எஸ். ஜானகியின் சுயமரியாதை!

janaki-various-artists-

எஸ். ஜானகி பத்மபூஷன் விருதை வாங்க மறுத்ததை பற்றி?

-சின்னவர், பாண்டிச்சேரி.

கொஞ்சும் சலங்கை படத்தில் இடம் பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் தமிழர்களின் இனிமைகளில் ஒன்று.

அந்தப் பாடல் பெண் குரலுக்கும் நாதஸ்வரத்திற்குமான டூயட்.

முதலில் பெண் குரலும் அதைத் தொடர்ந்து அதையே நாதஸ்வரத்தில் வாசிப்பதுமாக, நாம் இப்போது கேட்பதுபோல் அந்தப் பாடல் பதிவு செய்யப்படவில்லை.

இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடுவின் உன்னத இசையமைப்பில் நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலத்தின் அமர்க்களமான வாசிப்பில், முதலில் நாதஸ்வர இசைதான் பதிவு செய்யப்பட்டது.

நாதஸ்வரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய பெண் குரலைத் தேடி பல முன்னணி பாடகிகளை பாட வைத்து பார்த்திருக்கிறார் சுப்பையா நாயுடு.

மும்பை சென்று லதா மங்கேஷ்கர் வரை முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் காருக்குறிச்சியின் நாதஸ்வர வாசிப்பிற்கு முன் எந்தக் குரலும் எடுபடவில்லை.

பிறகுதான் எஸ். ஜானகியை பாட வைத்திருக்கிறார்.

பாட்டை கேட்டவர்களுக்குத் தெரியும். காருக்குறிச்சி அருணாசலத்துனுடன் ‘பாக்கலாம், உன் நாதஸ்வரமா? என் குரலா?’ என்று சவால் விடுவது போல் பாடியிருப்பார் ஜானகி.

இது நடந்தது 1962 ஆம் ஆண்டு. அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது 2013 ஆம் ஆண்டு. என்ன நியாயம் இது?

ஜானிகியிடம் இருந்த உன்னதமான பாவங்களையும்; குழைந்து, வளைந்து, எதிர்பாராத இனிய திருப்பங்ளோடு அமைந்த அவரின் சங்கதிகளையும் முழுமையாக பயன்படுத்தியவர் அல்லது வெளி கொண்டுவந்தவர் இசைஞானி இளையராஜா.

செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே..’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி..’ போன்ற பாடல்களில் அவர் காட்டிய பாவம் உலக உன்னதம்.

‘சின்னத் தாய் அவள் தந்த ராசாவே’ பாடல் இதற்கு மேல் ஒரு பாடகர் இவ்வளவு உருக்கும் பாவங்களோடு பாட முடியுமா?

காலதாமத பத்மபூசனை திருப்பி ‘அடித்த’ திருமதி ஜானகி அவர்களின் சுயமரியாதை அவர் பாடல்களைப் போல் உயர்ந்து நிற்கிறது.

S+Janaki (1)

தங்கம் 2013 மார்ச்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

‘சொன்னது நீதானா?..’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ எப்போதும் ‘நெஞ்சம் மறப்பதில்லை..’


விஸ்வரூப விவகாரமும் இஸ்லாமிய தலைவர்களும்

Viswaroopam

விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் இஸ்லாமிய தலைவர்கள் நடந்து கொண்டது சரிதானா?

-கே. சாதிக், திருநெல்வேலி.

இஸ்லாமியர்கள் எதிர்ப்பு கண்ணோட்டம் கொண்ட சினிமா மற்றும் இலக்கியத்தை முதலில் கண்டித்தது இஸ்லாமியர்களோ அல்லது இஸ்லாமிய அமைப்புகளோ அல்ல.

பெரியாரிய சிந்தனையாளர்கள்தான் அதை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செய்தனர்.

பொதுவாக இஸ்லாமிய அமைப்புகள்,  திரைப்படங்களில் இஸ்லாமியர்களை இழிவாக காட்டுவதை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை; மாறாக இஸ்லாத்தை இழிவாக சித்தரித்தால்தான் பொங்கி எழுவார்கள்.

அதனால்தான் இஸ்லாத்தை உயர்வாக காட்டிவிட்டு இஸ்லாமியர்களை இழிவாக சினிமா எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

துப்பாக்கி பட எதிர்ப்பிலிருந்துதான் ஆரோக்கியமான மாற்றம் இஸ்லாமியர்களிடம் நிகழ்ந்தது. பிறகு கமலின் இஸ்லாமியர் எதிர்ப்பிற்கு எதிராகவும் இஸ்லாமியர்களின் ‘விஸ்வரூபத்தை’  பார்க்க முடிந்தது.

ஆனாலும் இஸ்லாமிய தலைவர்களிடம் விஸ்வரூப எதிர்ப்பில் தன்முனைப்பு கூடுதலாக தெரிந்தது.

கமல் விஸ்வரூபத்தில் சித்தரித்ததைவிட, விஸ்வரூப விவகாரத்தில் ஊடகங்கள் இஸ்லாமிய தலைவர்களை வில்லன்களாக சித்தரித்தது அதிகம்.

அதை புரிந்து கொள்ளாமல், தொலைக்காட்சி பேட்டிகளில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டார்கள் தலைவர்கள். இஸ்லாமிய மக்களிடம் இந்த விவகாரத்தில் யார் பெயர் எடுப்பது என்ற பாணியில் இருந்தது அந்த அணுகுமுறை.

கமலும் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

*

தங்கம் 2013 மார்ச்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

sea

இன்றைய இளம் இயக்குநர்கள் சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன். நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

-கே. வரதராஜன், கோவை.

மீனவர், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இவர்களைப் பற்றி இழிவாக படம் எடுக்காதீர்கள்.

மீறி எடுத்தால், நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம், ஜெயமோகனை விட்டு திரைக்கதை, வசனம் எழுத விடுவோம், ஜாக்கிரதை.

அப்புறம் மணிரத்திரனத்தித்திற்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்.

மணிரத்தினம் படத்தின் மக்கள் விரோத கருத்துக்களை எதிர்த்து நாங்களும் பக்கம் பக்கமா எவ்வளவோ எழுதுனோம்; ஒன்னும் நடக்கல. உண்மையில் எங்க எழுத்த விட ஜெயமோகன் எழுத்து ‘பவர் புல்’தான்.

அதனால் இளம் இயக்குநர்களுக்கு சொல்லிக் கொள்வது,

பில்லி – சூன்யம் போல், ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன் இந்த இரண்டு பேரையும் மாறி மாறி ஏவி விட்டோன்னு வைச்சிக்குங்க… ஒரு பய தேர முடியாது. Be Careful.

*

தங்கம் மார்ச் 2013 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

புத்தகக் காட்சியில் எனது நூல்கள்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே !

viyatnam

வியட்நாம் குழந்தைகளை இந்தக் கதிக்கு ஆளாக்கிய

american-flag

இந்த நாட்டுக்காரன்

mahinda_rajapaksa

இவுனுக்கு ‘எதிரான’ தீர்மானம் கொண்டு வந்தான்

‘எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினாலும், அமெரிக்காகாரன் குழந்தைகளை, பெண்களை ஒன்றும் செய்யமாட்டான்’ என்று விஸ்வரூபவத்தில் ‘உலக நாயகன்’ சொன்னதைப் போல்,

‘இலங்கை ராஜபக்சேவை எதிர்த்து சர்வதேச ராஜபக்சே (அமெரிக்கா) தீர்மானம் கொண்டு வந்தான். அதை இந்திய ராஜபக்சேக்கள் சிறப்பாக ஆதரித்து முடித்தார்கள்’

தொடர்புடையவை:

மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..?

மாணவர் போராட்டம்: காணாமல் போன கமல், நாட் ரீச்சபுள் ரஜினி

மாணவர் போராட்டம்: காணாமல் போன கமல், நாட் ரீச்சபுள் ரஜினி

law

உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேரணி (படம் tamilkey)

ழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டம், தமிழ்த் திரையுலகினைரையும் ஒருநாள் உண்ணாவிரதம் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது.

விஸ்வரூப விவகாரத்தில், தலிபான் உதாரணங்கைள காட்டி, தமிழக இஸ்லாமியர்களுக்கு அறிவுரையும் எதிர்ப்பும்; கமலுக்கு ஆதரவுமாக கருத்து சொன்ன பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் இருக்கிற எழுத்தாளர்களை,

அமெரிக்க சார்ப்பு கொண்ட முதலாளித்துவ நாத்திகர்களை, தனது ரசிகர்களை,

முதலாளித்துவ ஜனநாயகம் பேசிய கம்யுனிஸ்டுகளை இப்படி பலரை ஒன்று சேர்த்து தனக்காக போராட வைத்த;

காதல் மன்னன், சகலகலாவல்லவன், வைணவ பகுத்தறிவாளன், கதாநாயகிகள் எதிர்பாராத நேரங்களில் வாயோடு வாய் வைத்து ஹாலிவுட் தரத்தில் முத்தம் தரும் உலகநாயகன்,

திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ளவில்லை, மாணவர் போராட்டம் பற்றியும் கருத்து சொல்லவில்லை.

இத்தனைக்கும் அவுங்க நாட்டுக்காரங்க (அமெரிக்கா) கொண்டுவர தீர்மானம்தான்.

‘அப்போ ரஜினி மட்டும் யோக்கியமா?’ உங்களுக்கு தோணுது இல்ல இப்படி..

ரஜினி கத தெரிஞ்சதுதான்.. அவரு எப்போதுமே ‘தொடர்பு கொள்ளும் நிலை’ யில் இருக்க மாட்டாரு? தப்பா நினைக்காதீங்க.. இமயமலையில் ‘நாட் ரீச்சபுள்’தானே?

அதாவது இமயமலையை அவரு ரீச் பண்ணதால, அவரு ‘நாட் ரீச்சபுள்’ ஆயிட்டாரு. புரியலையா?

அவரே புரியாத நிலையில்தான் இருப்பாரு. அதாங்க தியானத்ல..

தலைவர் ஊர்ல இருக்காரா? இல்ல.. (இப்ப தலைவர்ன்னு சொன்னது உலக நாயகனை)

‘எனது தமிழகம் மதச் சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன்.’ என்று சொன்னது மாதிரி குஜராத்துல போய் செட்லாயிட்டாரா?

போகும்போது அவரோட தீவிர ரசிகரான நம்ம கருத்து சுதந்திர ஞாநியையும் கூட்டிக்கிட்டு போயிட்டாரோ… ?

மாணவர் போராட்டம் பற்றி அங்கேயும் சத்ததைக் (கருத்து) காணமே…

குறிப்பு:

‘வெளிநாட்டில் இருந்ததால் என்னால் இதில் கலந்து கொள்ளவோ கருத்து சொல்லவோ முடியவில்லை’ என்று உலகநாயகன் கருத்து சொல்லலாம்.

‘வெளிநாட்டில் இருந்தபோது விஸ்வரூப விவகாரத்தில் அடிக்கடி கருத்தை அனுப்பி வைக்க முடிந்தவரால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டதை ஆதரித்து கருத்தை அனுப்பி வைக்க முடியாதா?’ என்று கேட்டால்,

‘இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கருத்து’ என்று கருத்து சுந்திரவாதிகள் நம் கருத்தை சொல்லவிடாமல் எதிர்த்தால்.. அதுக்கு கருத்து சொல்றது கருத்துக்கு கருத்துக்கு கருத்துக்கு கருத்து கருத்தோ கருத்துன்னு… காதடச்சிபோயிடும்.

மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..?

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

விஸ்வரூப தந்திரம்

மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..?

Student Struggle

படம்: தமிழ் டெனி

ஈழத்தமிழர்கள் துயர்துடைக்கும் அக்கறையில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து அர்பணிப்போடு நடந்து வருகிறது.

மாணவர்கள் போராட்டத்தை நீர்த்து போக வைக்க, ஒடுக்க, அதை தன் கட்சியின் கணக்காக காட்ட பல சதிகளை அரசுகளும் அரசியல் கட்சிகளும் செய்ய முயற்சிக்கின்றன.

இந்தச் சூழலில், தனி தனியாக போராடும் மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமும் அவசரமும்கூட.

இதை மாவட்ட வாரியாக ஒருங்கிணைத்து, அதை மாநிலம் முழுக்க வழிநடத்தும் ஒரு தலைமை குழுவை உருவாக்கலாம். அந்த தலைமையை மாணர்வகளிடமிருந்தே உருவாக்க வேண்டும்.

மாணவர்களை ஒருங்கிணைக்க அவர்களை பின்னணியிலிருந்து வழிநடத்த, தேர்ந்த ஒரு குழு அவசியம்.

அதற்கான தகுதி, எப்போதும் ஈழத்தமிழர்களுக்காக துணிந்து அர்பணிப்போடு போராடும் வழக்கறிஞர்களுக்கே இருக்கிறது.

தழிழகத்தை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் சாராத தன்னெழுச்சியான தலைகீழ் மாற்றத்தை உருவாக்கும் போராட்டங்கள் நடந்தால், அது வழக்கறிஞர்களின் தலைமையில் மாணவர்களின் துணையோடுதான் நடைபெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

முத்துக்குமார் தியாகத்தை ஒட்டி நடந்த தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு போரட்டங்கள் அதை நிரூபித்தன.

திமுக, அதிமுக சார்பு பெற்ற பல சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளாலும்,

ஈழ ஆதரவு போராட்டங்களை இந்திய அரசுக்கு எதிரான போராட்டமாக நடத்துவதைவிட, திமுக எதிர்ப்பு போராட்டமாக மட்டும் மடை மாற்றி விடுகிற, தமிழினவாத குழுக்களாலும் அந்தப் போராட்டங்கள் சிதறிடிக்கப்பட்டது.

அப்போதாவது திமுக ஆளுங்கட்சி, ஒருவகையில் அந்த மடைமாற்றம் பொருத்தமாக இருந்தது. ஆனால், இப்போதும் அதுவேதான் நடக்கிறது.

அன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தக்கப் பாடம் கற்பித்தார்கள்; அதன் விளைவாக திமுக அரசால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

அதன் பிறகு வழக்கறிஞர்களிடம் ஏற்பட்ட தொய்வு, ஒட்டுமொத்தமாகவே தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போர்குணம் கொண்ட போராட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டது.

வழக்கறிஞர்களுக்குள் வழி நடத்தி செல்லக்கூடிய தலைமை குழு இல்லாததும் அதற்குக் காரணம்.

அதே போன்ற துயரம் இன்றைய மாணவர் போராட்டத்தையும் சுற்றி வளைக்கிறது.

இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள்  மாவட்ட வாரியாக தங்களுக்குள் சிறப்பான ஒரு குழுவை உருவாக்கி, மாணவர்கள் போராட்டதை வழி நடத்த வேண்டியது அவசியம்.

காவல் துறை, கல்லூரி நிர்வாகம் இவைகளின் மிரட்டல்களிலிருந்து மாணவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை தரவும், இந்தப் போராட்டத்தால் அவர்களின் கல்வி பாதிக்காமல் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

இது போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைகள் மூலமாக, மாணவர்களுக்கு ஏற்படுகிற உளவியல் நெருக்கடியிலிருந்தும் விடுவிக்கும்.

இது நடந்தால், இந்தப் போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு நகரும். இல்லையேல் ஒரு சில நாட்களில் உண்ணாவிரதத்தோடே இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

ராஜபக்சேவை தண்டிக்க, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது எதிர்ப்பது என்பதையும் தாண்டி, ஈழத்தமிழர்கள் பிரச்சினையை மாணவர்கள் போராட்டம் பெருவாரியான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது,

சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்துகிறது,

ஜாதி, மதங்களைத் தாண்டி மக்கள் பிரச்சினைக்கு போராட அழைக்கிறது என்பதினாலும் மாணவர்கள் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டியது அவசியம்.

தொடர்புடையவை:

‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை

தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

இந்தி மீது விரும்பும் இந்திக்காரர்கள் மீது வெறுப்பும்
இந்தி எதிர்ப்பும் இந்திக்காரர்களுடன் நட்பும்.

பெரியார் நடத்திய முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தாளமுத்துவின் நினைவுநாள் 12-03-2013 அன்று.

அவர் நினைவாக முதல் இந்தி எதிர்ப்பை நிகழ்கால அரசியலோடு ஒப்பிட்டு என்னுடைய பேட்டி கேப்டன் நியுஸ் சேனலில் 12-03-2013 அன்று ஒளிபரப்பானது

.**

இந்தி எதிர்ப்பு ஆங்கில ஆதரவு அதற்குள் இருக்கிறது தமிழின் பாதுகாப்பு – பெரியார் அரசியல்

தொடர்புடையவை:

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

மாவீரன் முத்துகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட வே.மதிமாறன் வழங்கிய செவ்வி

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

வே.மதிமாறன் நேர்காணல்

அவருடைய தைரியம், ‘லாஜிக், எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம்

kuselan_rajini

தியேட்டர் அதிபர்கள் திருட்டு வி.சி.டி போட்டவர்கள்வரை எல்லோரையும் ‘குசேலனாக’ மாற்றிய ரஜினியின் குசேலன் கதையல்ல இது; ஒரியஜனல் குசேலன்.

*

குசேலன் கதை, ரொம்ப பழைய காலத்திலிருந்தே பார்ப்பனர்கள் ஏழைகள்தான் என்பதை விளக்கிச் சொல்ல வந்த குறியீட்டுக் கதை. 27 குழந்தைகளைப் பெற்ற (பரிதாபத்திற்குரிய பெண்) குசேலன் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடுகிறது. தாண்டவத்தை நிறுத்த, தன் பால்ய நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி பெறுகிறான் என்பது தான் கதை.

பார்ப்பனத் துயரைத் தாங்கி, ‘சென்டிமென்ட்டச்’சோடு அத்தனை நூற்றாண்டுகளாகக் கேள்வி கேட்பாரற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்தக் கதையை, போன நூற்றாண்டில் ஒருவர் தனது ஒரே கேள்வியால் தரைமட்டமாக்கி விட்டார்.

கேள்வி இதுதான்: ‘‘27 பிள்ளைகளைப் பெற்ற ஒருவன் பிச்சை எடுக்கிறான். எவ்வளவு பெரிய மோசடி இது. ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று பெற்றிருந்தாலும், 7 பிள்ளைகள் 20 வயதிற்குள் மேல் இருந்திருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் பிச்சை எடுக்கிறான் என்றால், அவன் குடும்பத்து யோக்யதை என்ன? உழைக்காமல் உண்பதே பார்ப்பன வாழ்க்கை, தர்மம்’’ என்பது போல் கேட்டிருப்பார் அவர்.

அப்படிக் கேட்டவர் தந்தை பெரியார்.

மிகப் பெரிய வறுமையை சித்தரிப்பதற்காக 27 குழந்தைகளைப் போட்டு திரைக்கதையை தயார் செய்திருக்கிறார்கள். அந்தத் திரைக்கதையில் உள்ள ஓட்டையை தனது நுட்பமான பகுத்தறிவினால் அம்பலப்படுத்தினார் பெரியார்.

அவருடைய சிந்தனையின் தைரியம் மாதிரியே அவருடைய ‘லாஜிக்’, அதைச் சொல்லும், அவருடைய எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம்.

*

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகத்திலிருந்து..

*

Sankara Madam

**

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546

தொடர்புடையவை:

சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

இரண்டாண்டுகளில் மூன்று பதிப்பு..

சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !

432

அங்கனூர் தமிழன் வேலு

தோழர் வே.மதிமாறன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும்காந்தி நண்பரா? துரோகியா?” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பை பெற்றேன். வாசித்து முடித்தவுடன் வேறு யாருக்காவது கொடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்படியே எனக்கு நன்கு அறிமுகமான 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு கொடுத்தேன்.  அவர் காந்தியின் தீவிர விசுவாசியாக இல்லாவிட்டாலும் காந்தியின் மீது வெறுப்பு கொண்டவர் இல்லை; பெருமதிப்பு உடையவர். புத்தக தலைப்பை பார்த்தவுடனே ஒரு முறை என்னை ஆழமாக பார்த்தார். படித்துவிட்டு சொல்லுங்கள் என்று கிளம்பிவிட்டேன்.

இரண்டு நாள் கழித்து அவரிடம் சென்றேன்; புத்தகம் படித்தீர்களா? என்றேன். படித்தேன், என் நண்பருக்கு அந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன் என்றார். அவரையும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் படித்துவிட்டு அவருடைய நண்பருக்கு அதை படிக்க கொடுத்திருக்கிறார்; அவர் அவருடைய நண்பருக்கு கொடுத்திருக்கிறார். இப்படியே பலரையும் தாண்டி பயணித்து இறுதியாக ஒரு பள்ளி சிறுவனுக்கு அதை கொடுத்திருக்கிறார்கள். பலரையும் கடந்து வந்த புத்தகத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த முதியவரிடம் கேட்டேன்.

அவர் “புத்தகத்தின் மீது என்னால் மறுப்புரை சொல்ல முடியவில்லை; காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தே விமர்சனம் செய்திருப்பதால் யாராலும் மறுப்பு சொல்ல இயலாது. நல்ல பயனுள்ள நூல் கொடுத்தமைக்கு நன்றி” என்று மிகவும் நேர்மையான மதிப்பீட்டை வழங்கினார். அவருடன் பேசியதில் “காந்தியின் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் கல்லெறிந்து விட்டார் என்பது மட்டும் நிச்சயம்” என்று புரிந்துகொண்டேன்.

 அந்த மகிழ்ச்சியோடு, காந்தி நண்பரா? துரோகியா?” நூலை வாசித்ததன் மூலம் நான்  பெற்ற அனுபவத்தையும், அதன் மீதான மதிப்பீட்டையும் வழங்க விரும்புகிறேன்.

 வருடத்தில் மூன்று மாதங்கள் காந்தி பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். ஜனவரி 15 முதல் 26 வரை, ஆகஸ்ட் முதல் தேதி முதல் 15 வரை, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் கலைக் கூத்தாடிகளின் அரை நிர்வாணப் படத்திற்கு தடா. அதற்குப் பதில் காந்தி வருவார் அரை நிர்வாணத்தில். அதை கண்டுகளித்து மகிழும் காந்தி பக்தர்களின் கனவில் கல்லெறிந்து விட்ட வே.மதிமாறன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் (?) …!

ஒருவன் என்ன தான் பொதுநலன் குறித்து சிந்திக்க கூடியவனாக இருந்தாலும் சாதிப்பித்து கொண்டவனாக  இருப்பானேயானால் அவனின் பொது நலன் சார்ந்த சிந்தனைகள் அனைத்துமே சாதியின் கோரமுகத்தின் வடிவாகவே இருக்கும். அப்படித்தான் இந்நூலின் மூலம் காந்தியின் அஹிம்சை “கோடானு கோடி மக்களை எப்படி இம்சித்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்”

 ஸ்ரீ ராமனுக்கு பெரியார் என்றால் பயம். அப்படித்தான் “காந்திக்கு பீமாராவ் என்றால் பயம்,  என்பதை இந்நூலின் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் காந்தியின் அண்டப்புளுகு ஆகாசப் புளுகையும், துரோகத்தையும் காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தும், புரட்சியாளர் அம்பேத்கரின் மூலமும் தோலுரித்திருப்பது சிறப்பு…!

அவற்றில்…

“இந்திய கிராமங்கள் தீண்டப்படாதவர்களை சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகை காலனி ஆதிக்கமே” என்று காந்தியின் கிராமராஜ்ஜியத்தையும்

“காந்தியைப் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்” என்று புரட்சியாளரின் வாய்மூலமாக தாழ்த்தப்பட்டவர்களை எச்சரிப்பதை  மனமார வரவேற்கிறேன். காந்தியைப் பற்றி மட்டுமல்ல; காந்தியின் பக்தர்களிடம் கூட ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.

“காந்தி கறுப்பர் என்பதால்   ரயிலில் இருந்து வெள்ளையர்கள் இறக்கி விட்டதாகவும், அதனால் ஏற்றத்தாழ்வுகளை கண்டு மனம் நொந்து மக்களுக்காகப் பாடுபட வந்தார் காந்தி மகான் என்று காந்தியின் காவடி தூக்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில் “ரயிலில் படுக்கை வசதிக்கு டிக்கெட் எடுக்காத காரணத்தினால் தான் ரயிலில் இருந்து நான் இறக்கிவிடப்பட்டேன்” என்று காந்தியின் வாயாலேயே சொல்ல வைத்து விட்டீர்களே தோழர் சபாஷ்…!

“வெள்ளைக்காரன் காந்தியை அவனுக்கு அருகில் உட்கார வைக்காமல் வண்டியின் உள்ளே உட்கார வைத்ததையே அவமானமாக கருதிய காந்திக்கு ” இந்தியாவில்  ஒரு சாதி இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரேக் காரணத்திற்காக புரட்சியாளர் அம்பேத்கரை கீழே தள்ளினானே அது அவமானமாக தெரியவில்லையா? அதற்கு காரணமான சாதி மக்களை பிரித்தது அவமானமாக தெரியவில்லையா?

“வெளிநாடுகளுக்கு செல்லும் காந்தி அங்கே இருக்கும் இந்தியர்களின் வீடுகளில் தங்காமல், வாடகைக்கு வெள்ளையர்களின் வீடுகளிலே தங்கியிருக்கிறார்; அதற்கு காரணம் இந்தியர்கள் கூலி விவசாயிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலே; இது அவரின் சாதிப் புத்தியே… அதை ” சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் மக்கள் பழக்கங்கள் சுகாதரக் குறைவாக இருந்ததை கவனித்திருக்கிறேன்” என்று காந்தி வாயாலே நான் சாதிப் புத்தி கொண்டவன் என்று ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார் தோழர்!

“காந்தியின் துரோகம் தெரியவேண்டுமென்றால் அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்கவேண்டும்; பார்ப்பன பயங்கரவாதம் தெரியவேண்டுமென்றால் காந்தி கொலையின் ஊடாக  பார்க்க வேண்டும்” என்ற காந்தியின் துரோக – பார்ப்பன பயங்கரவாத  ஒப்பிட்டு தெளிவான விளக்கம்…!

” ஹரிஜன் என்ற சொல்லுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கிறது என்பது  யாருக்கு அவர்ப் பெயர் சூட்டினாரோ அவர்களுக்கே தெரியாது என்பது தான் வினோதம்; இதுதான் காந்தியத்தின் கயமைத்தனம்; மேலும் காந்தியின் ஹரிஜனைப் பற்றி படிக்கும் போது கமலஹாசனின் அன்பே சிவத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை; இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே! ஏன் அன்பே சிவமாகத்தான் இருக்க வேண்டுமா? அன்பே அல்லாஹ் வாக இருக்க கூடாதா? அன்பே இயேசுவாக இருக்க கூடாதா? இதுதானே பார்ப்பனப் புத்தி!

காந்தி பக்தர்கள் காந்திக்கு காவடி தூக்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை “காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின்  உடையை கண்டு மனம் நொந்து தாழ்த்தப்பட்டவர்கள் நல்ல உடை அணியும் வரை நானும் நல்ல உடை அணியமாட்டேன் என்று சபதம் எடுத்து அவரும் கோவணம் கட்டிக் கொண்டார்” என்பார்கள். அதுபோலவே  சமீபத்தில் காந்தியின் காவடி தூக்கி ஒருவர் ” தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணகிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் பொருமானாதாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்” என்று தலித் தலைவர்களின் ஆடைகளைப் பார்த்து பொறாமைப்பட்டு, வேதனைப் பட்டு இருக்கிறார்.

அப்படி காந்தியின் காவடித் தூக்கிகள் காந்தியின் அரைநிர்வாணப் படத்தை வைத்து அரசியல் செய்து பிழைத்துக் கொண்டிருந்தார்கள். அட்டைப் படத்திலே காந்தியையும், காந்திப் பக்தர்களின் கயமைத்தனத்தையும் நிர்வாணப் படுத்திவிட்டீர்களே… இது உங்களுக்கே நியாயமா தோழர்?

வ.உ.சி. யின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது; காங்கிரசின் துரோகம் அடிநெஞ்சில் அனலை கிளப்புகிறது; காந்தி மிகப்பெரிய பணக்காரர் என்றும், அவர் எளிமையாக வாழ்ந்தார்  என்றும் பொய் சொல்கிறவர்களுக்கு “வெளிநாட்டு தமிழர்கள் வ.உ.சி. க்கு கொடுக்க சொல்லி காந்தியிடம் கொடுத்த 5000 ரூபாய் பணத்தை ஏமாற்றியது தெரியுமா?

வாஞ்சிநாதன் எனும் தேசத் தியாகியின் சாதிப்பற்றை நான் இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன் நன்றி தோழரே..! “காந்தியின் தொங்குசதை அன்னாஹசாரே”; “பாபா ராம்தேவின் ஊழல் எதிர்ப்பில் பானுமதியின் வறுமை ஒழிப்பு நடிப்பு” ஒப்பீடு அருமை.

நான் காந்தியை விமர்சனம் செய்ததற்கு, காந்தியின் காவடித் தூக்கி ஒருவர் எனக்கு விளக்கம் எழுதியப் போது “காந்தியைப் பற்றி தெரியாமலே, வெறும் பூனா ஒப்பந்தத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்கிறார்கள்; அது அவர்களது அறியாமையைத் தான் காட்டுகிறது;என்று எழுதினார்.  அவருக்கு இந்நூல் அதற்கும் மேலே… அதற்கும் மேலே…

வேரறுக்க வேண்டியது காங்கிரஸ் மட்டும் அல்ல; இந்தியாவின் மீது போர்த்தப்பட்டுள்ள காந்தியின் பிம்பமும் தான்….

“காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்; பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்…!

இறுதியாக எனக்கு ஒரே வருத்தம் தான் “காந்தி நண்பரா? துரோகியா?” என்று சந்தேகப் படவேண்டாம், சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் …!

அங்கனூர் தமிழன் வேலு  

gandhi

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138 –

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546

தொடர்புடையவை:

குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்

காந்தி…?

இரண்டாண்டுகளில் மூன்று பதிப்பு..