எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்

Author

எழுத்தாளனை மதிக்காத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் ஜெயமோகனும், மனுஷ்யபுத்திரனும் வெறுப்பாக எழுதி வருகிறார்களே?

தமிழன்வேலு.

வாசகர்கள் எழுத்தாளர்களின் தகுதிக்கு மீறிதான் அவர்களை கொண்டாடுகிறார்கள். ‘செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பதுபோல், ‘பிரபலமானவர்கள்தான் அறிவாளிகள்’ என்கிற மூடத்தனத்தின் தொடர்ச்சியாக, பிரபலமானவர்களையே எழுத்தளார்களாக மதிக்கிற மனோபாவமும் சமூகத்தில் நிரம்பி இருக்கிறது. அதனாலேயே எழுதுபவர்கள் எப்படியாவது பிரபலமாகிவிடவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே எழுதுகிறார்கள்.

அதுபற்றியெல்லாம் ‘பிரபல’ எழுத்தாளர்கள் பேச மாட்டார்கள். பிரபலமாக இருப்பதினாலேயே எழுத்தாளர்களாக இருப்பவர்களாயிற்றே.

உண்மையில் எழுத்தாளனை எழுத்தாளன்தான் மதிப்பதில்லை.

ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனை பார்த்து ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய்’ என்று எழுதினான். தாலியறுத்து பிழைக்கிற பொறுக்கிக் கூட மாற்றுத் திறனாளியை இப்படி இழிவாக சொல்லமாட்டான். ஆனால் இப்படி எழுதியவர், பெரிய எழுத்தாளனாக கொண்டாடப்படுபவர்.

அந்த மாற்றுத் திறனாளி எழுத்தாளராக மட்டும் இல்லாமல், பதிப்பாளராகவும், புரவலாகவும் இருப்பதால், அவரிடம் நற்பெயர் பெறுவதற்காக, இன்னொரு பிரபல எழுத்தாளன், தன் பதிப்பாளரை இழிவாக திட்டிய பெரிய எழுத்தாளனின் புத்தகங்களை பொதுஅரங்கில் கிழித்தெறிந்தார்.

இன்னொரு கவிஞன் குடிப்பதற்காக பணம் கேட்டு, எதிர்ல வர்றவன்கிட்ட எல்லாம் கையேந்துவார்.

மற்றொரு எழுத்தாளன் பிள்ளைமார் ஜாதி பெருமை பேசி அதனூடாக நாவிதர் சமுதயாத்தை இழிவாக சித்தரித்தார்,

தாங்க முடியாத வறுமையில் இருப்பதாக சித்தரித்து, இளிச்சவாயர்களிடம் பணம் யாசகமாக பெற்று, வட்டிக்கு விடுகிற எழுத்தாளர்களும், கவிஞர்களும் இருக்கிறார்கள்.

பதிப்பகம் நடத்துகிற எழுத்தாளர்களில் சிலர், புதிய புத்தகம் கொண்டுவர விரும்பும் எழுத்தாளரிடம் குறிப்பாக வெளிநாடு வாழ் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் புத்தகத்தை அவர் செலவிலேய தன் பதிப்பக வெளியீடா வெளியிட்டு, அதுலேயும் கமிஷன்..

இன்னொரு எழுத்தாளன்; பெண் எழுத்தாளர், பெண் வாசகரின் கையபுடிச்சி இழுத்திருக்கிறார்.

தன் பத்திரிகையில் கவிதை, கதை, கட்டுரை இன்னும் பிற விஷயங்களை எழுதுகிற பெண்களுக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக பெருமையோடு பேசி சிரிக்கிறார் எழுத்தாள பத்திரிகையாளர்.

இன்னும் பல ஆண், பெண் எழுத்தாளர்கள் வாங்குன பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதும், ஓசியில் உடம்பை வளர்ப்பதுமாக இருக்கிறார்கள்.

எழுத்தாளர்கள் இப்படி பொறுக்கிகளாகவும், மத, ஜாதி வெறியர்களாகவும், நம்பிக்கை துரோகிகளாகவும் இருந்து கொண்டு, அவர்களை மதிக்கவில்லை என்று சபிக்கிற முனிவர்களாகவும் இருப்பதுதான் பயமாக இருக்கிறது.

‘எழுத்தாளனுக்கு ஒரு கர்வம் இருக்கும்’ என்கிறார்கள். உண்மை அதுவல்ல, கொள்கையாளர்களுக்குத்தான் தான் கொண்ட கொள்கையின்பால் அவர்களிடம் இயல்பாகவே கர்வம் இருக்கும்.

உண்மையில் எழுத்தாளன் என்பவன்; அரசியல்வாதி, பணக்காரன், நூலகத்திற்கு புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரி, அமைச்சர், இவர்களுடன் உறவை ஏற்படுத்தி கொடுக்கும் தரகர், சினிமாக்காரன், பிரபலமானவன், தொழில் அதிபர் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி பொறுப்பாளர்கள் இவர்களிடம் கூழக்கும்பிடு, அடிதண்டம் போடுவதும்;
தன்னை பெரிய எழுத்தாளனாக மதிக்கும் அப்பாவி வாசகர்களிடம் தன் பிரபலத்தன்மையை அதிகாரமாக மாற்றி, எழுத்தாள மிடுக்கோடும் திமிரோடும் பேசுகிறவர்களாக இருக்கிறார்கள். இதுதான் எழுத்தாளனுக்கு இருக்கிற கம்பீரம் மற்றும் கர்வத்தின் ரகசியம்.

பொதுவாக கவிஞர்கள் அல்லது புலவர்கள் மன்னர்களிடம், புரவலர்களிடம் பம்முவதும், அவர்கள் முன்னால் யார் பெரிய ஆள் என்று காட்டுவதற்காக, ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறமையினால் சண்டையிட்டுக் கொள்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

பெரியார் காலத்திலும் அப்படித்தான். பெரியார் சொல்வார், ‘இரண்டு புலவனுக்கு மத்தியில் ஒரு போலிஸ் ஸ்டேசன் வைக்கணும்’ என்று.

‘தமிழ் உணர்வு’ கொண்ட அந்தக் காலத்து புலவர்களின் லட்சணமே அதுவென்றால், ‘அற்ப உணர்வு’ கொண்ட இந்தக் காலத்து எழுத்தாளர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

‘ரஜினி, கமல் இன்னும் பிற நடிகர்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை எழுத்தாளர்களுக்குத் தருவதில்லை’ என்றும் வருத்தப்படுகிறார்கள் பக்கத்து இலைக்கு பாயசம்’ என்கிற பாணியில் வளரும் எழுத்தாளர்கள் .(பிரபலமாவதற்கான வேலைகளில் தீவிரமாக இருப்பவர்களுக்கு ‘வளரும் எழுத்தாளர்’ என்ற கண்ணியமான பெயரும் உண்டு.)

வளரும் எழுத்தாளர்கள் சொல்வது சரிதான். நாமும் நடிகர்களைவிட உயர்வாக எழுத்தாளர்களை மதிக்கலாம் என்றால்,

எழுத்தாளனோ ரஜனி, கமல் இன்னும் பிற நடிகர்கள், இயக்குநர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு ‘அய்யா எதவாது பாட்டெழுத, வசனம் எழுத வாய்ப்பிருந்த போடுங்கய்யா..’ என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்..

மே30, 2013

தொடர்புடையவை:

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

‘காலச்சுவடின்’ சில்லரைத் தனம்

daily_crazyfpsகாலச்சுவடு இதழ், ‘பெரியார்: ஒரு பார்வை’ என்ற தலைப்பில், பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன் என்பவர் 8 ஜனவரி 2012 அன்று சென்னையில் ‘சங்கம் 4’ – விழாவில் பேசியதன் ‘திருத்தப்பட்ட’ முழுவடிவத்தை வெளியிட்டிருக்கிறது.

அதில் பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன், அவரே தன் ஜாதியை குறிப்பிட்டு ‘நான் பேசப்போவது பிராமணர்கள் பார்வையில் எனக்குத் தெரிந்த பெரியார். நான் படித்த அளவில் பிராமணர்களால் பார்க்கப்பட்ட பெரியார். நானும் பிராமணன் என மற்றவர்களால் அடையாளம் காணப்படுவதால் என் பார்வையில் பெரியார்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால் நானும் அவரை பெரியார் பாணியில் ‘பார்ப்பனர்’ என்று ஜாதி பெயருடன் குறிப்பிட்டிருக்கிறேன்.

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாள்’, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதன் தொகுப்பிலிந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன்.

காந்தி பற்றிய பெரியாரின் பார்வை என்ன என்ற என் விளக்கத்தை சுட்டிக் காட்டி, பிறகு என் விளக்கத்திற்கும் பெரியாருக்கும் நேர் மாறாக கிருஷ்ணனுக்கும் காலச்சுவடுக்கும் தோதான ‘வேறு ஒரு’ வகையில் மடை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

காலச்சுவடின் இந்த சில்லரைத் தனம், 2007 பிப்பரவி மாதம் நண்பன் கு. காமராஜ் நடத்திய விழிப்புணர்வு மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதிலை நினைவுப்படுத்தியது.

அந்த நினைவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

*

காலச்சுவடு உலகத் தமிழ் இதழின்பாரதி 125’ எப்படி?
பத்ம விஸ்நாதன், மைலப்பூர்.

சிறப்பு. மிக சிறப்பு. ஒரு ஆளு நம்மளவர். ஆனா ஊதாரி என்று தெரிந்தால் கூட ஊதி, ஊதி அவனை எப்படி உலகத் தரத்துக்கு உயர்த்துவது என்பதை தெளிவாக ‘போட்டோ’ (எழுத்தில் கிராபிக்ஸ்) பிடித்து காட்டுயிருக்கிறார்கள், ‘பாரதி 125’ல்.

ஒருத்தர் நேர்மையளார், கொள்கையில் உறுதியானவர், பெரிய சிந்தனையாளர் ஆனால் ‘நம்பளாவாவுக்கு வேட்டு வைக்கிறவர்’ என்ற தெரிந்தால், உடனே ‘ஆய்வு, நடுநிலை, அறிவுப்பூர்வமான விவாதம், நிறை, குறை என்ற அலசல்’ என்று தங்களது ‘அறிவு நாணய’த்தைப் பயன்படுத்தி பொய், புரட்டுகளை கொண்டு எப்படி ஆப்படிப்பது?’ என்பதற்கு 2004 செப்டம்பர் காலச்சுவடு வெளியிட்ட ‘பெரியார் 125’ மிகச் சிறந்த உதாரணம்.

ஆம், பாரதியின் பார்ப்பன இந்து மனதை நாம் நிருபித்தபோதும், கஞ்சா புகையில் கலைந்து போன அவரின் தேசப்பற்றை சுட்டிக்காட்டிய பிறகும் (மருதையனின் ‘பாரதி அவலம்’, வாலாசா வல்லவனின் ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதி’, – ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி.) அறிவு நாணயத்தோடு அதை ஒத்துக் கொள்ளவோ, இல்லை அதற்கு மறுப்பு சொல்லவோ வக்கற்றவர்கள், எந்தக் ‘கீறலும்’ இல்லாமல், ‘பாரதி 125’ என்று பாரதியை சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து இருக்கிறார்கள்.

சமீபத்தில் பெரியார் சிலையை ஸ்ரீரங்கத்தில், ‘இந்து மக்கள் கட்சி’யை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியது போல், 2004 செப்டம்பர் காலச்சுவடு இதழ் பெரியாரின் நேர்மையை சேதப்படுத்தியது. இந்து மக்கள் கட்யின் ஈனச் செயலுக்கு மிகச் சிறந்த எதிர்வினை இருந்தது.

ஆனால் காலச்சுவடுக்கு?

*

வே. மதிமாறன் பதில்கள் நூலிலிருந்து..

mathi1

தொடர்புடையவை:

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

குரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக…

TMSசிவாஜி கணேசன் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஏற்ப எப்படி தன் முகபாவங்களை, உடல்அசைவுகளை; உணர்வுபூர்வமாக, இயல்பாக, மிகையாக வெளிப்படுத்தினாரோ அதுபோல், பாடல்களில் பல பாவங்களை தன் குரலால்; உணர்வுபூர்வமாக, இயல்பாக, மிகையாக நடித்துக் காட்டியவர் டி.எம்.எஸ்.

குரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக…

தங்கம் இதழில் வாசகர் கேள்விகளுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய பதில்களை மீண்டும் வெளியிடுகிறேன். விரிவாக பிரிதொரு சமயம் எழுதுகிறேன்.

*

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

சிறந்த பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுக்கு பாவத்தோடு பாடத்தெரியாது என்று இளையராஜா சொன்னதால்தான் நீங்கள் அவரை சிறந்த பாடகராக குறிப்பிடவில்லையா?

என். இராமநாதன், திருநெல்வேலி.

இது தவறான தகவல். இளையராஜா அப்படி குறிப்பிடவில்லை. ’ஆண்குரல் என்றால் அது டி.எம்.எஸ் குரல்தான்’ என்று அவரை பாராட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணித்திடமே இளையராஜா குறிப்பிட்டு பேசியதை நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன்.

வெண்கல பாத்திரத்திம் இன்னொரு வெண்கல பாத்திரத்தோடு மோதிக்கொண்டால், ‘கணீர்’ என்ற ஓசையை தொடர்ந்து, அதன் பிறகு ஒரு வசீகர ஒலி எழுமே, அதுபோன்ற கம்பீரம் டி.எம்.எஸ்., குரல். இன்னும் சரியாக சொன்னால், நாம் எதிர்பாராத நேரத்தில் நம் காதருகே ஒரு வண்டு வேகமாக வந்து போகும் போது எழுப்புகிற உன்னத ஒலி டி.எம்.எஸ்., குரல். ‘நினைந்து நினைந்தென் நெஞ்சம் உருகுதே..’ போன்ற பாடல்களில் அதை உணரலாம்.

எவ்வளவு மேல போய் High Pitch ல பாடுனாலும் அந்தக் குரலின் கம்பீரம் குறையாது, ரிங்காரமிடும். Normal Pitch ல பாடும்போது அவர் குரலில் உள்ள Base, நாம் பாடல் கேட்கும் அறை முழுக்க நிரம்பி வழியும். அவ்வளவு இனிமையாக இருக்கும். ( மதன மாளிகையில்..’ மயக்கம் என்ன…’ ‘அழகிய தமிழ்மகள் இவள்..’ ‘உள்ளம் என்றொரு கோயிலிலே..’)

அவர் பாடிய பாடல்களை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. திருவிளையாடல் படத்தில், பாலமுரளிகிருஷ்ணா பாடிய ‘ஒரு நாள் போதுமா?’ பாடலைவிட, டி.எம்.எஸ். பாடிய ‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலில், படத்தில் வரும் காட்சியைப்போலவே, டி.எம்.எஸ்தான் ஜொலிக்கிறார்.

அவருடைய Voice Range அப்படியொரு சிறப்பு மிக்கது. அதுவே அவருக்கு Low Pitch ல் பாடுவதில் பிரச்சினையாகவும் இருந்திருக்கிறது. இதைத்தான் இளையாராஜா குறிபிட்டிருக்கிறார்.

அப்போது, சிவாஜிக்கு டி.எம்.எஸ்தான் பாடவேண்டும் என்பது விதி. ரிஷிமூலம் திரைப்படத்தில், நடுத்தர வயது தம்பதிகளுக்குள் romanse. இரவு படுக்கையறையில், தூங்கும் மகன் சத்தம் கேட்டு எழுந்து விடாமல், அவர்கள் இருவரும் பாடுவது போன்ற சூழல், ‘நேரமிது.. நேரமிது.. நெஞ்சில் ஒரு பாட்டெழுத..’

டி.எம்.எஸை மெல்ல சத்தம் குறைவாக பாட வைக்க இளையராஜா முயற்சித்திருக்கிறார். கடைசி வரை அவரால் முடியவில்லை. இனிமையாக பாடிய,  T.M.Sஆல், குறைந்த ஒலியில் பாட இயலவில்லை.

இப்போதுகூட, ‘நேரமிது.. நேரமிது.. நெஞ்சில் ஒரு பாட்டெழுத..’ பாடலை கேட்டுப் பாருங்கள்.

தூங்குற பையன் எழுந்து, ‘ஏப்பா.. இப்படி தூங்கும்போது பாட்டு பாடி அம்மாவ தொல்லை பண்ற..’ என்று கேட்கும் அளவிற்கு பாடியிருப்பார்.

*

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ்குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது கஷ்டப்பட்டு, அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்கிறார்களே?

என். முகமது, சேலம்.

“அப்படியெல்லாம் கெடையாது. நாங்க என்ன கொடுக்குறமோ அததான் பாடினார்.” என்று எம்.எஸ்.வியே சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். பாடல்களில் கமகம், சங்கதி, ஹை பிச் இந்த வகைகளில் பாடல்கள் அமையாது. பாடல்கள் அப்படி அமைந்தால், நுணுக்கமான பாவங்கள்காட்டி நடிக்க வேண்டிவரும். அது எம்.ஜி.ஆருக்கு அறவே பிடிக்காத விசயம்.

துள்ளல் இசையோடு, வேகமான டெம்போக்களில். FLAT NOTES களில்தான் அவர் பாடல்கள் அமையும். அதை பாடுவது பாடகர்களுக்கு சுலபம். (‘அழகிய தமிழ் மகள் இவள்..’ நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு..’ ஒரு பெண்ணைப் பார்த்து..’ பாரப்பா பழனியப்பா..’ நான் ஆணையிட்டால்..’).

அதனால்தான் எம்.ஜி.ஆர், பாடல் காட்சிகளில் முகபாவனைகளைவிட, அதிகம் கைகளை பயன்படுத்தினார். கைகளை சுழட்டி, சுழட்டி நடிக்கும் பாணியே இதுபோன்ற பாடல்களால்தான் அவருக்கு உருவானது.

அதற்கு நேர் மாறாக, சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் சங்கதி, கமகம், ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்களை சொல்லியும், தா, தை என்று ஜதிகளோடும். ஹை பிச், லோயர் பிச், நார்மல் பிச் என்று எல்லா வகையிலும் பல இசை நுணுக்கங்கள் அமைந்ததாக இருக்கும். அவர் நுணுக்கமாக நடிக்கக் கூடியவர் என்பதால் இசையமைப்பாளர்கள் அதுபோன்ற பாடல்களை உருவாக்கினார்கள். (‘பாட்டும் நானே…’ ‘எங்கே நிம்மதி..’)

அதனால்தான் டி.எம்.எஸ் பாடியதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி வித்தியாசத்தை உணர முடிந்தது.

அநேகமாக பாடல் காட்சிகளில் அதிக க்ளோசப்பில் நடித்த நடிகர் சிவாஜியாகத்தான் இருப்பார். சில நேரங்களில் ஒரிஜனலாக பாடிய, டி.எம்.எஸை விட இவர் ரொம்ப சிரமப்பட்டு பாடியது போலவும் மிகைப்படுத்திவிடுவார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2011  சனவரி 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

எஸ். ஜானகியின் சுயமரியாதை!

‘சொன்னது நீதானா?..’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ எப்போதும் ‘நெஞ்சம் மறப்பதில்லை..’

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

கீரை விற்பவர் இலக்கியவாதியாக மாறினால், இலக்கியவாதிகள் என்ன ஆவார்கள்?

 cartoon

‘சீரியஸ் எழுத்தாளர்கள் கதைகளை சீரியஸாக படிக்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர்’ என்று சீரியஸ் எழுத்தாளர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி (தொழிலாளர்கள்) இவர்களுக்கு உள்ள மட்டமான அபிப்ராயமே கதை எழுதுகிற ஆட்டோக்காரரை குறித்து பெருமையாக பேச வைத்தது.

தன் கதைகளில் பொருளாதர ரீதியாக ஜாதி ரீதியாக உயர்ந்தவனை கிரிமினல் ஆக இருந்தாலும், ‘அவர் இவர் என்று எழுதுவதும் – ரிக்ஷாக்காரர், மீன் விற்கும் பெண், கீரை விற்பவர், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக நேர்மையானவர்களாக இருந்தாலும் அவர்களை `அவன் – அவள்’ என்று விளிப்பதுதான் இவர்களது அழகியல்.

ஆம், எழுத்தாளனாக இருப்பவன் வங்கியில், தொலைபேசி துறையில், ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும்; அல்லது துணிக்கடை வைத்திருக்க வேண்டும். இல்லையேல் எந்த வேலையும் செய்யாமல் ஊதாரியாக ஊர் திரிய வேண்டும். உழைப்பாளர்கள் கதை எழுதுகிறார்கள் என்பது, இவர்களுக்கு அதிசயம் மட்டுமல்ல; அவமானமும் கூட.

பெருவாரியான உழைப்பாளர்கள் இவர்களைப் போல் இலக்கியவாதிகளாக மாறிவிட்டால், இவர்கள் வேறு துறைக்கு மாறிக் கொள்வார்கள் என்பதே உண்மை. இது உயர் நடுத்தர வர்க்க புத்தி.

*

‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகத்திலிருந்து..

*

Sankara Madam

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138 

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம்98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546

வெளியீடு:

‘அங்குசம்’
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

ஞா. டார்வின் தாசன் – 94443 37384

தொடர்புடையது:

எனது புத்தகங்கள்

இரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள்

Parvathi-Menonசென்னையில் ஒரு நாள் போன்ற நல்ல படங்களையே சரியில்லை என்கிறீர்களே, நீங்கள் வந்து படம் எடுத்துப் பாருங்கள்.

-டி. சௌமியா, சென்னை.

சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம் எடுக்கலாமென்று இருக்கிறேன்.

ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக, போலிசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்ததில் எத்தனை உயிர்கள் பலியாகின என்ற விவரங்களோடு.

விபத்தில் படுகாயமுற்றவர், பிரசவ வேதனையில் துடித்த பெண், விஷ பாம்பால் கடிப்பட்ட விவசாயி, கொதிக்கும் எண்ணையை மேலே கொட்டிக் கொண்ட குழந்தை, ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட முதியவர், கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் உயிருக்குப் போராடியவர், கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற ஆண்கள் பெண்கள்

இவர்களையெல்லாம் வாரிபோட்டுக் கொண்டு அவசரமாக போன மாட்டு வண்டி, டிராக்டர், பைக். சைக்கிள் ரிக்க்ஷா. ஆட்டோ, கார் இவைகளை மடக்கி வைத்ததால், உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு போக முடியாமல் எப்படி இறந்தார்கள் என்பதுதான் திரைக்கதை.

படம் எடுக்க நான் ரெடி.

தயாரிப்பாளாராக நீங்க ரெடியா?

*

தங்கம் 2013 மே  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

சென்னையில் ஒரு நாள்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்

அட்சயதிரிதியை முன்னிட்டு இன்று (13-05-2013) கேப்டன் நியுஸ் சேனலில் ஒளிபரப்பான என்னுடைய பேட்டி:

தங்கம் பயனற்ற உலோகம். இரும்பு தான் மனித குலத்தை மேம்படுத்தியது

நகை வாங்குவதல்ல, தானமாக தருவது; அட்ச திரிதியை அன்று ஆதி சங்கரர் அதைதான் சொன்னார்.

தொடர்புடையவை:

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

social

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.

ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.

சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,

வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.

தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,

வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?

இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?

வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

குறிப்பு: இந்தக் கேள்வி கள்ளர் ஜாதி உணர்வாளர்களுக்கும் பொருந்தும்.

தலித் உட்ஜாதிகளுக்குள் பறையரையும், சக்கிலியரையும் தங்களை விட கீழானவராக கருதுகிற பள்ளர் ஜாதி உணர்வாளருக்கும், சக்கிலியரை தன்னைவிட கீழானவராக கருதுகிற பறையர் ஜாதி உணர்வாளருக்கும் பொருந்தும்.

தொடர்புடையவை:

யார் தமிழனவிரோதி? : கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

தலித் ‘ஞானப்பழம்’

தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

இலவசம் : ‘சின்ன அய்யா’ விற்கு ஒரு கேள்வி

Free

லவசங்களைக் கொடுத்து திராவிட கட்சிகள் வன்னியர்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டது என்று ‘சின்ன அய்யா’ மாமல்லபுரத்தில்  பேசியிருக்கிறார்.

இலவசத்தை எதிர்க்கும் இவர்கள், தங்களின் ஒரே அடையாளமாக பெருமையுடன் முன் வைக்கும் ‘ஜாதி’ என்பது பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கியதா? அல்லது கடுமையாக உழைத்துப் பெற்றதா? அல்லது விலை கொடுத்து வாங்கியதா?

எந்த உழைப்போ படிப்போ செலவோ இல்லாமல் ஒவ்வொருவருக்கும் இலவசமாகக் கிடைத்ததுதானே ஜாதி.

இந்த இலவசத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமா?

நன்றி: பெரியார் முழக்கம்

தொடர்புடயவை:

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..