மாணவர் போராட்டம்: காணாமல் போன கமல், நாட் ரீச்சபுள் ரஜினி

law

உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேரணி (படம் tamilkey)

ழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டம், தமிழ்த் திரையுலகினைரையும் ஒருநாள் உண்ணாவிரதம் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது.

விஸ்வரூப விவகாரத்தில், தலிபான் உதாரணங்கைள காட்டி, தமிழக இஸ்லாமியர்களுக்கு அறிவுரையும் எதிர்ப்பும்; கமலுக்கு ஆதரவுமாக கருத்து சொன்ன பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் இருக்கிற எழுத்தாளர்களை,

அமெரிக்க சார்ப்பு கொண்ட முதலாளித்துவ நாத்திகர்களை, தனது ரசிகர்களை,

முதலாளித்துவ ஜனநாயகம் பேசிய கம்யுனிஸ்டுகளை இப்படி பலரை ஒன்று சேர்த்து தனக்காக போராட வைத்த;

காதல் மன்னன், சகலகலாவல்லவன், வைணவ பகுத்தறிவாளன், கதாநாயகிகள் எதிர்பாராத நேரங்களில் வாயோடு வாய் வைத்து ஹாலிவுட் தரத்தில் முத்தம் தரும் உலகநாயகன்,

திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ளவில்லை, மாணவர் போராட்டம் பற்றியும் கருத்து சொல்லவில்லை.

இத்தனைக்கும் அவுங்க நாட்டுக்காரங்க (அமெரிக்கா) கொண்டுவர தீர்மானம்தான்.

‘அப்போ ரஜினி மட்டும் யோக்கியமா?’ உங்களுக்கு தோணுது இல்ல இப்படி..

ரஜினி கத தெரிஞ்சதுதான்.. அவரு எப்போதுமே ‘தொடர்பு கொள்ளும் நிலை’ யில் இருக்க மாட்டாரு? தப்பா நினைக்காதீங்க.. இமயமலையில் ‘நாட் ரீச்சபுள்’தானே?

அதாவது இமயமலையை அவரு ரீச் பண்ணதால, அவரு ‘நாட் ரீச்சபுள்’ ஆயிட்டாரு. புரியலையா?

அவரே புரியாத நிலையில்தான் இருப்பாரு. அதாங்க தியானத்ல..

தலைவர் ஊர்ல இருக்காரா? இல்ல.. (இப்ப தலைவர்ன்னு சொன்னது உலக நாயகனை)

‘எனது தமிழகம் மதச் சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன்.’ என்று சொன்னது மாதிரி குஜராத்துல போய் செட்லாயிட்டாரா?

போகும்போது அவரோட தீவிர ரசிகரான நம்ம கருத்து சுதந்திர ஞாநியையும் கூட்டிக்கிட்டு போயிட்டாரோ… ?

மாணவர் போராட்டம் பற்றி அங்கேயும் சத்ததைக் (கருத்து) காணமே…

குறிப்பு:

‘வெளிநாட்டில் இருந்ததால் என்னால் இதில் கலந்து கொள்ளவோ கருத்து சொல்லவோ முடியவில்லை’ என்று உலகநாயகன் கருத்து சொல்லலாம்.

‘வெளிநாட்டில் இருந்தபோது விஸ்வரூப விவகாரத்தில் அடிக்கடி கருத்தை அனுப்பி வைக்க முடிந்தவரால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டதை ஆதரித்து கருத்தை அனுப்பி வைக்க முடியாதா?’ என்று கேட்டால்,

‘இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கருத்து’ என்று கருத்து சுந்திரவாதிகள் நம் கருத்தை சொல்லவிடாமல் எதிர்த்தால்.. அதுக்கு கருத்து சொல்றது கருத்துக்கு கருத்துக்கு கருத்துக்கு கருத்து கருத்தோ கருத்துன்னு… காதடச்சிபோயிடும்.

மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..?

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

விஸ்வரூப தந்திரம்

8 thoughts on “மாணவர் போராட்டம்: காணாமல் போன கமல், நாட் ரீச்சபுள் ரஜினி

  1. ஹாஹா இப்ப எல்லா நடிகனுங்களுமே நாட் ரீச்சபுள்தான்.

  2. நாட்டாமை, முஸ்லீம் பிரமுகர் பி.ஜே அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கணும்னாரே. அதப்பத்தி உளறலயா? சினிமாக்காரனா இருந்தா தான் கருத்து வருமோ.

  3. ரஜினி, கமல் வாயைத் திறந்தாலும், நீங்கள் நொள்ளை சொள்ளக்குடியவர் தான்.
    எதிலும் எதிர்மறை கருத்துகளை அள்ளித் தெளிப்பவர் தானே நீங்கள் சார்..

  4. ஏன் ..எல்லா விசயங்களுக்கு சினிமாக்காரர்களின் கருத்தை எதிர்பார்க்கிறீர்கள்?
    வேண்டும் என்றே ரஜினி, கமலைத் தாக்குவதேற்கென்றே குறிப்பிடுவது போல் உள்ளது. நேர்ப்படப் பேசுங்களேன்.

Leave a Reply

%d bloggers like this: