சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..

sathyanகடந்த வாரம் நீங்கள் எழுதிய ‘எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்’ என்ற பதிலில், “எழுத்தாளனோ ரஜனி, கமல் இன்னும் பிற நடிகர்கள், இயக்குநர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு ‘அய்யா எதவாது பாட்டெழுத, வசனம் எழுத வாய்ப்பிருந்த போடுங்கய்யா..’ என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. ”  என்று  எழுதியிருந்தீர்கள்.

நீங்கள் எழுதிய இதே கருத்தை இரண்டு நாட்கள் கழித்து, எழுத்தாளர் சாரு நிவிதிதாவும் எழுதியிருந்தார். ‘சினிமாக்காரரைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது உங்கள் சுயமரியாதை காற்றில் பறக்கிறதே ஐயா,’ என்றும்

‘சினிமாக்காரர் காலில் விழுவேன் என்று சொல்லும் எழுத்தாளனைப் பார்த்து “உனக்கு அண்ணாத்துரை தெரியுமா?” என்று கேட்கிறான் ஒரு மூடன்.’ என்றும் எழுதியிருந்தார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

மணி

நீங்கள் அனுப்பிய இணைப்பில் சாரு நிவேதிதாவின் ‘கருத்துகள்’ அடங்கிய களஞ்சியத்தை படித்தேன்.

Padmavathy Ramaseshan  இந்தப் பெயர் அவரை ஒரு பெண்ணாகத்தான் அடையாளம் காட்டுகிறது, அவரின் கடித விசாரிப்பிற்கு பிறகு, சாரு நிவேதிதா அவரை தன்னுடைய கட்டுரையை படிக்க சொல்கிறார். அதில்,

//வீட்டுக்காரன் என்னிடம் “என்ன எழுதுறீங்க?” என்று கேட்டால், மிக இயல்பான குரலில் “அதாங்க பு…, சு…, கூ…, ass fuck இதெல்லாம் பத்தி எழுதுவேன்” என்பேன்.//

//குனிஞ்சு சூ… வைக் காமிச்சுட்டு, ”ஐயோ…  கிழிச்சிட்டானே கிழிச்சிட்டானே”ன்னு கத்றாப்ல இருக்கு” என்றார்.//

இதுதான் அந்தப் பெண்ணிற்கு இவர் காட்டும் மரியாதை.

இதை Padmavathy Ramaseshan  எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை? தன்னிடம் விளக்கம் கேட்ட பெண்ணிடம் இப்படி ‘ஆண்மை’ யோடு விளக்கம் கொடுப்பதுதான் எழுத்தாளனுக்கு அழுகு போல.

ஆனாலும் இதைத்தான் ‘நாகரிகம்’ என்று குறிப்பிடுகிறார் சாரு நிவேதிதா.

//அராத்து.  பட்டவர்த்தனமாகச் சொன்னார். நான் தான் பயந்து கொண்டு பு, சு, கூ என்று எழுதுகிறேன்.  சாரு ஆன்லைனை பலரும் குடும்பம் குடும்பமாகப் படிப்பதால் இப்படி எழுத வேண்டியிருக்கிறது.  மன்னிக்கவும். //

குடும்பங்கள் படிப்பதால், வேறு ஒருவர் குறிபிட்ட வார்த்தைகளை சுருக்கி ‘நாகரிகமாக’ வெளியிட்டவர், இதே விசயத்தைப் பற்றி இன்னொரு கட்டுரையில் அவரே,

//அப்படியே தங்கினாலும் அண்டை வீட்டுக்காரர் புண்டை வீட்டுக்காரரையெல்லாம் என்னிடம் பேச நான் அனுமதிக்க மாட்டேன்.//  என்கிறார் இந்தக் குடும்பக் கதை எழுத்தாளர்.

அதுமட்டுமல்ல, இவைகளை விட கேவலமாக, கொடூரமாக; சிறுவர்களை பாலியல் உறவுக்கு பயன்படுத்திய, பொழுதுபோக்காக தன் மனைவியை கொலை செய்த பொறுக்கியின் செய்கையை, எழுத்தாளனின் திறமையாக பெருமை பொங்க குறிபிட்டிருக்கிறார்.

ஒரு முட்டாள் தன்னுடைய கிரிமனல்தனத்தை மறைத்துக் கொள்வதற்காக கோமாளித்தனமான, அப்பாவியான பாவனையே உகந்தது என்று திட்டமிட்டு கோமாளித்தனத்தையே தன்னுடைய முதலீடாகவும், பார்வையாளர்களை கோமாளியாகவும் ஆக்கிய பவர்ஸ்டார் சீனிவாசன் போல்,

சாரு நிவேதிதா இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்.

அதே கட்டுரையில் தன்னை ஜெயமோகனின் குருவாக அறிவித்துக் கொண்டார் சாரு நிவேதிதா. அதை நாம் இப்படி கொஞ்சம் விரிவாக்கி சொல்வோம்,

‘இலக்கிய உலகின் இராம கோபாலனான, ஜெயமோகனின் குரு சாரு நிவேதிதா; சாரு நிவேதிதாவின் குரு பவர் ஸ்டார் சீனிவாசன்.’

“உனக்கு  அண்ணாத்துரை  தெரியுமா?” என்று கேட்கிறான் ஒரு மூடன்.’ என்று கோபப்படுகிற சாரு நிவேதிதா, அவரின் இன்னொரு கட்டுரையில்,

‘தமிழில் புதுமைப்பித்தன், நகுலன், சுந்தர ராமசாமி, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், . முத்துசாமி, கரிச்சான் குஞ்சு, மௌனி போன்றவர்களைப் படிக்காமல் ஒருவர் எழுத வருவது எப்படி சாத்தியமில்லையோ’ என்று குறிப்பிடுகிறார் இந்த மூடன்.

எழுத்தாளனுக்கான தகுதியாக இவர் மட்டும் எழுத்தாளர்கள் பட்டியலை குறிப்பிடலாம்; ஒரு திராவிட இயக்க தொண்டர், வாசகர் ‘அண்ணா, கலைஞர் போன்றவர்களை படிக்காமல் ஒருவன் எழுத்தாளனாக முடியாது’ என்று சொல்வது மட்டும் எப்படி மூடக் கருத்தாக இருக்க முடியும்?

இவர்கள் இரண்டு பேருக்குமான வேறுபாடு இலக்கிய வேறுபாடல்ல; அரசியல் வேறுபாடு.

தீவிர பார்ப்பன, இந்து கண்ணோட்டம் கொண்ட ‘நவீன’ எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால்; இந்து மத எதிர்ப்பு, பாரப்பன எதிர்ப்பு, மொழி உணர்வோடு எழுதிய திராவிட இயக்க எழுத்தளார்கள் தகுதியானவர்கள் மட்டுமல்ல, மேன்மையானவர்களும்கூட.

அதுமட்டுமல்ல, அவர்களால்தான் இவர்களின் புத்தகங்களும் விற்கிறது. இவர்களும் எழுத்தாளர்களாக கொண்டாடப்படுகிறார்கள். திராவிட இயக்கத்தின் ‘இந்தி எதிர்ப்பு, தமிழுக்கான முக்கியத்துவம், தமிழ் வழிக் கல்வி’ இவைகளின் வழியாக கல்வி பெற்றவர்களே, இன்றைய ‘நவீன’ எழுத்தளார்களில் சிலரும், இந்தக் கழிசடை எழுத்தாளர்களின் வாசகர்களில் பலரும்.

திமுக வின் வருகைக்குப் பிறகுதான் தமிழகத்தில் டீ கடை, முடித்திருத்த நிலையங்களில் பத்திரிகை படிக்கிற பழக்கமும், அதிகமான படிப்பகங்களும், தனியார் மற்றும் அரசு நூலகங்களும் உருவாகின.

அதற்கு முன் ‘நவீன’ கதை எழுதுகிறவர்களே அவர்களின் கதையை மாறி மாறி படித்துக்கொள்வார்கள். விமர்சித்துக் கொள்வார்கள். மௌனிகும், க.நா.சுவுக்கும் எழுதவே தெரியாது என்று சி சு செல்லப்பா திட்டித் தீர்ப்பார்.

அவுங்க ரெண்டு பேரும், மவுனியை, ‘அவன் கெடக்கிறான் எழுத தெரியாத பய..’ என்ற பாணியில் புறந்தள்ளுவார்கள்.

குறிப்பாக ‘நவீனங்கள்’ எழுதிய புத்தங்கள் நாலு புக்கு வித்தாலே பெரிய சாதனை. கரிச்சான் குஞ்சு, மௌனி, கா.நா.சு போன்றவர்களின் புத்தகங்கள் விற்காமல் கிடந்ததும், அதை அவர்களின் மாமனார்கள், மைத்துனர்கள், வாரிசுகள் பழையபேப்பர் கடைகளுக்கு போட்டதும் ‘நவீன’ இலக்கிய உலகில் பிரசித்தம்.

க.நா.சுப்பிரமணியம் அவருடைய ஒரு நாவலை அச்சட்டித்து பத்திரமாக பரணில் வைத்திருந்ததாகவும்.  அதை வாங்குவதற்கு ஆளில்லாததால், ‘எடத்து அடைச்சிக்கிட்டு இது எதுக்கு தண்டம்?’ என்று அவர் மாமனார், அந்த புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் போட்டதாக படித்திருக்கிறேன்.

அன்றைய ‘நவீன’ங்களுக்கு ஏற்பட்ட அந்த மீளத் துயரம், இன்றைய ‘நவீன’ங்களுக்குக் கிடையாது. நன்றாக கல்லாக் கட்டுகிறார்கள். வீடும் கட்டுகிறார்கள்.

திமுக போன்ற திராவிட இயக்கத்தால் தமிழுக்கும், தமிழனுக்கும் நன்மையும் தீமையும் கலந்திருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

சரி அதுபோகட்டும்.

 ‘நவீன’ எழுத்தாளர்களை ‘நவீன’ எழுத்தாளரான சாரு நிவேதிதா, ‘சினிமாக்காரரைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது உங்கள் சுயமரியாதை காற்றில் பறக்கிறதே ஐயா,’ என்று கூண்டிலேற்றி குறுக்கு விசாரணை செய்கிறார்.

ஒருவகையில் சினிமாக்காரர்களாவது கலைஞர்கள், இன்னும் குறிப்பாக இயக்குநர்கள் படைப்பாளர்களும்கூட, அவர்களிடம் எழுத்தாளன் பல்லித்தால் சுயமரியாதை காற்றில் பறந்து போகும் என்றால்,

நல்லி குப்புசாமி செட்டி போன்ற சட்டிகள் முன்னால்,

‘தலைவா You are great.. என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க தலைவா..’ என்று pant அவுத்து நிற்கிற ‘நவீன’ இலக்கியவாதிகளை என்னவென்று சொல்வார்?

தொடர்புடையவை:

சாருநிவேதிதா சாமியாராகி விட்டாரா?

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’

5 thoughts on “சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..

Leave a Reply

%d bloggers like this: