‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு


திராவிட இயக்கங்கள்தான் தமிழகத்தை கெடுத்துவிட்டது என்கிறார்களே?

சு. தமிழ்மணி, விழுப்புரம்.

திரவிட இயக்கங்கள் என்ற சொல்லாடலே பெரியார் மீது சேறு அடிக்க வேண்டும் என்ற பிரியத்தில் சுற்றி வளைத்து மூக்கை தொடுகிற முயற்சி.

உண்மையில் அவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், பெரியாரை குறிப்பிட்டு விமர்சிக்கலாம். இல்லை நாங்கள் பெரியாரை சொல்லவில்லை என்றால், திமுக, அதிமுக என்று அந்த தேர்தல் கட்சிகளின் பெயர்களை சொல்லி விமர்சிக்கலாம். ஆனால், அவர்களுக்கோ பார்ப்பன ஆதரவுக்காக பெரியார் எதிர்ப்புதான் முக்கியம்.

அதனால்தான், இந்த திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் ஜெயலலிதாவையும் ஆதரிக்கிறார்கள்; ஜெயேந்திரனை கொலைவழக்கில் இருந்து தப்ப வைக்கும் திமுக அரசின் பார்ப்பன ஆதரவை கண்டிக்க மறுக்கிறார்கள்.

சரி, அவர்கள் திமுக, அதிமுகவேயே விமர்சிப்பதாகவே வைத்துக்கொள்வோம். அவர்களை விமர்சிப்பதற்குகூட இவர்களுக்கு யோக்கியதை இல்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு பின்பு துவங்கப்பட்ட கட்சிகளின துவக்கமே ஜாதிதான். அதை மறைப்பதற்குத்தான் போலியான தமிழ் உணர்வு.

தன் ஜாதிக்காரனிடம் ஜாதி உணர்வையும் அடுத்த ஜாதிக்காரனிடம் தமிழ் உணர்வையும் ஊட்டுவதுதான், இந்த திராவிட இயக்க எதிர்ப்பாளர்களின் அரசியல்.

திராவிட இயக்க எதிர்ப்பு என்ற பெயரில் இப்படி நேரடியான ஜாதி அரசியலை துவக்கி வைத்த பெருமை பா.ம.கவையே சேரும். ஒருவன் ஜாதி உணர்வோடே தமிழ் உணர்வாளனாக இருக்கலாம் என்கிற மோசமான அரசியல்தான் திராவிட இயக்க எதிர்ப்பு அல்லது திராவிட இயக்க மாற்று அரசியலாக இருக்கிறது.

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஜாதி அரசியலை வளர்த்தெடுத்தாலும், தொண்டர்கள் கட்சியின் தலைமையை ஜாதி, மத உணர்வற்ற நிலையிலிருந்தே… தேர்ந்தெடுத்தார்கள், விரும்பினார்கள்.

தமிழ்நாட்டிலேயே  மிக சிறுபான்மையான மிக குறைந்த எண்ணிக்கை கொண்ட இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான்  லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் தொடர்ந்து தன் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., என்ன ஜாதி என்று அந்தக் கட்சிக்காரர்களுக்குத் தெரியாது.

ஆனால், இவர்களுக்கு பிறகு, ஆரம்பிக்கப்படட அனைத்துவிதமான அரசியல் கட்சிகள், திராவிட இயக்க எதிர்ப்பு தமிழ்த் தேசியவாதிகளின் துவக்கமே, ஜாதிதான்.

பெரியாரை, திராவிட இயக்கங்களை விமர்சிக்கிற இவர்கள்; இதுவரை, முற்போக்கான ஒரே ஒரு விசயத்தைக்கூட செய்ததில்லை.

மாறாக, தங்கள் சந்தர்ப்பவாதத்தை விமர்சிக்கிற முற்போக்காளர்களிடம் ரவுடித் தனத்தையும்,  ஆளும் வர்க்கம் மற்றும் தலித் விரோத ஆதிக்க ஜாதி தலைவர்களிடம் இணக்கமுமாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் பெரிய வேடிக்கை, இவர்கள் பெரியாரை, திராவிட இயக்கத்தை விமர்சித்துவிட்டு, கடைசியல் விஜயகாந்திடம் பின்தங்கிவிட்டார்கள்.

*

> தங்கம் 2011 ஏப்ரல் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/apr2011/

தொடர்புடையவை:

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு
*
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

தமிழ்த்தேசியம்:  ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக்கூடாது…

12 thoughts on “‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

  1. தோழருக்கு வணக்கம்.

    தற்போது தமிழ்ச்சமூகம் சாதியச் சமூகமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னுடைய சாதி என்ன என்பதை அறிந்துகொள்ளவே என்னைச் சுற்றியுள்ளவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.

    நமது நாட்டில் உள்ள அனைவரும் சாதிப்பற்று உடையவர்களாகவே இருக்கிறார்கள். தங்களைப்போன்ற ஒருசிலர் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாகுபாடே கிடையாது.

    தங்களை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் அனைவரும் பெரும்பான்மை மக்களின் சாதி அரசியலை மட்டும்தான் விமர்சனம் செய்கிறார்களேத் தவிர, சிறுபான்மை மக்களின் சாதிவெறி செயல்பாடுகளை கண்டுகொள்வதே இல்லை. இப்படிப்பட்ட முற்போக்காளர்களை என்னவென்று அழைப்பது?

  2. சிறுவயது முதல் பண்டைய தமிழ் புலவர்கள், குறுநில மன்னர்கள், மன்னர்கள், அரசர்கள், பேரரசர்கள் பற்றி படித்துள்ளோம். அவர்களின் செங்கோல், போர் திறமை, தமிழ் மேல் வைத்த பற்று, காதல் இப்படியாக சேரன், சோழன், பாண்டியன் மன்னர்களை சொல்லலாம் அதிலும் குறிப்பாக சோழன் கடல் கடந்து பல நாடுகளை பிடித்தவன்(இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியா, சுமத்ரா) அதுமட்டும்மில்லாமல் அவன் எழுப்பிய கோபுரங்கள், கட்டிடங்கள், அணைகள் அவனின் புகழை மேலும் மெருகேற்றுகின்றன. பின்பு நம் தமிழ் மன்னர்களின் ஆட்சிகாலம் முடிந்து பல அண்டை மன்னர்கள் படையெடுப்பால், தமிழர்களின் வாழ்கை முறையில் பல மாற்றங்கள், இது போதாது என்று மதகுருமாரர்களால் மத தணிப்பு சாதி திணிப்பு என அடுக்கடுக்காக தமிழ் இனம், மொழியில் சிதைவுகள், அப்பறம் வெள்ளையன் ஆட்சி அதுவும் அதே மாதிரிதான் மத திணிப்பு, மொழி திணிப்பு இப்படி சிதைந்ததிற்கு ஒரு காரணம் சேரன், சோழன், பாண்டியன் போன்ற மன்னர்களுக்கு பிறகு நல்ல தமிழ் தலைவர்கள் அமையவில்லை.இக்காலத்தில் அதுபோன்ற தலைவர்களாக நான் பார்ப்பது பகுத்தறிவு பகலவன் பெரியார், அண்ணாதுரை, காமராசர், கக்கன், பாவேந்தர், பாவலரேறு பெருஞ்சித்திரனார். இதில் பெரியாரின் பங்கு விசாலமானது, இந்து மதத்தின் மூடநம்பிக்கையை தொழுரித்தார். இவர் தன் சாதிக்காக பாடுபட்டவர் அல்ல, பிறப்பால் எழையும் அல்ல இருதாலும் ஒடுக்கபட்ட இனத்தாகாக பாடுபட்டவர் அவரின் பார்வையில் இரண்டு சாதிதான் ஒன்று திராவிட(தமிழ்) சாதி,
    மற்றொன்று ஆரிய சாதி, பார்ப்பன சாதியையே அவர் ஆரிய சாதியையே என குறிப்பிடுகிறார். தமிழ் சாதிகாரன் தமிழ்நாட்டை ஆள்வதை அவர் எதிர்க்கவில்லை. நம் தலைவர்கள் சரியான முறையில் ஆட்சி செய்ய தவறினால் வேறு தலைவரை கண்டறிவோம் அதைவிடுத்து பார்ப்பனிடம் ஆட்சியை கொடுப்பது மடத்தனமான ஒன்று.என்னை கேட்டால் சாதியை வைத்து நமக்குள் சண்டை போடாமல் நம் மொழியின் வளர்ச்சிக்காக சண்டை போடலாம், எங்கள் சாதியில் இருந்து தமிழுக்காக இத்தனை பேர் பாடுபட்டார்கள் என்று பெருமையுடன் சொல்லலாம், எங்கள் சாதிகாரர்கள் தமிழ்மொழியை பல நாடுகளில் பரப்பியுள்ளார்கள் என பெருமைபட்டுகொள்ளலாம், எங்கள் சாதிகாரர் கணினியில் தமிழ் புரட்சி செய்துள்ளார் என்றும், எங்கள் சாதியினர் தமிழ் மொழிக்காகவும் இனத்துக்காகவும், உரிமைக்காகவும் தமிழ்நாடு இராணுவத்தில் பாடுபடுகிறார்கள் என்றும் இப்படி சாதிகள் தமிழ் வளர்பதில் ஒற்றுமையுடன் இருந்தால் நலமாக இருக்கும். ஆனால் இங்கு பல சாதியான இவர்கள் விநாயகன், கிருசுணன், இரமான் போன்ற வடநாட்டு கடவுளை கும்பிடுவதில் வெட்கப்படுவதில்லை, இப்படி அடிமையாக இருப்பதில் என்ன ஒரு ஒற்றுமை

  3. ஜாதி உணர்வை தன் ஜாதிகாரனிடமும் தமிழ் உணர்வை அடுத்த ஜாதிகரநிநிடமும் ஊட்டு
    பாராட்டுக்குரிய உண்மை நிலையை தமிழ் தேசிய வாதிகளுக்கு உணர்த்தும் கட்டுரை இதேபோல வீட்டுக்குள் இந்துத்துவம் வெளியே கம்முணிசம் மற்றும் சார்புடைய மதக்கருத்துக்களை பேசுவோருக்கும் இது பொருந்தும் கட்டுரையாக இருக்கிறது

    தோழர்
    மதிமாரனுக்கு நன்றி

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading