்சிக்கு கிடைத்த வாக்குகளில், இஸ்லாமியர்கள். தலித் மக்கள் வாக்குகள் கணிசமானவை.
தனக்கு வாக்களித்த அந்த மக்களுக்கு கேப்டன் டிவி செய்த துரோகமாகவே இது பதிவாகிறது.)
ஒருவரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிப்பதும் அவரின் மறைவின் போது அவரின் நல்ல பண்புகளை பேசுவதும் உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வு இதை இவ்வளவு மோசமாக சித்தரிப்பதில் இருந்து நிங்களும் ஒரு ஜாதி மத வெறியர்