‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்
இன்றைக்கு நாளிதழ்களில் வெளியாகி இருக்கிற இந்த உதை யாருக்கான பதிலோ?
*
விஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..
இந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதினாலும்தான்.
உள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.
மதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 5-02-2013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம்.
‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.
நீக்கச் சொன்ன காட்சிகளை தாண்டியும் ‘துடிப்போடு’ இருக்கிறது விஸ்வரூபம்.
இந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே ‘துடிப்போடு’ நிறைந்து வழியும்.
‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..’ என்று தேசபக்தியோடு நமக்கு அருளுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் ‘இந்தியனாக’ இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள் கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.
விஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6-6-2012 அன்று ‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்?’ என்று எழுதியிருந்தேன்.
என் எழுத்தை பொய்யாக்கவில்லை கமல். எவையெல்லாம், யாரெல்லாம் அமெரிக்காவிற்கு, அமெரிக்கர்களுக்கு பிடிக்கதோ அவைகளெல்லாம், அவர்களெல்லாம் படத்தில் வில்லன்கள். வில்லத்தனமான குறியீடுகள்.
ஆப்கான் நாட்டு இஸ்லாமிர்களை மட்டுமல்ல; பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா என்று பல நாட்டு முஸ்லீம்களை ‘அல்கொய்தா’ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டுகிறார்.
கமலே ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொல்லிதான் ஆப்கானியர்களுக்குள் ஊடுறுவுகிறார். ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொன்னவுடன், ஆப்கான் இஸ்லாமியர்கள் அவரை கொண்டாடுகிறா்கள்.
அமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிபோலவே ஆப்பரிக்க கருப்பர்களின் மீதும் உண்டு. அதற்காகவே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நைஜிரியாவைச் சேர்ந்த, கருப்பின முஸ்லிமே தீவிரவாதி.
‘பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இஸ்லாமியர்கள் மேல் கொலைவெறி தாக்குதல், விஸ்வரூபத்தில் இஸ்லாமியர் எதிர்ப்பு’ என்று இதுபோன்ற சம்பவங்கள் தீவிரமாக நடக்கும்போது, ஒரு பகுத்தறிவாளைனைப்போல் ‘இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம், சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்’ என்று தொடர்ந்து நீட்டி முழங்குகிற அல்லது அதுபோன்ற கட்டுரைகளை மட்டும் ‘Like’ செய்கிற இந்து அறிவாளிகளைப்போல்,
இஸ்லாமிய நாடுகள்; பெண்கள் உட்பட தனி மனிதர்களுக்கு மிக மோசமான, கொடுமையான தண்டனைகளை தருவதை, கடுமையாக கண்டிக்கிற அமெரிக்கா;
இன்னொருபுறத்தில் ஒரு நாட்டின் மீது ஈவு இரக்கம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி கொல்வதை எப்படி நியாப்படுத்துகிறதோ;
அதுபோல், இந்தப் படத்திலும் இஸ்லாமியர்கள் செய்கிற கொலைகளை, கொடுமையாகவும் பார்வையாளர்களுக்கு ‘ச்சீ..இவனுங்க எல்லாம் மனுசனா..?’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
ஆனால், இதற்கு நேர் மாறாக, அமெரிக்க சார்பாக கமல்ஹாசனும், வெள்ளைக்காரர்களும் ஆப்கானியர்களை, இஸ்லாமியர்களை செய்கிற கொலைகள் நியாயமாகவும், ‘இவர்களை கொலை செய்வதுதான் தர்மம்’ என்கிற எண்ணத்தையும ஏற்படுத்துகிறது.
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடும் பெண்ணை; அவளின் கணவர், கத்தியால் குத்தும்போது, சிறுவனாக இருக்கிற கமல், ‘குத்துங்க எஜமான்.. குத்துங்க.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..’ என்பாரே அதுப்போல்;
அமெரிக்கர், அமெரிக்க காவல்துறை, கமல் இவர்கள் சகட்டுமேனிக்கு இஸ்லாமியர்களை கொலை செய்யும்போது, பார்வையாளர்களுக்கு, ‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
கமல்ஹாசன் ‘பாய்’ கூட வெள்ளைக்காரப் பெண் மருத்துவர் கொலை செய்யப்படும்போது, அமெரிக்கர்கள் கொலை செய்யப்படும்போது துக்கம் தாங்காமல் குமுறுகிறார்.
இதே உணர்வுதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.
தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ‘விஸ்வரூபம் பிராமணர்களுக்கு எதிராக இருக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் கமல் ஆலோசனையின் பெயரில் செய்தாரோ என்று சந்தேகிக்கும் படியாக இருக்கிறது படத்தில வரும் காட்சி.
பார்ப்பன பெண், அமெரிக்கர்களை விட பெரிய அறிவாளியாக இருக்கிறார். ஒரு நகரத்தையே அழிக்க இருக்கிற ‘வெடிகுண்டை’ அமெரிக்காகாரன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, அவர்தான் தன் அறிவால் தடுத்து நிறுத்துகிறார்.
**
இஸ்லாமிய வெறுப்பும் அமெரிக்க விசுவாசமாகவும் படம் நகர்கிறது. ‘நகர்கிறது’ என்கிற இந்த வார்த்தையை நேரடியாக புரிந்து கொள்ளுங்கள். திரைக்கதை அமைப்பு அப்படி மந்தமாக இருக்கிறது. அதுவும் பிற்பகுதி… ‘பப்புள்காமில் செய்த பிலிம்ரோல்…’
ஒரு படத்தை பலமுறை பார்க்கிற சினிமா விரும்பியாக இருக்கிற கமல் ரசிகர்களுக்கே இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது; காரணம் ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ என்பதற்காக அல்ல; நான் சொன்ன அந்த ‘நகர்கிறது’ பிரச்சினைதான். படத் துவக்கதில் ‘ஆரவாரத்தோடு படம் பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்து, போக போக.. கமல் வசனத்தைவிட, ரசிகர்கள் பேசுகிற வசனமே அதிகம் தியேட்டரில் எதிரொலித்தது.
இடைவேளையின் போது, என்னிடம் பேசிய ஒரு ரசிகர், ‘தலைவரு தப்பான வேசத்துல நடிக்கிறாரு.. காதல் மன்னன்.. இன்னும் ஒரு கிஸ்கூட அடிக்கல..’ என்று ஆதங்கப்பட்டார்.
நண்பர் நவினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கமல் ரசிகர்கள், படத்துவக்கதில் படம் பார்ப்பதற்கு இடைஞ்சலாக யாராவது கதவைத் திறந்து வெளியில் போனாலோ உள்ளே வந்தாலோ அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்கள்.
அவர்களே பாதி படத்திற்குமேல், மற்றவர்கள் படம் பார்பப்பதற்கு இடையூறாக கத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் நவினிடம் ‘அண்ணே நாங்க போறோம்.. ஒன்னும் புரியல..’ என்றார்.
நவின் ‘இருங்க படம் முழுக்க பாருங்க.. புரியும்’ என்றார். நவின் பேச்சை கேட்காமல் 30 நிமிடத்திற்கு முன்பே கிளிம்பி விட்டனர் கமல் ரசிகர்கள்.
ஆனாலும் இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள், படம் முடிந்த பிறகு, ‘படம் சூப்பர், என்னங்க தமிழ்நாட்ல மட்டும்தான் முஸ்லீம் இருக்காங்களா?’ என்று ஆவேசமாக பேசினார்கள். இந்தப் படத்திற்கு பிறகு இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்டவர்கள் நிறையபேர் கமல் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதையும் அங்கு பார்க்க முடிந்தது.
(தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால் மட்டுமே திரையரங்கு நிரம்பி வழிந்தது)
ஆக, விஸ்வரூபம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடுவதற்கு வாய்பில்லை. அதற்கான காரணத்தை கமல் தரப்பினர் இஸ்லாமியர்கள் மீதே போடலாம்.. ‘படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் கட் பண்ணதாலே..’ என்று.
ஆனால், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படம் வசூல் செய்வதாக சொல்கிறார்கள்.
காரணம், அமெரிக்க சார்பு கொண்ட கமலின் மனநிலையும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனநிலையும ஒன்றாக சங்கமிப்பதுதான்.
அமெரிக்க இந்தியர்கள் இந்தியாவில் தாங்கள் படித்த படிப்பின் தொடர்ச்சியாக அதற்கான ஆய்வு செய்வதற்கோ, அதை குறித்த தேடுதலுக்கோ போகவில்லை.
தங்களின் கல்விக்கு இந்தியாவைிட அதிகம் சம்பளம் கிடைக்கிறது, அதை ஒட்டிய சொகுசான வாழ்க்கை..’ என்று காரணத்திற்காகவே சென்றிருக்கிறார்கள்.
அது அமெரிக்காவில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே அமைகிறது வாழ்க்கை. அதை பொருளாதார ரீதியாக இன்னும் தரம் உயர்த்துவதற்கும் சில நேரங்களில் தக்கவைத்துக் கொள்வதற்குமான வாழ்க்கையாக அமைகிறது. ‘இந்த வாழ்க்கை அமெரிக்காகாரனால்தான்’ என்ற அந்த நன்றி அவர்களிடம் நிறைந்திருக்கிறது.
அதனால்தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு வந்தால், அமெரிக்க அரசின் பொது ஒழுங்கு, சாலைகள் பராமரிப்பு, சாலை விதிகள், ஒழுங்கு இவைகளை இந்தியாவோடு ஒப்பிட்டு அமெரிக்க புகழை பேசி பேசி வியக்கிறார்கள். (அறுக்கிறார்கள்)
மாறாக சர்வதேசிய அரசியலில், மூன்றாம் உலக நாடுகளிடமும், அரபு நாடுகளிடமும் எவ்வளவு இழிவாக மூன்றாம் தர பொறுக்கியைப் போல் அமெரிக்கா நடந்து கொள்கிறது, என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
அதற்கு நேர் எதிராக அமெரிக்கவிற்கு எதிரான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் மேல் கடும் வெறுப்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
‘இவனுங்களாலதான் அமெரிக்காவுல நிம்மதியே போச்சு..’ என்று கோபப்படுகிறார்கள். இந்த மனநிலை உள்ளவர்கள் விஸ்வரூபத்தை பார்த்தால், ‘இல்லாததை ஒன்னும் காட்ல.. இருக்கிறதைதான் காட்டியிருக்கார் கமல்’ என்று கருத்து சுதந்திரவாதிகளாக, கருத்து சொல்கிறவர்களாக அவர்களின் அமெரிக்க வாழ்க்கை முறை உருவாக்கியிருக்கிறது.
இது அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மட்டுமல்ல; இந்தியாவிலேயே அமெரிக்க வாழ்க்கையை வாழ்கிற, ‘இந்திய வாழ் அமெரிக்கர்களிடம்’ அதாவது ‘இன்னும் நமக்கு அமெரிக்க போவதற்கு வாய்பில்லையே..’ என்று KFC சிக்கனும் கோக்கும், பிட்ஸாவும் கோக்கும், தோசையும் கோக்கும், தயிர் சாதமும் கோக்குமாக வாழ்கிற இந்திய உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் இந்தப் படம் நிறைய பிடிக்கும்.
**
படம் வெளியாவதற்கு முன் ‘கருத்து சுதந்திரத்தை’ தீவிரமாக வலியுறுத்தியவர்கள், இந்தப் படம் பற்றி விரிவாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
அவர்கள் எழுதுவது போதுமானதாக இல்லை என்றால் நான் இந்தப் படத்தை பற்றி மீண்டும் எழுத வாய்ப்பிருக்கிறது..
இந்தியாவில் விஸ்வரூபம் 2 விரைவில்.. வருகிறதோ இல்லையோ என்னுடைய இன்னொரு விமர்சனம் வரும்.
பிப்ரவரி 7 – 2013
தொடர்புடையவை:
விஸ்வரூபம்; தமிழக அரசின் தடையை ஆதரிப்போம்!
இது விஸ்வரூபம் விமர்சனம் கிடையாது…
விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்
தோழர் நானும் படம் இன்று பார்க்கிறேன்…உளறல் நாயகன் உளறல் படத்தை….
neengal ellam enna solla vaareenga endru than puriya villai. talibangal appadi ella seivathu kidaiyathu pa.. romba nallavanga.. nu sollureenga la ..
afgan muslims ah pathi padam edutha , ethuku inga irrukura muslims oda compare pannureenga..
இரண்டு நாட்களுக்கு முன் facebook ல் நான் எழுதியது.
//‘இந்துத்துவா -பார்ப்பனியம்- இந்துத்துவாவின் பயங்கரவாதம்’ என்று இந்திய அரசியலுக்குள் முழுங்கும் கிறித்துவ அறிவாளிகள் பலர்,
சர்வதேசிய அரசியலில் அமெரிக்கா-இஸ்ரேல்-பாலஸ்தீனம்-அரபுநாடுகளுக்குள்ளான பிரச்சினையில் பெரும்பாலும் அமைதி காக்கிறார்கள்… அந்த அமைதி..போப்ஆண்டவரின் அமைதியைப்போல் அமெரிக்க சார்புள்ளதாக இருக்கறது.
அதே போன்ற மனநிலையிலேயே விஸ்வரூப விவகாரத்தில் கமலுக்கு ஆதரவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துச் சொன்னார்கள் அமைதியும் காத்தார்கள் கிறித்துவ அறிவாளிகள் பலர்.
உண்மையில் இவர்கள் கிறிஸ்த்துவர்களா? இல்லை கிறித்துவ நிறுவன மனோபாவம் பெற்றவர்களா?
வந்திருக்கிறது இவர்களின் கள்ள மவுனத்தை உடைப்பதற்காகவே… ‘கடல்’
பார்ப்போம் அதே அமைதியா? ஆவேசமா என்று.
***
திரு.Nallathambi Nsk அவர்கள் தன்னுடைய facebook ல்
///”கேள்வி – பதில்”…….
பாலிமர் TV ல் 3-2-2013 அன்று கமல் அவர்களின் பேட்டியில் கேட்ட கேள்வி :- தமிழ் சினிமாவில் “Trend Setter” என்று யாரை நினைக்கிறீர்கள்.
கமல் பதில் :- முதலில் கலைவாணர் பின்னர் நாகேஷ்ஃ/// என்று கமலின் பேட்டியை குறிப்பிட்டிருந்தார்…
அதற் நான் தெரிவித்த கருத்து:
முதலில் கலைவாணர் சரி…. பின்னர் நாகேஷ்… ?
அப்போ சந்திரபாபு என்ன நாகேஷை பார்த்து காப்பியடிச்சாரா..
intha mathiriyana kopangal yen matra nadu allathu matra mozhi padangal meethu namakku varuvathillai?kamal thamilan enpathala allathu thamilan evalavu adichalum thangikkollum nallavan enpathala?
இந்தியாவில் விஸ்வரூபம் 2 விரைவில்.. வருகிறதோ இல்லையோ என்னுடைய இன்னொரு விமர்சனம் வரும்.
அநீயாயமாக கொலை செய்வதை அல்லது அதை தனி மனிதன் எடுத்து கொள்’வதை தடுக்கும் இஸ்லாம் என்ற உன்னத உணர்வில் ஊறி திளைக்கும் எங்களைப்போல மனிதர்கள் மத்தியில் உணக்ளைபோல சமுக அக்கறை கொண்டவர்கள் இருப்பதினால் எங்களுக்கு[முஸ்லிம்களுக்கு] சற்று ஆறுதலும் – மன அமைதியும் கிடைக்கிறது — வாழ்த்துக்கள் சகோதரா
//பார்ப்பன பெண், அமெரிக்கர்களை விட பெரிய அறிவாளியாக இருக்கிறார். ஒரு நகரத்தையே அழிக்க இருக்கிற ‘வெடிகுண்டை’ அமெரிக்காகாரன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, அவர்தான் தன் அறிவால் தடுத்து நிறுத்துகிறார்.
ஏன் பார்ப்பன பெண்ணுக்கு அவ்வளவு அறிவு இருக்க கூடாதா தோழரே …..
நானும் படம் பார்த்தேன் நீங்கள் சொன்னது போன்று அமெரிக்கா விசுவாசம்தான். வேறு எதையும் வித்தியாசமாக சொல்ல வில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து சரி என்று உடன்படுவது போல் உள்ளது. உலக சினிமா தரம் பற்றி கமல் முழுமையாய் அறியாதது அவர் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
//உண்மையில் இவர்கள் கிறிஸ்த்துவர்களா? இல்லை கிறித்துவ நிறுவன மனோபாவம் பெற்றவர்களா?// உண்மையில் கிறிஸ்தவர்கள் எப்படி நடக்கவேண்டும்? யாரை ஆதரிக்கவேண்டும் என்று மதிமாறன் பத்வா அறிவிக்கலாமே?
தங்களது வெளிப்படையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி! ‘விஸ்வரூபம்’ போன்ற Trend Setting படங்கள் ஏற்கனவே பல தேசப்பற்று(?) மிக்க தமிழ்த்திரைப்பட நடிகர்களால் வெளிக்கொணரப்பட்டு போதுமான, இன்னும் சொல்வதானால் அதிஅகப்படியான ‘நன்மதிப்பை’ இந்திய முஸ்லிம்களுக்கு பெற்றுத்தந்துவிட்டன என்பது மிகவும் வேதனையான விடயம். ஆனால் இந்த நடிகர்களின் தேசப்பற்றை நிச்சயம் ஃபாசிஸவாதிகளும்,எவ்வித காரணமுமின்றி முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துவரும் பிறரும் நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
எனது பல இந்து நண்பர்கள் பலரும், துப்பாக்கி, விஸ்வரூபத்திற்க்கெதிரான போராட்டமென்பது ஒரு அபத்தமென்றும், இத்தகைய படங்களால் முஸ்லிகளுடனான தங்களது நட்பு பாதிக்காது எனவும் கருத்தளித்தபோது (எனது வட்டதிலுள்ள இந்த சகோதரர்களுக்கும், எனது நட்பு வட்டத்தின் வெளியிலுள்ள ஒத்த கருத்தையுடைய பிற சகோதரர்களுக்கும் மிக்க நன்றி) – ஒரு புறம் மனதினுல் சிறிய நிம்மதி, மகிழ்ச்சி ஏற்ப்படினும், பெரும்பாலானவர்களின் பொதுப்புத்தியில் இந்த படங்கள் நிச்சயமாக ஒருவிதமான எதிர்வினையை ஏற்ப்படுத்தியுள்ளமை கலக்கத்தையே அளிக்கிறது. இந்த எதிர்வினை பெரும்பான்மை அடையும்பொழுது அது அனைவருக்குமே விரும்பத்தகாததாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.
இந்த எதிர்வினை இப்பொழுது இன்னும்பிற நடிகர்களையும் தொற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கமலுக்கு ஆதரவாக குரலெலுப்பும்போதும், அவர்களின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நோக்கும்போதும், நாளை நாங்களும் இதைப்போன்ற American Propaganda படங்களுக்கு முன்னுரிமையளிப்போம். அதற்கு தடைகளேதும் வ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இன்று ஒன்றுபடுகிறோம் என்பதாக உள்ளது!
mathi maran ; Ippothan padam parathan:—– chrompet vartharaja thetaer —-Yarum ethreesha phola Theryatha? show housfull Eantru Kadlal padatheku 10 person only coming
அவருக்கு இந்த படத்திற்காக வெளிநாட்டில் இருந்து ஒருவேளை நிதி உதவி வந்து இருக்கலாம் அதனால் அமெரிக்காவிற்கு ஜால்ரா போட்டு இருக்கலாம் விடுங்க பாஸ் ,அவசரம் அவசரமா இங்கே படம் வெளிவரவில்லை என்றாலும் அமெரிக்காவில் வந்து ஆக வேண்டும் என்று ஓடிய போதே அவரை பற்றி தெரிந்துவிட்டது அதோடு மட்டும் இல்லாமல் தமிழ்நாடு மதசார்பற்ற மாநிலம் கிடையாது ,இந்தியாவில் அப்படி ஒரு மாநிலத்தை தேடுவேன் ,அப்படி ஒரு மாநிலம் இந்தியாவில் இல்லை என்றால் நான் வெளிநாட்டிற்கு செல்வேன் என்று இந்தியா மதசார்பற்ற நாடு கிடையாது என்று நம் நாட்டின் மானத்தை வாங்கினாரே அப்பொழுதே அவர் மேல் இருந்த மதிப்பு போய் விட்டது
ஒரு சிலர் வந்து சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று கூறுகிறார்கள் நான் கூட முஸ்லிம் நண்பர்கள் பிரச்சனை செய்த பொழுது நம் உரிமையை தடுக்க இவர்கள் யார் என்று கோப பட்டேன்.ஆனால் படம் பார்த்தவர்களின் விமர்சனத்தை கேட்க்கும் பொழுது கமல் அவர்கள் ஏன் இந்த வேலை என்றே தோன்றுகிறது ,நான் தாலிபான் நாட்டில் நடப்பதை தான் சொல்கிறேன் என்று அவர் என்ன தான் சமாதானம் சொன்னாலும் இல்லை நடப்பதை தான் கூறுகிறேன் என்று சொன்னாலும் ,அவர் கடும்ப வாழ்க்கை எவ்வளவு குழப்பமானது திருமணம் பற்றி அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருதும் அனைவருக்குமே தெரியும் அப்படி யாரவது உங்கள் வாழ்கையை படம் பிடிக்கிறேன் என்று சொல்லி எடுத்தால் அவருக்கு எவ்வளவு கோபம் வரும் ,உண்மையில் கமல் போன்ற கலைஞர்கள் மற்றவர்களின் மனதை புண் படுத்தாமால் படம் எடுக்க வேண்டும்.இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக மற்றவர்களை இவர் காய படுத்த கூடாது
வேண்டிக்கிறேன், உங்களுக்காக வேண்டிக்கிறேன். get well soon. it sucks man, i cant find any logical coordination in this article. totally pathetic review
தெளிவற்ற சிந்தனையால் எழுதப்பட்ட விமர்சனம். ஈரோட்டு கண்ணாடியை போட்டும் ஏன் தவறாக புரிந்து கொள்கிறீர்கள்
ராபின், மதிமாறனுக்கு கமல் என்றாலே வயித்தேரிச்சல். ஆனால் கமலை வைத்துதான் பொழப்பே.
தொடங்கியாச்சு போல வேலய. உங்களுக்கு, கமலின் படங்களோடு உடன்பாடு இல்லயா, இல்ல அவர் பார்ப்பனர்ங்கற வெறுப்பா. அமெரிக்க அடிவருடி, விருது வாங்க சார்பா நடக்குறாருனு, என்ன என்னவொ சொல்றாங்க. அன்பே சிவம் மாதிரி, அப்பட்டமான பொதுவுடமை சித்தாந்தைப் பறைசாற்றுகிற, முதலாளித்துவத்த ஒழிவு, மறைவு இல்லாம சாடுகிற படைப்பக் கொடுத்த கமலை எப்படி இன்னும் அமெரிக்க மண்ணில் அனுமதிச்சு விசா கொடுத்துட்டு இருக்கானுகங்றதே ஆச்சர்யமா இருக்க. ஆசுகாரு கனவு அப்பவே அடிபட்டு போச்சு. ஏன், அமெரிக்க ராணுவத்த காட்டணும், அப்புறம் இந்திய ராணுவமா ஆப்கன்ல சண்டைப் போட்டது, ஏன் இசுலாமியர்கள இழிவா காட்டணும், இல்லயே தலிபான்களோட நடவடிக்கைகள தான காட்டுறாரு. நானும், படம் பார்க்கல. இது, அதே படத்துல வர்ற ஒரு பாடல் வரி ‘ஒட்டகத்தின் முதுகில் சமவெளி கிடையாது, டாலர் உலகில் சமதர்மம் கிடையாது’ இது கவிபேரரசு எழுதி, கமல் பெரிதும் கொண்டாடி ஏற்று கொண்ட வரிகள். மேலதிக, கருத்துகள் திணிக்கப்பcட்ட தீவிரவாதத்திற்கு வக்காலத்து வாங்குவதாகவும், ஏகாதிபத்தியத்தை சாடுவதாகவும் இருக்கும். இருந்தும், இவர்களுக்கு இந்த படத்தின் மேல் என்ன குறை. எங்களின், புனித நூலை தலிபான் தன் மனித தன்மையற்ற செயல்களுக்கு சாட்சியாகப் பயன்படுத்துவதாக காட்டுகிறார். அதற்கு, நாம் தலிபானைத் தான் கண்டிக்க வேண்டும். உண்மையில், மதம் ஆணவ அரசியலின் முகமூடியாக ஒரு கலைஞனின் படைப்புரிமையை, தனிப்பட்ட காரணங்களுக்காக பறிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது சோகம். இப்படி ஒரு படம் வராவிட்டாலும், கமல் மேல் பெரிய அபிப்பராயம் இருக்க வாய்ப்பில்லை. தமிழக அரசின், காழ்ப்புணர்ச்சி போன்றது தான், இதுவும். கமலின் கெட்ட நேரத்தை இவர்களும் பயன்படுத்தி கொள்கிறார்கள். கமலை சாட இது ஒரு வழி, அவ்வளவு தான். உங்களுக்கும், எனக்குமான சமூக பங்களிப்பைக் காட்டிலும், அக்கறையை விடவும், கமலினது சிறப்பானது. மீண்டும், ஒரு முறை கமல் அதை ஆழ புலப்படுத்தவார், அன்று, எல்லா சமூகமும் அவரைப் புரிந்து கொள்ளும். அது, மிக எளிதாக நடக்கும், ஏனெனில், உங்களின் முகநூல் பக்கங்களைக் காட்டிலும், அவரின் படைப்புகளின் வீச்சு, தாக்கம் அதிகம். அன்று, எப்பொழுதும் போல அவரை எதிரிகளாகக்க கருதிக் கொண்டு இருக்கும் உங்களைப் போன்றவர்கள், தனிமைப் படுத்தப் படுவார்கள். தயாராய் இருங்கள். I mean comment poda oru payalum iruka maatan
Pon maheswaran
ஏன் பார்ப்பன பெண்ணுக்கு அவ்வளவு அறிவு இருக்க கூடாதா தோழரே …..ஃ//
அவ்வளவு அறிவு இருக்கிறது என்று கமல் சொல்லியிருக்கிறார்.. அதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
Neenga remba yosikiringa boss….
I agree Mr.Jeyabal k Pandian
nadunilayana ungal karutukku nanri mathi naran oru samuhathukkahavo ,oru mathathitkahawo poradupavan antha samuham sarnthavanukku thalivan athir samuhathitku kettavan
kevalamana pathivu ithu… Oru thalai patchamana vimarsanam.. ithileye therigirathu unmayil yar matha veriyargal endru.. en nanban wasim than intha padaththirku ticket eduththu kootti sendran.. engalukul entha vetrumayum thonavillai,, kaiyaal agathavargal eppothum thiraimaisaliyai vimarsippathu ithu ondrum puthithu illaye
மதிமாறன் கமலஹாசன் படத்தை பற்றி என்னத்தை சொல்வார் என்பது நன்றாக தெரிந்ததுதானே. ஒருவேளை இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தால் இசை மட்டும் அபாரம் என்று இதே மதிமாறன் சொல்லி இருப்பார்.என்ன செய்வது அவர் இஸ்லாமியர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிர்பந்தம். இப்படி எழுதாவிட்டால்தான் அவருக்கு பிரச்சினை. இந்த விமர்சனம் ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை. இவர இப்படித்தான் எழுதுவார் என்று பலர் எதிர்பார்த்ததுதான். இன்று மக்கள் எல்லோரும் இந்த இஸ்லாமியர்கள் ஏன் இதை எதிர்த்தார்கள் என்று வெளிப்படையாக கேட்கும் நிலையில் மதிமாறன் போன்ற இஸ்லாமிய ஜால்ராக்கள் கமலின் இந்த படத்தை ஒரேடியாக குறை சொல்வது ஒன்றும் புதிதில்லையே.
Latest:
தோழர் கமல் ஹாசன் அவர்கள் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை இன்று பார்த்தேன்.
படத்தில் முஸ்லிகளுக்கு எதிராக நேரடி காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரும்பாலும் இல்லை. கமல் அந்த நோக்கத்தில் படத்தை எடுத்த மாதிரியும் தெரியவில்லை.
ஆனால், தனி நபர் ஒருவர், நான் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை. ஆனால் சங் பரிவாரின் அதி தீவிர ஆதரவாளன் என சொல்வாரேயானால் , அவரது நிலைப்பாடுகளும், செயல்பாடுகளும் எப்படி முஸ்லிம்களை பாதிக்கும் வண்ணம் இயல்பாகவே அமையுமோ,
அப்படிப்பட்ட அமைதல் இப்படத்தின் மூலம் அமைந்து இருக்கிறது கமலுக்கு.
தொழுகை, குரான் ஓதுதல், அல்லாஹு அக்பர் என சொல்லுதல், பிரார்த்தித்தல்,அமெரிக்க எதிர்ப்பு மனோநிலை,பர்தா, பெண்கல்வி, போன்ற செயல்பாடுகளில் சர்வதேச முஸ்லிம்கள் சார்ந்த ஒரு வித எதிர்ப்பு மற்றும் தவறான மனை நிலையை இப்படம் நிச்சயம் உருவாக்கும். அதை விட முக்கியமானது தலிபான்கள் குறித்த நிலைப்பாட்டை, இப்படம் அமெரிக்க பின்னணியில் ஏற்படுத்தவும்,பரவலாக்கவும் செய்யும்.
முழுக்க முழுக்க அமெரிக்க பொய்களின் மீது மக்களின் நம்பகத்தன்மையை மூளை சலவை செய்து, முற்றிலும் அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கும் கொலைகளுக்கும் நியாயம் கற்பிக்கவோ , அல்லது அமெரிக்காவின் அத்துமீறல்களின் போது அமைதியாக வேடிக்கை பார்க்கும் மன நிலையையோ தான் இது போன்ற படங்கள ஏற்படுத்தும்.
ஒரு கேள்வி.?
தலிபான்கள் மழலாவை தாக்கினார்கள். பெண் கல்வியை தடை செய்கிறார்கள். அபின் பயிர் இடுகிறார்கள். பெண்களை நவ நாகரிகமாக இருக்க அனுமதிப்பதில்லை. இசையை தடுக்கிறார்கள். இன்னும் சில. ஆனால் இவை எல்லாம் சரியான தகவலா , அல்லது தவறான தகவலா என்பது நமக்கு உறுதியாக தெரியாது.
ஏனென்றால், அமெரிக்க ஊடகங்களின் பார்வையில் தான் இவை அனைத்தையும் உண்மை என்று நாம் நம்புகிறோம்.
இதே போன்று இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா சொன்ன பெரும் உண்மையை நம்பித்தான் அந்த நாட்டின் மீது இது நாள் வரை அமெரிக்கா நடத்தி வரும் படுகொலைகளை, சுரண்டல்களை நாம் அமைதியாக அங்கீகரிக்கிறோம். அல்லது வேடிக்கை பார்க்கிறோம்.
மேலே கண்ட தலிபான்கள் குறித்த தகவல்கள் மற்றும் கர்ப்பிதங்கள் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் , அதற்காக ஆப்கன் மற்றும் இராக்கில், அமெரிக்க ராணுவம் செய்யும் படுகொலைகளையும், அந்த நாட்டையே நிர்மூலமாக்கி, நித்தமும் பொழியும் குண்டு மலையையும், அவ்விரு நாடுகளில் நிலவும் அமைதி இன்மையையும், அந்த நாட்டு மக்களுக்கு சுதந்திர பரிசாக மரணத்தை அளிக்கும் அமெரிக்காவின் களவாணித்தனம் உண்மையில் சரியானது அல்லவே.?
விஸ்வரூபம் – தலிபான்கள் குறித்த அமெரிக்காவின் ஊடக பிரச்சாரத்தை இந்திய மக்களிடயே அழுத்தமாக புகுத்த செய்யும் மற்றுமொரு மாபெரும் முயற்சி.
கமலின் ஆஸ்கார் கனவு கூட இதன் மூலம் நனவாகலாம்.
முன்பே சொல்லியது போல,
தனி நபர் ஒருவர், நான் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை. ஆனால் சங் பரிவாரின் அதி தீவிர ஆதரவாளன் என்றால், அப்படிப்பட்ட நபரின் நிலைப்பாடுகளும், செயல்பாடுகளும் முஸ்லிம்களையும், சிறுபான்மையினரையும் பாதிக்கும் வண்ணம் எப்படி இயல்பாகவே அமையுமோ,
அப்படிப்பட்ட அமைதல் தான் இப்படத்தின் மூலம் அமைந்து இருக்கிறது கமலுக்கு.
வெளிப்படியான அமெரிக்க ஆதரவு பிரச்சாரம் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் தன்னிச்சையாகவே வெளிப்பட்டும், கற்பிக்கப்பட்டும் விடுகிறது இந்த படத்தின் மூலமாக.
வாய் கொண்டு பலமாக பூக்களின் மீது ஊதினால் காற்றில் நறுமணம் பரவும். அதே வாய் கொண்டு பலமாக மிளகாய் பொடியின் மீது ஊதினால் காற்றில் என்ன பரவும்.?
உலகம் முழுதும் தனது அடக்கு முறைகள் மூலமாக எதிரிகளை சம்பாதித்து வருகிற அமெரிக்க அரசு, தன்னை எதிர்க்கும் அனைவருக்கு எதிராகவும் மற்ற ஆயுந்தகளை பிரயோகிப்பது போலவே, ஊடகம் மூலமாக எதிர்மறை பிரச்சாரத்தை நிகழ்த்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
தெரிந்தோ தெரியாமலோ கமல் தனது விஸ்வரூபம் படத்தின் மூலம் அமெரிக்காவின் கொள்கைப்பரப்பு செயலாளராக அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் இறுதியில் விஸ்வரூபம் படத்தின் வில்லன் ஓமர் இந்தியா நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்வதாக காட்சி அமைத்துள்ளார். ஆப்கான்,இராக், பாகிஸ்தான் போன்ற நாடுகள் மீது அந்த மாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்காக வேண்டி அமெரிக்கா இராணுவம் தினமும் பொழிந்து வருகிற குண்டுகளும், விமான தாக்குதல்களும் நமக்கும் ஏற்பட வேண்டாம்.
அமெரிக்கா அது போன்றதொரு மயான அமைதியை இந்திய நாட்டு மக்களுக்கும் வழங்கும் நிலை உருவாகும் முன் தேசத்தை காப்போமாக. ஜெய் ஹிந்த்.
ஒரு அரசாங்கத்தின் அராஜகத்தை வைத்து மக்களை எடைபோடுவது போன்ற தவறு எதுவும் இல்லை என்பது என் எண்ணம்.
நீங்கள் கமல் மீது சுமத்தும் அத்தனை குற்றசாட்டுகளும் உங்களுக்கும் பொருந்துகிறது. அமெரிக்கா மீதான கோபம் உங்கள் சிந்தனைக்கு திரை போடுவதாக தெரிகிறது.
neeyellam yen porantha ?
கஆழ்ப்புனர்ச்சியான பதிவு.வேதிமரரனின் அரசியல் காரணம்.
தோழர் கமல் ஹாசன் அவர்கள் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை இன்று பார்த்தேன்.
படம் வெளிவரும் முன் நடைபெற்ற பெரும்பாலான தொலைகாட்சி விவாதங்களின் போது பல்வேறு நண்பர்கள் சொன்னது போலவே ,படத்தில் முஸ்லிகளுக்கு எதிராக நேரடி காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரும்பாலும் இல்லை. கமல் அந்த நோக்கத்தில் படத்தை எடுத்த மாதிரியும் தெரியவில்லை.
ஆனால், தனி நபர் ஒருவர், நான் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை. ஆனால் சங் பரிவாரின் அதி தீவிர ஆதரவாளன் என சொல்வாரேயானால் , அவரது நிலைப்பாடுகளும், செயல்பாடுகளும் எப்படி முஸ்லிம்களை பாதிக்கும் வண்ணம் இயல்பாகவே அமையுமோ,
அப்படிப்பட்ட அமைதல் இப்படத்தின் மூலம் அமைந்து இருக்கிறது கமலுக்கு.
கமல் இப்படத்தில் எடுத்துள்ள அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு, அமெரிக்கா செய்யும் அனைத்து ஆக்கிரமிப்பு போர்களையும், கொலைகளையும் நியாயப்படுத்தும் பின்னணிக்கு உலகநாயகன் கமலை இட்டு சென்று இருக்கிறது.
இது தவறுதலாக நிகழ்ந்த நிகழ்வா? அல்லது கமலின் கட்டாய சூழ்நிலையா.? அல்லது ஆஸ்கார் கனவிற்கான தூண்டிலா.? அல்லது வேறு என்ன.? ஏன் இப்படி நிகழ்ந்தது என்பது கமலுக்கும் மக்களுக்குமே வெளிச்சம்.
இப்படத்தின் மூலம்,
முஸ்லிம்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றும் தொழுகை, குரான் ஓதுதல், அல்லாஹு அக்பர் என சொல்லுதல், பிரார்த்தித்தல்,அமெரிக்க எதிர்ப்பு மனோநிலை,பர்தா, கல்வி, போன்ற செயல்பாடுகளில் சர்வதேச முஸ்லிம்கள் சார்ந்த ஒரு வித எதிர்ப்பு மற்றும் தவறான மனை நிலையை இப்படம் நிச்சயம் உருவாக்கும். அதை விட முக்கியமானது தலிபான்கள் குறித்த நிலைப்பாட்டை, இப்படம் அமெரிக்க பின்னணியில் மக்களிடயே ஏற்படுத்தவும்,பரவலாக்கவும் செய்யும்.
கமல் இப்படத்தை உலகத் தரத்தில் எடுத்துள்ளார் என்பதிலோ, நன்றாக நடித்துள்ளார் என்பதிலோ மாற்றுக் கருத்தும் எதுவும் எமக்கும் இல்லை.
ஆனால், முழுக்க முழுக்க அமெரிக்க பொய்களின் மீது எழுப்பப்பட்டுள்ள கோட்டையாக திகழ்கிறது இப்படம்.
மக்களின் நம்பகத்தன்மையை மூளை சலவை செய்து, அதன் மூலம் அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கும் கொலைகளுக்கும் முற்றிலும் நியாயம் கற்பிக்கவோ , அல்லது அமெரிக்காவின் அத்துமீறல்களின் போது அமைதியாக வேடிக்கை பார்க்கும் மன நிலையையோ தான் இது போன்ற படங்கள் ஏற்படுத்தும்.
ஒரு கேள்வி.?
தலிபான்கள் மழலாவை தாக்கினார்கள். பெண் கல்வியை தடை செய்கிறார்கள். அபின் பயிர் இடுகிறார்கள். பெண்களை நவ நாகரிகமாக இருக்க அனுமதிப்பதில்லை. இசையை தடுக்கிறார்கள். இன்னும் இன்னும் சில.
ஆனால் இவை எல்லாம் சரியான தகவலா , அல்லது தவறான தகவலா என்பது நமக்கு உறுதியாக தெரியாது.
ஏனென்றால், அமெரிக்க ஊடகங்களின் பார்வையில் தான் இவை அனைத்தையும் உண்மை என்று நாம் நம்புகிறோம்.
இதே போன்று தான், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா சொன்ன பெரும் உண்மையை(..!) நம்பித்தான் அந்த நாட்டின் மீது இது நாள் வரை அமெரிக்கா நடத்தி வரும் படுகொலைகளை, சுரண்டல்களை நாம் அமைதியாக அங்கீகரிக்கிறோம். அல்லது வேடிக்கை பார்க்கிறோம்.
ஒருவேளை மேலே கண்ட தலிபான்கள் குறித்த தகவல்கள் மற்றும் கர்ப்பிதங்கள் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் , அதற்காக ஆப்கன் மற்றும் இராக்கில், அமெரிக்க ராணுவம் செய்யும் படுகொலைகளையும், அந்த நாட்டையே நிர்மூலமாக்கி, நித்தமும் பொழியும் குண்டு மழையையும்,
அவ்விரு நாடுகளில் அமெரிக்க கூட்டுப்படை ஏற்படுத்தியுள்ள அமைதி இன்மையையும், மரண ஓலத்தையும், அந்த நாட்டு மக்களுக்கு சுதந்திர பரிசாக அளிக்கும் அமெரிக்காவின் களவாணித்தனம் உண்மையில் சரியானது அல்லவே.?
தலிபான்கள் ஏன் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள் என்று நம் உள்ளத்தின் ஒரு மூலையில் எழும் கேள்விக்கு இப்படத்தில்
ஒரு சிறு பதிலும் இல்லையே.?
விஸ்வரூபம் – தலிபான்கள் குறித்த அமெரிக்காவின் ஊடக பிரச்சாரத்தை இந்திய மக்களிடயே அழுத்தமாக புகுத்த செய்யும் மற்றுமொரு மாபெரும் முயற்சி.
கமலின் ஆஸ்கார் கனவு கூட இதன் மூலம் நனவாகலாம்.
தலிபான்களுக்கும் அவர் தம் செயல்களுக்கும் நாம் வக்காலாத்து வாங்க தயாராக இல்லை. அது தேவையும் இல்லை. ஆனால் ஒரு பாவமும் செய்யாத கோடிக்கணக்கான மக்கள், குழந்தைகள் செய்த பாவம் என்ன.? அவர்கள் ஏன் நித்தமும் விமானத்தாக்குதலின் அச்சத்திலும், துப்பாக்கி சூட்டை எதிர் நோக்கிய பயத்திலும் நாட்களை கழிக்க நேர்கிறது.
அமெரிக்க இராணுவம் செய்வது சுதந்திரத்திற்கான போரா.? அல்லது வளங்களை சுரண்ட நடத்தும் அத்து மீறல்களா.?
நமக்கு சிறிதேனும் கருணை இருந்தால் , நாம் கொஞ்சமேனும் யோசிக்க வேண்டும் அல்லவா .?
முன்பே சொல்லியது போல,
தனி நபர் ஒருவர், நான் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை. ஆனால் சங் பரிவாரின் அதி தீவிர ஆதரவாளன் என்றால், அப்படிப்பட்ட நபரின் நிலைப்பாடுகளும், செயல்பாடுகளும் முஸ்லிம்களையும், சிறுபான்மையினரையும் பாதிக்கும் வண்ணம், எப்படி இயல்பாகவே அமையுமோ,
அப்படிப்பட்ட அமைதல் தான் இப்படத்தின் மூலம் அமைந்து இருக்கிறது கமலுக்கு.
கமல் இப்படத்தில் எடுத்துள்ள அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு, அமெரிக்கா செய்யும் அனைத்து ஆக்கிரமிப்பு போர்களையும், கொலைகளையும் நியாயப்படுத்தும் பின்னணிக்கு உலகநாயகன் கமலை இட்டு சென்று இருக்கிறது.
இது தவறுதலாக நிகழ்ந்த நிகழ்வா? அல்லது கமலின் கட்டாய சூழ்நிலையா.? அல்லது ஆஸ்கார் கனவிற்கான தூண்டிலா.? அல்லது வேறு என்ன.? ஏன் இப்படி நிகழ்ந்தது என்பது கமலுக்கும் மக்களுக்குமே வெளிச்சம்.
வெளிப்படியான அமெரிக்க ஆதரவு பிரச்சாரம் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் தன்னிச்சையாகவே வெளிப்பட்டும், கற்பிக்கப்பட்டும் விடுகிறது இந்த படத்தின் மூலமாக.
வாய் கொண்டு பலமாக பூக்களின் மீது ஊதினால் காற்றில் நறுமணம் பரவும். அதே வாய் கொண்டு பலமாக மிளகாய் பொடியின் மீது ஊதினால் காற்றில் என்ன பரவும்.? மக்களின் கண்களில் எரிச்சல் பரவும். சுவாசத்தில் கார நெடி பரவும்.
கமல் இப்படத்தின் மூலம் அமெரிக்காவின் அடுத்த கட்ட இந்திய நடவடிக்கைக்கு உதவும் வண்ணம் கருத்துருவாக்கத்தை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்க முனைகிறார்.
தெரிந்தோ தெரியாமலோ கமல் தனது விஸ்வரூபம் படத்தின் மூலம் அமெரிக்காவின் கொள்கைப்பரப்பு செயலாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
உலகம் முழுதும் தனது அடக்கு முறைகள் மூலமாக எதிரிகளை சம்பாதித்து வருகிற அமெரிக்க அரசு, தன்னிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் தன்னை எதிர்க்கும் அனைவருக்கு எதிராகவும் பிரயோகிக்கிறது.
சினிமா போன்ற ஊடகம் மூலமாகவும் தனது எதிர்மறை பிரச்சாரத்தை அது காலங்காலமாக நிகழ்த்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
நீங்க நல்லவரா.? கெட்டவாரா.? என்ற நாயகன் படத்தின் க்ளைமாக்ஸ் கேள்வியில், தெரியலையேப்பா என அழும் குரலில், அப்பாவியாய் பதில் சொன்ன கமல்,
இப்படத்தில் நீங்க நல்லவரா.? கெட்டவாரா.? என்ற அதே கேள்விக்கு ,நான் ஹீரோவும் தான் – நான் வில்லனும் தான் என தெளிவாக பதில் சொல்கிறார்.
குழம்பிப்போகப் போவதேன்னவோ நாடும் நாட்டு மக்களுமே.!
இறுதியாக,
விஸ்வரூபம் படத்தின் இறுதியில், சாவகாசமாக அமெரிக்காவில் சுற்றும் விஸ்வரூபம் படத்தின் வில்லன் ஓமர், இந்தியா நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்வதாக காட்சி அமைத்துள்ளார்.
மக்களே உஷார்.!ஆப்கான்,இராக், பாகிஸ்தான் போன்ற நாடுகள் மீது அந்த நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்காக வேண்டி அமெரிக்கா இராணுவம் தினமும் பொழிந்து வருகிற குண்டுகளும், விமான தாக்குதல்களும் நமக்கும் ஏற்பட வேண்டாம். அப்படிப்பட்ட மயனா அமைதி நமக்கும் ஏற்பட வேண்டாம்.
அமெரிக்கா அது போன்றதொரு மயான அமைதியை, ஏதேதோ காரணங்களை கற்ப்பித்து, தனது, சதிக்கான வலையை இங்கும் பரப்பும் முன், தேசத்தையும், நாட்டு மக்களையும், காப்போமாக. ஜெய் ஹிந்த்.
Brother vishvaroopam padatthai neengal mulslimgalin mananilayil irundhu paarkkavendum.Kamal hasan sambaadhitthu panatthai naattukko,makkalukko kodukkappovadhillai.Thanukku oru problem yendravudan nattai vittu veliye selven yengirar. Appadi irukkumbodhu oru thani manidhanin varumaanatthirkkaaga kamal ivvalavu muyarchi yedukkumbodhu oru periya samoogam thanakku varappogum avappeyarai thaduppadharkku poraattam nadatthuvadhil thappillai.
So sad.. 1+1=2.. No NO. how it can be 1 and 1 is closer.. so it is 11. he he he..
ha haa.. some ppl even reply favourable for this review too. so sad…
//படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள் கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே..//
அமெரிக்காவில நடக்கிற கதையில இந்தியன் காரா ஓட முடியும்??
உங்களுக்கு ஒரு சிறிய அறிவுரை. அடுத்தமுறை கமல் படம் பார்த்து உங்கள் பொன்னான நேரம் மற்றும் காசையும் விரயப்படுத்த வேண்டாம். நேரம் என்று கூறும் போது விமர்சனம் எழுதும் நேரம், படம் பார்க்கும் நேரம், மற்றும் பிறர் விமர்சனம் வாசிக்கும் நேரம் எல்லாவர்றையும் மிச்ச படுத்த முடியும்.
எதிர் விமர்சனம் வரவேற்கத்தக்க விடயம். ஆனால் காழ்ப்புணர்ச்சி வரவேற்கததக்கதது அல்ல. தயவு செய்து நீங்கள் உங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.
Check this video for USA’s Psywar. How they use media to manipulate the world and their own citizens.
http://youtu.be/a0s1YBqgIdg
கமல் ஹாசனை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு. விஷ்வரூபம் படதுல ஒவ்வொரு வரியும் பாடல்களையும் நல்லா கேளு அப்ப புரியும் என்ன சொல்லிருக்கார்னு. நீ எதோ பெரிய பகுதறிவுவாதி மாதிரி எழுதிர்க்க. உன்னமாதிரி ஆட்கள் இருக்கருதுனாலதான் இந்த மதச் சண்டை வருது.
annan ithu kamalin oskar assaiyum jaathi veriyaayum kaattum appattamaana oru padam
கமல் மீது வெறுப்பில் எழுதப்பட்டதாகத்தான் இருக்கிறது. ஒரு சாதரண படத்தை சொறிந்து விட்டு ரணம்மாக்கி கொண்டீர்கள். உங்களுக்கு புண் தான் மிச்சம்.
கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை
//அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்./// very true
ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’;
அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை
தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்
அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்
நன்றி ஐயா – உண்மையை உரைக்க சொல்வோம்
hey yesterday i watch viswaroopam in varadharaja theatre super flim ,kamal sir take wonderful dnt tell anything against him….
அன்புள்ள மதிமாறன்,
உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன். உங்களின் எதையும் விமர்சனத்தோடு அணுகும் உங்களின் பார்வை எனக்கும் உடன்பாடுடையதே!
பாரதி! என்னுடைய ஆதர்சங்களில் தலைமையானவர். அவரை அவரின் கவிதை வரிகளின் மூலமே நீங்கள் தோலுரித்து அவரும் ஒரு இந்துத்துவவாதி தான் என்று நிரூபித்த போது தான் தோன்றியது; சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் என்று. காந்தியையும் நீங்கள் கடுமையாக விமர்சித்த போது, யார்மீதும் புனிதப் போர்வை போர்த்த வேண்டியதில்லை என்று புளகாங்கித மடைந்தேன்.
எல்லாம் சரி தான்; இப்போதைய உங்களின் விஸ்பரூபம் விமர்சனம் உட்பட.
ஆனால் ஒரு திரைப்படத்தை வெளியிடவே கூடாது என்று தடை பண்ணுவதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள் என்று தான் புரியவில்லை.
நான் கமலின் விசுவாசியோ ரசிகனோ இல்லை. என்னைப் பொறுத்த மட்டிலும் அவர் ஒரு தேர்ந்த வியாபாரி; அவ்வளவு தான். ஆனாலும் அவரின் வெளியீட்டை எப்படித் தடை பண்ண முடியும்?
எனக்கும் முஸ்லீம் சமூகத்தினரை ரொம்பவும் பிடிக்கும்; அவர்களின் மீது எப்போதும் எனக்கொரு soft corner உண்டு. ஆனாலும் அவர்கள் விஸ்பரூபம் விஷயத்தில் நடந்து கொண்டது மிகவும் சிறுபிள்ளைத் தனமானது. அந்தத் திரைப்படம் முஸ்லீம்களைக் கொச்சைப் படுத்துவதாக உணர்ந்தால் அதைப் புறக்கணியுங்கள்! இந்திய சென்சார் போர்டுடன் ஏன் இப்படிப்பட்ட சினிமாக்களை அனுமதிக்கிறீர்கள் என்று சண்டை போடுங்கள்; போராடுங்கள். அதை விடுத்து அந்தத் திரைப்படத்தை ஏன் தடை பண்ண வேண்டுமென்றும் இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் மிரட்ட வேண்டும்?
அதனால் என்னாயிற்று! மிகச் சாதாரணமாகக் கடந்து போக வேண்டிய சினிமாவை பிரபலப் படுத்தி, என்னதான் எடுத்திருக்கிறார்கள் என்று எல்லோரையும் பார்க்க வைத்து விட்டார்கள்; அவ்வளவு தான்.
மதிமாறனுக்கு நான் சொல்லிக் கொள்வது சிறுபான்மையினர் என்பதற்காக அவர்களைச் செல்லங் கொஞ்சிக் கொண்டிருக்க முடியாது. முஸ்லீம்களின் மனம் புண்படுகிறது என்பதற்காக விஸ்பரூபம் திரைப்படத்தைத் தடை பண்ணுவதை நீங்கள் நியாயப் படுத்தினால், நாளைக்கே அது நமக்கே எதிராகவும் திரும்பலாம். இந்துத்துவ வாதிகள் எல்லாம் வே.மதிமாறனின் கட்டுரைகளும் பதிவுகளும் தங்களின் மனதைப் புண்படுத்துவதாக புகார் கொடுத்து உங்களின் புத்தகங்களையும் இந்தப் பதிவு வெளியையும் தடை பண்ணினால் என்ன செய்வது?
மதங்கள் எல்லாமே மனித குல விரோதிகள் தான்; அதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என்கிற பாகுபாடுகள் ஏதுமில்லை; அதனால் அவற்றை விமர்சிக்கக் கூடாது என்பதை ஒருபோதும் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
/// drogba
அமெரிக்காவில நடக்கிற கதையில இந்தியன் காரா ஓட முடியும்?? ///
அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் ஜப்பான் நாட்டுக்கார்களைத்தான் வாங்குகிறார்கள் என்று அமெரிக்கவாழ் தமிழர் நண்பர் நவினும் அதை சொல்லியிருக்கிறார்.
அண்ணே படம் பார்க்க ஒரு இஸ்லாமிய நண்பர் கூடவா கிடைக்கவில்லையா ?
அமெரிக்க வாழ் நவீன் தான் அமெரிக்க வாழ் இந்தியர்களின் கார்கள் எந்த வகையானது என கணக்கு வைத்திருக்கிறார் என நினைக்கிறேன்.
அய்ரோப்பாவில் இல்லாது முஸ்லிம் விரோதமா அமெரிக்காவில்? அண்ணன் அய்ரோப்பிய வானொலி அய்ரோப்பிய சுற்றுலா எல்லாம் மேற்கொண்டது இந்த இஸ்லாமிய விரோதத்தை ‘புரிந்து கொள்ள வா?’..
இந்த ரம்ப விமர்சனத்தை படித்தவர்களிடம் பேசும் பொழுது சோப்ராஜ் போன்றவர்கள் சுய அறிவை அடகு வைத்துவிட்டு அண்ணின் ரசிகர்களாக மாறியிருக்கிறார் எனத் தெரிந்தது.
வழக்கமாக தனக்கு ஆதரவான கருத்தை மட்டும் வெளியிடும் பெரியாரிய அம்பேத்கரிய லெனிய ஸ்டாலினிய பார்வையை விஸ்வரூப விமர்சனத்துக்கு மட்டும் விலக்கியிருப்பது பிராமண சங்கத் தலைவரின் எதிர்ப்பை விட வியப்பாக இருக்கிறது. கமலின் திட்டமோ இது ?
The film is a class. Critics here stating that the film is’nt good are nothing less than jokers, who are trying to glorify themselves. You know who you are. Thanks.
Reviewer kirukano? is he mental??? I came here to read movie review………… samantham illama ethayo pesuran. Enna samuthaya akkaria???? Mayiru unmaiyelaye poradanumna Govt kitta poi poradu?? oru actor kitta poradna avaru enna CM ah?? dont treact actors like leaders or their art as preaching coz o that ur thainadu tamil ruled by only ilm poessionals…………
ஒரு சினிமா எத்தனையோ நோக்கங்களுக்காக தயாரிக்கப்படுகிறது. பணம்பண்ணுவதற்காக, பிரச்சாரத்திற்காக, கலைப்படைப்பாக, பொழுதுபோக்கிற்காக மேலும் இதில் கூறமுடியாத காரணங்களுக்கெல்லாமாக தயாரிக்கிறார்கள். ஒரு நுகர்வோனாக, எனது தராதரத்திற்கு, ரசனைக்கு (அது ஆபாசப் படமானலும் கூட) ஏற்றபடி அதை நான் பார்க்கிறேன், அனுபவிக்கிறேன். அது கலைவடிவமா, அமெரிக்கசார்பா, பிராமண, முஸ்லீம் ஆதரவா/எதிப்பா என்பதெல்லாம் எமது சொந்த அறிவுசார் தீர்மானமே யன்றி எந்த சித்தாந்தத்திற்க்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. சினிமாவே ஆபாசம், சங்கீதம் / நடனம் தேவையில்லை என்னும் மதவாதிகளும், சினிமா கோடிகள் புரளும் வியாபாரம் ஆனபடியால் அதை எதிர்கவே வேணும் என்னும் சித்தாந்த வாதிகளும் எனக்கு அறிவூட்டவேண்டியதில்லை. அவர்களுக்கு உடன்பாடில்லா விட்டால் அவர்கள் பார்க்காமல் விடட்டும்.
இந்தபடத்தில் கமல் என்ற அற்புதமான கலைஞனை நான் பார்க்கிறேன். அதில் காணப்படும் பிரச்சாரத்தை சில அபத்தங்களை, நம்பமுடியாத காட்சிகளை ஒதுக்கிவிடும் முதிர்ச்சி என்னைப்போல் பலருக்கும் உண்டு. அப்படியில்லாவிட்டால் 90% மான ஆங்கிலப்படங்களையே பார்க்கமுடியாதே.
இணைய நண்பர்கள் அனைவருக்கு அன்பின் வணக்கத்தோடு…
விசுவரூபம் திரைப்படத்தின் மீது நண்பர் மதிமாறனின் விமர்சனத்தில் ஒரு பக்கச் சார்பான நிலை இருப்பதாகத் தெரியவில்லை! மீண்டும் மீண்டும் மனதில் இருத்த வேண்டிய பல விடயங்களை இதன்மூலம் நம்முடன் பகிர்ந்து கொண்ட மதிமாறன் அவர்களுக்கு நன்றிகள் பல!
கமல் இயற்கையிலேயே தன் இனப் பாசம் உள்ளவர் என்பது பரவலாகத் தெரிந்த ஒன்றுதான். தன்னுடைய இனப்பாசம் காரணமாகவே, பார்ப்பனர்கள் பெரிதும் பூரித்துப் புளங்காகிதம் அடையும் அமெரிக்க ஈர்ப்பு கமலுக்கும் இருப்பது இயற்கையானதுதான்!
தெளிவான நிலைக்கு வராத ஒரு அரைகுறை நாத்திகராக வேறு இருக்கிறார், இப்படிப்பட்டவர் சொல்கின்ற கருத்துகளை, இசுலாமியர்களைத் தவிர மற்றவர்கள் அதை ஒரு திரைப்படமாக மட்டுமே பார்ப்பார்கள், அது அவர்களிடம் எந்த வினையையும் ஏற்படுத்துவதில்லை என்ற நண்பர்களின் கருத்து ரொம்பவும் பலவீனமான ஒன்றே!
தலிபான்களின் வெறித்தனத்தைப் படமாக்கியவர், தலிபான்களை ஊட்டி வளர்த்தவர்களைப் பற்றியும் சொல்லியிருந்தால் அது நடுநிலமை! அப்படியில்லாமல் தலிபான்களின் அமெரிக்க எதிர்வினையை மட்டும் நம்மிடம் சொல்ல வேண்டிய தேவை எதனால் கமலுக்கு ஏற்பட்டது? தன்னுடைய அமெரிக்க விசுவாசத்தை பகிரங்கமாக சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே…? ஏன் தலிபான்களை அதற்கு முட்டுக் கொடுக்க நினைக்கிறார்? தலிபான்களே இவ்வளவு மோசமானவர்களென்றால்… தலிபான்களை தயாரித்து வழங்கிய அமெரிக்கா எவ்வளவு பயங்கரமானது என்பதை ஒரு வரியாவது சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? கமலின் நேர்மை இந்த ஒன்றிலேயே வெளுக்க வில்லையா?
தடை செய்தது தவறு என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஒரு தகவலை மேற்கோள் காட்டுகிறேன்,
சென்ற ஆண்டு ‘அணை 999’ (டேம்999) என்ற ஒரு திரைப்படம் மலையாளிகளால் வெளிக்கொணர்ந்த செய்தி தெரியுமா? ஏன்.. தமிழ் நாட்டில், அரசால் அது தடை செய்யப்பட்டது? அதன் காரணம் அப்போது எல்லோராலும் ஏற்கப்பட்டதே! ஏன் மக்களே அதைப் புறக்கணிக்கட்டும் என்று வெளியிட வேண்டியதுதானே? நம் மக்கள் இன்னும் திரைப்படத்தை திரைப்படமாகப் பார்க்கும் ஒரு பக்குவமான மனநிலைக்கு வரவில்லை. தொன்னூறு விழுக்காட்டுக்கு மேல் பக்குவமற்றவர்களே! நம் மக்களின் மனப்பக்குவமில்லாததன் காரணமே நம்முள் சாதி வேற்றுமைகளும், கற்பனையான இத்தனை கோடி மடக்கடவுள்களூம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது! இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் தடைக்கான காரணத்தில் ஒரு ஆறு வேறுபாடாவது (வித்தியாசம்) காணவியலுமா? ஏன் நண்பர்கள் சிந்திக்க வில்லை?
நாங்கள் இந்த விடயத்தில் இசுலாமிய மக்களின் அறமான (நியாயமான) மன வருத்தத்தைப் புரிந்து கொண்டுள்ளோம். அவர்களின் கோபம் அறத்தின்பாற் பட்டதே! அதற்காக, இசுலாமியர் என்பதற்காக அவர்களின் எல்லா செயல்களையும் நாங்கள் ஆதரிப்பதில்லை! இசுலாமியர் வணங்குகிறார்கள் என்பதற்காகவே இறைவன் (அல்லா) என்ற கருத்து உண்மையாகி விடாது! மற்ற கடவுள்களைப் போலவே, அல்லாவும் கற்பனையான ஒன்றுதான்! இதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது! அவர்களின் மதவெறி என்று வரும்போது கண்டிப்பாக எங்களிடமிருந்து விமர்சனம் எழவே செய்யும்! அந்த விமர்சனம் அடிப்பவனை விட அடி படுபவனிடம் சற்று மென்மையாகவே எழும்! என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன். என்றும் நட்புடன் காசிமேடுமன்னாரு.
படத்தை படமாக பார்க்க ரசிக்க இயலாதவர்கள் இந்த மாதிரி விமர்சனம் எழுதுவதே தவறு,,,,
As you said.. it may be a film favouring americans against talibans.. So simple.. No muslims no hindus no tamilians.. he have 100 crores. he made a film. If you like it enjoy… else leave it.. “unavuku kashtapadra hindu vum muslim m america va pathi kavala pada porathe illa”..For them.. it is just entertainment and i believe it serves the purpose.. So many films shows politicians are bad.. no one worries.. Likewise doctor, police and even students are shown as bad in films,, no one bothers.. so Muslims too can keep their head cool.. A Movie is a Movie nothing more…
Chellam.. Inga etho Vishwaroopam vimarsanamnu potrunthangale athu enga pa. Inthaalu avaru sontha kadhai (nontha kadhai) than sollirukkaru. Perukkum irukka matterkum sammanthame illama irukke.. Ithukku likes Vera…
When you watch the film you have the criticize how good\bad the film has made, not criticize “what” is made.
Most of the films they show “killing” people, because of it can you can’t say ” I don’t like these movies? ”
There is no US-biased scenes in this film. If Kamal takes film on “communism” its sweet, if he takes “capitalism” its sour!!. Who are we to decide on what kind of movie an artist has to make, it is his choice and so commenting is also your choice !, but comment on the “style and not the substance”.
For all who hate USA, USA, USA.. please read their history. They went on war with fellow-citizens to abolish slavery. Flaws are there any system, noting is perfect. Try to appreciate the goodness in everything.
Ravi
http://www.filmbulb.blogspot.com
http://www.teashoptalks.blogspot.com
AMERICA IS SUCH A DREADFUL COUNTRY! WHY PAKISTANIS ARE BEGGING FOR AMERICAN VISA? DO YOU KNOW HOW MANY PAKISTANIS ARE LIVING IN AMERICA? WHEN LOTTERY FOR AMERICAN VISA WAS INTRODUCED, THERE WAS A MAD RUSH FROM PAKISTANIS. OWAIZI ALSO WAS WELCOMED BY A GROUP OF PEOPLE( WITH THEIR OWN FLAG!) THERE. WHAT THEY ARE DOING THERE? MYSTERIOUS!!
MOREOVER, IF SOME PEOPLE THINK THAT INDIAN CONSTITUTION, JUDICIARY SYSTEM, PARLIMENTARY DEMOCRACY ARE NOT AT ALL GOOD, THEY CAN CALL TALIBANS TO CAPTURE ATLEAST TAMIL NADU AND IMPLEMENT TALIBAN RULE.
THERE WAS PRECEDENTS FOR THAT DURING BABUR PERIOD AND KILAFAT MOVEMENT TO CALL LEADERS FROM AFGANISTAN.
GOOD LUCK!
எல்லாரும் நிர்வாணமா இருக்குற ஊர்ல நாம மட்டும் கோவணம் கட்டினா தப்பு ஆயிடுமோ !
இது தான் நிலைமை .. படம் பார்த்த நான் எங்கே படம் சுத்த மோசம் நு சொன்ன இந்த புரட்சியாளர்கள் எல்லாம் என்னை மக்குன்னு நினைசிடுவான்களோ அப்புடின்னு சும்மா இருக்கேன் !
ஒரு பலமிக்க மனிதன் ஒரு ஐந்து வயது சிறுவனை காட்டி இவன் என்னை அடிக்கிறான் எங்களை கொல்ல பார்கிறான் என்று கூச்சலி ட்டுக்கொண்டே அந்த சிறுவனை நாயடி பேயடி அடிக்கிறான். இப்படித்தான் உலகத்தில் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.அசுர பலம் பொருந்திய அமெரிக்க மற்றும் அதன் அடிவருடி நாடுகள் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மறைத்து தங்களின் பலம் வாய்ந்த மீடியாக்களால் அவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி அவர்களை உலகத்தின் விரோதியாக சித்தரிக்கின்றன. இஸ்ரேலை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் போராடினால் அவன் இஸ்லாமிய தீவிரவாதி. ஆக்கிரமிப்பு ரசியர்களை எதிர்த்து போராடினால் அவனும் இஸ்லாமிய பயங்கரவாதி . காஷ்மீரிகள் அவர்களின் நியாத்திற்கு போராடினால் அவனும் இஸ்லாமிய பயங்கரவாதி.அந்த பகுதி பிரச்சனைகளை நியாய அணியாயங்களைகொண்டு பார்பதில்லை. அவன் எதிர்ப்பை காட்ட ஒரு குண்டு வெடித்தால் அவன் நாட்டில் கூட்டமாக சேர்ந்து கொத்து கொத்தாக குண்டுகளை வீசுகிறார்கள் .அவன் பத்து பேரை கொன்றால் இவர்கள் ஆயிரம் பேரை கொல்கிறார்கள் . இஸ்லாமிய நாடுகளின் கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இராக்கில் அணுகுண்டுகள் இருக்கென்று கூறி (பண்ணிகளை போன்று) கூட்டமாக அந்நாட்டை தாக்கி
2 லட்சம் மக்களை கொன்று குவித்து ஒரு இரும்பு குண்டை கூட எடுக்காமல் திரும்பியவர்களை எவனாவது கண்டித்தானா ? எவனாவது அதை படம் எடுத்தானா ? ஆனால் இங்கே அடிவாங்கி பரிதாபநிலையில் இருப்பவன் தான் வில்லன்.அநீதி இழைக்கப்பட்டவன் தான் அயோக்கியன்.அநீதி இழைத்தவன் தான் கதாநாயகன் இப்படித்தான் படம் எடுக்கிறார்கள். இது எப்படி முடிகிறது? அவர்களின் பலமான ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்படும் பிரசாரத்தினால் தான். தொலைக்காட்சி, பத்திரிகை, ஹாலிவுட் திரைப்படங்கள், இணையதளங்கள் என்று தொடர்ந்து செய்யப்படும் பிரசாரமே. இங்கு ஊடகத்தால் நியாயங்கள் புதைக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதேதான் நடக்கிறது. 5 வருடங்கள் முன்புவரை இந்தியாவில் குண்டு வைப்பவர்கள் இஸ்லாமியர்கள் தான் என்று இஸ்லாமியர்களே நம்பினார்கள். இன்று அநேக குண்டு வெடிப்புகள் காவிக்கூட்டத்தின் நயவஞ்சகத்தால் நடத்தப்பட்டிருக்கும் உண்மை வெளிவந்துவிட்டது. எந்த அமைப்பாவது கண்டித்தார்களா? அதை யாராவது படம் எடுத்தார்களா ?அந்த நியாயத்தை பற்றி எல்லாம் கண்டுக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளிருக்கும் மத வெறி. ஆனால் காட்டப்படுவது பாதிக்கப்பட்டவன் தான் மத வெறி பிடித்தவன் என்று. இன்று அப்படித்தான் விஸ்வரூப படப்பிரச்சனையில் மீடியாக்களில் முஸ்லீம்கள் சித்தரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
எதிர் விமர்சனம் வரவேற்கத்தக்க விடயம். ஆனால் காழ்ப்புணர்ச்சி வரவேற்கததக்கதது அல்ல. தயவு செய்து நீங்கள் உங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.
// ‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம். //
படம் பார்பதற்கு முன்பே இப்படி நினைத்துக்கொண்டு சென்ற உங்களிடம் இருந்து எப்படி நடுநிலையான விமர்சனம் வரும்?
//படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள் கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே//
அமெரிக்காவில் இருந்து கொண்டு டாட்டா நானொவையும் மாருதி 800ஐயும் பயன் படுத்த சொல்கிறீர்களா ? அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜப்பான் கார்கள்தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் SUV போன்ற அதிக சக்தி வாகனம் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் GMC மற்றும் ford பயன் படுத்துபவர்களையும் அதிகம் பார்த்திருக்கிறேன். இதனால் அமெரிக்காவிற்கு சப்போர்ட் செய்கிறார் கமல் என்று சொன்னால், வடிவேலு சொல்லுவது போல சின்னபுள்ள தனமா இருக்கு. “ஒட்டக முதுகில் சமவெளி கிடையாது. டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது..” என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்கவில்லையோ ?
//ஆப்கான் நாட்டு இஸ்லாமிர்களை மட்டுமல்ல; பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா என்று பல நாட்டு முஸ்லீம்களை ‘அல்கொய்தா’ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டுகிறார்.//
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள், இது உண்மையா என்று. தயவு செய்து இதில் இந்தியா’வை சேர்க்காதீர்கள்.
படத்தில் குறைகள் இருக்கின்றன. முஸ்லீம் நண்பர்கள் மனது புன்படியாக வரும் குரான் வசனங்களை நீக்கியது சரியே. ஆனால் இதை சென்சாரிலே செய்திருந்தால் இவ்வளவு ஆர்பாட்டம் வந்திருக்காது.
ஒரு வரியில் சொன்னால் இது விஸ்வரூபம் விமர்சனம் அல்ல. கமல் மீது உங்களுக்கு உள்ள காழ்புணர்ச்சி.
2000 பேர கொன்னவன தீவிரவாதின்னு சொல்லுற உலகம் 6 லட்சம் இராக்கியர்களை. ஒன்னரை லட்சம் ஆப்கானியர்களை காரணமே இல்லாமல் கொன்ற அமேரிக்காவை ஹீரோன்னு கொண்டாடுது. யூத மீடியாக்களின் பலத்தை பாருங்கள். அதே போல் 2 லட்சம் தமிழர்களை கொன்ற இலங்கையை எதிர்த்து எவனாவது படம் எடுத்தானா ? அடிப்பட்டு பரிதாப நிலையில் உள்ளவன் தான் வில்லன், பயங்கரவாதி. இப்படித்தான் படம் எடுக்கிறார்கள். சிந்திக்க மறந்த உலகம்.
Since do not know why you are watching that movie, it is waste of time to comment you.
Mr Siraaj,
//பெண்களைஒரு பலமிக்க மனிதன் ஒரு ஐந்து வயது சிறுவனை காட்டி இவன் என்னை அடிக்கிறான் எங்களை கொல்ல பார்கிறான் என்று கூச்சலி ட்டுக்கொண்டே அந்த சிறுவனை நாயடி பேயடி அடிக்கிறான். //
பர்தா அணிய சொல்வது, பெண்கல்வியை தடை செய்வது, பெண்களின் உரிமைகளை பறிப்பது போன்ற விடயங்கள் இப்படத்தில் உள்ளன. இது போன்ற விடயங்கள் ஆப்காண் முஸ்லிம்கள் மற்றும் சில பல முஸ்லிம்களின் செயல்பாடு. இதுவும் மேற்கூறிய பதத்தை ஆமோதிக்கவில்லையா??
YESTERDAY I SAW VISWAROOPM C.D. VERY BORING PICTURE.
NO CONTINUITY. I COULD NOT UNDERSTAND THE PICTURE AT ALL.
IF NO NOISE IS RAISED, THIS PICTURE WOULD HAVE RUN FOR ONE WEEK ONLY. KAMALHASSAN EARNED CRORES OF RUPEES PROFIT. FOR KAMAL’S PROFIT SO MANY PEOPLE WORKED, INCLUDING MATIMARAN. NADUVILE KONJAM PAKKATHAI KANOM IS BETTER PICTURE THAN VISWAROOPA.M
Mathi ketta maaranin…mathi ketta ularalgal……
சூப்பர் தல..! இன்னைக்கு தான் இதப் படித்தேன்.. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு முஸ்லிம் என்ன வேதனையுடன் எழுதுவாரோ.. அதே வேதனையுடன் எந்த வித சார்பு நிலைய்மில்லாமல் எழுதி உள்ளீர்கள். வாழ்க உங்கள் பணி.. தொடர்க உங்கள் எழுத்து..! உங்கள் சைட்டை தொடர்கிறேன்..
Athae movie la oru Muslim anniyayam ah sagum pothum kamal thudipar.. Sometimes Istathuku china pula thanama pesurenga nenga.
முஸ்லிம்களை புத்திசாலியாகக் காட்டிய தியாக உணர்வூள்ளவர்களாகக் காட்டிய முதல் படமாக இது இருக்கும் என நம்புகின்றேன்.
இது முஸ்லிம் இயக்கங்களுக்குப் புரியவில்லை.
புரியவூம் மாட்டாது
இது புரியூமாக இருந்தால் தன்னைவிட நுhறு மடங்கு குறைவாகவூள்ள யூ+தனுக்கு பயந்து வாய் பிதற்ற மாட்டார்கள்.