‘பல்’ சொத்தை முதல், எல்லா சீர்கேடுகளுக்கும் அந்தாளுதாங்க காரணம்!

Kunst Flow
பெரியாரை எல்லோரும் கடுமையாக விமர்சிப்பதின் காரணமென்ன?
ரவிச்சந்திரன்
முதன்மையான முழுமையான காரணம், பெரியார் அவுங்க ஜாதிக்காரர் இல்லை அப்படிங்கறதுதான்.
பெரியார் எதிர்ப்பாளர்களெல்லாம் என்ன காரணம் சொல்லி பெரியார் மீது அவதூறு சொல்கிறார்களோ; அந்த அவதூறை உண்மையாகவே செய்த, செய்கிற தன் ஜாதிக்காரர்களை வெறி கொண்டு ஆதரிக்கிறார்கள், விமர்சிக்க மறுக்கிறார்கள் என்பதே அதற்கு சாட்சி.
அது மட்டுமல்ல, பிற்போக்குத்தனமான தன் ஜாதிக்காரரை ஆதரிப்பதற்காக அவர் மீது இவர்கள் ஏற்றுகிற முற்போக்கு மூட்டை இருக்கிறதே, அது பெரியார் மீது இவர்கள் செய்கிற அவதூறுகளை விட அசிங்கமானது.
ஏற்கனவே நான் குறிப்பிட்டதுதான் என்றாலும் மீண்டும் அதைக் குறிப்பிடுகிறேன்:
பெரியாரிடம், “உங்களை பார்ப்பனர்கள் எதிர்ப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உங்களால் நன்மை அடைந்த பார்ப்பனரல்லாதவர்களும் உங்களை மிக மோசமாக திட்டி பேசுகிறார்களே?” என்று கேட்டதற்கு பெரியார்,
“என் மீது உள்ள கோபத்தினால்தான் அவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று அர்த்தமல்ல, என்னை திட்டினால் பார்ப்பானிடம் பொறுக்கித் திங்கலாம், அதனால்தான்…” என்றார்.
பெரியார் சரியாக சொல்லியிருக்கிறார இல்லையா? என்பதை பெரியார் எதிர்ப்பாளர்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள், நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

தொடர்புடையவை:

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

பெரியார்; தலித் விரோதியா?

பெரியாரின் பெண்ணியம் பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு-புறக்கணிப்பு

கருணாநிதி எதிர்ப்பு: Be Careful

Karunanidhi

கருணாநிதி ஒரு தமிழனத் துரோகி. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது பதவி சுகம் அனுபவித்தவர். கனிமொழிக்காக கட்சிகளிடம் கையேந்தும் கருணாநிதி, ஈழத் தமிழர்கள் நலனுக்காக இப்படி செய்ததுண்டா? தன் குடுபத்திற்காக கட்சி நடத்துகிறார். இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். திருவாரூரி்ல் இருக்கும்போது சோத்துக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்தவர். இன்றைக்கு இந்த நாட்டையே விலைக்கு வாங்கும் அளவிற்கு வசதியானவர். அவரை நீ ஆதரிப்பது நீயும் அவரைப் போல் ஒரு தமிழனத் துரோகியாக இருந்து பணம் சேர்ப்பதால்தான்.

-யாருப்பா நீ? (எழுதியவர் பெயர் குறிப்பிடாததால் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்.)

கருணாநிதியை திட்டி எழுதி எனக்கெதுக்கு அனுப்பியிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? நானே கஷ்டத்துல இருக்கேன். எங்கிட்ட ஒன்னும் பேறாது.

இத குமுதத்திற்கு அனுப்பியிருந்தாலாவது.. ‘லம்ப்பா’ எதவாது கிடைச்சிருக்கும், இல்ல நல்ல சம்பளத்துல வேலையாவது போட்டுக் கொடுத்திருப்பாங்க. உங்க திறமையை வீண் பண்ணிட்டிங்களே. கூடிய விரைவில் ஜூனியர் விகடன், தினமணியில்  சிறப்புக் கட்டுரைகள் எழுதுவீர்கள்.பத்திரிகையுலகில் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வாங்க அடுத்த ‘தமிழருவி’ நீங்கதான்.

இதையும் மீறி இன்னொரு முறையும் இதேபோல் எனக்கு எழுதி அனுப்புனா, 55 ரூபாய்க்கு என் செல்போன் நம்பருக்கு டாப்-அப் பண்ண சொல்லுவேன். Be Careful.

தொடர்புடையவை:

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்!

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

manivannanமிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சமயங்களிலெல்லாம் அதை வெற்றி கொண்டு மீண்டு வந்த இயக்குநர் மணிவண்ணன், திடீரென்று மரணமடைந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர் குடும்பத்தாருக்கும் அவரோடு நெருக்கமாக பழகியவர்களுக்கும் அதிர்ச்சி கூடுதலாகவே இருக்கும்.

2012 ஆம் ஆண்டு பிப்பரவரி 14 ஆம் தேதி காதலர் தின நிகழ்ச்சிக்காக பெரியார் திராவிடர் கழகம் கோவையில் நடத்திய விழாவில் நானும் அவரும் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தோம். ஆனால், அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரை சந்திக்கும் வாய்ப்பு அதற்குப் பிறகும் அமையாமல் போனது.

பிரபலமான ஒருவர் இறந்துவிட்டால் அவரை தியாகியாக்கும் மனோபாவம் தமிழர்களிடம் நிரம்பி இருக்கிறது. பல நேரங்களில் இது அரசியலையே தீர்மானிக்கிறது. இறந்தவருக்காக வருத்தப்படுவது வேறு… ஆனால், புனிதமாக்குற தன்மை என்ன முறை அது?

ராஜிவ் காந்தி மரணத்திற்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் இதைத் தமிழர்கள் பிரதிபலித்தார்கள். ராஜிவ் கொலைக்கு திமுகதான் காரணம் என்ற பிரச்சாரத்தின் பின்னணியில் திமுக தோற்றது. அதிமுக -காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றி பெற்றது.

அப்போது திமுகவின் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் ஒரு கூட்டத்தில் திமுக தொண்டர்களிடம் இப்படி பேசினார்:

“நம்ம இனி ஜெயிக்க முடியாது. நம்ம ஜெயிக்கனும்ன்னா என்னய கொல்லுங்கடா.. கொன்னுட்டு பழியை வாழப்பாடி ராமமூர்த்தி மேல போடுங்கடா.. அப்பதான் நாம ஜெயிக்க முடியும்…” என்றார்.

மணிவண்ணனின் ஆதரவாளர்களில் சிலர், அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்காதவர்களை துரோகியாக சித்திரிக்கிறார்கள். ‘மணிவண்ணன் திரைப்பட பிரபலம் என்பதைக்காட்டிலும் அவரின் மார்க்சிய, பெரியாரிய, தமிழ்த் தேசிய அரசியல்தான் அவரை எங்களுக்கு அடையாளம் காட்டியது அதனால்தான் அவரை நாங்கள் கொண்டாடுகிறோம்’ என்கிறார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு சினிமா பிரபலம் பகுத்தறிவு, தமிழ்த் தேசியம் பேசுகிறார் என்பது இவர்கள் அவருடன் பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. பழகிக் கொண்டார்கள் அவ்வளவே.

ஏனென்றால் மணிவண்ணனைவிட தீவிரமாக பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இன்னும் தமிழ்த் தேசியக் கருத்துகளை எழுதுகிற, பேசுகிற பலரை இவர்கள் மதிப்பதே இல்லை என்பதற்கு காரணம் அவர்கள் பிரபலமானவர்களாக இல்லை என்பதே. அந்தக் கொள்கைகளுக்காகவே தான் வாழ்க்கையை அர்பணித்துக்கொண்ட பல முதியத் தோழர்கள் மறைந்தபோது, அதை ஒரு பொருட்டாகவே இவர்கள் கருதவில்லை.

குறிப்பாக, நாத்திகம் பத்திரிகையை தொடர்ந்து நடத்திய நாத்திகம் ராமசாமி மறைந்த போதும், பெரியாரின் கொள்கைகளுக்காக போர்குணத்தோடு இயங்கிய நாகை பாஷா தனது 80 வயதை தாண்டி இறந்தபோதும், அன்பிற்கினிய மகஇக தோழர் சீனிவாசன் மறைந்த போதும், சமீபத்தில் தமிழ்த் தேசிய கருத்துகளுக்காவே தொடர்ந்து இயங்கிய பெரியவர் பரம்பை அறிவன் மரணத்தின் போதும் இன்று மணிவண்ணன் மரணத்திற்காக சமூகத்தையே குற்றம் சொல்லுகிற யாரும் அவர்களை பொருட்டாகவே கருதவில்லை; மணிவண்ணன் மரணத்திற்கும் இரங்கல் தெரிவித்த பெரியார் இயக்கங்களைத் தவிர.

அது மட்டுமல்ல, மணிவண்ணனின் மரணத்திற்கு ஆனந்த விகடனில் வந்த பாரதிராஜாவின் பதில் ஒரு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். (அதுபோன்ற ஒரு மோசமான கருத்தை ஒரு திமுக பிரமுகர் சொல்லியிருந்தால் இந்நேரம் என்ன ரணகளம் செஞ்சிருப்பாங்க?)

பத்திரிகையாளர் ஞாநி, கவிஞர் தமழ் நதி, தமிழன் வேலு, தலித் இயக்கதைச் சேர்ந்த சிலத் தோழர்களும், மணிவண்ணின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அவரிடம் பழக்கமில்லாத சில தமிழ்த் தேசிய தோழர்களும்தான் பாரதிராஜவின் அந்த மோசமான பதிலை கண்டித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களில்கூட யாரும் ஆனந்த விகடனை கண்டிக்கவில்லை. பாரதிராஜாவின் அந்த மோசமான பதிலை வெளியிட்ட ஆனந்த விகடனும்தான் குற்றவாளி.

‘காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக பேசியிருக்கிறார்கள்’ என்று பவ்யமாக, மரியாதையாக குறிப்பட்டால்கூட பிரசுரிக்க தயாராக இல்லாத விகடன், இப்படி மணிவண்ணனை தனிபட்ட முறையில் ‘பிச்சைக்காரன்’ என்று குறிப்பிட்ட பாரதிராஜாவின் பதிலை மட்டும் வெளியிடுவானேன்?

இயக்குநர் மணிவண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதவர்களை, துரோகிகளாக சித்தரிக்கிறவர்கள், மணிவண்ணனை மிக மோசமாக எழுதிய பாரதிராஜா-ஆனந்த விகடனை கண்டிக்க மறுக்கிறார்களே ஏன்?

காரணம், ஆனந்த விகடனை பகைக்க முடியாது. அது சினிமாகாரனாக ஆவதற்கும் பிரபலமாவதற்குமான ஒரு ரூட்; அதேபோல் பாரதிராஜா மணிவண்ணனைவிட பிரபலமானவர், அதைவிட மணிவண்ணனை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்த இவர்களுக்கு பாரதிராஜாவும் தெரிந்தவர்தான். மணிவண்ணன் அப்பா என்றால், பாரதிராஜா இவர்களுக்கு பெரியப்பா.

அதனால் இவர்கள் எந்த நேரத்திலும் பெரியப்பா பாரதிராஜாவோடு கை கோர்த்து, தமிழ்த் தேசிய கருத்துகளை வளர்தெடுக்க வாய்ப்பிருக்கிறது. மணிவண்ணனின் மறைவினால் ஏற்பட்ட சோகத்திலும், கோபத்திலும் கூட பாரதிராஜாவை ஒரே ஒரு வார்த்தைச் சொல்லி கண்டிக்க மறுப்பதின் மர்மம் இதுதான்.

‘பந்தல்ல பாவக்கா.. போகயில பாத்துக்கலாம்..’ என்று சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் ‘பாவக்காய்’ மேல் குறியாக இருந்ததாக சொல்லப்படுகிற ஒரு நாட்டுப்புறக்கதையைப் போலவே,
மணிவண்ணன் உடலுக்கு மரியாதை செய்ய வந்த முக்கியப் புள்ளிகளிடம் ‘பழகி’ கொண்டே ஒப்பாரி வைத்த இவர்கள், அவரை மரணப்படுக்கையில் தள்ளிய பாரதிராஜா – ஆனந்த விகடன் குறித்து அமைதி காப்பதும் ‘பாவக்காய்’ பாணிதான்.

தீவிரமான புலி ஆதரவாளரான மணிவண்ணன் ‘இந்தியாவின் தேசிய விலங்கு புலி. புலியை ஆதரிக்க வேண்டியது நம் கடமை’ என்று பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அதை சில புலிகள் இப்படி புரிந்து கொண்டன, அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ‘முக்குலத்துப் புலி மணிவணணன்’ என்று போஸ்டர் அடித்து சென்னையில் ஒட்டியிருந்தார்கள்.

மணிவண்ணன் தன்னுடைய திரைப்படத்தில் தன் ஜாதி பெருமை பேசியதில்லை. தன் ஜாதி அடையாளத்தைகூட காட்டியதில்லை. ஆனாலும் ஒரு முற்போக்காளனாக தன் ஜாதியின் தலித் விரோத மனோபாவத்தை அவர் மேடைகளில் கண்டிக்கவில்லை. அப்படி கண்டித்திருந்தால் ‘முக்குலத்துத் துரோகி’ என்று போஸ்டர் போட்டிருப்பார்கள். அது அவருக்கு கவுரத்தை, மரியாதையை தந்திருக்கும்.

இருந்தாலும் இந்த முக்குலத்துப் புலிகளுக்கு நாம் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம், மணிவண்ணனை இழிவாக பேசி அவர் மரணத்திற்கு காரணமானவராக சொல்லப்படுகிற பாரதிராஜாவும் ஒரு முக்குலத்து கிழட்டுப் புலிதான்.

முக்குலத்துப் புலி, நாடார் புலி, நாயுடு புலி, பிள்ளை மார் புலி, வன்னியப் புலி, கோனார் புலி, முதலி புலி, கவுண்ட புலி, செட்டிப் புலி இப்படியாக ஜாதி புலிகளாக இருந்து கொண்டு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கு தடை ஒனறும் இல்லை என்பது மட்டுமல்ல, தீவிர தமிழ்த் தேசியவாதியகவும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்பதால்தான் இந்த ஜாதிப் புலிகள், பெரியார்-அம்பேத்கர் கொள்கை வழி இயங்குகிற ஜாதி எதிர்ப்பாளர்களைப் பார்த்து உறுமுகின்றன.

**

மரணமே மனித இயக்கத்தின் முற்றுப்புள்ளி. ஆனாலும் ஆன்மீகவாதிகள் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையை நிறைய நம்புகிறார்கள். அதன் பொருட்டே நிகழ்காலத்தில் நிறைய கருத்துச் சொல்கிறார்கள். எல்லா மதங்களும் அதனால் மட்டுமே பிரபலமாக இருக்கிறது.

மனிதன் மரணமடைகிறான். மதங்கள் அங்கே உயிர் பெறுகிறது. அதன் தொடர்ச்சியாக இறந்தவரின் ‘ஆன்மா’ விழித்துக்கொள்கிறது.

அந்தவகையில் பகுத்தறிவாளர் மணிவண்ணனின் உடல் எரியூட்டப்பட்டபோது ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என்று கோஷம் எழுப்பினார்களாம் சிலர்,
ஆக, மணிவண்ணனின் ‘ஆன்மா’ தன்னை மிக இழிவுப்படுத்திய, பாரதிராஜா-ஆனந்த விகடன் இருவரை மன்னித்தாலும், இவர்கள் இருவரையும் கண்டிக்க மறுக்கிற, இவர்களோடு கை கோர்க்க துடிக்கிற ‘இன உணர்வாளர்’களின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்காது.

மணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad! – தலித் விரோதமும் திராவிட இயக்க எதிர்ப்பும்

நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

periyar

“இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும், முறைகளும் சரிவர நடைபெறா. அப்படி எங்காவது நடைபெற்றாலும் நிலைத்திருக்க முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படியே இருக்குமானால் 4 அல்லது 5 பெண்கள் கூடி ஒரு ஆணை தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி, அவனுக்கு நல்ல போஷணயும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்கள் காம இச்சை தீர்க்கும் இன்பப் பொருளாக அனுபவிக்கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்துவிடும் என்று நாம் கருதுகிறோம். அப்படி வந்தால் ஆச்சரியப்படமாட்டோம்.

இந்நாட்டில் ஒழுக்கம் சீர்படவேண்டுமானல், விபச்சாரம் என்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்கவேண்டுமானல், விதைவத் தன்மையும் ஆண்களுக்கு விபச்சாரத் தோஷமில்லை என்கிற நடப்பையும் ஒழித்தாக வேண்டும்.

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால், பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.” –பெரியார் 8-2-1931

பிராமணன் – சூத்திரன் என்ற அமைப்புகக்கும், பேதத்திற்கும், புருஷன்-பொண்டாட்டி என்ற விகித்திற்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்கு பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு வருகிறோம்.
பெண்கள் வீட்டிலேயே அடைப்பட்டிருப்பதால்தான் அதிகமாக பிள்ளை பெறுகிறார்கள். பிள்ளைகள் கவனிப்பதைப் பொழுது போக்காக கருதுகின்றனர். உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது. உத்தியோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள். பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள். பெரியார் 17-3-1970

சம்பாதனை, குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பெற்றல் அதைக் காப்பாற்றும் திறமை ஆகியவைகள் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு, இத்தன்மைகள் இல்லாத ஒரு புருசனை கட்டிக்கொள்வதாய் இருந்தால் மாத்திரம், ஆண்களைப் பெண்கள் அடக்கி ஆளமுடியும். முடியாவிட்டால் சம சுதந்திரமாகவாவது இருக்கமுடியும். -பெரியார் 1-3-1936

பெரியார் தன்னை ஒரு ஆணாக எப்போதும் கருதியதில்லை என்பதற்கு இதுபோன்ற அவருடைய சிந்தனைகள் ஒரு சாட்சி.
‘அப்போ அவரு என்ன பொட்டையா, இல்ல அலியா?’ என்று அவர் மீது மதப் பழமைவாதிகள் வெறுப்பைக் கொட்டினால், ‘ஆம் அதுதான் நானென்றால் அதுவாக இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால், இப்படி ஒரு குறிப்பிட்ட மக்களை இழிவான குறியீடாக காட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுதான் உங்களின் ஆண் திமிர்’ என்று அதையும் பெண்ணியப் பார்வையில் கண்டிப்பார்.

இப்படி பேசுவதால் எல்லா மதவாதிகளும், தன் குடும்பத்து பெண்களைப் பற்றி இழிவாக பேசுவார்கள் என்று தெரிந்தும் பேசினார். அப்படி தன் வீட்டுப் பெண்களை இழிவாக பேசியதற்காக, அவர்கள் வீட்டு பெண்களைக் குறித்து பெரியார் ஒருபோதும் இழிவாக பேசியதில்லை.

காரணம், அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு அவர்களே எதிரிகளாக இருந்தார்கள். பெரியார்தான் ஆதரவாக இருந்தார். அவர்களின் கல்வி, விடுதலைக் குறித்து தொடர்ந்து போராடினார்.பெரியாரை இழிவாக திட்டியவர்களின் குடும்பத்து பெண்களும் இன்று படித்து நல்ல நிலையில் இருப்பதற்கு பெரியாரே காரணம்.

பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துகள் புகழ் பெற்றவை மட்டுமல்ல நேர்மையானவை. பெண்கள் விடுதலைக் குறித்து சிந்தனையாக மட்டுமல்லாமல் அவைகளுக்காக செயலாற்றியவர் பெரியார்.

குறிப்பாக சுயமரியாதை திருமணங்களை பெரியார் கொண்டு வந்தது, பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சடங்க மறுப்பு கருத்துகளுக்காக மட்டுமல்ல; அதைவிட முக்கியமாக இந்து திருமணமுறை முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிரான வடிவமாக இருக்கிறது என்பதினாலும்தான்.

‘கன்னிகாதான முகூர்த்தம்’ ‘தார முகூர்த்தம்’ ‘விவாக சுப முகூர்த்தம்’ என்றுதான் திருமணங்களை குறிப்பிடுவார்கள். இவைகள் எல்லாமே பெண்களை பொருளாக, இழிவாக சித்தரிப்பவை.
பெரியார் இது பற்றி சொல்கிறார்: கன்னிகா தானம் என்பதற்குக் கன்னியைத் தானமாகக் கொடுத்து விடுவது என்று பொருள். …. தாரா முகூர்த்தம் என்றால், பெண்ணை தாரை வார்த்து தானமாகக் கொடுப்பது.

அதனால்தான் பெரியார், ‘வாழ்க்கை ஒப்பந்த விழா’ ‘வாழ்க்கை துணை நலம்’ என்று பெண்களின் மரியாதைக்கு முக்கியத்துவம் தரும் சுயமரியாதை வாக்கியங்களை கொண்டு வந்தார். பெண்கள் கோயில், திருமணம்  தவிர அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததினால்தான் பெரியார் பெண்கள் அதிகம் பங்குகொள்ளும் திருமணங்களில் பேசும் முறையை கொண்டுவந்தார். அதனால்தான் சுயமரியாதை திருமணங்களில் சொற்பொழிவு.

இதை புரிந்துகொள்ளாமல், ‘கல்யாண வீட்லகூட அரசியல் பேசுறானுங்கய்யா… அசிங்கம் புடுச்சவனுங்க..’ என்று வெறுப்படைகிற பழமைவாதிகள். ‘கல்யாண வீட்லகூட மந்திரம் ஓதுறானுங்கய்யா… மானங்கெட்டவனுங்க..’ என்று சொல்வதில்லை.

திருமணங்களில் பெரியார் பேசியவைகளில் சில…
பெண் பெருமை, வருணனை ஆகியவைகளில், பெண்கள் அங்கம் அவயங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி அய்ம்பது வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைபற்றி ஒரு அய்ந்து வரிகூட இருக்காது. பெண்ணின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதயாத்திற்கு அவமானம். இழிவு. அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா…

‘பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாது ஏன்? என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவன், வேலை வாங்கிப் பயனடைகிறவன் காப்பாற்றமாட்டானா? என்பதுதான்.

பெண்கள் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஓர் அட்வர்டைஸ்மெண்டாக பயன்பட்டது தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? அதுபோல் ஒரு பெண்ணைத் தாய், தகப்பன் பி.ஏ., படிக்க வைத்து ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும் குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ., படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் பணமும் வீண்தானே? இது தேசியக் குற்றமாகாதா?

நான் ஒரு சில படித்த பெண்களைப் பார்க்கிறேன். வயிற்றில் ஒரு குழந்தை, கட்கத்தில் ஒரு குழந்தை. இவ்வளவோடு சிலருக்கு முன்னால் ஓடும்படியான ஒரு குழந்தையை விட்டுவிட்டு, இப்படியாகப் படைகளோடு நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் கூட்டங்களுக்கு வந்து, நடுவிலிருந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையுறும தொல்லையும் கொடுப்பதைப் பார்க்கிறேன். இதற்காக அவர்கள் வெட்கப்படாததையும், சிலர் வருத்தப்படுவதையும் பார்க்கிறேன். இது மனித சமூகத்தில் இருக்கத்தக்கதா? அதுவும் நாகரிக சமூகத்தில், படித்த பெண்கள் என்கிறவர்களிடையில் இருக்கத் தக்கதா என்று கேட்கிறேன். இந்த லட்சணத்தில் நகைகள், விலையுயர்ந்த துணிகள் அணிந்த குழந்தைகள் கூட்டத்தில் மலஜலம் கழிக்கும், கத்தும், ஆபாசம்!” – பெரியார்.

சுயமரியாதை திருமணத்தின் மூலமாக பெரியளவில் நன்மையையும் பெண்களே அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக நடுத்தர குடும்பத்துப் பெண்கள்.

தாலி கட்டுதல் என்பது முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிரானது. ‘நாய்க்குத்தான் கழுத்துல லைசன்ஸ் கட்டுவான். பொம்பளைக்கு எதுக்குடா தாலி? தாலிய எதுக்கு கட்டுறான் என்றால், அதை அறுப்பதற்காகத்தான். உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல அவன் இறந்த பிறகும் மனைவியை நிம்மதியாக விடக்கூடாது என்பதற்காகவும்தான் தாலி கட்டுகிறான்’ என்பார் பெரியார்.

புரோகித மறுப்பு திருமணங்களை பாதி சுயமரியாதை திருமணம் என்றும். ஜாதி மறுப்பு திருமணங்களை முழுமையான சுயமரியாதை திருமணமங்கள் என்றும் அழைத்த பெரியார், ஜாதி மறுப்பு, புரோகித மறுப்பு, தாலி மறுப்பு திருமணங்களையே புரட்சிகர திருமணங்கள் என்றார்.

தன் தலைமையில் நடக்கும் ஒரு திருமணத்தில் பெரியார், ‘கல்யாணத்தையே தடை செய்யனும். ஒரு பெண்ணோட வாழ்க்கையை சீரழிக்க எத்தனைபேர் இங்க கூடி இருக்கிறார்கள். இனி மணமக்களை வாழ்த்தி பேசுறவன். கல்யாணத்தை நடத்தி வைக்கிறவன். கல்யாணத்திற்கு தலைமை தாங்குறவன் இவனுங்க எல்லோரையும் புடுச்சி ஜெயில்ல போடனும்’ என்கிறார். சுயமரியாதை திருமணத்திலேயே இப்படி பேசியிருக்கிறார்.

காரணம் தன் தலைமையில் நடந்த பல திருமணங்கள் திருமணத்திற்கு பிறகும் பெண்கள் அதுபோலோவே சமைக்க, துவைக்க, பணிவிடை செய்ய என்று பயன்படுத்தப்படுகிறார்களே என்ற கோபம் பெரியாருக்கு.
அதேபோல், பெரியாரின் நெருங்கிய நண்பர்களையும் அவரின் அமைப்புக்கு நன்கொடையும் தந்து உதவுகிற பிரபல ‘பெரிய’ மனிதர்களைகூட பெண்ணிய கருத்துகளுக்காக அவர் விமர்சிக்க தவறியிதில்லை.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது, ‘கட்டினவனாவது’ சிந்திக்கிறார்களா? . . . . . . . .
நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை; நம் அறிஞர், செல்வர். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரானவர்கள் என்று சொல்லப்படும் பெரியோர்கள் யோக்கியதையும், அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளையுமே பற்றிச் சொல்லுகிறேன். சர். சண்முகம், சர். முத்தையா குமாரராஜா முதலாகிய திராவிடப் பேரறிஞர் செல்வர்களின் மனைவிகள், தங்கை, தமைக்கைகள், பெண்கள் எங்கே எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தா்கள்? எப்படித் தகுதியாக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்?

ஷாப்புக் கடைகள், ஜவுளிக்கடைகள் ஆகியவற்றிற்கு போல் அல்லாமல் நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்குப் பெண்கள் உலகத்துக்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? என்று கேட்கிறேன்.

இப்படி பெண்விடுதலை கருத்துக்களுக்காக தன் தோழமைகளையும் தன் இயக்கத்தையும் தன்னையுமே கடுமையாக விமரிசிததுக் கொண்ட பெரியாரை, பெண் விடுதலைக் குறித்து பேசுகிற பெண்கள் மதிப்பதில்லை. இதில் பார்ப்பன மற்றும் பார்ப்பன மனோபாவம் கொண்ட பார்ப்பனரல்லாத பெண்களும் (பார்ப்பன ஆதரவை இழக்க வேண்டிவரும்) ஒருபோலவே நடந்து கொள்கிறார்கள்.

பெரியாரை தவிர்ப்பதற்கான காரணம், ‘பெரியார் பார்ப்பனர்களை விமர்சித்ததே.’ சிலர் வெளிப்படையாக அதை சொல்லுக்கிறார்கள். சிலர் பெரியாரையும் தாண்டிய பெரிய புரட்சிக்காரர்கள் போல் பெரியாரை விமர்சிக்கிறார்கள். புறக்கணிக்கிறார்கள்.

பெரியாரையே மறுக்க, விமர்சிக்க, புறக்கணிப்பதற்காகவே மார்க்கியத்தையே கரைத்துக் குடித்த மேதவிகள் போல் தங்களை பாவித்துக் கொள்கிற இவர்கள், மற்ற நேரங்களில் ‘பெண்ணியமா..? அப்படின்னா..?’ என்று கேட்பவர்களையும்

கலை இலக்கியத்தின் பேரில் மிக பிற்போக்கான ஜாதிய அபிமானம், இந்து கண்ணோட்டம் கொண்ட நபர்களையும் ஆதரிக்கிறார்கள். இவர்களே மார்க்சியத்துக்கு நேர் எதிரான கருத்துகளை உதிர்க்கிறார்கள். பெண் – ஆண் இருபாலரிலும் மார்க்சின் பிறந்த தேதியை மட்டும் தெரிந்து வைத்திருப்பதினாலேயே மார்க்சியவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆக இவர்களின் மார்க்சிய நிலைபாடு அல்லது மார்க்சிய ஆதரவு பெரியாரை எதிர்ப்பதற்காக, புறக்கணிப்பதற்காக மட்டுமே என்பது படு கேவலமாக அம்பலமாகிறது.

அதனால்தான் இவர்கள் பெண்விடுதலைக் கருத்துகளை மார்க்கிய பின்னணியில் பார்க்காமல், பாரதியின் பாடல் வரிகளுக்கு பெண்ணிய சிந்தனையில் முட்டுக் கொடுக்கிறார்கள்.

முற்போக்கான வடித்தோடு அல்லாமல் எந்த தத்துவத் தெளிவுமற்று பெண்களை இழிவாக கருதுகிற, நடத்துகிற இந்து மத்ததோடு தொடர்பு படுத்தி, இந்துமத பின்னணியில் பெண் விடுதலையை இரண்டு இரண்டு வரிகளில் பாட்டெழுதிய பாரதியை மேற்கோள் காட்டி சிலிர்க்கிறா்கள்.

பெண் விடுதலைக் குறித்து அவர் ஒன்றும் பேசவில்லை என்பது மட்டுமல்ல, பெண்களை இழிவாகவும் எழுதியவர் பாரதி. எடுத்துக்காட்டிற்கு சில,

‘கண்கள் இரண்டிருந்தும காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனென்னடி|?

‘வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடியென்றுரைத்திடு நாடு’

‘ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்’

‘பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்’

‘நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ?’

‘பெரும்படையுமாம் பெண்மையெங் கெய்தினை?’

இப்படிப்பட்ட பாரதி தான் பெரியாரை மட்டுமல்ல,  மார்க்சையே தாண்டிய பெண் விடுதலைப் போராளியாக தெரிகிறார்  ‘மார்க்சிய’வாதிகளுக்கு.

பாரதியை ஆதரிப்பதற்கு இவர்கள் தீவிரமாக சொல்லும் இன்னொரு காரணம்,
‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்’ என்று தன் சொந்த ஜாதியையே எதிர்த்தவன் பாரதி என்கிறார்கள். என்ன நியாயம் இது?

‘எங்க ஜாதிக்காரங்களுக்கு ஜாதி உணர்வெல்லாம் கிடையாது தெரியுமா?’ என்பதுபோலவும்,

கம்யுனிஸ்ட் கட்சிகளை, மார்க்சிய லெனினிய அமைப்புகளை ‘பார்ப்பனத் தலைமை’ என்று எதிர் நிலையில் பலரால் விமர்சிக்கப் படுவதைப்போலவே, அதே காரணத்திற்காகவே ஆதரிக்கிற பலரும் இருக்கிறார்கள்.

‘பிராமணர்களை எல்லாம் திட்டிப்பேசுறாரே.. அவரே பிராமணர்தான் தெரியுமா? எங்க ஜாதிக்காரங்க.. ரொம்ப முற்போக்கு.’ என்று ‘முற்போக்காக’ உணர்கிற இந்து பார்ப்பன உணர்வு கொண்ட ஒரு காரிய ‘பைத்தியக்காரனை’ ப்போல்,

பார்ப்பன எதிர்ப்பை பெரியார் பேசியபோது எதிர்ப்பு தெரிவித்தவர்கள், பாரதி பாடினான் என்பதை பெருமையாக குறிப்பிடுகிறா்கள்.

சரி. பாரதி உண்மையிலேயே பார்ப்பன எதிர்ப்பை பேசியதாகவே இருக்கட்டும். அப்படியானால் நீங்கள் ஏன் பார்ப்பன எதிர்ப்பை பேசுவதில்லை?

ஜாதி ஒழிப்பு அடிப்படையில் பெரியார் பேசிய பார்ப்பன எதிர்ப்பு வேண்டாம்; ‘எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறாரு..’ என்ற பாணியில் பெயரளவில் பாரதி பேசிய பார்ப்பன எதிர்ப்பையாவது பேசலமே? ஏன் முடியவில்லை?

இந்தியச் சூழலில் பார்ப்பன எதிர்ப்பு என்பது; ஜாதி எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பின் அடிப்படை அரசியல் மட்டுமல்ல; பெண் விடுதலைக்கான முதல் எதிர்ப்பும் அதுவே.
பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் பார்ப்பனரல்லாத மக்களை இழிவாக நடத்துவதற்கு முன், தன் ஜாதியில் உள்ள பெண்களை இழிவாகவும் அவர்கள் மீது மோசமான வன்முறைகளும் செய்தது. செய்கிறது.

ஆக ஜாதி எதிர்ப்பு, பெண் விடுதலை குறித்து பேசுகிறவர்களின் அடிப்படை அரசியல் பார்ப்பன எதிர்ப்பு. அதிலிருந்து துவங்குவதுதான் சரியானது. நியாயமானது. அதைத்தான் டாக்டர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் செய்தார்கள்.

பார்ப்பன எதிர்ப்பு அரசியல் என்பது, பார்ப்பனராக பிறந்தவர்கள், மற்றவர்களை விட தன்னை உயர்வாகவும், பெண்களை இழிவாகவும் கருகிறார்களோ அவர்களை மட்டும்தான் குறிக்கும்.

சரியாக திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்ல வேண்டுமென்றால்; பெரியாரையும், பார்ப்பன எதிர்ப்பையும் தவிர்த்து, பெண் விடுதலை பேசுகிற பெண்கள், ‘ஆணாதிக்கம்’ என்பதை சரியாக புரிந்து அந்த வார்த்தையை சொந்த விருப்பு வெறுப்பற்று மிகச் சரியாக பயன்படுத்துகிறார்கள்.

எந்த ஆண்கள் பெண்களை விட தன்னை உயர்வாகவும் பெண்களை ஆணுக்கு அடங்கியவளாகவும் கருதுகிறா்களோ அவர்களைத்தான் ‘ஆணாதிக்கம் நிறைந்தவர்கள்’ என்பதும் குறிக்கும்.

‘யாரோ சில ஆண்கள் செய்த தப்புக்கு எங்க அப்பா, அண்ணன், சித்தப்பா, அத்திம்பேரு, ஆத்துக்காரரு இவர்களை எல்லாம் சேர்த்து எப்படி நீங்கள் ‘ஆணாதிக்கக் கொடுமை’ என்று சொல்லலாம்?’ என்று கேட்க மாட்டார்களோ, அதுபோலவேதான் பார்ப்பன ஆதிக்கமும்.

பெண்கள் துயரம், பெண் உரிமை பேசும்போது,

‘அந்தக் காலத்துல ஆண்கள் செய்த தப்புக்கு, இன்னைக்கு இருக்கிறவர்களை எப்படி குற்றம் சொல்ல முடியும். பெண்கள் இன்னைக்கு எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். ஆண்கள்தான் இன்னைக்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். வேலையில்ல, வறுமையில் இருக்கிறார்கள். பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்கு. சலுகையிருக்கு. தனிப்பட்ட முறையிலான காழ்ப்புணர்ச்சி காரணமாககூட, ஒருபெண் ஒரு ஆணை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ளிவிடலாம். பாவம் ஆண்கள், அவுங்க ஆண்களாக பிறந்ததைத் தவிர என்ன தவறு செய்தார்கள்?’ என்று பேசுவது எவ்வளவு பெரிய மோசடியோ,

அதுபோலவே பார்ப்பன எதிர்ப்பு பேசும்போது, ‘அந்தக் காலத்துல பிராமணர்கள் செய்த தப்புக்கு இந்தக் காலத்து பிராமணர்கள் என்ன செய்வார்கள்? இன்னைக்கு நிறைய கஷ்டப்படுகிறா்கள். பாவம் பிராமணர்கள், வேலையில்ல, வறுமையில் இருக்கிறார்கள். மத்த ஜாதிக்காரர்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு இருக்கு. சலுகை இருக்கு. பாவம் பிராமணர்கள். அவர்கள் பிராமணர்களாக பிறந்தததைத் தவிர என்ன தவறு செய்தார்கள்?’ என்பதும்.

எப்படி ஆணாதிக்க மனோபாவம் இல்லாத ஆண்களை பார்ப்பது வால் நட்சத்திரத்தை பார்ப்பது போன்று அரிதாக இருக்கிறதோ, அதுபோலவோ. பார்ப்பன சிந்தனையில்லாத பார்ப்பனர்களை பார்ப்பது… பார்ப்பது… பார்ப்பது.. தெரியில.. கண்ணுக்கு எட்டுன தூரம் ‘நூல்’ நட்சத்திரம்தான் தெரியுது வால் நட்சத்திரம் தெரியல..

ஆக, ஆணாதிக்கத்தை விமர்சிப்பதுபோல்தான் பார்ப்பன ஆதிக்கத்தை விமர்சிப்பதும் என்பதை புரிந்து கொண்டால் பெரியாரரும் டாக்டர் அம்பேத்கரும்தான் பார்ப்பனப் பெண்களுக்கும் தலைவர்களாக தெரிவார்கள்.

இல்லையென்றால் பெண்களுக்கு எதிரான கருத்துகொண்ட பாரதி மட்டுமல்ல ‘ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்’கூட முற்போக்காத்தான் தெரிவார்.

பெரியார் ஓவியம்: நன்றி ஓவியர் மணிவர்மா

தொடர்புடையவை:

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!

செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

 

நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!

bad-breath

அகநாழிகை கவிஞர் பொன்.வாசுதேவன் தன்னுடைய facebook ல்  எழுதியதும் அதற்கு நான் எழுதிய மறுப்பும்:

பொன்.வாசுதேவன்:

பொதுவாக தமிழ் மொழியாய்வுகள் மூன்று அடிப்படையில் இருந்து வந்துள்ளன. சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழினை ஆய்வு செய்யும் மொழியாய்வுகள் ஒரு வகை. இம்மாதிரியான மொழியாய்வுகளில் தமிழின் வேர்ச்சொல்லை தேடும்போது சமஸ்கிருதத்திலிருந்து உதாரணம் காட்டி எழுதுவார்கள். இது ஒரு வகையான ஒப்பு நோக்கல். தனக்கு நன்கு புலமையுள்ள ஒன்றோடு வேறொன்றை இணை நோக்கிப் பார்ப்பது இயற்கைதானே.

அடுத்தபடியாக மேலை மொழிகளோடு இணைத்து தமிழ் மொழியை ஒப்பு நோக்குதல். தமிழின் வேர்ச்சொல் பாரசீக மொழியிலிருந்தோ, உருது மொழி அல்லது வேறொரு மொழியிலிருந்தோ மருவிய வார்த்தைகள் என்ற ஒப்பாய்வு. உதாரணத்திற்கு, அரிசி என்ற வார்த்தையை ‘ரைஸ்‘, என்பதிலிருந்து வந்ததாக சொல்வது. அல்லது ரைஸ் என்ற வார்த்தை ‘அரிசி‘யிலிருந்துதான் வந்தது என்று கூறுவது.

மொழியாய்வின் மூன்றாவது பார்வை, தமிழியம், திராவிடம் சார்ந்த பார்வை. தமிழ்தான் அனைத்திற்கும் வேர்ச்சொல் என்ற பார்வை.
மொழியாய்வின் வழியே நாம் கூறும் கற்பிதங்களுக்கு, நிரூபணச் சாத்தியங்களை உண்டாக்குவது மிகவும் முக்கியமானது. இவையெல்லாம் ஒரு தொடக்கப்புள்ளிகள். அல்லது ஒரு புள்ளியின் நீட்சிகள் மட்டுமே. இவ்வாறான மொழியாய்வுகள் தொடரப்படுவது மொழியின் செழுமைக்கும், பூரணத்துவத்துக்கும் வழி வகுக்கும்.

ஞானக்கூத்தனின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.
எனக்கும்
தமிழ்தான் மூச்சு
ஆனால் பிறர்மேல்
அதை விடமாட்டேன்.

மொழிப்பற்று என்பது வேறு, மொழி வெறி என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும். மொழி என்பது ஒரு உணர்வாக இருக்க வேண்டும். எனது தாய், எனது மனைவி, எனது மகள் என்பது போல எனது மொழி என்கிற உணர்வும், புரிதலும் அவசியம்.

-பொன்.வாசுதேவன்

**


நான் எழுதியது..

அடுத்த மொழியை இழிவாக பேசுவதும், தன் மொழியை அடுத்த மொழிபேசுகிறவர்கள் மீது திணிப்பதும்தான், தன் மூச்சை அல்ல, தன் ‘வாயுவை’ அடுத்தவர் மீது விடுவதை விட மோசமானது.

இந்திய வரலாற்றில் இந்த இழிவான வேலையை சமஸ்கிருதமே தொடர்ந்து செய்திருக்கிறது. தமிழ் போன்ற பிற மொழிகளை இழிவான மொழி என்றும், சமஸ்கிருதமே தெய்வபாஷை என்றும் இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதனால்தான் வழிபாட்டுக்கு தகுதியற்ற மொழி என்று தமிழை ஏளனமும் இழிவும் செய்து ‘ஞானக்கூத்தா’டுகிறார்கள் அவாள்கள்.

ஆனால், தமிழ் எந்த மொழி மீதும் ஆதிக்க செலுத்தியது இல்லை. தமிழ் மீது, பேசுவதற்கே ஆளில்லாத சமஸ்கிருதம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த வரலாற்றுப் பார்வையோடு ஞானக்கூத்தன் நேர்மையாக எழுதியிருந்தால், இப்படித்தான் எழுதியிருக்கவேண்டும்,

‘எனக்கும்
சமஸ்கிருதம்தான் மூச்சு
ஆனால் பிறர்மேல்
அதை விடமாட்டேன்.’

தொடர்புடையவை:

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’

உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்!

vadiveluபலரின் பேச்சுகளைக் கேட்டும், எழுத்துகளைப் படித்தும்கூட தமிழ்தேசியம் என்றால் என்னவென்று புரியவில்லை. சரியான தமிழ்த் தேசியம் என்றால் என்ன? யார் சரியான தமிழ்த்தேசியவாதிகள்?
-சாமுவேல்.

தமிழ்த் தேசியம் என்பது, தி.மு.க.வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சிப்பது, திட்டுவது.

அ.தி.மு.க.வையும் அதன் தலைவர் ஜெயலலிதாவையும் தீவிரமாக ஆதரிப்பது, புகழ்வது. இதுதான் சரியான தமிழ்த் தேசியம்.

ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளைப் போல், அ.தி.மு.க. தொண்டர்களையே, மிஞ்சிய அ.தி.மு.க. விசுவாசிகளாக இருக்க வேண்டும்.

இந்த தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, தமிழ்வழிக் கல்வி எதிர்ப்பு, திருவள்ளுவர் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தற்கு எதிர்ப்பு, சமச்சீர் கல்வி எதிர்ப்பு என்றும்;

மூவரை தூக்கிலிடுவதற்காகவே தூக்கு தண்டனைக்கு மட்டும் ஆதரவு என்று பாடுபடுகிற பத்திரிகைகளோடு இணைந்து, யார் தீவிரமாக செயல்படுகிறார்களோ அவர்களே தலைசிறந்த, உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்.

தொடர்புடையவை:

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

டாக்டர் அம்பேத்கரின் தமிழ் உணர்வும்; முற்போக்காளர்கள், அறிஞர்கள், தமிழனவாதிகளின் ஜாதி உணர்வும்

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..

sathyanகடந்த வாரம் நீங்கள் எழுதிய ‘எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்’ என்ற பதிலில், “எழுத்தாளனோ ரஜனி, கமல் இன்னும் பிற நடிகர்கள், இயக்குநர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு ‘அய்யா எதவாது பாட்டெழுத, வசனம் எழுத வாய்ப்பிருந்த போடுங்கய்யா..’ என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. ”  என்று  எழுதியிருந்தீர்கள்.

நீங்கள் எழுதிய இதே கருத்தை இரண்டு நாட்கள் கழித்து, எழுத்தாளர் சாரு நிவிதிதாவும் எழுதியிருந்தார். ‘சினிமாக்காரரைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது உங்கள் சுயமரியாதை காற்றில் பறக்கிறதே ஐயா,’ என்றும்

‘சினிமாக்காரர் காலில் விழுவேன் என்று சொல்லும் எழுத்தாளனைப் பார்த்து “உனக்கு அண்ணாத்துரை தெரியுமா?” என்று கேட்கிறான் ஒரு மூடன்.’ என்றும் எழுதியிருந்தார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

மணி

நீங்கள் அனுப்பிய இணைப்பில் சாரு நிவேதிதாவின் ‘கருத்துகள்’ அடங்கிய களஞ்சியத்தை படித்தேன்.

Padmavathy Ramaseshan  இந்தப் பெயர் அவரை ஒரு பெண்ணாகத்தான் அடையாளம் காட்டுகிறது, அவரின் கடித விசாரிப்பிற்கு பிறகு, சாரு நிவேதிதா அவரை தன்னுடைய கட்டுரையை படிக்க சொல்கிறார். அதில்,

//வீட்டுக்காரன் என்னிடம் “என்ன எழுதுறீங்க?” என்று கேட்டால், மிக இயல்பான குரலில் “அதாங்க பு…, சு…, கூ…, ass fuck இதெல்லாம் பத்தி எழுதுவேன்” என்பேன்.//

//குனிஞ்சு சூ… வைக் காமிச்சுட்டு, ”ஐயோ…  கிழிச்சிட்டானே கிழிச்சிட்டானே”ன்னு கத்றாப்ல இருக்கு” என்றார்.//

இதுதான் அந்தப் பெண்ணிற்கு இவர் காட்டும் மரியாதை.

இதை Padmavathy Ramaseshan  எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை? தன்னிடம் விளக்கம் கேட்ட பெண்ணிடம் இப்படி ‘ஆண்மை’ யோடு விளக்கம் கொடுப்பதுதான் எழுத்தாளனுக்கு அழுகு போல.

ஆனாலும் இதைத்தான் ‘நாகரிகம்’ என்று குறிப்பிடுகிறார் சாரு நிவேதிதா.

//அராத்து.  பட்டவர்த்தனமாகச் சொன்னார். நான் தான் பயந்து கொண்டு பு, சு, கூ என்று எழுதுகிறேன்.  சாரு ஆன்லைனை பலரும் குடும்பம் குடும்பமாகப் படிப்பதால் இப்படி எழுத வேண்டியிருக்கிறது.  மன்னிக்கவும். //

குடும்பங்கள் படிப்பதால், வேறு ஒருவர் குறிபிட்ட வார்த்தைகளை சுருக்கி ‘நாகரிகமாக’ வெளியிட்டவர், இதே விசயத்தைப் பற்றி இன்னொரு கட்டுரையில் அவரே,

//அப்படியே தங்கினாலும் அண்டை வீட்டுக்காரர் புண்டை வீட்டுக்காரரையெல்லாம் என்னிடம் பேச நான் அனுமதிக்க மாட்டேன்.//  என்கிறார் இந்தக் குடும்பக் கதை எழுத்தாளர்.

அதுமட்டுமல்ல, இவைகளை விட கேவலமாக, கொடூரமாக; சிறுவர்களை பாலியல் உறவுக்கு பயன்படுத்திய, பொழுதுபோக்காக தன் மனைவியை கொலை செய்த பொறுக்கியின் செய்கையை, எழுத்தாளனின் திறமையாக பெருமை பொங்க குறிபிட்டிருக்கிறார்.

ஒரு முட்டாள் தன்னுடைய கிரிமனல்தனத்தை மறைத்துக் கொள்வதற்காக கோமாளித்தனமான, அப்பாவியான பாவனையே உகந்தது என்று திட்டமிட்டு கோமாளித்தனத்தையே தன்னுடைய முதலீடாகவும், பார்வையாளர்களை கோமாளியாகவும் ஆக்கிய பவர்ஸ்டார் சீனிவாசன் போல்,

சாரு நிவேதிதா இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்.

அதே கட்டுரையில் தன்னை ஜெயமோகனின் குருவாக அறிவித்துக் கொண்டார் சாரு நிவேதிதா. அதை நாம் இப்படி கொஞ்சம் விரிவாக்கி சொல்வோம்,

‘இலக்கிய உலகின் இராம கோபாலனான, ஜெயமோகனின் குரு சாரு நிவேதிதா; சாரு நிவேதிதாவின் குரு பவர் ஸ்டார் சீனிவாசன்.’

“உனக்கு  அண்ணாத்துரை  தெரியுமா?” என்று கேட்கிறான் ஒரு மூடன்.’ என்று கோபப்படுகிற சாரு நிவேதிதா, அவரின் இன்னொரு கட்டுரையில்,

‘தமிழில் புதுமைப்பித்தன், நகுலன், சுந்தர ராமசாமி, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், . முத்துசாமி, கரிச்சான் குஞ்சு, மௌனி போன்றவர்களைப் படிக்காமல் ஒருவர் எழுத வருவது எப்படி சாத்தியமில்லையோ’ என்று குறிப்பிடுகிறார் இந்த மூடன்.

எழுத்தாளனுக்கான தகுதியாக இவர் மட்டும் எழுத்தாளர்கள் பட்டியலை குறிப்பிடலாம்; ஒரு திராவிட இயக்க தொண்டர், வாசகர் ‘அண்ணா, கலைஞர் போன்றவர்களை படிக்காமல் ஒருவன் எழுத்தாளனாக முடியாது’ என்று சொல்வது மட்டும் எப்படி மூடக் கருத்தாக இருக்க முடியும்?

இவர்கள் இரண்டு பேருக்குமான வேறுபாடு இலக்கிய வேறுபாடல்ல; அரசியல் வேறுபாடு.

தீவிர பார்ப்பன, இந்து கண்ணோட்டம் கொண்ட ‘நவீன’ எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால்; இந்து மத எதிர்ப்பு, பாரப்பன எதிர்ப்பு, மொழி உணர்வோடு எழுதிய திராவிட இயக்க எழுத்தளார்கள் தகுதியானவர்கள் மட்டுமல்ல, மேன்மையானவர்களும்கூட.

அதுமட்டுமல்ல, அவர்களால்தான் இவர்களின் புத்தகங்களும் விற்கிறது. இவர்களும் எழுத்தாளர்களாக கொண்டாடப்படுகிறார்கள். திராவிட இயக்கத்தின் ‘இந்தி எதிர்ப்பு, தமிழுக்கான முக்கியத்துவம், தமிழ் வழிக் கல்வி’ இவைகளின் வழியாக கல்வி பெற்றவர்களே, இன்றைய ‘நவீன’ எழுத்தளார்களில் சிலரும், இந்தக் கழிசடை எழுத்தாளர்களின் வாசகர்களில் பலரும்.

திமுக வின் வருகைக்குப் பிறகுதான் தமிழகத்தில் டீ கடை, முடித்திருத்த நிலையங்களில் பத்திரிகை படிக்கிற பழக்கமும், அதிகமான படிப்பகங்களும், தனியார் மற்றும் அரசு நூலகங்களும் உருவாகின.

அதற்கு முன் ‘நவீன’ கதை எழுதுகிறவர்களே அவர்களின் கதையை மாறி மாறி படித்துக்கொள்வார்கள். விமர்சித்துக் கொள்வார்கள். மௌனிகும், க.நா.சுவுக்கும் எழுதவே தெரியாது என்று சி சு செல்லப்பா திட்டித் தீர்ப்பார்.

அவுங்க ரெண்டு பேரும், மவுனியை, ‘அவன் கெடக்கிறான் எழுத தெரியாத பய..’ என்ற பாணியில் புறந்தள்ளுவார்கள்.

குறிப்பாக ‘நவீனங்கள்’ எழுதிய புத்தங்கள் நாலு புக்கு வித்தாலே பெரிய சாதனை. கரிச்சான் குஞ்சு, மௌனி, கா.நா.சு போன்றவர்களின் புத்தகங்கள் விற்காமல் கிடந்ததும், அதை அவர்களின் மாமனார்கள், மைத்துனர்கள், வாரிசுகள் பழையபேப்பர் கடைகளுக்கு போட்டதும் ‘நவீன’ இலக்கிய உலகில் பிரசித்தம்.

க.நா.சுப்பிரமணியம் அவருடைய ஒரு நாவலை அச்சட்டித்து பத்திரமாக பரணில் வைத்திருந்ததாகவும்.  அதை வாங்குவதற்கு ஆளில்லாததால், ‘எடத்து அடைச்சிக்கிட்டு இது எதுக்கு தண்டம்?’ என்று அவர் மாமனார், அந்த புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் போட்டதாக படித்திருக்கிறேன்.

அன்றைய ‘நவீன’ங்களுக்கு ஏற்பட்ட அந்த மீளத் துயரம், இன்றைய ‘நவீன’ங்களுக்குக் கிடையாது. நன்றாக கல்லாக் கட்டுகிறார்கள். வீடும் கட்டுகிறார்கள்.

திமுக போன்ற திராவிட இயக்கத்தால் தமிழுக்கும், தமிழனுக்கும் நன்மையும் தீமையும் கலந்திருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

சரி அதுபோகட்டும்.

 ‘நவீன’ எழுத்தாளர்களை ‘நவீன’ எழுத்தாளரான சாரு நிவேதிதா, ‘சினிமாக்காரரைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது உங்கள் சுயமரியாதை காற்றில் பறக்கிறதே ஐயா,’ என்று கூண்டிலேற்றி குறுக்கு விசாரணை செய்கிறார்.

ஒருவகையில் சினிமாக்காரர்களாவது கலைஞர்கள், இன்னும் குறிப்பாக இயக்குநர்கள் படைப்பாளர்களும்கூட, அவர்களிடம் எழுத்தாளன் பல்லித்தால் சுயமரியாதை காற்றில் பறந்து போகும் என்றால்,

நல்லி குப்புசாமி செட்டி போன்ற சட்டிகள் முன்னால்,

‘தலைவா You are great.. என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க தலைவா..’ என்று pant அவுத்து நிற்கிற ‘நவீன’ இலக்கியவாதிகளை என்னவென்று சொல்வார்?

தொடர்புடையவை:

சாருநிவேதிதா சாமியாராகி விட்டாரா?

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’

..இவர்களுடன் எம்.ஜி.ஆரும் கலைஞரும் மலையாளிகளும்; தீர்வு தமிழ்த்தேசியம்!?

Mosquitoதிராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியையும் பார்ப்பனர்கள் ஆதரிப்பது அரிது.

இத்தனைக்கும் திமுகவோ அதன் தலைவரோ, தங்களை பார்ப்பனர்களுக்கு நெருக்கமானவர்களாகவே காட்டி வருகிறார்கள். அல்லது ‘நாங்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்களோ, இந்து மத எதிர்ப்பாளர்களோ அல்ல’ என்றும் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இருந்தாலும் அவர்களை ‘அவாளு’க்கு அறவே பிடிப்பதில்லை.

அப்படியும் தேடி பிடித்து பார்த்தால், தனிப்பட்ட முறையில் தலைமையோடு தொடர்பு உள்ளவர்கள், லாபம் அடைந்தவர்கள் என்று ஒன்றிரண்டு பேரையாவது திமுக ஆதரவாளர்களாக பார்ப்பனர்களில் பார்க்க முடிகிறது.

ஆனால் தமிழகம் வாழ் மலையாளிகளில், ஒரே ஒரு திமுக மற்றும் கலைஞர் ஆதரவாளரை பார்ப்பது முடியாததாகவே இருக்கிறது.

திமுக ஆட்சியில் ஓணத்திற்கு தமிழ்நாட்ல லீவெல்லாம் விட்டப் பிறகும் அதே நிலைதான்.

மலையாளிகள் கேரளாவில் காங்கிரஸ், பாஜக, சிபிஎம் என்று பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும்; தமிழகத்திற்கு வந்தால், அவர்கள் கருணாநிதி எதிர்ப்பாளர்களாகவும் எம்.ஜி.ஆர் மேல் ஈடுபாடு கொண்டாவர்களாகவும் அண்ணா திமுகவின் ஆதரவாளராகவுமே இருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தையும், மலையாளிகளையும் கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த்தேசியவாதிகளும், தமிழகம் வாழ் மலையாளிகளும் ஒரே மாதிரியான அரசியல் நிலைபாட்டை தமிழகத்தில் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆனாலும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

சமச்சீர் கல்வி எதிர்ப்பு, தமிழ்வழி கல்வி எதிர்ப்பு, தமிழ்த்தேசிய எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு,  மூவரை தூக்கிலிடுவதில் பேரார்வம் காட்டுகிற பார்ப்பனர்கள், பார்ப்பன பத்திரிகைகள் குறிப்பாக தினமணி போன்றவைகளோடு இணைந்து,

திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு ( நல்ல திறமைசாலியா இருக்கேளே..) மற்றும் எம்.ஜி.ஆர் மீது ஈடுபாடு, அண்ணா திமுக ஆதரவு என்று செயல்படுகிற தமிழ்த்தேசியவாதிகள், மலையாளிகளுடன் இணைந்து தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்காமல் இருப்பது?

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

தொடர்புடையவை:

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம்; டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி: இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்