இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே !
வியட்நாம் குழந்தைகளை இந்தக் கதிக்கு ஆளாக்கிய
இந்த நாட்டுக்காரன்
இவுனுக்கு ‘எதிரான’ தீர்மானம் கொண்டு வந்தான்
‘எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினாலும், அமெரிக்காகாரன் குழந்தைகளை, பெண்களை ஒன்றும் செய்யமாட்டான்’ என்று விஸ்வரூபவத்தில் ‘உலக நாயகன்’ சொன்னதைப் போல்,
‘இலங்கை ராஜபக்சேவை எதிர்த்து சர்வதேச ராஜபக்சே (அமெரிக்கா) தீர்மானம் கொண்டு வந்தான். அதை இந்திய ராஜபக்சேக்கள் சிறப்பாக ஆதரித்து முடித்தார்கள்’
தொடர்புடையவை:
So what was ur favorite communist china doing?
இந்த கொடுமைய எல்லாம் தெரிஞ்ச ஓட்டுப் பொறுக்கிங்க மாணவர்களின் உணர்வு பூர்வமான போராட்டத்தை வரப் போர நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த நினைக்கலாம் ஆனால் புரட்ரசிகர சக்திகள் இருக்கும் வரை அது ஒரு போதும் நடக்காது.
//புரட்ரசிகர சக்திகள் இருக்கும் வரை அது ஒரு போதும் நடக்காது.// புரட்சிகர சக்திகளும் ராஜபக்ஷேவுக்குதான் ஆதரவு கொடுக்குது. ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக ஓட்டளித்த நாடுகளின் பெயர்களைப் பாருங்கள், சீனா, ரசியா, வெனிசுலா.
super
Rajapaksae is a bench mark
அமெரிக்கா மட்டுந்தானா .. சோவியத் ரசியா, சீனா, கியுபா, கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகள். அது ஏன் இந்தியா எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்… அமெரிக்காவில் பல நல்ல தலைவர்களும் தோன்றியுள்ளார்கள், குறிப்பாக ஆபிரகாம் லிங்கன், ஜெபர்சன், ரூஸ்வேல்ட், ரீகன், பாலஸ்தீன உரிமைக்காக போராடும் ஜிம்மி கார்டர் என்போரை நயமாக மறைத்துவிட்டீர்கள். ஒன்று உங்களுக்கு உலக அரசியல் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தாம் சார்ந்த கருத்து திணிப்புவாதம் செய்ய எத்தனித்து இருத்தல் வேண்டும். வாழ்த்துக்கள் தொடருங்கள் .. கேட்பவர் கேணை என்றால் … இப்படித்தான் ..
இக்பால் என்ன செல்ல வருகிறீர்கள்?
சம்பந்தமில்லாமல் நீங்கள் போட்டிருக்கிற பின்னூட்டத்தில் நீங்கள்தான் கேணையாக தெரிகிறீர்கள்…
இடது சாரி நாடுகள் தாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்வதே இல்லை, மதிமாறன் போன்றோர் என்ன சொல்ல வருகின்றார், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரக் கூடாது என, அவ்வாறு எனில் எவன் தான் கொண்டு வருவது. ரசியா, சீனாவா, இந்தியா இவர்களும் களவாணிப் பயல்களே, பின்னே எப்படி தீர்மானம் கொண்டு வருவார்கள். ஆமாம் சாமி போட பலர் இருக்கும் வரை ராஜபக்சாவுக்கு தமிழகத்தில் இருந்தே பலரும் ஆதரவுக் கொடுப்பார்கள், சுனா சாமிகள் போல சிலர் வெளிப்படையாக, சிலர் மறைமுகமாக..