விஸ்வரூப தந்திரம்

kamal

கமலின் விஸ்வரூப தந்திரம் குறித்து, facebook ல் நான் எழுதியவை:

**

எனக்கு அரசியல் கிடையாது. மதம் கிடையாது.
– கமல்ஹாசன்

ஆனா, ஜாதி இருக்கு.

**

என் வீட்டை கடன் கொடுத்தவர் எழுதி வாங்கிக் கொண்டார். இந்த வீட்டில் நான் சிறு வயது முதல் நடனம் ஆடியிருக்கிறேன். படம் வெளியாகவிட்டால் இதுதான் இங்கு நடக்கும் கடைசி பிரஸ் மீட்.
– கமல்ஹாசன்

வாடகைக்கு இருக்கலாமே… பேசி பார்ப்போம் அவுஸ் ஓணர்கிட்ட..
ஒத்துக்கலன்னா, ‘ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்..’ என்று அவுஸ் ஓணருக்கு எதிரா ஏத்தி விடுவோம்.

பாரதிராஜாகூட சொல்லியிருக்காரு… கமல் ஆதரவாளர்கள் எல்லாம் கொதிப்புல இருக்குறாங்க… சும்மா சொன்ன போதும்… மத பிரச்சினையா மாறிடும் என்று.. (பாரதிராஜா அமீர் மேல உள்ள கோபத்தை இப்படி தீத்துக்கிறார் போல..)

**

எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன்.
– கமல்ஹாசன்

குஜராத்தில் குடியேறுங்க..

போகும்போது தயவு செய்து இந்த ஞாநியை கூட்டிக்கிட்டு போயிடுங்க.. முடியில..

-ஜனவரி 30ஆம் தேதி எழுதியது

***

நாளைக்கு விஷ்வரூபம் பார்த்துட்டு வந்து, இன்னைக்கு கமலுக்கு ஆதரவு சொன்ன பல ‘முற்போக்காளர்கள்’ …

‘படம் ரொம்ப மோசமா இருக்கு. பார்ப்பன இந்து அமெரிக்க ஆதரவும், இஸ்லாமிய வெறுப்புமாக இருக்கிறது’ என்றும் எழுதுவார்கள்…

‘இதத்தானே நான் ஆறுமாசம் சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்ப மட்டும் எப்படி கண்டுபுடிச்சிங்க?‘

‘பில்லா கருப்பா பயங்கரமா இருப்பான். நீ பயங்கர கருப்பா இருக்கே’

‘நீங்க பாக்கமா சொன்னிங்க.. நாங்க பாத்துட்டு சொல்றோம்…’ என்பார்கள் போலும்..

என்ன ஜனநாயகமோ? என்ன கருத்து சுதந்திரமோ?

என்ன கொடுமை சார் இது?

-ஜனவரி 29ஆம் தேதி எழுதியது

***

விஷ்வரூபம் விவகாரத்தில், இஸ்லாமிய தலைவர்கள் ஊடகங்களை புறக்கணித்து இருக்க வேண்டும். அல்லது தங்களின் சார்பாக மத சார்பற்றவர்களை பரிந்துரை செய்திருக்கவேண்டும். அல்லது என்னை போன்றவர்கள் எழுதியதையாவது குறிப்பிட்டி காட்டி பேசியிருக்க வேண்டும்.

தலைவர்களின் ஊடக மோகத்தை, தனது இஸ்லாமிய எதிர்ப்புக்கு சரியாக பயன்படுத்திக் கொண்டன ஊடகங்கள். அதை வைத்து நன்றாக சம்பாதிக்கவும் செய்தன.

-ஜனவரி 29ஆம் தேதி எழுதியது

***

நண்பர் தாகம் செங்குட்டுவன் ‘ (Thaagam Senguttuvan) விஸ்வரூபத்தின் பின்னணியில் காங்கிரஸ் !’என்று தனது facebook ல் ஒரு பேட்டியை வெளியிட்டிருந்தார். அதில் நான் பதிவு செய்த என் கருத்து.

தங்கர் பச்சான் நடிகைகள் பற்றிய சர்ச்சையில் சிக்கியபோது, மன்னிப்புக் கேட்காவிட்டால் படம் வெளியாவதில் பிரச்சினையாகும் நஷ்டம் ஏற்படும் என்று, தயாரிப்பாளராக மன்னிப்புக் கேட்டார்.

ஆனால், 100 கோடி முதலீடு என்று சொல்கிறா்கள் விஸ்வரூபத்திற்கு, அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார் கமல்.

உண்மையில் முதலீடு அவருடையதுதனா? ………? படத்தை வெளியிட வேண்டும்.. வெற்றிக்கரமாக ஒட வைக்க வேண்டும் என்பதையும் தாண்டி, வேறு ரூபத்திற்கு பிரச்சினை மாறிக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஊடகங்கள் காட்டி, இந்துக்கள் மத்தியில் அவர்களை பற்றி வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விஸ்வரூபத்திற்கு ஆதராவகவும் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்றுகிற… பிரச்சினையாக திசை திருப்பப்படுகிறது.

பெங்களுரில் இந்தப் படத்தை இந்து அமைப்புகள் ஆதரித்து இருக்கிறார்கள்.
சன் டி.வி. செய்தியாளருக்கு பின்‘ பாரத் மாதாக்கி ஜே.. ’ என்று முழக்கமிடுகிறார்கள்.
இந்தப் பிரச்சின வேறு வடிவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது.
அது மிக அபாயகரமானதாக அறிகுறியாக தெரிகிறது.

-ஜனவரி 24ஆம் தேதி எழுதியது

***

விஸ்வரூபம் விவகாரத்தில் ஊடகங்கள் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கண்ணோட்டதை்தையும், கமல் மீது பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறது.

இந்தப் படம் பற்றிய விவாதங்களில் கூட, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மத சார்ப்பற்றவர்களின் பங்களிப்பை தவிர்த்து, இஸ்லாமியர்களிடமே கருத்து கேட்கிறது.
ஆனால், கமலுக்கு ஆதரவாக ‘முற்போக்காளர்கள்’, கமல் சார்பு கொண்ட இஸ்லாமிய துருப்புச் சீட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
இது என்ன நியாயம்?

-ஜனவரி 24ஆம் தேதி எழுதியது

தொடர்புடையது:

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

23 thoughts on “விஸ்வரூப தந்திரம்

  1. முட்டாள் தனமான கருத்துக்கள்!
    உங்களைப்போன்றோர் உள்ளவரை இந்திய ஒரு நாளும் உருபடாது!
    ஒரு நல்ல கலைஞ்சனை பற்றி பேச உமக்கு என்ன அருகதை ஒய் இருக்கு?
    கிணற்று தவளை!
    மதங்கள் அழிய வேண்டும்!
    மனித நேயம் வாழ வேண்டும்!

  2. very good analysis.
    கமல்ஹாசன் அவர்களே!
    உங்கள் காட்டில் நல்ல மழை! ஊடக செலவு இல்லாமல் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. உங்களுக்கும் நல்ல Sympathy உருவாகியுள்ளது. போதாத குறைக்கு ‘தமிழன்’, மத சார்பு, வேறு மாநிலத்துக்கு போறேன்னு, வேறு நாட்டுக்கு போறேன்னு நல்லா கருத்தா பேசிட்டீங்க. (உங்க நண்பர் ரஜினி மாதிரி ஒரு அரசியல் அறிக்கையும் சூட்டோட கொடுங்க! ).

    உங்கள் படத்தில் ஏன் ஆப்கன் தீவிரவாதத்தை காட்டினீர்கள் என்றும், முதல்வேலையாக அமெரிக்கர்களுக்கு படத்தை போட்டு காட்டினீர்கள் என்றும் புரியவில்லை. அது வருங்காலங்களில் புரியும்.

    http://rsgurunathan.blogspot.in/2013/01/blog-post_30.html

  3. எப்பொழுது மதம் தோன்றியது குரங்காக இருந்த பொழுதா இல்லை மனிதனாக மாறிய பொழுதா நம்ம அண்ணன் விஜயகாந்த் படம் எதுவும் பார்க்கவில்லையா துப்பாக்கி படம் பார்த்த பொழுது ஒன்ன்றும் தோன்றவில்லையா பாகிஸ்தானில் தினமும் முஸ்லீமை கொல்வது இன்னொரு முஸ்லிம் சியா சன்னி என இரு வர்க்கமும் கொன்று குவித்தது தெரியாதா நபிகள் நாயகம் சொன்னது என்ன ஒருவர் தொழிலை கெடுக்க சொல்லி உள்ளாரா இது அரசியல் காரணம் ஜெயா டிவிக்கு படம் கொடுக்க வில்லை என்பதால் செய்யும் கொடுமை இது உங்கள் தொழிலை யாரவது கெடுக்கும் பொழுது இந்த வருத்தம் புரியும்

  4. சகோ :மதிமாறன் மற்றும் குருநாதன் அவர்களின்
    பக்க சார்பில்லா ,நடுநிலையான ,நேர்மையான
    கருத்துக்களை வரவேற்கின்றேன் ….

  5. //பக்க சார்பில்லா ,நடுநிலையான ,நேர்மையான
    கருத்துக்களை வரவேற்கின்றேன் ….//
    அஹா…அஹா…கமல் மீது கொலை வெறி கொண்டவர் கூட இந்த அளவுக்கு பக்க சார்புடன் இருக்க வாய்ப்பில்லை.

  6. //Nasar (20:30:57) :

    சகோ :மதிமாறன் மற்றும் குருநாதன் அவர்களின்
    பக்க சார்பில்லா ,நடுநிலையான ,நேர்மையான
    கருத்துக்களை வரவேற்கின்றேன் ….//

    A GREAT JOKE …VERY UNTIMELY!

  7. எல்லாம் சரியான கருத்துக்களே ………………இவை எல்லாத்தையும் விட இதில் தமிழக முதலமைசரின் தலையீடு இருகிறதா இல்லையா? என்னுடைய பார்வை இது இரண்டு முதலாளிகளிக்கு இடையேயான பிரச்சனை….முஸ்லிம்களை ஜெயலலிதா பயன்படுத்திகொண்டாரே தவிர . முஸ்லிம்இயக்கங்களின் அறிக்கைகள் அவர்களின் அறிக்கைகளாக தெரியவில்லை அரசாங்க அறிக்கைகள் மாதிரியே இருக்கே…….. ?

  8. சகோ.மதிமாறன் !

    ஒவ்வொன்றும் அருமை… கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் பிரபலங்களின் கருத்துக்களை டிவியில் பார்த்தால் இவர்களெல்லாம் எப்படி இவ்வளவு பேமஸ் ஆனார்கள் என்பதே வியப்பாக இருக்கிறது…

    தந்தி நியுஸ் சேனலில் ராதாரவியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.. ஒரு மனிதனின் தனிப்பட்ட லாபத்திற்கு வக்காலத்து வாங்கும் இவ்வளவு பேர் படத்தின் நச்சுக்கருத்துக்களால் பல கோடி முஸ்லிம்களின் அடையாளமே மாற்றப்படுகிறதே..! அதை ஏன் கண்டு கொள்ள மறுக்கிறீர்கள்..என்று கேட்டதற்கு கமல் ஒரு மகா கலைஞன் , அவரை போன்றவர்கள் கிடைப்பது அரிது என்று கமல் புராணம் பாடினாரே பார்க்கலாம்..ஒரே சிரிப்புதான்.. :-))

    அது போல் கமல் தரப்பு வாதம் எல்லாமே ( சொல்வதற்கு மன்னிக்க ) படு சொத்தை..!! ஆம். …நூறு கோடிரூபாய் செலவு செய்து இருக்கிறார்…முழு சொத்தையும் இதில் முதலீடு செய்து இருக்கிறார்..ஐம்பது வருடமாய் தமிழ் சினிமாவுக்காக உழைத்திருக்கிறார்…ஒவ்வொரு நாளும் ஒரு கோடி இழப்பு ..விட்டால் வெளிநாட்டுக்கு ஓடிவிடுவேன் , என்று கமல் மேல் பரிதாபத்தை உண்டாக்க கூடியவையாகவே வைக்கின்றனர்..! படம் உண்டாக்கும் நச்சு பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர் ..!

    எது எப்படியோ ! இப்போது பிரச்சனை முஸ்லிம்களிடம் இருந்து என்றால் காட்சிகளை நீக்கி ஓரளவு சமாளிக்கலாம் ..ஆனால் பிரச்சனை வேறு ஒரு இடத்தில அல்லவா இருக்கிறது..அதை எப்படி சமாளிக்க போகிறார்கள் இந்த கருத்து சுதந்திர போராட்ட தியாகிகள்(இதுக்கும் பென்சன் கேப்பாங்கலோ :-))..!!!! எங்க ஒரு சவுண்டு விட்டு பார்க்கட்டும்…ஒரே தமாசுதான்..!

  9. unkalai pondravarkal mathasaarpinmai endra peyaril islaamiyarkalukku thunai nirpathu kevalamaaka iryukkirathu. islaamiyarkalukku manathai punpaduththukirathu enil viswaroobam thadai seyka, athe neram inthukkalin manathai punbaduthum vitham iruppathaal periyaar padaippukal anaithaiyum thadai seyka

  10. மதிமாறன் நீங்க ஏன் ஆப்கன் அல்கொய்தாவில் டிரைனிங் எடுத்த மாதிரி பேசிறிங்க

  11. Ippadi neengal kandabadi elzuthum karuthu sudhadhiram dhaan naatil ellorukkum ulladhu.idhu kooda theriavillaiaa muttal mani.

  12. Indiavil nadakkum paalial vanmuraikku arabia aradaangam tharum punishment correct dhaan enru peruvaariaana makkal ninaikum innerathil edho kamal pafam paarthu naangal enna kodumaiaana dhandanai enru arabiargalai kevalamaaga ninaipathu pol oru maaya thotram undaakum muttaal mathi.
    Neengal indha samudhayathil madha
    verubadu undaakkum oru kalli chedi.ungal elzthukkalai thadai seiya onrukoodi aavana seigirom.poruthirungal.

Leave a Reply

%d bloggers like this: